ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
“உயிரைக் கொடுத்துப் போராடத் தயாராக இருக்க வேண்டும்”, “வித்துடலை விதைக்க வேண்டும்” , “7ஆம் அறிவு பார்;த்து வீர ஊசி ஏற்றிக்கொள்ள வேண்டும்”, “தாகம் வடியாது – புதிய பிரபாகரன் பிறப்பான்” என்ற குரல்களை இன்றும் கேட்க நேரும் துர்ப்பாக்கியத்தை என்ன சொல்ல? போரால் நசுங்கிய இந்த மக்கள் வாழ்வுக்குப் படும் அல்லல்களைப் பார்த்தபடியே இவ்வாறான முழக்கங்களையும் கேட்டுக் கொண்டிருப்பதன் கொடுமையை – அபத்தத்தை உங்கள் யாருக்கேனும் உணர முடிகிறதா? நமது மக்கள் எவ்வளவு இழிநிலையில் அரைபட்டுக் கிடந்தாலும், ‘நமக்கு மற்றவர்கள் சமதையானவர்கள் இல்லை’ என்ற சிந்தனையிலிருப்பவர்களே இந்த மக்களின் அரசியல் குரலாக மேலோங்கியிருப்பது தமிழ்வாழ்க்கையின் துரதிர்ஷ்டம்தான்! நமது ‘சரி’கள் பற்றியே எப்போதும் நம் நினைவி…
-
- 11 replies
- 1.8k views
-
-
கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களைப் புறக்கணிக்கும் விக்னேஸ்வரன் அவர்கள். இது தொடர வேண்டும். வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபன வெளியீடு மற்றும் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாது அதனைப் புறக்கணித்திருந்தார். முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் தொடர்ந்து கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களைப் புறக்கணித்துவருகிறார். இது கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களைப் பயன்படுத்தி தாம் பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுவிடலாம் என கனவுகண்டவர்களுக்கு விக்னேஸ்வரன் அவர்களின் போக்கானது ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களை தமக்கு ஆதரவாக தே…
-
- 0 replies
- 471 views
-
-
அம்பாந்தோட்டைப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களால் சிறீலங்கா அரசு பல கோடி ரூபாக்களை இழந்துள்ளது. தாக்குதலைகளை வழிநடத்திய விடுதலைப் புலிகளின் கிழக்குக் கட்டளைத் தளபதி கேணல் ராம் எம்மிடம் கருத்துரைக்கையில்... யால சரணாலயப் பகுதியில் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களால் சுற்றுலா பயணிகள் வருகை முற்றாகத் தடுக்கப்பட்டதால் பல கோடி ரூபாக்கள் நஸ்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டைப் பகுதிகளில் சிறீலங்காப் படையினர் பயணித்த 15 வாகனங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் இத் தாக்குதல்கள் தொடர்பிலா…
-
- 2 replies
- 2.9k views
-
-
சுமந்திரனுக்கு வடமாகாணசபை செருப்படி ‘புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு புலிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேலை செய்திருக்கவில்லை. புலிகளுடன் எவ்வித கூட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடையாது. புலிகளின் கொள்கைகளையும் ஏற்கவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழர் உரிமைக்காகப் பாடுபடுகின்றது. அதற்காக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவோ ஆதரிக்கவோ இல்லை. புலிகள் மீண்டும் ஒன்று திரள்வார்கள். இலங்கைளில் மீண்டும் பயங்கரவாதம் புலி வருகை என்பது உண்மைக்கு புறம்பானது அப்படி ஒரு நிலை வந்தாலும் மக்கள் அவர்களை ஆதரிக்கவோ அனுமதிக்கவோ மாட்டார்கள்.’ இது இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இறக்குமதி செய்யப்பட்ட சட்டத்தரணி ம.அ. சுமந்திரன் அவர…
-
- 1 reply
- 2k views
-
-
துருக்கியை தளமாக கொண்டு இயங்கும் (Fethullahist Terror Organization (FETO) தீவிரவாத குழுவின் 50 உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு அமைச்சுக்கு துருக்கி தூதுவர் தகவல் வழங்கியுள்ளதாக அப்போதய வெளிநாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017 , 2018 காலப்பகுதியில் இது தொடர்பில் மூன்று தடவைகள் துருக்கி தூதரகம் தங்கள் அமைச்சுக்கு அறிவிருத்தல் வழங்கியதாக கூறிய அவர் அது விடயமாக பாதுகாப்பு தரப்பிற்கு பெக்ஸ் மூலம் அறிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதே நேரம் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை முழுவீச்சில் நடத்தாமையை தொடர்ந்து துருக்கி தூதுவர் நேரடியாக பாத…
-
- 0 replies
- 545 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடையும் விடுதலைப் புலிகளை கொன்று விடுமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஒருவர் அளித்துள்ள சாட்சியம் ‘அற்பத்தனமான’ நோக்கம் கொண்டது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உயர்அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். “அந்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டவர். அவரது கவலைகள் என்னவென்று நாம் அறிவோம். அவரது நோக்கம் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெறுவது தான். அவர் இராணுவத்தில் இருந்த காலத்தில், அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்ததால், எமது கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.” என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி கூறியுள்ளார். எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ராஜபக்ஷவின் கொடூர ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என ஐ.நாவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும், இலங்கையில் 60 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு 2016ஆம் ஆண்டில் கிடைக்கவேண்டும் என அரசையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தவும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 'வீடு' சின்னத்திற்கு தவறாது வாக்களிக்கவேண்டும். - இவ்வாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்…
-
- 1 reply
- 363 views
-
-
Published By: VISHNU 13 JUN, 2024 | 04:34 AM (இராஜதுரை ஹஷான்) தமிழர்களின் தீர்மானமிக்க வாக்குகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவார். 13 ஆவது திருத்தத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதியும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஆகவே தேசியம் தொடர்பாக பெரும்பான்மையினத்தவர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
புலிகளுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் கனவு மட்டுமல்ல அவரது குடியுரிமையும் பறிபோகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் காற்று தடைப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காற்று வீச ஆரம்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷவின் காற்று வீசுவதாக கூறி கடந்த காலங்களில் அவர் பெயர் அரசியலில் வியாபாரம் செய்யப்பட்டது. ஆனால் இன்…
-
- 0 replies
- 210 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சரியான பதில் கூறப்பட வேண்டும். சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (13) மதியம் 2 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு மன்னார் அரச பேரூந்து நிலையத்தில் இடம் பெற்றது. -இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முள்ளான் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,தமிழீழ விடுதலை …
-
- 0 replies
- 720 views
-
-
22 JUN, 2024 | 01:12 PM இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் 20 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற 31ஆவது அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் 2024 (AIPM 2024) இல் உரையாற்றும் போதே ஜனாதிபத…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
த.பு.கழகத்தின் பண முடக்கம் தமிழர்களுக்கு எதிரானது அல்லவாம் - பிளேக் கூறுகிறார் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கம் தமிழ் மக்களிற்கு எதிரான செயலல்ல என, சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் புதிய விளக்கமளித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு நிதி சென்றடைவதைத் தடுப்பதற்கே தமது அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், இதனை தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கையாகக் கொள்ள வேண்டாம் எனவும், நிதி முடக்கம் தொடர்பாக இன்று கேட்டபோது அவர் கூறினார். அமெரிக்கத் தூதுவரின் இந்தக்கூற்று தொடர்பாக கருத்துரைத்த கொழும்பின் பிரபல ஆய்வாளர் ஒருவர், தமிழ் மக்களிற்கான பிரதான மனிதநேய அமைப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இயங்கிவரும் நிலையில், பிளேக்கின் கருத்தை ஏ…
-
- 7 replies
- 1.9k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கிடைத்த 12 தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் யாருக்குப் பகிர்ந்தளிப்பது என்பது குறித்த இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லையெனத் தெரியவருகிறது. எனினும், மகிந்த தரப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரி தரப்பிற்கும் இடையே தேசியப்பட்டியல் குறித்து காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நேற்று இரவுடன் நிறைவடைந்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதற்காக தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து தரப்பினரும் பொது இணக்க…
-
- 0 replies
- 757 views
-
-
மட்டக்களப்பில் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட் டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் வாயில் கறுப்பு துணி அணிந்தவாறு இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என கோரியே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள், …
-
- 0 replies
- 675 views
-
-
நல்லூர் வீதித்தடைக்கு எதிராக வழக்கு – வீதித்தடையை கோரும் வேலன் சுவாமிகள்! adminJuly 1, 2024 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில், ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு , மூடப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் சில தரப்பினர் வழக்கு தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவ காலத்தில் முருகப்பெருமான் வலம் வருகின்ற வெளிவீதிச் சூழலில் புனிதத்தையும், பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு யாழ் மாநகர சபையிடம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். காலங்காலமாக நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் யாழ…
-
- 0 replies
- 308 views
-
-
படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் பலி மூதூர், பாலத்தடிச்சேனையில் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். பாலத்தோப்பூர் இராணுவ முகாமிலிருந்து நேற்று முன்தினம் அதிகாலை 1.10 மணியளவில் ரோந்து சென்ற படையினரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் பலியான இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியானவர்கள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என படையினர் தெரிவித்துள்ளனர். இந்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை http://www.tamilwin.net/
-
- 0 replies
- 937 views
-
-
அமைச்சுக்களின் செயலாளர்களாக இளைஞர்களை நியமிக்கத் திட்டம் : பிரதமர் ரணில் தேசிய அரசாங்கத்தின் அமைச்சுக்களின் செயலாளர்களாக இளைஞர்கள் மற்றும் செயற்திறன் மிக்கவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென, பிரதமர் ரணில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளை வகித்து வந்த சுமார் 14 அமைச்சுக்களின் செயலாளர் பதவிகள் பறிபோகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக செயற்பட்டவர்களுக்கே, இந்நிலை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த, மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தீவிர விசுவாசிகளான சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன ய…
-
- 0 replies
- 284 views
-
-
இலங்கையில் அதிகரித்து வரும் பொதுமக்கள் இழப்பு குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அதிபரின் எதிர்ப்பை மீறி இன்று தெரிவுக்குழு விசாரணை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எச்சரிக்கைக்கு மத்தியில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது. இந்த தெரிவுக்குழு முன்பாக தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் வெளியிடப்படுவதாக குற்றம்சாட்டியிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழுவுக்கு முன்பாக, பாதுகாப்பு அதிகாரிகளை முன்னிலையாக கூடாது என உத்தரவிட்டிருப்பதாக கூறியிருந்தார். அத்துடன், தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்துமாறு சபாநாயகருக்கும் அவர் அறிவித்திருந்தார். அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்த சபாநாயகர், தெரிவுக்குழுவை நாடாளுமன்றமே அமைத்தது …
-
- 1 reply
- 357 views
-
-
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 12 டிசம்பர் 2007 தமிழக காவல்துறையில் உளவுத்துறை என்ற ஒரு அமைப்பு இருக்கிறதா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பிடிபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வாக்குமூலம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் உதவியால் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார். அந்த நபரும் தஞ்சாவூரில், அதுவும் போலீஸ்காரர் ஒருவரின் வீட்டிலேயே 8 மாதங்கள் தங்கி இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கும் இங்குள்ள அரசியல் வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அவர்கள் பல வகையிலும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் எனக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் சென்றிருந்த 125 இலங்கையர்கள் இன்று திருப்பி அனுப்பட்டுள்ளனர். மேற்படி நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் சென்றிருந்த இவர்கள் தாம் வேலை செய்த இடங்களில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களுள் குவைத்திலிருந்து 35 பெண்களும், 08 ஆண்களும், சவூதி அரேபியாவிலிருந்து 77 ஆண்களும், 05 பெண்களுமாக 125 பேர் நாடு திரும்பியுள்ளனர். கட்டுநாயக்கா வந்த இவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் வீடுகளுக்குச் செல்வதற்கான கொடுப்பனவுகளை அவர்களுக்கு வழங்கி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. h…
-
- 2 replies
- 715 views
-
-
படத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project இலங்கையை சேர்ந்த இருவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளான 'இராவணா 1", சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 அளவில் இராவணா 1 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'இராவணா 1" செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இல…
-
- 35 replies
- 4.1k views
-
-
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகியது இன்று இரவு 7.00 மணிக்கு திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதம் கந்தளை பகுதியில் வைத்து கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. கந்தளை புகையிரத நிலையத்தை அண்மிக்க 500 மீட்டர் அளவு தூரம் இருக்கும் போதே புகையிரதம் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. 500 பயணிகள் வரை பயணித்த புகையிரதம் தாக்குதலால் சேதமானாலும் பயணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. புகையிரத என்ஜின் இயங்காதமையால் கல்ஓயாவிலிருந்து மற்றோர் என்ஜினை கொண்டு வந்து புகையிரத்தை நகர்த்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
-
- 5 replies
- 2.9k views
-
-
http://naathamnews.com/2012/02/08/doc-lk/ சிறிலங்கா அரசாங்கமானது, தன்மீதான போர்குற்றச்சாட்டுக்களை திசை திருப்பும் நோக்கில், ஆவணப்படம் ஒன்றினை இன்று புதன்கிழமை (08-02-2012) வெளியிட்டுள்ளது. தமிழினத்தின் மீதான, சிங்கள அரச படைகளது போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியற்றை மூடிமறைக்கும் நோக்கில், இந்த ஆவணப்படத்தினை சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால், பொதுமக்கள் மீதும், போராளிகள் மீதும், குற்றச் செயல்களை இழைக்கப்பட்டுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தினை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கையின் உண்மை நிலை பற்றி அறியாமல், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படும் போலிக் கு…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜனாதிபதி நினைத்தாலும் மாற்ற முடியாது - ரியர் அட்மிரல் சரத் வீரசேகர (நா.தனுஜா) அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது நான் மாத்திரமே அதற்கு எதிர்ப்பை வெளியிட்டேன். எனினும் அப்போது என்னை அறிவில்லாதவன் என்றும், இனவாதி என்றும் தூற்றினார்கள். ஆனால் இப்போது ஜனாதிபதியே 19ஆவது திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார். இருப்பினும் இனிமேல் அதனை நீக்குவதென்பது கடிமானதொரு காரியம். இது நாட்டிற்குப் பாதகமானது என்ற விடயத்தை ஜனாதிபதி 4 வருடங்களுக்கு முன்னரேயே சிந்தித்திருக்க வேண்டும் என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருக்கிறார். அரசியலமை…
-
- 0 replies
- 1.1k views
-