ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
-நவரத்தினம் 'தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி உதயமாகுவதாகக் கூறி வவுனியாவில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சமகால ஆக்கபூர்வமான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காய், அரசியல் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் புத்திஜீவிகளினதும் பங்குபற்றுதலை உறுதி செய்வதற்காய், பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை விரைவுபடுத்தவதற்காய், எமது தேசத்தை நாமே ஆளும் சக்தியாக உருவெடுப்பதற்காய், மேலும் பல அரசியல் புதுமைகளுக்காய் இந்தக் கட்சி உதயமாகின்றது என சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்சி தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக 024 2226436, 0777642329 என்ற தொலைபேசி இலக்…
-
- 1 reply
- 391 views
-
-
'தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளம் வீதியில் உள்ள அலுவலகத்திலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தக் கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் வழிமுறைகளையும் இளைஞர், யுவதிகளுக்கான அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் சின்னம், கொடி என்பன மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன், இந்தக் கட்சியின் பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது கட்சியின் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
கொழும்பை தலைமையாக கொண்டு யாழ்ப்பாணத்திலும் அச்சிட்டு வெளியிடப்படும் பிரபல தமிழ் நாளேடு ஒன்றில் இருந்து அரசியல் பகுதிக்கான ஊடவியலாளர் ஒருவர் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளார். வட மாகாணசபையின் இரண்டாவது அமர்வில் ஆளுநர் சந்திரசிறி நிகழ்த்திய உரையை பிரசுரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் நாளேட்டின் கொழும்பு நிர்வாகம் குறித்த ஊடகவியலாளரை இடைநிறுத்தி உள்ளது. இடைநிறுத்தும் முன்னர் சிறிய விசாரணைகள் கூட நடத்தப்படவில்லை என சக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆளுனரின் உரை நீண்டதாக இருந்ததால் அதனை அடுத்தபதிப்பில் கட்டுரையாக அல்லது முழுமையான செய்தியாக வெளியிடலாம் என்று கருதி அந்த உரையை குறித்த ஊடகவியலாளர் முதல் பதிப்பில் வெளியிடவில்லை. உரை மொழிபெயர்க்கப்பட்டு பகல் வேளை கிட…
-
- 0 replies
- 257 views
-
-
'தமிழ் நாட்டு திரைப்படங்களை தடை செய்யவும்' செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013 12:24 தமிழ் நாட்டு திரைப்படங்களை தடை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை ராவண சக்தி அமைப்பினால் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்திடம் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக நடிகர்கள் அண்மையில் ஈடுபட்டனர். இதனால் இவர்களின் படங்கள் இலங்கை காட்சிப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என ராவண சக்தி அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான மகஜரொன்று இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன பிரதிநிதிகளிடம் ராவண சக்தி அமைப்பினால் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது. இதேவேளை, தமிழ் நாட்டு நடிகர்களை அழைப்பதற்கான திட்டமொன்றை இலங்கை கலைஞர்களுக்கான தேசிய இயக்கம் மேற…
-
- 2 replies
- 779 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார் கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதால் முஸ்லிம்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படப்போவதில்லை. இது தொடர்பில் முஸ்லிம்கள் அச்சமடையத் தேவையில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான அருண் தம்பிமுத்து தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோருவது எமது அடிப்படை உரிமையாகும். தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதால், முஸ்லிம்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படப்போவதில்லை. இது தொடர்பில் முஸ்லிம்கள…
-
- 0 replies
- 290 views
-
-
'தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற நான் கூறி வருவதினை அரசாங்கம் கேட்கவேண்டிய தேவையிருக்கின்றது' 28 அக்டோபர் 2013 முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 'தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆளுநருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லையென்பதனாலேயே நான் அவருடன் சிரித்துப்பழகி வருகின்றேன்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'வடமாகாண ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் வடமாகாண சபையை திறமையாக வழி நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது' என்றும் அவர் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற மாகாண சபை உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 'ஜனாதிபதியின்…
-
- 0 replies
- 371 views
-
-
'தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டுத்தரவும்' தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அதனை மீட்டுத்தருமாறு, இலங்கைக்கு உத்தியோகபூர்வ குறுகியகால விஜயத்தை மேற்கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தூதுக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘30 வருடகாலங்களாக இடம்பெற்ற அழிவுப்போரிலிருந்து படிப்படியாக முன்னேறிவரும் நாட்டை பல்வேறு திட்டங்கள் மூலமாக முன்னேற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகவும் பாராட்டுகிறது. ‘இந்நாட்டிலுள்ள …
-
- 0 replies
- 160 views
-
-
-சுமித்தி தங்கராசா மத்திய மற்றும் மாகாண அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என ஜரோப்ப நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளருடன் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, மத்திய மற்றும் மாகாண அதிகாரங்களின் ஊடாக தமிழ் மக்களுக்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக பில் பென்னியன் மாவட்ட செயலாளரிடம் வினவியுள்ளார். அதன்போது, தற்போதை…
-
- 0 replies
- 455 views
-
-
'தமிழ் மக்களுக்கான போதிய சுயாட்சியே த.தே.கூவின் கொள்கை' இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ததேகூ தனது கொள்கைகளை கைவிட்டு விட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தர் இதனை தெரிவித்தார். அத்துடன் தாம் இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியாக செயற்பட விரும்புகின்ற போதிலும், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக தாம் செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார். இவை க…
-
- 3 replies
- 691 views
-
-
'தமிழ் மக்களுக்கு பாதகமான எந்த ஒரு தீர்வையும் ஏற்கபோவதில்லை' -சொர்ணகுமார் சொரூபன் 'தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம். எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் மக்கள் பொறுமையாக இருக்கும் அதே வேளையில், கொள்கையில் உறுதியுடன் இருக்கவேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அமரர் தர்மலிங்கத்தின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை (02) தாவடியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இடம்பெற்றது. அங்கு கலந்து கொண்டு உரையாற…
-
- 1 reply
- 572 views
-
-
'தமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்' நாட்டில் குறுகிய இனவாத அரசியலுக்கு தான் இடமளிக்கப் போவதில்லை என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கூட்டுக் குடிநீர் விநியோகத் திட்டத்தை இன்று புதன் கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும், யாரும் எவருக்கும் அடிமையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்தும் தாழ்ந்த நிலையில் வைத்திருக்க சில அரசியல் தலைமைகள் முற்படுவதாகவும் அதற்கு இடமளிக்க முடியாத வகையில் அரசாங்கம் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கி…
-
- 1 reply
- 959 views
-
-
இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது இலங்கையில் 'அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதன் பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். வன்முறையை இனியொரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கின்றார். இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ம…
-
- 27 replies
- 2.4k views
-
-
'தமிழ் மக்கள் ஏமாற்றம்'......இரா. சம்பந்தன் மைத்திரியை ஆதரித்தமை குறித்துக் கவலையில்லை போர் முடிந்தால், முரண்பாடு முடிந்துவிட்டதா? மாற்று என்ன? மஹிந்த மீண்டும் வருவதா? கூட்டமைப்பின் தலைமைத்துவம் குறித்துத் திட்டமில்லை வடமாகாண சபை இன்னும் சிறப்பாகச் செயற்பட்டிருக்கலாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான பொறுப்புக்கூறலுக்காக வழங்கிய அர்ப்பணிப்புகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், இதனால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் எனவும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள…
-
- 3 replies
- 522 views
-
-
'தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்' -எம்.றொசாந்த் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே காரணமாகும். ஆனால் இந்த அமைப்பு கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது குறித்து அவர் திங்கட்கிழமை (21) தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், நாடாளுமன்றம் ஒரு தேசிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் சபையாக எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்க…
-
- 26 replies
- 3.2k views
-
-
'தமிழ், முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ள அசாத் சாலி கைது [Monday, 2013-05-06 18:43:43] இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்கிறார் சிவசக்தி ஆனந்தன் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்துள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 'மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்களை, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை ஒடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில்…
-
- 11 replies
- 806 views
-
-
ஞாயிறு, 11 நவம்பர் 2007(16:09) வெப்துனியா விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடைபெறும் ஊர்வலத்தில் தடையை மீறி மதிமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழழீத்தின் தீச்சுடராக ஒளி வீசிய தமிழ்செல்வன், சிங்கள இனவாத அரசின் குண்டுவீச்சால் கொலையுண்ட செய்தி தமிழர்களின் நெஞ்சில் பேரிடியாய் விழுந்தது. இலங்கைத் தீவில் தமிழ் குலத்தையே கருவறுக்கத் திட்டமிட்டு, சிங்கள இனவாத அரசு நடத்தும் இனப் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் கடமையை ஆற்றாததோடு, அப்படுகொலைக்கு உடந்தையாக மத்திய அரசு இலங்கைக்கு ராடார்களையும், ஆயுதங்களையும் வழங்கி வரும…
-
- 1 reply
- 1.5k views
-
-
உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள், தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக, அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப்பலம் வாய்ந்த ஒன்றாகும். தங்களது தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும், புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள். ஆகவே, புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன் வரவில்லை! மாறாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின் பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்! தமிழ்த் தேசியம் என்கின்ற சொல்லாக்கம் குறித்துப் பல விதமான கருத்…
-
- 2 replies
- 1.1k views
-
-
மாத்தளை மாவட்டம் தம்புள்ள புனித பூமி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்திலும் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு அடையாளமிடப்பட்டுள்ளதாக நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது. அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி, பெருநிலப்பரப்புப் பகுதியொன்று புனித பூமியாக தற்போது நாடு நகர அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் அடையாளமிடப்பட்டுள்ளதாகப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர். கடந்த வருடம் பௌத்த கடும்போக்காளர்களினால் இந்த பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாகியிருந்தது. ஏற்கனவே அடையாளமிடப்பட்ட பகுதியில் மக்கள் குடியிருப்புகளும், கட்டிடங்களும், நாடு நகர அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் சில வாரங்களுக்கு முன்னர் அகற்றப…
-
- 0 replies
- 400 views
-
-
'தராக்கி' டி.சிவராம்: வெற்றிடம் இன்றும் நிரப்பப்படவில்லை [ புதன்கிழமை, 28 ஏப்ரல் 2010, 22:14 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக சண் தவராஜா ஈழத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஊடகப் பரப்பில் தவிர்க்க முடியாது நினைவுக்கு வருகின்ற ஒருவர் 'தராக்கி" டி.சிவராம். தேசிய விடுதலைப் போராட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் களப்பலி ஆகியுள்ள போதிலும், அவர்களுக்கு முன்னோடியாக, கவர்ந்திழுக்கும் சக்தியாக அமைந்தவர் அவரே. அவரது இடைவெளி ஊடகப் பரப்பில் மாத்திரமன்றி, போராட்டத் தளத்தில் கூட பாரியதொரு வெற்றிடத்தை விட்டு வைத்திருக்கின்றமையை மறுப்பதற்கில்லை. இத்தனைக்கும் சிவராம் ஒரு மரபான ஊடகரல்ல. ஊடகப் பின்னணி உடைய குடும்பத்தில் அவர் பிறக்கவும் இல்லை, ஊடகவியலா…
-
- 3 replies
- 514 views
-
-
'தற்போதைய அரசியல் பாதை வித்தியாசமானது' தமிழரது தற்போதைய அரசியல் பாதை வித்தியாசமானது.அதற்கு அடிப்படை பொறுமை காக்க வேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காந்தியூர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தேர்தலின் போது, தமது தீவிரமான நிலைப்பாடுகளை முன்வைத்து மக்கள் மத்தியில் சொற்பளவேனும் ஆதரவைப் பெற்றிராதவர்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் அரசியற் போக்கையும் அழிக்க வன்முறையைக் கையிலெடுத்திருப்பதாக குற்றம் சுமத்தினார். இவ் வன்முறைப் போக்கின் வெளிப்பாடே ஜெனீவா, பேர்ன், டொரன்டோ, சிட்னி போன்ற நகரங்களில் தன…
-
- 0 replies
- 647 views
-
-
'தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்" -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய காலகட்ட நிலவரம் குறித்துப் பலவிதமான கேள்விகள் நம்மவர் மத்தியில் எழுந்திருப்பதை நாம் காண்கின்றோம். சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீது நடாத்தி வருகி;ன்றது. சம்பூர் போன்ற பிரதேசங்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன. தமிழ்ப்பொதுமக்கள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகள் சரியான முறையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தேங்கி போயுள்ளன. சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க தயார் என்று சொல்கின்ற சிறிலங்கா அரசு அதேவேளை தொடர்ந்தும் வான் தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பு…
-
- 0 replies
- 1.3k views
-
-
'தலிபான், அல்கைதா தடை இலங்கை முஸ்லிகளை பாதிக்கும்' : முஸ்லிம் கவுன்ஸில் தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அந்தச் சந்திப்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார அம்சங்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளியிடுவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ளுமாறு கோரும் வகையில் நடத்தப்பட்ட அந்த செய்தியாளர் சந்திப்புக்கு அந்த கவுன்ஸிலின் தலைவர் என். எம். அமீன் தலைமை தாங்கினார். இப்படியான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதன் ம…
-
- 16 replies
- 859 views
-
-
சென்னையில் கொலை, கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, தலைமறைவு குற்றவாளிதான் என்றும், அப்படி அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் உடனடியாக அவர் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவானந்தா, தற்போது இலங்கையில் ராஜபக்சே அரசில் அமைச்சர் பதவி வகித்து வருகிறார். இவர் முன்பு இ.பி.ஆர்.எல்.எப் என்ற போராளி இயக்கத்தில் இருந்தார். சென்னை சூளைமேடு பகுதியில் அந்த இயக்கத்தை சேர்ந்த சிலருடன் அவர் வசித்து வந்தார். கடந்த 1.11.86 அன்று அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போல…
-
- 1 reply
- 1.3k views
-
-
நடிகர் விஜயின் 'தலைவா' திரைப்படத்தை கொழும்பில் திரையிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லையென இலங்கைத் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவித்தார். மேற்படித் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதில் சிக்கல் நிலவுவதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'தலைவா' திரைப்படத்தை இலங்கையில் மற்ற மாகாணங்களில் வெளியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லையெனவும் ஆனால் கொழும்பில் திரையிடுவது குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதுவரை எதனையும் உறுதியாகக் கூறமுடியாது எனவும் அசோக சேரசிங்க குறிப்பிட்டார். இதேவேள…
-
- 0 replies
- 465 views
-
-
தவறிய அழைப்புக்கு (Missed Call) திரும்ப அழைத்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நுவரெலியா, புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான ராயப்பு ஜேசுரட்ணம் என்ற இளைஞனே மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.கண்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நிதவான் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அவரை அன்றையதினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி காதலித்து திருமணம் செய்வதாக நடித்து பணம், …
-
- 0 replies
- 696 views
-