Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சார்ந்த தோழர் செங்கொடி என்ற பெண் தீக்குளித்து மரணம். 28 ஆகஸ்ட் 2011 பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்துச் செய்யக் கோரி இந்தப் பெண் தீக்குளித்து மரணமானதாக சற்று முன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மரண தண்டனையை குறைக்குமாறு அனுப்பப்பட்ட கருணை மனுவை இந்திய உள்துறை அமைச்சும் ஜனாதிபதியும் நிராகரித்த நிலையில் மக்கள் மன்றத்தின் முக்கியஸ்த்தர் செங்கொடி பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் இன்று தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக தகவல் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/66290/lan…

  2. பற்றரி வாங்கிக்கொடுத்தவர்களுக்குத் தூக்குத்தண்டனை என்றால் கொடூர ஆயுதங்கள் விநியோகித்து 70,000க்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்றவர்களுக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்படவேண்டும். நீதிக்கு முன் எல்லோரும் சமம் என்ற ரீதியில் இந்திய அரசும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தண்டனை விதிக்கப்படவேண்டும். அப்படி இல்லாவிட்டால் தண்டனை என்பது ஏழைகளுக்கு மட்டும் தான் இந்த விடயத்தில் தமிழ்நாடு தன்னுடைய கடமையைச் செய்யாவிடில் இந்தியாவில் தமிழனுக்கு மரியாதையும் மானமும் இல்லை என்பது தான் அர்த்தமாகிவிடும். தமிழ்நாடு தனது பலத்தைப்பிரயோகிக்வேண்டும். இல்லாவிடில் தமிழ்நாடு தன்னைத் தனிமைப்படுத் தக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். குற்றவாளிகள் அரசுக்கட்டில் இருப்பதால் அங்கு நீதிக்கு வேலையில்லாமல் போய்வி…

  3. ஜெனிவாவில் செப்ரெம்பர் 12ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான பிரச்சினை எழுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கும் அரசாங்கம் அதனை முறியடிப்பதற்கான முழுவீச்சில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக வெளிநாடுகளில் உள்ள சிறிலங்காவின் இராஜதந்திரக் குழுக்கள் உசார்படுத்தப்பட்டுள்ளன. மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் குழுவை தனிப்படக் கவனித்துக் கொள்ளுமாறு ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் தாமரா குணநாயகம் கேட்கப்பட்டுள்ளார். இவர் ஸ்பானிய மொழியை நன்று பேசக் கூடியவராவார். அதேவேளை சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொ…

  4. மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க சென்னை வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தின் உண்மை நிலையை தமிழ் மக்களிடையே பரப்பும் வகையில் தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்கள் 28-08-2011 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மயிலை திருவள்ளுவர் சிலையிலிருந்து கோயம்பேடு வரை இருசக்கர ஊர்தியில் ஊர்வலமாக சென்றனர். தமிழர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் ப.வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் 80க்கும் மேற்பட்ட ஊர்தியில் தோழர்கள் முழக்கமிட்டவாறே சென்றனர். வழிதோறும் பொது மக்கள் பெரும் வரவேற்பு அளித்ததோடு தோழர்களுடன் உணர்ச்சியாக முழக்கமிட்டனர். பல இடங்களில் நடு சாலையில் ஊர்திகளை நிறுத்தி தூக்குத் தண்டனையை எதிர்து கண்டன உரை நிகழ்த்தினர். இதனால் போக்குவரத்து…

  5. பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி இன்று (28.8.2011) இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசினார். அவர், ‘’எந்த ஒரு நொடியும் உயிர் நொடியாகவே கழிகிறது. இந்திய, இங்கிலாந்து அணிகள், இந்தியாவில் கிரிக்கெட் ஆடியபோது மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உண்டானது. இதை கண்டு பயந்த இங்கிலாந்து அணி, இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல என்று உடனடியாக நாடு திரும்பியது. அதே நேரம், இந்திய மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் மட்டுமே விளையாடலாம் என்று மத்திய அரசு சொல்லியது. அது தமிழ்நாடு. அப்படிப்பட்ட அமைதிப்பூங்காவானது தமிழகம். போர்க்குற்றவாளியான ராஜபக்சே ம…

  6. [sunday, 2011-08-28 09:55:24] நாட்டில் நடைபெறும் கிறிஸ் பூதம் தொடர்பான சர்ச்சையின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு செயற்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலா கைத்தொழிலுக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கிறிஸ் பூத வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இராணுவ முகாம்களில் உள்ள படையினர் கிறிஸ் பூதங்கள் போன்று தோன்றி சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பொருட்களை கொள்ளையிடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை 36 வீதமாக உயர்வடைந்துள்ள காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இந்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளதாக…

  7. வரும் செய்வாய்க்கிழமை 30 ஆம் திகதி , லண்டனில் இந்தியத் தூதரகம் முன் மாலை நான்கு மணியில் இருந்து ஏழு மணி வரை மரண தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் , அனைவரும் கலந்து கொள்ளவும்.அண்மித்த தொடரூந்து நிலையம் ஹொல்பொன்

  8. 28 ஆகஸ்ட் 2011 அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை ஆகியன ரத்தாவதாக சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அதனுடன் n;தாடர்புடைய சட்டங்களும் வலுவிழப்பதாக சிவில் உரிமைகள் அமைப்பின் சட்டப் பணிப்பாளர் சாலிய எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தின் சரத்துக்களின் அடிப்படையிலேயே உயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் பொதுமக்களை கைது செய்வதற்கான அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எனினு…

  9. தூக்குத்தண்டனை விதிப்பதற்கு இன்றிலிருந்து இரண்டு வாரங்கள்! நிறுத்த இரண்டு தெரிவுகள் கைவசம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் 09ம் திகதி வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படுவர் என வேலூர்ச் சிறை அதிகாரிகள் அவர்களிற்கு நேரடியாத் தெரிவித்துள்ளனர். வேலூர்ச்சிறைச்சாலை ஜனாதிபதியின் ஆணையைப் பெற்றுள்ளது. எனவெ அவர்கள் தூக்குத் தண்டனைக்கு தேவையான ஆயத்தங்களைச் செய்வதற்கான “கறுப்புப் பிடிவிராந்து” என்ற செயற்பாட்டில் ஈடுபடுவர் என பாதுகாப்புத்துறை அதிகாரியொருவர் ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார். இருந்தும் தற்போது இவர்களிற்கு இரண்டு தெரிவுகள் கைவசம் உள்ளன. முதலாவதாக …

  10. 3ம் நாள் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் . சத்யராஜ், மணிவண்ணன், அமீர், திருமா ஆகியோர் பார்வையிட்டனர். Sunday, August 28, 2011, 17:42 மூன்றால் நாள் உண்ணா நிலை போராட்டம் தொடர்கிறது. மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மூன்று சகோரதரிகள் தொடர்ந்து உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். இரண்டு பேர்களின் உடல் நிலை சற்று பலவீனமாக தொடக்கி விட்டது. அவர்களுடன் முத்துக்குமார் ஆவணப்படத்தின் உதவி இயக்குனர் மகேந்திர வர்மா மற்றும் அகிலா, தமிழரசி ஆகியோரும் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு ஆதரவு தர நிறைய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் சத்யராஜ், மணிவண்ணன் , அமீர் மற்றும் பலர் வந்த வண்ணம் உள்ளனர். உண்ணாவிரத மேடையில் டைரக்டர் மணிவண்ணன் பேசியதாவத…

  11. ஈழத்தமிழர் உரிமைப்பார்வையில் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க தமிழக மக்களும் தமிழக அரசும் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழர் உணர்வுகளை உதாசீனப்படுத்தியதல்லாமல் மனிதமே அதிர்கிற வகையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரணதண்டனையை நிறைவேற்ற மைய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இது பேரதிர்ச்சியாகவே இருந்தது. அதற்கென மக்கள்திரள் போராட்டங்களும் சட்டப்போராட்டமும் நடந்துவருகிற இவ்வேளையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங்கொடி அவர்கள் தீக்குளித்ததாக வந்துள்ள செய்தி அனைவரையும் மேலும் அதிரவைத்துள்ளது. கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்த ஆயிரம் வழிமுறைகள் இருக்க, போராடும் …

  12. அன்பு தமிழ் உறவுகளே, தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க கோரி மக்களின் குரல்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்ய வழக்கறிஞர்கள் குழு திட்டமிட்டிருக்கிறது. அதன் பொருட்டு மனிதநேயமிக்க மக்களாகிய உங்களிடம் உங்கள் கோரிக்கைகளையும் கடிதங்களையும் நாடி வந்திருக்கிறோம். தயவு கூர்ந்து வழக்கு தாக்கல் செய்யும் திங்கள் கிழமைக்குள் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் உங்கள் கடிதங்களை கீழுள்ள தொலைநகல்(FAX) எண்ணுக்கு அல்லது மின்னஞ்சல்(email) முகவரிக்கு அனுப்பிவிட்டு பின் naamtamizhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உடனடி…

  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டு மண்ணை என்ன செய்வார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை இடித்து அந்த இடத்தில் ஒரு வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியாது அழித்தவர்கள் அந்த வீடு இருந்த இடத்தில் உள்ள மண்ணை என்னசெய்யப் போகிறார்கள்? என்று வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். வீட்டை இடித்து அழித்து நினைவுச் சின்னங்களை அகற்றுகின்ற ஈனச் செயல்கள் இன நல்லிணக்கத்துக்கு ஒரு போதும் உதவாது. இத்தகைய செயல்கள் தமிழ் மக்கள் மனதில் என்றுமே ஆறாத காயங்களைய…

    • 3 replies
    • 1.9k views
  14. 28 ஆகஸ்ட் 2011 ரிவன்த ஆரியசிங்க தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை தடை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் ரிவன்த ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான அமைப்புக்களை தடை செய்யுமாறு கடந்த மாதம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், ஐரோப்பிய ஒன்றியம் இதுவரையில் பதிலளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் தடை செய்வது போதுமானதாக அமையாது எனவும், அதற்கு ஆ…

  15. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகிய சகோதரர்களின் உயிர்களைக் காக்குமாறு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களைக் கோரும் மடல் இங்கே தரப்பட்டுள்ளது. அவரால் மட்டுமே இந்த நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு வரையப்பட்டுள்ள இந்த மடலைப் பிரதியெடுத்து கையொப்பமிட்டு மின்னஞ்சல் மூலமாகவோ தொலைமடல் மூலமாகவோ அனுப்பி வைத்து பெறுமதியான அந்த மூன்று உயிர்களையும் காக்கும் செயற்பாட்டில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். http://www.z9web.com/pdf/appeal-hanging-%20PDF.pdf thanks tamil win

    • 1 reply
    • 1.4k views
  16. இலங்கையின் அவசரகாலச் சட்டத்தின் கீழ் 50 பெண்களும் 5 கைக் குழந்தைகளுமாக 860 பேர் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்… இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை வரவேற்கின்ற அதேவேளை இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 860 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் கோரியுள்ளார். யுத்தம் முடிவடைந்து சுமார் 26 மாதங்களின் பின் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இது காலம் கடந்த ஒன்று. எமது கட்சி இந்த சட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களித்ததுடன் குரல் கொடுத்தும் வந்தது. இந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதை வரவேற்கும…

    • 0 replies
    • 799 views
  17. [sunday, 2011-08-28 09:46:07] தமிழ் மக்களுடைய நிலங்களை இலங்கை அரசு ஆக்கிரமிப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் கலந்துரையாடல்களின் போது மத்திய காங்கிரஸ் அரசிடம் தமிழ்க் கட்சிகள் ஏகமனதாக முன்வைத்துள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஈழத்தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத் தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் இந்தக் கூட்டத்துக்கு ஏற் பாடுசெய்திருந்தார். 8 தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இதி…

  18. சரணடைந்த புலிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை 28 ஆகஸ்ட் 2011 தமிழ்ச் செல்வனின் மனைவி தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் கூறுகிறது:- இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என புலிகளின் முன்னாள் அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழச்;செல்வனின் மனைவி சசிரேகா தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலி உறுப்பினர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தினருடன் நடைபெற்ற யுத்தத்தின் போதே விடுதலைப் புலிகளின் சகல சிரேஸ்ட தலைவர்களும் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார். இறுத…

  19. ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 28, 2011 செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது சிறிலங்கா உள் நாட்டில் பல்வேறு படம்காட்டும் வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளது. அதில் முக்கியமானது மறுவாழ்வளிக்கப்பட்டதாகக்கூறும் 500 விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களை இலங்கை முழுவதும் சுற்றுலாவிற்கு அழைத்து சென்று பின்னர் விடுதலை செய்யப்போகின்றது. இந்த 500 பேரும் கொழும்பில் உள்ள தூதரகக்ங்கள், ஐக்கிய நாடுகள் வளாகம், சர்வதேச நிறுவனங்களின் அலுவலகக்ங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள். ஊடகக்ங்களில் நேரடி நிகழ்ச்சிகளிலும் வழங்குவார்கள். இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்ட பின்னர் ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்…

  20. [ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 01:33 GMT ] [ கார்வண்ணன் ] போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் விடயத்தில் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே சிறிலங்காவையும் அணுக வேண்டும் என்று நாளை கொழும்பு வரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவி செயலர் றொபேட் ஓ பிளேக்கிடம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏனைய நாடுகள் விடயதில் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்கா, சிறிலங்கா விடயத்தில் மாறுபாடான கொள்கையைக் கடைப்பிடித்து தனிமைப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. எனவே உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே தம்மையும் நடத்துமாறு சிறிலங்கா அ…

  21. [ சனிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2011, 15:52 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] முல்லைத்தீவு மாவட்டத்தில் வெடிவைத்தகல் தொடக்கம் முள்ளியவளை வரையிலான பிரதேசத்தை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தகவல் வெளியிட்டுள்ளார். வெடிவைத்தகல் தொடக்கம் முள்ளியவளை வரையில், சுமார் 10 கிராம அதிகாரி பிரிவுகளையே மகாவலி எல் வலயத்துடன் இணைக்கப் போவதாக சிறிலங்கா இராணுவத்தினர் காணி உரிமையாளர் சிலரிடம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெடிவைத்தகல் பகுதியில் உள்ள வயல் ஒன்றின் உரிமையாளர் அங்கு சென்றபோது அவரது வயல் விதைக்கப்பட்டிருந்ததாகவும், அதுபற்றி சிறிலங்காப் படையினரிடம் முறையி…

  22. சந்திரிகாவுடன் அமைச்சர்கள் இரகசியச் சந்திப்பு Sunday, August 28, 2011, 10:31 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலர் புதிய கட்சி ஒன்று அமைப்பது தொடர்பில் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் அரசியலில் ஈடுபட நாட்டம் கொண்டுள்ளமை காரணமாக அவர் ஒரு புதிய கட்சியின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். இது தொடர்பில் அண்மையில் அவரது தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசுக்கு நெருக்கமானவர்கள்ää ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்று புதிய கட்சி தொடர்பில் ஆராய்ந்…

  23. http://issuu.com/mayapaper/docs/152

  24. சிறிலங்கா அரசுக்கு சொந்தமான சிறிலங்கா விமானப்படையின் விமானம் இன்று சென்னை சர்வதேச விமானத்தில் தரையிறங்கியது. வானில் இருந்தபடியே அவசர தரையிறக்க அனுமதி கோரியதாகவும் இதற்கு டெல்லி வான் பாதுகாப்பு நிர்வாகம் அனுமதியழித்ததாகவும் கூறப்படுகின்றது. விசாரணையின் பின்னர் விமானப்பறப்பின் போது ஏற்பட்ட தொழில் நுட்பகோளாறு காரணமாகவே இந்த அவசர தரையிறக்கம் நடந்ததாகவும் சிறிலங்கா தரப்பு கூறுகின்றது. விசாகப்பட்டினம் நோக்கிய தமது பறப்பானது சிவில் போக்குவரத்திற்காக சிறிலங்கா விமானப்படையின் ஒரு சேவை எனவும் இந்த பறப்பின் போது 7 பேர் அதில் இருந்ததாகவும் சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%A…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.