Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டு. காரைதீவு வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு காரைதீவு சுற்றயற்கூறு வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டி நேற்று நள்ளிரவு விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கராஜ்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 65 லட்சம் ரூபா பெறுமதியான இவ் அம்புலன்ஸ் வண்டி பல்லாண்டு கால போராட்டத்தின் பின்பு இவ்வைத்தியசாலைக்குக் கிடைத்தது. இச்சம்பவம் தொடர்பாக அம்புலன்ஸ் வண்டியின் சாரதி வைத்தியர் உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை எவரும் கைதாகவில்லை. Tamilwin

  2. [size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத் தளபதிகள் மூவர், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாக இரண்டாம் நிலைப் பதவிகளில் அமர்த்தப்படவுள்ளனர்.[/size] [size=4]வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்த இது தொடர்பான திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.[/size] [size=4]ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் தளபதியும், தற்போது இராணுவத் தலைமையகத்தில் பொது அதிகாரிகளுக்கான பணிப்பாளர் நா…

  3. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்-பொன்சேகா! யாராக இருந்தாலும் அவர் குற்றம் செய்திருந்தால் தண்டிக்கப்படவேண்டும். யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட காரணத்திற்காக யுத்த குற்றவாளிகள் சட்டத்தை மீற அனுமதிக்க முடியாது.’ என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு என்றால் என்னவென்றே தெரியாத பொது எதிரணியினர், அரசியல் இலாபத்திற்காக தேசிய பாதுகாப்பு குறித்து பொய்யாக கூச்சலிடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சாலாவ இராணுவமுகாமின் ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்புச் சம்பவத்துடன் வெளிநாட்டுத் தொடர்பு இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்விதமான உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட…

  4. டெங்குவுடன் ஒப்பிடும் போது கொரோனாவில் ஒன்றுமில்லை! – கண்டுபிடித்த பந்துல டெங்குவால் வருடத்துக்கு 500 – 600 பேர் பலியான போதும் தேர்தல்கள் நடைபெற்றன என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அத்துடன் டெங்கு இறப்புக்களுடன் ஒப்பிடும் போது கொரோனாவில் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். நேற்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். https://newuthayan.com/டெங்குவுடன்-ஒப்பிடும்-ப/ 🤣🤣

    • 8 replies
    • 757 views
  5. 18 Dec, 2025 | 02:10 PM இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்கும் நிகழ்வாக இச்சந்திப்பு நிகழவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின்…

  6. மஹிந்தவின் விசேட பிரதிநிதியாக இந்தியாவிற்குச் செல்லும் குழுவில் நான் இடம் பெற மாட்டேன். என சங்கரி தெரிவித்துள்ளார். இலங்கை விடயங்கள் குறித்த உண்மைகளைத் தெளிவு படுத்துவதற்காவும், இலங்கை தொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள கவலைகளைப் போக்குவதற்காகவும், தமது விசேட பிரதிநிதி ஒருவரை விரைவில் புதுடில்லிக்கு அனுப்பவுள்ளதாக மஹிந்த இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். எனினும் தற்போது ஏழு பேர் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தற்போதைய நிலவரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கிய குழுவொன்றை அடுத்த சில தினங்களில் இந்தியாவிற்கு அனுப்புவதற்காக நடவடிக்கைகளை …

  7. பரிதி படுகொலைக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை –தயான் ஜயதிக்க 11 நவம்பர் 2012 தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் பரிதி எனப்படும் நடராஜா மகேந்திரனின் படுகொலைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்தக் கொலையின் பின்னணியில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் அரசாங்கத்தினால் விசாரணை நடத்தப்பட்டு வரும் ஓர் விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமற்றது என அவர் சு…

  8. மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது: adminDecember 28, 2025 யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் நீண்ட காலமாக திட்டமிட்டு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ஒரு பெண்ணையும், அவருடன் தொடர்புடைய மூவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளார். இது தொடா்பில் பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் குறித்த பெண் ஐஸ் போதைப்பொருளுடன் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சட்டவிரோத போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச…

  9. பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்று பதிவுகளைக் கொண்ட நூல் இன்று காலை மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 18 வருடங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஓர் போராளியாக செயற்பட்டு தற்போது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி வெற்றிச் செல்வி எழுதிய ஏழாவது நூலான பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்று பதிவுகளைக் கொண்ட 'ஆறிப்போன காயங்களின் வலி' எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது. ஆசிரியை தனலெட்சுமி கிருஸ்துராஜன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், சிறப்பு விருந்தினராக மருத்துவ போராளி திருமதி தனேஸ்குமார் சத்திய…

    • 0 replies
    • 431 views
  10. சிறீலங்கா அரசு இன்று இந்தியா சென்று வழங்கியுள்ள பொய்யான வாக்குறுதிகளை தமிழ முதல்வரும் நம்பியுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி பதவி விலகல்கள் இடபெற மாட்டாது எனவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்திய மத்திய அரசுக்கு விதித்துள்ள கெடு முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று கடந…

    • 7 replies
    • 1.7k views
  11. எப்.முபாரக் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் செவ்வியை முழுமையாக பார்வையிடாமலும் தெளிவான மொழிபெயர்ப்பை பெறாமலும் சுமந்திரன் அவர்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது என மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் சி.துரைநாயகம் (20) தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் சமூக வலைத்தள ஊடகம் ஒன்றிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் வழங்கப்பட்ட செவ்வி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைப்பாடு குறிப்பிட்ட செவ்வியை முழுமையாக பார்வையிடாமையினாலும், தவறான மொழிபெயர்ப்புடன் கூடிய குறிப்பிட்ட சில கேள்விகளுக்கான பதில்களில் உள்ள தெளிவற்ற புரிதலின் காரணமாக ஏற்பட்டுள்ளன. …

    • 43 replies
    • 4.7k views
  12. [size=4]தவிர்க்கமுடியாத காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மலேசியாவிற்கு விஜயத்தினை மேற்கொள்ள மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு தகவல் தெரிவித்துள்ளன. 8ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம் ஏற்பாடு செய்துள்ள மாநாடு எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே அந்த அழைப்பினை ஏற்று மகிந்த மலேசியாவிற்கு செல்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ள்பட்டிருந்தன ஆனாலும் தற்போது அவர் தவிர்க்க முடியாத காரணத்தினால் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற யுத…

  13. 100 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது கற்பிட்டி - கண்டக்குடா பகுதியில் சுமார் நூறு கிலோகிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு இன்று (07) அதிகாலை சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் தென்னிந்தியாவிலிருந்து கேரள கஞ்சாவினை கடத்தி கொழும்பு மற்றும் கட்பிட்டி போன்ற பகுதிகளுக்கு விநியோகம் செய்துவருகின்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களை இன்று கற்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். …

  14. வடக்கின் திருமண மண்டபங்களுக்கான விசேட அறிவிப்பு! திருமண, வரவேற்புபசார மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான கொரோனா சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரால் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று (01) விடுக்கப்பட்ட அறிக்கையில், குறித்த இடப்பரப்பினுள் அனுமதிக்கப்படக் கூடிய ஆகக் கூடிய பங்குபற்றுனர் தொடர்பான தகவல், பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். நடைபாதைகள், ஆசனங்கள், அலங்கார அமைப்புகள் மற்றும் ஏனைய நோக்கங்களுக்கான இட ஒதுக்கீடுகளைக் கருத்திற் கொண்டு மண்டபத்தின் இடப்பரப்பிற்கு ஏற்ற வகையில் ஆசனங்களின் அனைத்துப் பக்க…

  15. சிங்கள அரசின் அதிபர் ராசபட்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடந்தது. மதுரை மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இணைந்த இவ்வார்ப்பாட்டத்தை நடத்தின. 12௧1௨008 காலை 11.00 மணிக்கு மதுரை மேலமாசிவீதிவடக்குமாசி வீதி சந்திப்பில் நடந்த இவ்வார்ப்பட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி மதுரை நகரச் செயலாளர் இராசு தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க செயற்குழு உறுப்பினர் கருப்பையா முன்னிலை வகித்தார். "தமிழர் இரத்தம் குடிக்கும் ராஜபட்சே திரும்பிப் போ!", "இனக்கொலை புரியும் ராஜபட்சே திரும்பிப் போ!", "கொலைவெறியன் ராஜபட்சேவுடன் இந…

  16. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவமும், பொலிஸாரும் இணைந்து நடத்திய தாக்குதலின் பின்னர் மாணவர் ஒன்றியச் செயலாளர் உட்பட கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் விடுவிக்கக்கோரி குடாநாட்டில் இன்று மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்தை பொது அமைப்புகளும் தெற்கைச் சேர்ந்த கட்சிகளும் இணைந்து நடத்தவுள்ளன. யாழ்.நகரில், பஸ் நிலையம் முன்பாக, முற்பகல் 11 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. எதுவித வேறுபாடுகளுமின்றி தமிழ் மக்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இன்று நடைபெற…

  17. கடற்படையினரின் காணி அளக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. மன்னார் – வங்காலை கிராமத்தின் கடற்கரையை அண்மித்த தனியாருக்கு சொந்தமான காணியை கையகப்படுத்தும் வகையில், கடற்படையினரால் இன்றும் காணி அளவீடு செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் இந்த முயற்சி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். குறித்த காணிக்கு 22 இலட்சம் ரூபாய் வழங்குவதாகவும், அந்தக் காணியை தமக்கு நிரந்தரமாக வழங…

  18. இராணுவத்தினரின் வெற்றிக்கான பிரதான காரணம் அனைத்து அதிகாரங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமையே – கருணா: http://www.globaltamilnews.net/tamil_news....=2296&cat=1 இராணுவத்தினரின் வெற்றிக்கான பிரதான காரணம், அனைத்து அதிகாரங்களுக்கும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையே என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் படையினர் அரசியல்வாதிகளுக்கு ஏற்ப செயற்பட்டு வந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார். பூநகரி கைப்பற்றப்பட்ட பின்னர், பிரபாகரன் எதிர்நோக்கியுள்ள நிலைமைகளை அனைவரும் உணர்ந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, பிரபாகரன் தன்னை மன்னர் என நினைத்து கொண்டு, எவருடைய ஆலோசனைகளையும் ஏற்று…

  19. யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் இரு அதிகாரிகளுக்கு தனிமைப்படுத்தல் என்.ராஜ் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தச் சேர்ந்த இரு அதிகாரிகள், கொரோனா அச்சம் காரணமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - இணுவிலில் பகுதியில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர், இந்தியா திரும்பிய நிலையில், அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. குறித்த நபரை, யாழ்ப்பாணத்திலிருந்த கொழும்புக்கு, பஸ்ஸில் அழைத்துச் சென்ற இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரும் குறித்த இந்தியப் பிரஜையுடன் தங்கியிருந்தபோது உயிரிழந்த மற்றுமோர் இந்தியப் பிரஜையின் மரணத்தை உறுதிப்படுத்திச் சான்றிதழ் வழங்கும் பணியை மேற்கொண்டவருமே, இவ்வாறு தனிமைப் படுத்தப்பட்டுள்…

  20. புதுடெல்லி சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளை ஜெயித்தாலும்இ தமிழர் பிரச்சனையை தீர்ப்பதில் வெற்றி பெற முடியாது என்று இந்திய அரசு கருதுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும், அவர்கள் திருப்தியடையத் தக்க வகையில் அதிகாரத்தில் போதுமான இடமளிப்பதன் மூலமே இன பிரச்சனைக்கு இலங்கை அரசு அரசியல் ரீதியாக தீர்வு காண முடியும் என்று இந்திய அரசு நம்புகிறது. இனப் பிரச்சனைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது.ஒருவேளை அவர்கள் ( சிங்கள ராணுவம் ) கிளிநொச்சியை கைப்பற்றினாலும் விடுதலைப் புலிகள் நாட்டின் இதரப் பகுதிகளுக்கு பரவிச் சென்று தங்களது நடவடிக்கைகளை தொடரத்தான் செய்வார்கள். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டாலும் அது பிரச்சனையை தீர்க்க…

  21. (சுபுன் டயஸ்) அண்மையில் கிளிநொச்சியிலிருந்து இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்களை அவர்களின் பெற்றோர் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை என இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இராணுவம் பதிலளித்துள்ளது. பயிற்சியில் உள்ளவர்களை வாரத்தில் ஒரு நாள் குறித்த நேரத்தில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. பார்வையாளர்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் விரும்பிய நேரத்தில் பயிற்சி பெறுபவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்களேயானால் எம்மால் ஓர் அர்த்தமுள்ள பயிற்சியை நடத்த முடியாமல் போகும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இது இராணுவ பயிற்சி பெறும் சகலருக்கும் பொதுவான நிபந்தனையாகும். இராணுவம் சகல…

  22. அரசுக்கு எதிரான ஜன சட்டன பாத யாத்திரை திட்டமிட்டபடி கண்டியில் வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். கண்டி ராணிமாளிகை முன்பாக வரும் 28ஆம் திகதி பாதயாத்திரையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைப்பார். வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி இந்தப் பாத யாத்திரை கொழும்பில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=161813&category=TamilNews&language=tamil

  23. சான்றிதழ் வழங்க வந்த மைத்திரியை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) முற்பகல் பொலன்னறுவையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த வைபவம் ஒன்று தேர்தல் ஆணைக்குழுவால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தேர்தல்கள் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக குறித்த இடத்திற்கு வருகை தந்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மைத்திரிபால சிறிசேன இம்முறை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பாக பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “இந்நிகழ்வு தேர்தல் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு …

    • 1 reply
    • 424 views
  24. வீரகேசரி இணையம் - இந்தியா மேற்கொள்ளும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து யுத்த நிறுத்தம் ஏற்படுத்த வாய்ப்பில்லை எனவும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைந்தால் மட்டுமே யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்பதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:- ''தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தற்போது அரச படையினரின் முன் நகர்வுகளுக்கு ஈடுகொடுக்க முடியாது பின் வாங்கி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. படையினர் தாக்குதல் மேற்கொள்ளக் கூடிய பிரதேசங்களைவிட்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் பின்வாங்கி வருவதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. …

  25. யாழ்ப்பாண மருத்துவர் மீது கொடூரத் தாக்குதல் 21 டிசம்பர் 2012 யாழ்ப்பாண போதான வைத்தியசாலயில் கடமையாற்றி வரும் மருத்துவர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இனந்தெரியாத கும்பலொன்று இந்தத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கந்தர்மடம் வீதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாள்களினால் மருத்துவர் தாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு இலக்கான மருத்துவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globalt…

    • 2 replies
    • 552 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.