Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜோசப்பின் இடத்திற்கு வேறொருவரை நியமிக்க நடவடிக்கை [புதன்கிழமை, 18 சனவரி 2006, 18:59 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையினால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்தக் கட்சியின் சார்பில் அதிக விருப்புவாக்குகளைப் பெற்ற வேட்பாளரைத் தெரிவு செய்து அனுப்புமாறு மட்டக்களப்பு மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரை தேர்தல் ஆணையாளர் எழுத்து மூலம் கோரியுள்ளார். நன்றி: புதினம்

    • 6 replies
    • 1.8k views
  2. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சீனா தயார்! யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அப்பகுதிகளில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாட்டு திட்டங்கள் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு மக்களும் அதன் பயன்களை பெறவேண்டுமென்ற நோக்கத்தில் இச்செயற்பாட்டினை சீனா மேற்கொள்ள முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் அரசியல் பிரிவின் தலைவர் ல…

  3. பிரித்தானியாவின் Leicester நகரத்தில் உள்ள ஹரி கிருஷ்ணா இந்து ஆலயத்தில் நேற்று பிரித்தானிய நேரம் மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 30 பேர் வரையிலான பக்தர்கள் வெறும் 30 செக்கன்களுக்கு இடையில் மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்துள்ளார்கள். இது ஒரு தெய்வச் செயல் என்றும் இறைவனின் அற்புதம் என்றும் நம்பப்படுகின்றது. ஆலயத்தில் திருவிழா ஒன்றை முன்னிட்டு அன்னதானத்துக்காக மடப்பள்ளியில் பெருஞ்சமையல் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்தது. சமைத்து முடித்த பின்னர் சிலிண்டரை சிலிண்டர் ரியூப் இல் ஒருவர் துண்டித்திருக்கின்றார். ஆயினும் அவர் காஸ் லீக் ஆகின்றது என உணர்ந்து கொண்டார். விபரீதத்தை உணர்ந்த அவர் சுதாகரித்தார். மிகவும் துரிதமாக செயற்பட்டார். ம…

  4. வெளியாகியது யாழ். கோட்டை குறித்து புதிய ஆய்வு (வீ.பிரியதர்சன்) * போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பே யாழ் கோட்டையில் மக்கள் வாழ்ந்தனர். * யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள். * தமிழக நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. * அரோபிய, சீன வர்த்தக வணிகம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள். * யாழ். கோட்டைப்பகுதி 'ஐந்துசார் வளவு' என்று அழைக்கப்பட்டுள்ளது. போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பே யாழ்.கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளதாகவும் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக தொல்லியல்…

    • 2 replies
    • 1.8k views
  5. முழுமையாக எப்படியெல்லாம் பலவீமனடைந்திருக்கிறது சிறிலங்கா இராணுவம்: அம்பலப்படுத்துகிறது கொழும்பு ஊடகம் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை நிலையிலிருந்து கீழ்நிலை வரை எப்படியாக பலவீனமடைந்திருக்கிறது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் அம்லப்படுத்தியுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்: சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தளபதி பாரமி குலதுங்க கொல்லப்பட்ட பின்னர் கொழும்பு நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறிலங்கா புலனாய்வுத்துறை மறு ஆய்வுக்குட்படுத்தி புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறிலங்காவின் வர்த்தக நிறுவனங்களில் பெருமளவிலான தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. கொழும்பு நகரின் பாரிய பாதுகாப்பு…

    • 10 replies
    • 1.8k views
  6. சார்க் விளையாட்டுப்போட்டியினை சாட்டாகவைத்து வரும் 28ம் திகதிவரை பாடசாலைகளிற்கு விடுமுறையளித்துள்ளது. உண்மைக் காரணம் எதுவோ?

    • 3 replies
    • 1.8k views
  7. 3ஆம் இணைப்பு‐ கே.பி எனப்படும் கே.பத்மநாதன் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப்பகுதி ‐ தமிழில் புவுN 01 யுரபரளவ 10 01:49 யஅ (டீளுவு) விடுதலைப் புலிகளின் சர்வதேசப்பிரதிநிதியாக இருந்து இலங்கை அரசால் மலேசியாவில் வைத்து கைது செய்து கொண்டு செல்லப்பட்ட கே.பி எனப்படும் கே.பத்மநாதன் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப்பகுதி இது 2006 தொடக்கம் 2009 வரையான போர்க்கள நிலவரங்களை எப்படி நீங்கள் அறிந்து கொண்டீர்கள்? முதலில் கிழக்கு பின்னர் வன்னி கள நிலவரங்கள் குறித்து விடுதலைப் புலிகள் உங்களுக்கு அறியத் தந்தார்களா? போர்ப்பிராந்தியத்திலிருந்து வெகு தொலைவில் நானிருந்தேன். கிழக்கு மற்றும் வன்னிக்கள முனைகளில் என்ன நடைபெறுகிறது என்பதனை நான் அறிந்தவன…

    • 2 replies
    • 1.8k views
  8. மன்னார் களமுனையில் கடும் மோதல் [ த.இன்பன் ] - [ மார்ச் 29, 2008 - 09:36 AM - GMT ] மன்னார் களமுனையில் இன்று காலை சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட நகர்வு முயற்சி ஒன்றைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை அடம்பனிற்குத் தெற்காகவுள்ள இளந்தீவன் பகுதி நோக்கி சிறிலங்கா படைகள் நகர்வு முயற்சியைத் தொடங்கியதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே கடும் மோதல்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த மோதலின் போது ஏற்பட்ட இழப்பு விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை http://www.eelatamil.net/index.php?option=...8&Itemid=67

  9. வான் பாதுகாப்பு அவதானிப்புக்கள் கட்டுநாயக்க ராடர் நிலையத்துக்கு மாற்றம் [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 09:32 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வவுனியாவில் உள்ள பிரதான கட்டளையிடும் சிறிலங்கா படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறி எறிகணை மற்றும் வானூர்தி தாக்குதல்களிலான மரபு வழி தாக்குதலை அடுத்து சிறிலங்கா தலைநகர் கொழும்பின் வான் மார்க்கமான எல்லை பாதுகாப்பு அவதானிப்புக்கள் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தில் உள்ள ராடர் கருவிகள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக படைத்தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த இந்தியாவின் இந்திரா ராடர் கருவிகள், சிறிலங்கா படைத்தரப்பின் ஆகாய எல்லைக்குள் புலிகளின் வானூர்திகள் உள்நுழ…

  10. கழுகுக்கண்ணோடு இலங்கையை அவதானிக்கிறது சர்வதேச சமூகம்! ` பிறக்கும் இந்த வாரத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மூன்று வெளிநாட்டுப் பிரமுகர்கள் இலங்கை வருகிறார்கள். அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களப் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தலைமையிலான குழு இவ் வாரம் வருகின்றது. ""இலங்கையில் போர் நடவடிக்கைகளை உடனே நிறுத் தச் செய்யவும் அமைதிப் பேச்சுக்களுக்கான அமெரிக்கா வின் ஆதரவை வெளிப்படுத்தவும் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வருகின்றார்'' என அமெரிக்கத் தூதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

    • 4 replies
    • 1.8k views
  11. இராணுவ சீருடை ,ஆயுதங்களுடன் 8பேர் கொண்ட குழு பேருந்தை கடத்தி பயணிகளிடம் கொள்ளை ..! இன்று காலை பணமுன அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தை இராணுவ சீருடை , ஆயுதங்களுடன் வருகை தந்த எட்டு பேர் கொண்ட ஆயுத குழு இடை மறித்து வேறு பகுதிக்கு கடத்தி அதில் வருகை தந்த பயணிகள் அணைவரிடமும் ஆயுத முனையில் மிரட்டி நகைகள் பணம் என்பவற்றை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது . இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மக்களை விசாரித்து நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டனர் . இந்த திருடர்களை மடக்கி பிடிக்க இரு பொலிஸ் விசேட குழுக்கள் அமைக்க பட்டுள்ளன . Short URL: http://www.ethirinews.com/?p=6…

  12. செய்தியாளர்கள் வலுக்கட்டாயமாக சிறிலங்கா இராணுவத்தால் கூட்டிச் செல்லப்பட்டனர் Written by Seran - Oct 05, 2007 at 03:08 PM செய்தி சேகரிப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு நேற்று வியாழக்கிழமை சென்ற பி.பி.சி. செய்தியாளர்கள் மூவர் படையினரால் வலுக்கட்டாயமாக இராணுவ முகாமுக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் தற்போதைய கள நிலைமைகள் தொடர்பாக செய்திசேகரிக்கச் சென்ற பி.பி.சி.யின் மூன்று பெண் செய்தியாளர்களே நேற்று மாலை யாழ் நகரில் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து படையினரால் கூட்டிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குடாநாட்டு நிலைமைகளை சுதந்திரமாக நேரில் அறிந்து கொள்ளவே தாங்கள் அங்கு வந்ததாகவும் தங்களை அந்த விடுதியிலேயே தங்க அனுமதிக்குமாறு …

    • 3 replies
    • 1.8k views
  13. உலக அரங்கில் பிரபாகரனின் திட்டமிடல்கள், பிரபாகரனின் நகர்வுகள் யாவும் அவருக்கு அருகே மிக நெருக்கமாக உள்ளோரால் கூட இலகுவில் அறிய முடியாது என்று கூறுவார்கள். ஆனால் இன்று ஈழப் போராட்டம் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் அரசியல் அறிவு ஜீவிகள் அனைவரும் பிரபாகரனின் மன உறுதி பற்றி அளவிட முடியாதவர்களாக உள்ள நேரத்தில் 25 வருடங்களிற்கு மேலாக புலம் பெயர்ந்து வாழும் ஓர் அரசியல் புத்திஜீவி பிரபாகரனின் தோல்வி பற்றி புதியதோர் விளக்கம் கொடுக்கின்றார். முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தோற்றது எப்பூடி என்று அறியப் பலருக்கும் ஆவல் அதிகமாக உள்ள சமயத்தில் அரசியல் ரீதியாக பிரபாகரனின் நகர்வுகளை அளவிட முடியாதோர் பிரபாகரனின் தோல்வியினை அளவிடப் பல்வேறுபட்ட சொல்லாடல்களைக் கையாள்கிறார்கள். வாருங்கள் பதிவர்க…

    • 2 replies
    • 1.8k views
  14. இலங்கையில் இந்துக்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக, புதுடெல்லியில் நடைபெறும், அனைத்துலக இந்து மாநாட்டில் தெரிவித்துள்ளார். உலக இந்து காங்கிரசின், மூன்று நாள் அனைத்துலக இந்து மாநாடு நேற்றுமுன்தினம் புதுடெல்லியில் ஆரம்பமானது. இந்த மாநாட்டை திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத்,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து, மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மீது செல்வாக்குச் செலுத்தும், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்குபற்றும் இந்த மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.…

    • 28 replies
    • 1.8k views
  15. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக பி பி சி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

    • 11 replies
    • 1.8k views
  16. நீர் மூழ்கிக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்மை குறித்து சீனா மௌனம் தமது நாட்டு நீர் மூழ்கிக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து சீனா மௌனம் காத்து வருகின்றது. சீன நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் தரித்து நிற்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறித்து சீன வெளிவிவகார அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த விடயம் குறித்து சீன பாதுகாப்பு அமைச்சிடமே மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்…

    • 15 replies
    • 1.8k views
  17. எள்ளியவர்கள் எல்லாரும் கள்ள மௌனத்துடன் சுமந்திரனின் கருத்துக்களை இப்போது பார்க்கிறார்கள்

  18. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 'மை டோட்டர் த டெரரிஸ்ட்' அமெரிக்க திரைப்பட விழாவில் 'மை டோட்டர் த டெரரிஸ்ட்' (My daughter the Terrorist) திரைப்படத்தை அமெரிக்காவில் திரைப்பட விழவில் இடம் பெறச் செய்தமையிட்டு வாஷிங்கனிடம் இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதுவர் பேர்னாட் குணதிலக, அமெரிக்க இராஜாங்த் திணைக்களதிற்கும் சமஷ்டி விசாரணைப் பிரிவுக்கும் கடிதம் அனுப்பி வைத்திருக்கின்றார் நோர்வே படத்தயாரிப்பாளரான பியத்தி ஆர்னஸ்டால் தயாரிக்கபட்ட இத்திரைப்படமானது விடுதலைப் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத் திரைப்படம் ஏப்ரல் 4 ல் வட கரோலினாவின் டர்காமில் காண்பிக்கப…

    • 1 reply
    • 1.8k views
  19. இன்று எல்லோரிடமும் ஒரு கேள்வி இருக்கின்றது கொள்கை முன்னெடுப்பு பிரிவைச் சேர்ந்த திரு. ஏழிலன் பேசுகின்றார்.இன்றைய இந்த நாளிலே பல நெருக்கடிக்குள்ளே வாழ்ந்து வழுகின்ற நாங்கள் இடையிலே எங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்காக மாத்திரமல்லாது இன்றைய காலத்தின் தேவைகளையும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவேண்டும். இதேநேரம் இன்றைய நிலைப்பாடு என்ன என்பது இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று பலரிடம் பல கேள்விகள் எழுந்துள்ளது. இப்போது இராணுவத்தினரின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இராணுவம் முன்னேறுவது போல சொல்லகின்ற செய்திகள். எங்களுக்கருகிலேயே சத்தங்கள் கேட்பதற்கான அந்த நடவடிக்கைகள். நாங்கள் அதனை அண்மையிலேயே தொடர்ச்சியாக எதிரியினுடைய, தாக்குதல்…

  20. கிபீர் தாக்குதலில் கொல்லப்பட்ட 450 உடல்களுக்குள் என் மகனை தேடினேன் கிபிர் தாக்குதலில் கொல்லப்பட்ட 450 க்கும் அதிகமான உடல்களின் மத்தியில் எனது மகனை தேடினேன் என கண்ணீர் மல்க தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், நாம் இடம்பெயர்ந்து மாத்தளன் பகுதியில் தங்கி இருந்தோம். எம்முடன் எமது மகனான சேவியர் உஷாந்தனும் (காணாமல் போகும் போது வயது 17 ) இருந்தார். யுத்தம் தீவிரமடைந்து இருந்த வேளை பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பிரதேசத்தில் நாம் கொட்டகை போட்டு இருந்த பகுதிகளில் மீது 2009ம் ஆண்டு 3ம் மாதம் 09ம் திகதி காலை மதியம் மற்றும் மாலை என மூன்று நேரத்தில் நாம் இர…

  21. கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள் 28.06.1997 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது நாக்கினை தறித்து தலையை கட்டிலுடன் மோதி தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் வீரவணக்க நாள் இன்றாகும். தென்தமிழீழத்திலிருந்து போராளிகள் படகுகள் மூலம் வன்னிக்கு வந்து கொண்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டது. இதன்போது ஒரு விபத்திற்குள்ளாது. படகு விபத்தைத் தொடர்ந்து நீந்திக் கரையையடைந்த கடற்கரும்புலி மேஜர் பாலன் மயங்கிய நிலையில் படையினரால் கைது செய்யப்பட்டார். படையினரின் தடுப்பில் …

  22. பாரிய இக்கட்டில் மாண்டுள்ள இலங்கையின் ஆட்சிபீடம் காஸ்மீர் பிரச்சனையை தலையில் வத்து கூத்தாடியவர்களுக்கான அறிவிப்பை ஒபாமா அரசின் அனுசரணையோடு பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ளார்.இவ்வறிவிப்பால் முதலில் ராஜதந்திரரீதியாக பாதித்துள்ள இலங்கை பல அழுத்தங்களையும் எதிர் நோக்கவுள்ளது.இதற்கு வலு சேர்க்கும் விதமாக சரத்பொன்சேகாவின் பதக்கபறிப்பும் நடைபெற்றுள்ளது.

  23. கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?) ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா? 'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாந…

    • 0 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.