Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 02:16 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அநுராதபுரத்தில் பௌத்தபிக்குகள் இடிக்கப்பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டு மையமான தர்காவை புனரமைத்து தருவதாக தான் வாக்குறுதி அளிக்கவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோயில்களுக்கும் தர்காக்களுக்கும் பாதுகாப்பு வழங்க தன்னால் ஏற்பாடு செய்ய முடியுமே தவிர, இடிக்கப்பட்ட தர்கா மீண்டும் கட்டித்தர ஏற்பாடு செய்ய முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவொன்றினால் தர்கா இடிக்கப்பட்டது தொடர்பாக கடந்தவாரம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை, சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகள், இடிக்கப்பட்ட தர…

  2. அண்மையில் அனுராதபுர வீடொன்றினுள் கொள்ளiயிடச் சென்ற காவற்துறை அதிகாரிகளுடன் சேர்ந்த கும்பலொன்றை கைதாகியுள்ளனர். இரு காவற்துறை உள்ளிட்ட 14 சிங்களக் காடையர்கள் கைதாகியுள்ளனர். கண்டி குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்நத ஒரு அதிகாரியும், காவற்துறை அதிகாரி ஒருவரும் இக் கும்பலில் உள்ளடங்குகின்றனர். இக் கும்பலை கெக்கிராவ நீதிமன்றில் ஆஜர் செய்ததாகவும், எதிர்வரும் 16ம் திகதி விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் தப்பிச் சென்றுள்ளதாகத் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/?p=2034

  3. அனுராபுதரம் - வில்பத்து பிராந்திய இராணுவத் தளபதி உட்பட 8 பேர் பலி [வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007, 20:04 ஈழம்] [தாயக செய்தியாளர்] அநுராதபுரம் வில்பத்து பிராந்திய சிறிலங்கா இராணுவத் தளபதி கேணல் ஜயந்த சுரவீர உட்பட 4 இராணுவத்தினரும் 4 வன அலுவலர்களும் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வில்பத்து வனச் சரணாலயத்துக்குரிய சிறிலங்கா இராணுவத் தளபதி கேணல் ஜெயந்த சுரவீர மேலும் பல இராணுவத்தினருடனும் வன அலுலர்களும் தேடுதல் நடவடிக்கைக்காக சென்ற போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா படைத்துறை தெரிவித்துள்ளது. இதன்போது கேணல் சுரவீர உட்பட 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் வன அலுவலர்கள் 4 பேரும் கொல்ல…

  4. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்கவை கைது செய்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுர திஸாநாயக்க இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்களால் இன முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/309333

  5. அனுருத்த ரத்வத்த அவசர சிகிச்சைப் பிரிவில்... முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த படுகாயமடைந்த நிலையில் கண்டி பொது வைத்தியசாலை அவசர - நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். திங்கட்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் கீழே விழுந்தே இவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்தை, கண்டிமேயர் மகேந்திர ரத்வத்தை ஆகியோர்களின் தந்தையாவார். நன்றி வீரகேசரி. நிழலி வேறொரு திரியில் குறிப்பிட்ட மாதிரி.... இவரும் மாவீரர் வாரத்தில் செத்துப்போகாமல் இருக்க வேண்டும்.

    • 3 replies
    • 1.4k views
  6. சிறிலங்காவின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரும் தமிழின படுகொலையாளியுமான அநுருத்த ரத்வத்தை சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளார். . . அநுருத்த ரத்வத்த கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வீட்டினுள் விழுந்து காயமடைந்துள்ளதனால் கண்டி பொது வைத்தியசாலையில் அனுருத்த ரத்வத்த அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மூலம்

  7. ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 சந்திரிக்காவின் மாமனும் முன் நாள் பாதுகாப்பு துணை அமைச்சரும் தமிழின படுகொலைகளின் சூத்திரதாரியுமான அனுருத்த ரத்வத்தை அவர்கள் மலேசியாவிற்கான புதிய தூதராக விரைவில் செல்கின்றார். இதற்கான பேச்சுவார்த்தை அண்மையில் மஹிந்தவினால் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் முன் நாள் கடற்படை தளபதி வசந்த கரணகொட அவர்கள் பிரித்தானியாவிற்கான தூதராகவும் நியமனம் பெறவுள்ளார். ரதவத்தை அவர்களுக்கு 43 மில்லியன் ரூபா ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும் இந்த வழக்கை வாபஸ்பெறுமாறு மஹிந்த பணித்துள்ளாராம். இதன்படி உஅர் நீதிமன்றத்தில் ரத்வத்தையின் ஊழல் வழக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணைக்குழுவினால் வாபஸ்பெறப்படவுள்ளது. இதன் பின்னர் மலேசியாவிற்கு தூதராக ரத்வத்தை ச…

    • 0 replies
    • 604 views
  8. அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ளும் அர­சி­யல் தீர்வே அவ­சி­ய­மா­னது!! அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ளும் அர­சி­யல் தீர்வே அவ­சி­ய­மா­னது!! யாழ். பல்­கலை விரி­வு­ரை­யா­ளர் குரு­ப­ரன் சுட்­டிக்­காட்டு அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யைக் குழப்­பு­வது எமது நோக்­க­மல்ல. அனைத்து மக்­க­ளும் ஏற்­றுக் கொள்­ளக் கூடிய அர­சி­யல் தீர்வு கிடைக்க வேண்­டும் என்­பதே எமது நோக்­கம். இவ்­வாறு யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக விரி­வு­ரை­யா­ளர் குரு­ப­ரன் தெரி­வித்­தார். தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஏற்­பாட்…

  9. அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்! adminMay 25, 2024 அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அத்துடன், இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் …

  10. அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகினர் ! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார். http://www.newswire.lk/wp-content/uploads/2021/08/1597227928-New-Cabinet-and-State-Ministers-L.jpg இன்றிரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ஒருமித்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இவ்வாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகும் தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இராஜாங்க அமைச்சர…

  11. அனைத்து அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பரவலாக்க நடவடிக்கை - ஜனாதிபதி வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப் போன்று, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட பிற அரச நிறுவனங்களையும் மேலும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக்குவதன் மூலம் அந்த சேவைகளை மிகவும் திறமையாக வழங்க முடியும். இவ்வாறான முக்கிய நிறுவனங்களை ஒன்றோடொன்று இணைப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பொது மக்களுக்கான சேவைகளை வினைத்திறனாக்க ப…

  12. அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களையும் பணிப்பாளர்களையும் இராஜினாமா செய்ய அறிவித்தல் விடுக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தரவினால் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. https://www.newsfirst.lk/tamil/2019/11/29/அனைத்து-அரச-நிறுவன-உயரதி/

  13. அனைத்து அரசுகளும் ஊடகவியலாளர்களை பாதுக்கவேண்டும் – ஐ.நா.செயலர் அனைத்து நாட்டு அரசாங்கங்களும் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். உலக ஊடக சுதந்திரதினத்தை முன்னிட்டு வெளியிட்டு அறிக்கையிலேயே ஐ.நா.செயலாளர் நாயகம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஊடகவியலாளர்களை பாதுகாப்பது மட்டுமின்றி அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளை கட்டவீழ்த்தி விடும் நபர்கள் மட்டில் பக்கசார்பற்ற விசாரணைகளை நடாத்தி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார். கருத்து சுதந்திரம் மக்களின் அடிப்படை சுதந்திரங்களில் ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச மனித உரிமை பிரகடனத்…

  14. தற்போதைய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பாடசாலை நிர்வாகங்களையும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான கடிதம் அண்மையில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டது. 2022 வருடாந்த மற்றும் பத்தாண்டு இடமாற்றத்தின் கீழ் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி, இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்களது சேவைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனவும், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கடமைகளுக்கு சமூகமளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இது சட்டவிரோதமான செயலாகும். அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அவர்களது பாடசாலைகளில் இருந…

  15. அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்! பிரதமர் அறிவிப்பு அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டாயமாக ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும் எனவும், அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயமாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். மேலும் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, கல்வி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்த ஒரு கல்வி பேரவையை நிறுவுவதற்குத் தாம் முன்மொழிந்துள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரி…

  16. அனைத்து ஆளுனர்களையும் பதவி விலக உத்தரவு அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஒன்பது மாகாணங்களினதும் ஆளுனர்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பான அறிவுறுத்தல வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று – டிசெம்பர் 31ஆம் நாளுக்கு முன்னதாக, பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு ஆளுனர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, தாய்லாந்துக்கு ஒரு வாரகால தனிப்பட்ட விடுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் நாடு திரும்பவுள்ளார். இதனை அடுத்து. புதிய ஆளுனர் நியமனம் உள்ளிட்ட …

  17. அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்துக்கு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் நன்றி [புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 11:21 மு.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தினை நடத்த முன்வந்த அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்துக்கு சுவிஸ் இளையோர் அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர்கள் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலைகளை கண்டித்து தமிழக மாணவர்கள் ஒருமித்து குரல் கொடுப்பதையிட்டு நாம் மிகவும் பெருமிதம் அடைகின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் சிறிலங்கா அரசை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியாவினதும் உலகினதும் கவனத்தை ஈர்க்கவல்லதாகவும் எமக்கான நல்லதொரு தீ…

    • 0 replies
    • 559 views
  18. அனைத்து இந்திய மீனவர்களுக்கும் விடுதலை - அரசாங்கம் அறிவிப்பு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் கீழ் விடுதலை செய்வதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பை ஊடுறுவும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் தடுப்பு காவலில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிரியங்கள்ளிய நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தேவையான வள்ளங்கள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் வழங்கல் மற்றும் 10 இலட்சம் ரூ…

  19. (இரா­ஜ­துரை ஹஷான்) நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களின் மத சுதந்­தி­ரத்­தையும் சிங்­கள பௌத்­தர்­களே பாது­காத்­துள்­ளார்கள். 'சிங்­க­ளயா மோடயா கெவும் கன்ன யோதயா’ (சிங்­க­ள­வர்கள் முட்­டாள்கள் பல­காரம் உண்­ப­தற்கே சூரர்கள்) என்று குறிப்­பிட்ட பழ­மொழி கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திக­தி­யுடன் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது. நாட்­டுக்கு எதி­ரான சூழ்ச்­சிகள் வெற்றிப் பெற்­றி­ருந்தால் சிங்­கள இனத்தின் இருப்பு கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டி­ருக்கும் என பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். பாலி திரி­பி­டக துறையில் தேர்ச்சிப் பெற்ற 5000ஆம் பௌத்த மத பிக்­கு­க­ளுக்கு டெப் ரக கணனி வழங்கும் நிகழ்வு நேற்று முன்­தினம் சுஹ­த­தாஸ உள்­ளக அரங்கில் இடம் பெற்­றது. இ…

    • 0 replies
    • 222 views
  20. அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : ரணில் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன முரண்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முனைப்புக் காட்டத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.வதந்திகளின் அடிப்படையில் முரண்பாடுகள் வெடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.முஸ்லிம் சனத்தொகை அதிகரித்துள்ளதாகவும், சிங்கள மக்கள் அழிவடைந்து வருவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.போர்த்தகேயர் காலத்தில் பின்னரே முஸ்லிம்கள் நாட்டுக்கள் பிரவேசித்ததாகக் குறிப்பிடப்படுவதாகவும், போர்த்துகேயரை நாட்டக்குள் அனுமதிக்க வேண்டாம் என 8ம் பராக்…

  21. (இராஜதுரை ஹஷhன்) அனைத்து இன மக்களின் பாதுகாப்பினையும் பலப்படுத்திய எம்மை நாட்டு மக்கள் மீண்டும் தெரிவு செய்வார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குளியாப்பிடிய நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தி மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய முறையற்ற அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும். எமது ஆட்சியில் பாரிய போராட்டத்தின் மத்தியில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தியுள்ள தேசிய பாதுகாப்பு மீண்டும் பலப்படுத்தப்படும். நாட்டுக்க வருமானத்தை ஈட்டும் அபிவிருத்திகளை மாத்தி…

    • 0 replies
    • 238 views
  22. இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வேறுபாடு இன்றி சம உரிமையுடைய தேசம் ஒன்றை அன்று தாம் உருவாக்கி வந்தபோதும் அது நிறைவேறவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க மீண்டும் அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 67ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். மீண்டும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த என்றுமில்லாத சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்காக அரசாங்கம் தயார் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க தெரிவித்தார். எனினும் இதனை அரசாங்கம் மாத்திரம் முன்னெடுக…

  23. http://www.pathivu.com/news/5957/54//d,view.aspx அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வென்று இந்தியா எதைக் கூறுகிறது?-இதயச்சந்திரன் கண்டி மாவட்டத்தில் அராஜக அரசியல் சூழ்நிலை நிலவுவதாகவும் இதனால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகச் சுலோக அட்டை ஏந்தி நாடாளுமன்றில் போராட்டம் நிகழ்த்திய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசார நிலையமாக நாவலப்பிட்டி காவல் நிலையம் இயங்குவதாகவும் கூறியுள்ளார். புதிதாக முகிழ்ந்து வரும், மனோ கணேசனின் மலையக தலைமைத்துவம் குறித்து அச்சம் கொள்ளும் சக்திகள், அவரைத் தமது முதன்மையான அரசியல் இலக்காகக் கொண்டு காய்களை நகர்த்துகின்றன போல் தெரிகின்றது. மலையக தமிழ் நாடாளுமன்ற பிர…

    • 2 replies
    • 752 views
  24. அனைத்து இனங்களின் உரிமைகளையும் புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் – பவ்ரல் 36 Views புதிய அரசமைப்பைத் தயாரிக்கும்போது அனைத்து இனங்களின் உரிமைகளையும் உறுதி செய்யும் வகையில் தயாரிப்பது அவசியம் என்று பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வலியுறுத்தியிருக்கிறார். புதிய அரசமைப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட ஆணைக்குழுவின் செயலாளருக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “அண்மைக்காலத்தில் புதிய அரசமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த 42 வருடகாலத்தில் 20 தடவைகள் திருத்தம் செய்யப்பட்ட அர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.