ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
கிளிநொச்சி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுமார் 30,000 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்-த ஹின்டு' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது அரசாங்கப் படைகளால் மீட்கப்பட்டிருக்கும் கிளிநொச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் பொதுமக்கள் எவரும் இல்லையெனவும், கட்டடங்கள் இடிபாடடைந்த நிலையில் காட்சியளிப்பதாகவும் கிளிநொச்சி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுமார் 30,000 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடிக்கொருவர் நிறுத்தப்பட்டிருப்பதுடன், மீட்கப்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் த -ஹின்டு பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.8k views
-
-
தனுஷின் மாரி திரைப்படத்தின் பதாகைகளில் அதிகளவான சிகரட் பிடிக்கும் காட்சி புகுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் நேற்று வியாழக்கழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பட்டக்காரர்கள் தனுஷின் படத்துக்கு செருப்பு மாலை அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். சமூகத்துக்கான நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ப.தினேஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டனர். : http://www.tamilmirror.lk/150344#sthash.alH4gxhN.dpuf
-
- 2 replies
- 1.8k views
-
-
அம்பாறையில் அதிரடிப்படையினர் , புலிகள் மோதல் 3/10/2008 4:55:46 PM வீரகேசரி இணையம் - அம்பாறை சங்கமான் கந்தை பகுதியில் இன்று பிற்பகல் விடுதலை புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது . இதில் இரு விடுதலை புலிகள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . இன்று பிற்பகல் 3.15 மணியளவில் விடுதலை புலிகள் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அதிரடிப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவும் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் இரு டீ56 ரக துப்பாக்கியும் ஒரு கிளேமோர் குண்டு , வெடிபொருட்கள் உட்பட இலத்திரனியல் உபகரணங்கள் சிலவற்றையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 1.8k views
-
-
புலிகளால் ஆபத்தில்லை: இந்திய விமானப்படை ஏப்ரல் 02, 2007 குவாலியர்: விடுதலைப் புலிகளின் விமானப் படையால் இந்தியாவுக்கு எந்தவிதமான மிரட்டலோ, ஆபத்தோ இல்லை என்று தென் பிராந்திய விமானப்படை தளபதி யஷ்வந்த் ராவ் ராேன கூறியுள்ளார். குவாலியரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அவர்களது பலத்தைக் காட்டுகிறது. இருப்பினும் இதனால் இந்தியாவுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இருப்பினும் நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வகையிலுிம் நமது படைகள் தயாராகவே உள்ளன. என்ன நிலைமை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கக் கூடிய திறமை நம்மிடம் உள்ளது. போதிய அளவில் ரேடார் வசதிகள் நம்மிடம் உள்ளன. போர் விமானங்கள், நவீன சாதனங்கள் என நமது …
-
- 6 replies
- 1.8k views
-
-
முள்ளிவாய்க்காலில் சம்பந்தருக்கு கடும் எதிர்ப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.நிதர்ஷன் வடமாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில், முறுகல் நிலை தோன்றியது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அருகில் இந்நினைவு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிபோது, பொதுமக்கள் இதனை அரசியல் மேடையாக்க வேண்டா…
-
- 10 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்! வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வு உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து யாழ். நகர்ப்பகுதிக்குள் பேரணி இடம்ப…
-
-
- 27 replies
- 1.8k views
-
-
யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை கொழும்பில் நேற்று நேரில் சந்தித்த இந்துமாமன்றத்தின் தூதுக்குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்…
-
- 23 replies
- 1.8k views
-
-
தமிழ் திரைப்பட இயக்குனர்களான சீமான், சேரன் மற்றும் அமீர் ஆகியோரை தமிழக காவற்துறையினர் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தமிழ் திரையுலகின், ஈழ தமிழர்களுக்கு ஆதரவான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில், இந்த இயக்குனர்கள், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசியதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. அத்துடன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைதுசெய்யப்பட்டதை அடுத்து, சீமான், சேரன், அமீர் ஆகியோரும் கைதுசெய்யப்படலாம் என தமிழக காவற்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்து…
-
- 1 reply
- 1.8k views
-
-
தியத்தலாவ பிரதேசத்தில் பெருந்தொகை வெடிகுண்டுப் பொருட்களுடன் இரண்டு சிங்கள இளைஞர்களை தியத்தலாவ பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 12 ஆம் திகதி கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களும் வெடி பொருட்கள் அடங்கிய பொதிகளை சைக்கிள்களில் ஏற்றிக்கொண்டு தியத்தலாவை பிரதேசத்தில் மீகஸ்வத்த சந்தியிலுள்ள வீதித்தடை நிலையத்தை நோக்கி இரவு வேளையில் வந்த சந்தர்ப்பத்திலேயே வீதித்தடை நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு அவர்கள் ஏற்றிவந்த பொதிகளிலிருந்து வெடி மருந்துப் பொருட்களையும் மற்றும் ஜெலிக்நைற் வெடிகுண்டுக் குச்சிகளையும் சோதனையின் போது பொல…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஈழக் கொலைகள்-100 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் சென்னை: ஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களையும் குழந்தைகளையும் மக்களையும் காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நேற்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின், கொளத்தூர் பகுதியில், இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. பேராசிரியை சரஸ்வதி தலைமையில் 100 பெண்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாணவிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் பெண்கள் உள்ளிட்ட என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ள…
-
- 10 replies
- 1.8k views
-
-
ஆண்டு தோறும் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் , சமய விழாக்கள், நிகழ்வுகள், பொது அறிவு, தகவற் துளி போன்ற பல விடயங்களைத் தாங்கியவாறு தமிழ்த்தாய் நாட்காட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது. இந் நாட்காட்டியினை மேலும் சிறப்பாகவும், மக்கள் அறிய விரும்பும் விடயங்களையும் உள்ளடக்கியவாறும் என்றும் இல்லாத புதிய வடிவமைப்புடன் தமிழர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய முறையில் உங்களின் கைகளில் தர விரும்புகிறோம்.விசேடமாக இம்முறை ஒவ்வொரு நாளுக்கும் தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . அவ்வகையில் எதிர்காலத்தில் எமது தமிழ்த்தாய் நாட்காட்டியை மேலும் சிறப்பாகவும், எமது மக்களுக்கு தேவையான அனைத்து அதிகளவான தகவல்களையும் உள்ளடக்கவும் மக்களாகிய உங்களது கருத்துக்களையும் , …
-
- 1 reply
- 1.8k views
-
-
முன்னாள் உறுப்பினர்களை விடுதலைப் புலிகள் இணைத்துக்கொள்ள முயற்சி: துணை இராணுவக் குழுவின் தலைவர் [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 09:50 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் பலரை உள்வாங்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக துணை இராணுவக் குழுவின் தலைவர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் கடந்த வாரம் பிள்ளையான குழுவின் முக்கிய உறுப்பிரான ரகு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் தமது பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கத்துடன் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிள்ளையான் சந்தித்த போதே இக்கருத்தினை வெளியி…
-
- 2 replies
- 1.8k views
-
-
சர்வதேசத்திற்கு பேரிடியான அரசாங்கத்தின் அறிவிப்பு -அருஸ் (வேல்ஸ்)- இலங்கைத்தீவில் முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இனப்போர் மிகவும் உக்கிரமான கட்டத்தை அடைந்த போது நோர்வே நாடு அமைதியை நிலைநாட்டவென களமிறங்கியது. இலங்கையின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிநிச்சயம் என்ற மிகப்பெரிய படை நடவடிக்கை தோல்வி கண்ட பின்னர், வடக்கில் இராணுவத்தின் பலமிக்க தளமான ஆனையிறவு படைத்தளத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிக்கே நோர்வே அனுசரணை வழங்கியது. ஆனையிறவுத் தளத்தின் வீழ்ச்சியுடன் அந்தத் தளத்தின் பிரதான படையணியான 54 ஆவது படையணி கலைக்கப்பட்ட பின்னர், 55 மற்றும் 53 ஆவது படையணிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தீச்சுவாலை படை நடவடிக்கை மிகப்பெரு…
-
- 3 replies
- 1.8k views
-
-
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி [05 - April - 2008] யாழ். மாவட்டத்தில் இம்முறை க.பொ.த (சாதாரணதரப்) பரீட்சையில் எழுபது மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி (10 ஏ) பெற்றுள்ளனர். இதில் வேம்படி மகளிர் கல்லூரியில் 22 மாணவிகள் `10 ஏ' பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பரீட்சை முடிவுகளுக்கமைய வேம்படி மகளிர் கல்லூரியில் 22 பேரும், யாழ்.இந்துக் கல்லூரியில் 9 பேரும் , கொக்குவில் இந்துக் கல்லூரியில் 6 பேரும் , பருத்தித்துறை மெதடிஸ்த கல்லூரியில் 11 பேரும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 5 பேரும், யாழ். இந்து மகளிர் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி , நெல்லியடி ம.ம.வி., சாவகச்…
-
- 0 replies
- 1.8k views
-
-
காலத்தின் தேவை அறிந்து மீண்டும் இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது. தமிழீழச் சிக்கலைத் தீர்ப்பதற்கான திறவுகோல் தமிழகத்திலேயே உள்ளது "சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது. அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம் தான் தமிழீழ மக்களின் பலமும் கூட. இதனை உலகலாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்து விட்டதில…
-
- 1 reply
- 1.8k views
-
-
வெள்ளவத்தையில் இரு கிளேமோர் குண்டுகள் மீட்பு வீரகேசரி இணையத்தளம் வெள்ளவத்தை சவோய் தியட்டரிற்கு அமைந்த பகுதியில் விடிதியயான ஜடில் இன் பொலிஸார் தீடீர் தேடுதல் இரு கிளேமோர்கள் 3 குண்டுகள் மற்றும் ஒரு டெட்டனேட்டன மீட்டுள்ளதாக வெள்ள்வதை பொலிஸார் தெரிவித்தனர் சந்தேகத்திடமான நபரொருவர் நடமாடுவதாக கிடைத்த தகவல்லையடுத்து இன்று முற்பகல் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலேயே இவ் வெடிபொருட்கள் கண்டுபீடிகக்பட்டுள்ளதாக மீட்கப்பட்ட கிளேமோர் குண்டு முறையே 9 கிலோ கிராம் 5 கிலோகிராம் நிறையுடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர் இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு
-
- 11 replies
- 1.8k views
-
-
உலக அதிசயமாக விளங்கும் இலங்கை கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கைத் தீவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விரைவில் இலங் கைத் தீவு "தென்னாசியாவின் அதிசயம்'' ஆக மாறும் எனத் தெரிவித்திருக்கின்றார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குத் தமது "மஹிந்த சிந் தனை' திட்டம் குறித்து விளக்கம் அளிக்கும் கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி அடுத்த தசாப்தத்தில் இலங் கையை "தென்னாசியாவின் அதிசயம்' ஆக மாற்றும் நிலைக் குத் தமது "மஹிந்த சிந்தனை' இட்டுச் செல்லும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார். அதற்கான நடவடிக் கைகள் அடுத்த ஆறு ஆண்டுகளில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார். தமது அடுத்த ஆறு ஆண்டுகாலப் பதவி உறுதிப்படு…
-
- 0 replies
- 1.8k views
-
-
தேசியத் தலைவர் இம் முறை நிகழ்த்திய மாவீரர் தின உரையில் இந்தியாவை நோக்கி நட்புக் கரத்தை நீட்டியிருக்கிறார். இதைப் பற்றி பலர் பலவாறு எழுதி வருகிறார்கள். சிங்களத்தினதும், ஒட்டுக் குழுக்களினதும் ஊடகங்கள் எப்போதும் போன்று “விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள், அதனாற்தான் இந்தியாவின் தயவை வேண்டி நிற்கின்றார்கள்” என்று எழுதி வருகின்றன. தேசியத் தலைவர் இந்தியாவை நோக்கி பல முறை நட்புக் கரத்தை நீட்டியிருக்கின்றார். ஆனால் இந்திய அதிகார பீடம் தேசியத் தலைவரின் அழைப்பை ஒவ்வொரு முறையும் தவறாகவே அர்த்தப்படுத்தி இருக்கின்றது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியப் படையினர் கனரக பீரங்கிகள், டாங்கிகள், வானூர்த்திகள் சகிதம் தமிழீழ மண் மீது 10 ஒக்டோபர் 1987 அன்று போரைத் தொடுத்…
-
- 5 replies
- 1.8k views
-
-
சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார். எனவே, தமிழ் மக்கள் அரசியலில் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கை பல்லின சமூகம் வாழும் பெரும்பான்மை நாடு. எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அக்கட்சி பெரும்பான்மை சமூகத்துக்கு முன்னுரிமை வழங்குவது சாதாரண ஒரு விடயமாகும். இதனை குறை கூற முடியாது. ஏனெனில் சிங்கள மக்களே பெரும்பான்…
-
- 19 replies
- 1.8k views
-
-
சிறீலங்காவில் 3 தசாப்தமாக பயங்கரவாதப் பிரச்சனையே இருந்தது. அது இப்போ தீர்ந்துவிட்டது. இப்போ உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றி விடயமே முக்கியமாக உள்ளது. இன நல்லிணக்கம்... மீள் கட்டிமானத்திற்கு 13 திருத்தச் சட்டம் மூலம் எல்லாம் சுமூகமாக முடிச்சிடலாம். இப்படி இந்திய வெளிவிவகார மந்திரியும் மலையாளியுமான கிருஷ்ணா இந்திய நாடாளுமன்றில் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள.. சிங்களவர் கோத்தபாய.. பயங்கரவாதப் பிரச்சனை தீர்ந்துவிட்டது மட்டுமன்றி 13 திருத்தச் சட்டமும் அமுலில் இருப்பதால்.. தீர்வு என்று ஒன்றைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை என்றும் கூறியுள்ளார். ------------------------------- Terrorism was the problem: Krishna; no need of solution now: Gotabhaya …
-
- 3 replies
- 1.8k views
-
-
பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி சார்பில் `இலங்கை தமிழரின் உரிமையை காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. தமிழ் தேசிய கட்சி பொதுச் செயலாளர் பரந்தாமன் பேசுகையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை கூறி பேசினார். இலங்கை தமிழர்கள் படும் அவல நிலைகளை நேரில் கண்டு அதை படமாக எடுத்து வந்து உள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டாக்டர் எலைன்சான்டர், இந்தியா வருவதற்கு தடை விதித்ததால், அவர் இங்கு கருத்தரங்கில் பேச இருந்ததை வீடியோ படமாக எடுத்து அனுப்பி இருந்தார். அதை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
-
- 4 replies
- 1.8k views
-
-
மலேசியாவில் கொல்லப்பட்ட வவுனியா வாசியின் சடலம் இலங்கைக்கு அனுப்பிவைப்பு 10.03.2008 / நிருபர் வானதி மலேசியாவில் தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்ற பி.உதயகுமார் என்ற 32 வயது குடும்பத்தவர் அங்கு கொலை செய்யப்பட்டு சடலம் விமான மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. 2007 ஜூன் 22 ஆம் திகதி இவர் மலேசியாவுக்கு சென்றதாகவும் அங்குள்ள இந்திய பிரஜை ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டதாகவும் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மரணவிசாரணையில் தெரிவிக்கப்பட்டது. வவுனியா யோகபுரத்தைச் சேர்ந்த இவரின் மரண விசாரணை நீர்கொழும்பு வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி ஜயந்த விக்கிரமரட்ண முன்னிலையில் நடைபெற்றது. இவரின் மனைவி சசிகலா சாட்சியம் அளித்தார். சட்ட வைத்திய அதிகாரி டாக்டர்…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் ஆயுள் தண்டனைக் கைதியை விட மோசமான நிலையல் தமிழக முதலமைச்சர் இருப்பாதாகத் தெரிவித்த கவிஞர் புலமைப்பித்தன், பிரான்சிலுள்ள சீக்கியரின் தலையிலுள்ள தலைப்பாகை குறித்து கவலைப்படும் இந்திய பிரதமர் தலைபோகும் நிலையிலுள்ள இலங்கைத் தொடர்பில் கவலை கொள்ளவதில்லையென்றும் குற்றம் சாட்டினார். ஒஸ்லோவில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் உரையாற்றும் போது மேலும் தெரிவித்தாவது : இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் புழல் சிறையில் அடைத்து வைக்கபட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு இருக்கக் கூடிய அழுவதற்கான உரிமை கூட தமிழக முதலமைச்சருக்கு இல்லை. விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த போது கருணநிதி எழுதிய இரங்கற்பாவிற்க…
-
- 6 replies
- 1.8k views
-
-
மகிந்த அரசின் எதிர்காலமும் கள யதார்த்தங்களும்-புரட்சி (தாயகம்)- கடந்த மே 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளிவந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரினால் வழங்கப்பட்ட செவ்வியானது கொழும்பில் உள்ள தூதுவராலய வட்டாரங்களினால் மிகவும் கவனமாக படிக்கப்பட்டு கருத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சமூகத்தின் சமாதான முன்னெடுப்புக்கள் விடயத்தில் அவர்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் எவ்வாறு சமாதான முயற்சிகள் சீர்குலைக்கப்பட்டு சிறிலங்கா அரசு தனது போர் முயற்சிகளை முனைப்புடன் தீவிரப்படுத்த உதவியது என்பது தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்களானது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியத்துவம் வ…
-
- 1 reply
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் தனக்கு எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினர் ‘இரத்த தாகம்’ கொண்டவர்கள் என அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி விபரித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு அல்லது சரணடையும் வரை அவர்களுடன் எந்தவிதமான சமாதானப் பேச்சுக்களுக்கும் இடமில்லையென அவர் தெரிவித்தார். “நாட்டைத் துண்டாடி அதனைப் பயங்கரவாதிகளிடம் எம்மால் ஒப்படைக்கமுடியுமா” என ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையவேண்டிய சூழ்நிலையே தற்பொழுது விடுதலைப் புலிகளுக்குத் தோன்றியிருப்பதாகவும், மோதலில் இறுதியை அடைவதே இ…
-
- 2 replies
- 1.8k views
-