Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருமலை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஒடுக்கும் பொறியில் சிக்கியிருக்கும் வேட்பாளர்களை இனம் கண்டு விழிப்புடன் செயற்படுங்கள் என அவுஸ்திரேலிய தமிழ்க் கலாசாரக் கழக செயலாளர் விக்கிரமசிங்கம் விடுத்துள்ள வேண்டுகோளில் தெவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று இலங்கைத் தீவில் தமிழர் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களாகிய நாங்கள் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்து வரும் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தும் வகையில் இனங்கண்டு விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும். சத்திரப் பிரசித்தி வாய்ந்த திருகோணம…

    • 4 replies
    • 710 views
  2. மத்திய வங்கி ஆளுநர் வடக்குக்குப் பயணம் Share மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இரண்டு நாள்கள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 6 ஆம், 7 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் அவர், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கிராமங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் வாழ்வாதார நிலமைகளை அவர் ஆராயவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/34317.html

  3. உறுப்பினர்களை... விலைக்கு வாங்கி, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது – விமல்! உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் உறுப்பினர்களை வளைத்துபோடும் சில்லறைத்தனமான அரசியலை தனது சகாக்கள் ஊடாக பஸில் ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். எமது உறுப்பினர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று பேரம் பேசுகின்றனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியுடன் எப்படி பேச்சு நடத்துவத…

  4. அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு... எதிராக, ஏறாவூரில் ஆர்ப்பாட்டம்! ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிசின் மட்டக்களப்பு மாவட்ட நபடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அமைப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளதற்கு அவரது சொந்த ஊரிலே மக்கள் எதிப்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு ஈடுபட்டிருந்தனர். அமைச்சரின் உருவப்படம் தாங்கிய பதாகைக்கு நாணையத்தாள்களின் மாலை இடப்பட்டு, பின்னர் பெட்டி ஒன்றின்மீது வைத்து வீதியில் வலம்வந்து நஸீர் அஹமட் ஒழிக என கோசமிட்டு, பின்னர் அதனை எரித்துள்ளனர். நாட்டுமக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போதைய அரசில் அமைச்சுப் பொறுப்பை ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது என இதன்போது மக்கள் தெரிவித்துள்ளனர். …

  5. கைதி­கள் விடு­விக்க அரசு அறிவுறுத்து ShareTweet தமிழ் அர­சி­யல் கைதி­க­ளில் சட்­டடி­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய கைதி­கள் தவிர்ந்த, ஏனைய கைதி­களை உட­ன­டி­யாக விடு­விக்­கு­மாறு சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு அரசு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அங்கு நில­வும் தாம­தம் கார­ண­மா­கவே கைதி­க­ளின் விடு­தலை பிரச்­சி­னை­யா­ கின்­றது. இவ்­வாறு அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தார். அரச தக­வல் திணைக்­க­ளத்தில் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது. அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, அநு­ரா­த­பு­ரம் சி…

  6. சர்வதேசத்தின் பங்களிப்போடு... தமிழ் மக்களின் பிரச்சினை, தீர்க்கப்பட வேண்டும் – வேலன் சுவாமி சர்வதேசத்தின் பங்களிப்போடு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கு வாக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்க் கட்சிகளின் இன்றைய சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், ”தமிழ் கட்சிகளிடையே இன்று இரண்டாவது சந்திப்பு நிறைவடைந்திருக்கிறது. நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தமிழ் கட்சிகள் என்…

    • 5 replies
    • 490 views
  7. ஏப்ரல் 24ல் இந்தியாவில் இடம்பெறவுள்ள மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டின் அரசியலில் ஈழத்தமிழர் விவகாரமும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான கட்சிகள் இந்திய காங்கிரஸ் கட்சியிடமிருந்து விலகி தேர்தலில் போட்டியிடுகின்ற நிலைகாணப்படுகிறது. காங்கிரசின் முன்னால் கூட்டணிக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்துள்ளது. இதேபோன்று தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைவதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தி.மு.க அல்லது அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு மிகப் பெரிய திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், 1988ல் தனியாகப் போட்டியிட்டது போ…

  8. மட்டக்களப்பு புதிய அரச அதிபராக மா.உதயகுமார்? மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் நியமனத்திற்கு இதுவரை இருந்துவந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது மட்டுநகர் மாநகர ஆணையாளராக ஏற்கனவே கடமையாற்றி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற மா.உதயகுமார் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக நியமனம் பெற்று விரைவில் கடமையை பொறுப்பேற்கவுள்ளதாக நம்பகமாக அறியமுடிகிறது. ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய திருமதி சாள்ஷ் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாக இடமாற்றலாகி கடந்ந 01/10/2017,ம் திகதி சென்றபின் முல்லைத்தீவு அரச அதிபரான திருமதி ரூபாவதி கேதீஷ்வரனை மட்டக்களப்பு அரச அதிபராக நியமிக்க சில அரசியல் வாதிகள் முயற்சியில் இறங்கியபோதும் இது கைகூடவில்லை. இந்நிலையி…

    • 0 replies
    • 488 views
  9. “சம்பந்தப்பட்டவர்களும், கேட்டவர்களும்... மே 03 ஆம் திகதி, Alert ஆக இருக்கவும்“ பாரிய ஊழல்கள் தொடர்பான... முக்கிய ஆவணங்கள் வெளியிடப்படுகின்றன? எதிர்வரும் 03ஆம் திகதி பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும், முக்கிய சில அரசியல் பிரமுகர்களின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வருமெனவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. “சம்பந்தப்பட்டவர்களும், கேட்டவர்களும் மே 3 ஆம் திகதி விழிப்பாக இருக்கவும்.‘ என தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அநுர பதிவிட்டுள்ளார். இப்பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்…

    • 1 reply
    • 170 views
  10. சக்தி டிவி செய்திகள் 8PM (19-10-2017)

  11. இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் - ஆணையை பிறப்பித்தார் ஜனாதிபதி நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆணையை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தற்போது அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/127053

    • 13 replies
    • 837 views
  12. திங்கள், மார்ச் 17, 2014 - 10:34 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் தமிழ் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கு நடவடிக்கை! பாடசாலைகளில் நிகழ்வுகளுக்குத் தடைவிதிப்பு! இலங்கையில் தமிழ் கலாசார பாராம்பரியத்தை முற்றாக அழிப்பதற்கான அனைத்து வகையான நடவடிக்கைகளையும், இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்அடிப்படையில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமிழ் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று அரசாங்கத்தினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கையின்படி, தமிழ் வரலாறு, தமிழ் கலாசாரம் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையான நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் பாடசாலைகளில் சிங்கள மொழியை கட்டாய …

  13. அரசியல் கைதிகளுக்காக அமைதிப் போராட்டம் : பொலிசார் இடையூறு 27ஆவது நாளாக உண்ணா போராட்டம் நடத்திவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பிலுள்ள நீதியமைச்சுக்கு முன்பாக இன்று (23) அமைதிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அரசியல் கைதிகளை விடுவித்துக் கொள்வதற்கான தேசிய அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். …

  14. அமெரிக்க டொலர் ஒன்றின்... விற்பனை விலை, 380 ரூபாயாக பதிவு! இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (வியாழக்கிழமை) 380 ரூபாயாக பதிவாகியுள்ளது. https://athavannews.com/2022/1281596

  15. நீதி கேட்டுப் போராடும் சுரேஷிற்கு உதவுங்கள் www.justiceforsuresh.org | contact@justiceforsuresh.org | (647) 477-6165 http://www.tamilwin.org/view.php?2aasQG11Bddc2eZZLuub24bb3889jTdd0ee5Hjooeccd3066QVVd32ee4FF2ggcce00c2IPPB44b44DDpiic00 http://www.tamilcanadian.com/page.php?cat=563&id=5907

    • 0 replies
    • 697 views
  16. பொறுப்புக்கூறல் பற்றிய பான் கீ மூனின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! – உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டுமாம். [saturday, 2014-03-22 17:21:43] இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமான வகாரத்தில், ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளதாக பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நேற்று நடந்த நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடுகையில், இலங்கைக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டும். இலங்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடாத்துவதா அல்லது வேறும் ஒர் பொறிமுறைமையை உருவாக்குவதா என்பதன…

  17. இலங்கைப் படுகொலை குறித்து விசாரணை கோர பன்னாட்டு சமூகம் தவறிவிட்டது: லூயிஸ் ஆர்பர் குற்றச்சாற்று புதன், 9 ஜூன் 2010( 16:30 IST ) FILE இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை கோர பன்னாட்டு சமூகம் தவறிவிட்டது என்று பன்னாட்டு சிக்கல் தீர்வுக் குழுவின் தலைவரும், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் முன்னாள் ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், அந்தப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகிவிட்டன, ஆயினும் அவைகளின் மீது முழுமையான விசாரணை நடத்துமாறு உலக நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தாதது மிகப் பெரியத் தவறு என்று …

    • 0 replies
    • 341 views
  18. 50,000 டொலர்களுடன்... ஒருவர், கைது. 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று மாலை வெலிக்கடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்ரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 15, அளுத்மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே சோதனையின் போது கைது செய்யப்பட்டதோடு அவரிடம் 50,000 டொலர்கள் கைப்பற்றப்பட்டது. 50,000 டொலர்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதை நிரூபிக்கத் தவறியமைக்காக பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1283264

  19. யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினரால் குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முதற்கட்டமாக சங்கானை, சித்தங்கேணி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் உள்ளிட்ட குடும்ப தகவல்களை திரட்டும் சுமார் 42 வினாக்கள் அடங்கிய விண்ணப்ப படிவம் மூலம் இராணுவத்தினரால் பொது மக்களின் விபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ். மாவட்ட படைத்தரப்பிடம் உதயன் இணையத்தளம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்ட போது இது தொடர்பாக குறித்த பிரதேச ராணுவ அதிகாரியிடம் கேட்டு விட்டு பதில் வழங்குவதாக தெரிவித்துள்ளார். http://www.onlineuthayan…

  20. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நீடிக்குமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது குறித்து கூட்டமைப்பின் உறுப்புக்கட்சிகளிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. புதிய அரசியலமைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை தமிழசுக் கட்சி தான்தோன்றித்தனமாக தீர்மானம் எடுப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி குற்றம் சுமத்தி வந்தது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அந்தக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பல தடவைகள் கோரியும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இந்தப் பின்புலத்தில் …

  21. காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் சதுப்பு நிலத்திலிருந்து கண்டெடுப்பு 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES களுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அட்டுலுகம பகுதியிலுள்ள சதுப்பு நிலமொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒன்பது வயதான இந்த சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலம் குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர். வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு, கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக நேற்று முற்பக…

  22. இராணுவ கட்டுப்பாட்டில் 18வருடங்களாக இருந்துவந்த மிருசுவில் கெற்பெலியில் மனித எச்சங்கள் பல சற்றுமுன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்படட்ட கெற்பேலி கடற்கரைப்பகுதியில் கடந்த 18 வருடங்களாக இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். எனினும் அண்மையில் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தங்கள் காணிகளை உரிமையாளர்கள் இன்று துப்புரவு செய்த போது அங்கிருந்த மண் அணைக்கு (பண்ட்) அண்மித்த பகுதியில் சிதைந்த நிலையில் மனித எச்சங்கள் இருப்பதை கண்ணுற்றுள்ளனர். அத்தோடு மனித உடலங்கள் எரியூட்டப்பட்ட அடையாளங்களும் தென்பட்டதையடுத்து உடனடியாக இது குறித்து பொலிஸ் மற்றும்…

  23. வெளிநாட்டில் இருந்து யாழ். திரும்பிய இளைஞன் கைது! [Sunday 2017-11-12 09:00] வெளி­நாட்­டி­லி­ருந்து நாடு திரும்பி யாழ்ப்­பா­ணம் நோக்­கி பயணம் செய்த இளைஞன் ஒரு­வரை வவு­னியா பேருந்து நிலை­யத்தில் வைத்து சோதனை மேற்­கொண்ட பொலி­ஸார் அவ­ரி­டம் மது­பா­னம், சிக­ரட் என்­ப­ன­வற்­றைக் கைப்­பற்­றி­யுள்­ள­னர். கட்­டார் நாட்­டி­லி­ருந்து இலங்கை வந்த யாழ்ப்­பா­ணம் பகு­தி­யைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் வெளி­நாட்டு மது­பா­னம் மற்­றும் இலங்கை வானூர்தி நிலை­யத்­தில் வாங்­கிய 10 பெட்டி சிக­ரட் என்­ப­ன­வற்றை எடுத்­துச் சென்­ற­போது வவ­னியா மத்­திய பேருந்து தரிப்­பி­டத்­தில் வைத்து போதை ஒழிப்பு பொலி­ஸார் சோதனை மேற்­கொண்­ட­ போது கைது செய்­ய…

    • 0 replies
    • 556 views
  24. அரச ஊழியர்களின்... ஓய்வு பெறும் வயது எல்லையில், மாற்றம். அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அரச உழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்து . எனினும் தற்பொழுது 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு அமைய ஓய்வு பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 3 வருடங்களாக குறைந்து 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1285454

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.