Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தைச் சென்றடைந்த அவர் அங்கேயே தடுத்து வைக்கப்பட்டு இன்று மாலை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் இவ்வாறு திருப்பி அனுப்பப்படுவதற்கான காரணங்கள் எதனையும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. SOURCE: http://www.eelamweb.com

  2. தமிழ் கட்சிகளை ஒன்று பட்டு செயற்பட சம்பந்தன் அழைப்பு - காரணம் தெரிவிக்கவில்லை வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 12, 2010 வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன என்று கூறியுள்ள சம்பந்தன் தேர்தலிற்கு முன்னர் ஒற்றுமை தொடர்பில் பல கலந்துரையாடல்களை செய்வதற்கு அழைத்த போதும் சுகயீனம், வசதியீனம் காரணமாக வரமுடியவில்லை சமூகம் கொடுக்கவில்லை என்று வெட்டியோடிய சம்பந்தர் இப்போ ஒன்று படுவோம் என்று கூறுவதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது என்பதில் கேள்விக்குறியே அத்துடன் சட்டவாளர் சுமந்திரன் தயாரித்த திட்டட்தின் படி செயற்படவா? அல்லது புதிய திட்டம் தயாரிக்கவ…

  3. தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம் வாருங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம் ! -சம்பந்தன் தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார். மேலும் அவர் கூறுகையில், "வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன. எமக்கு எதிராக பல்வேறு அ…

  4. - 55 சதவீதமான மக்களே வாக்களிப்பு!! "... இலங்கையின் ஏழாவது நாடாளுமன் றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 52 முதல் 55 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாகத் தேர்தல் செய லகமும் கண்காணிப்பாளர்களும் தெரி வித்துள்ளனர்." 55 சதவீதமான மக்களே வாக்களிப்பு!! நாங்கள் ஒருமையாக போய்யிருந்தால் !!! ஆளும் கட்சி சிங்களம் எதிர்கட்சி தமிழாகவர ஒரு சந்தர்பம் !! ...எங்கள் ஒருமையின்மை கரணமாக அது நழுவப் போகிறதா? தேர்தல் முடிவுகள் -

  5. பாயும் புலிச் சின்னத்துடன் "நாம் தமிழர்" அரசியல் கட்சி தமிழின உணர்வாளர் சீமான் அவர்களால் தொடங்கிவைப்பு தனியீழமே தமது ஒரே குறிக்கோள் என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இக்கட்சி தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமிழக தலைவர்கள் ஈழத்தமிழர் தொடர்பாக அசமந்தப் போக்கையே கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினார். சோழர்களின் தலைநகரான தஞ்சாவூரில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சினை ஒத்த பாயும் புலியுடனும், ஈழத்தமிழரின் தேசியக்கொடியினை ஒத்த வர்ணங்களுடனும் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31531 நன்றி தமிழ்நெட்.

    • 12 replies
    • 2.4k views
  6. 'மிகப் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மிகநெருக்கமாகவும் ஆதரவாகவும் செயற்பட்டனர்' - இரா. சம்பந்தன் [ சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2010, 14:04 GMT ] [ புதினப் பணிமனை ] புலம்பெயர்ந்த எமது மக்கள் தந்த பின்புல ஆதரவும் பலமும் தான் தேர்தலுக்கு முன் நாம் எதிர்கொண்ட உட்கட்சி முரண்பாடுகளினை துணிவுடனும் தெளிவுடனும் கையாள்வதற்கு உதவியது என புதினப்பலகையிடம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். திருக்கோணமலை முடிவுகள் அறிவிக்கப்படாத பரபரப்புக்கும், தனது தலைமைக்கு கிடைத்த வெற்றியின் உற்சாகத்திற்கும் இடையில், தனது பழுத்த அரசியல் முதிர்ச்சியுடன் தற்போதைய அரசியல் நிலமை, தேர்தல் நிலவரங்கள் பற்றி 'புதினப்பலகை' ஆசிரியர்களுட…

  7. தமிழ‌ர்க‌ளி‌ன் கரத்தைப் பற்றிப்பிடிக்க ராஜப‌‌க்சவுக்கு இதுதான் சந்தர்ப்பம்: அமெரிக்கா இலங்கையில் புதிய அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் கரங்களை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்ச பற்றிப்பிடிக்க வேண்டுமென்ற கருத்தை அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. ராஜபக்‌சவின் நிர்வாகமானது தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டியது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சமீபத்தில் அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார் என்று அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். நம்பிக்கையான எதிர்காலத்துடன் தாங்கள் வாழப்போகிறார்கள் என்று தமிழர்கள் கருதுவது மிக முக்கி…

  8. யாழில் கிணற்றில் இருந்து 19 வயது மாணவியின் சடலம் மீட்பு; இவ்வருடம் இது 21 வது சடலம் யாழ்,தீவக நிருபர் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 13, 2010 யாழ் நாயன்மார்கட்டு செம்மணி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து மாணவி ஒருவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார். 19 வயதுடைய யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவியான ஜேம்சலா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கிந்த வருடத்தில் யாழ் குடா நாட்டில் 21 வது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லா சடலங்களும் பிரேத பரிசோதனைகள், விசாரணைகள் என்று ஆரம்பிக்கப்பட்டும் இதுவரை குறித்த கொலைகளிற்கான காரணங்கள் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை. இ…

  9. மகிந்த + த.தே.கூ = 150+ 140 + 14 = 154 [எனது கணிப்பு] முதல் முறையாக இன பிரச்சினையை தீர்க்க ஒரு சந்தர்ப்பம் இலங்கை அரசுக்கு கிடைத்துள்ளது. த.தே.கூ இன் உதவியுடன் இலங்கை அரசியல் யாப்பை மாற்றலாம். செய்வாரா மகிந்த. இனி என்ன சாட்டு சொல்லுவார்?

    • 35 replies
    • 4k views
  10. திருவிழா முடிந்துவிட்டது, கொண்டாட்டங்கள் ஓய்ந்துவிட்டன!: சார்ள்ஸ் தவராசா மகிந்த ராஜபக்சே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நோக்கி இனிச் செயல்படுவார். டக்ளஸ் தேவானந்தா யாழ்வெகுமக்களின் விருப்ப வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பனிரெண்டு ஆசனங்களை வென்றிருந்தாலும் வடகிழக்கு மேலாதிக்கத்தை அக்கட்சி இழந்துவிட்டது. தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தோல்வியை மறுபரீசீலனை செய்கிறது. புதிய ஜனநாயக் கட்சி, சம சமாஜக் கட்சி போன்ற தமிழ் சிங்கள இடதுசாரிக் கட்சிகள் அனைத்துமே தோல்வியைத் தழுவியிருக்கின்றன. மார்க்சிஸ்ட்டுகள் யதார்த்தம் குறித்த அறிவற்றவர்கள் என்கிறார் பின்னூட்ட மன்னர் மன்னன். புகலிட விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு பலத்த அடி என தேசபக்தர்…

    • 16 replies
    • 1.4k views
  11. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரனுடன் ஒரு சந்திப்பு… டென்மார்க்கில் வாழ்ந்து வரும் திரு. வேலுப்பிள்ளை மனோகரனை அலைகள் காரியாலயத்தில் சந்தித்துப் பேசினோம். அவர் தந்திருக்கும் நீண்ட அனுபவங்களை அலைகள் வாசகர்களுக்கு சுவைபட தருவதில் பெருமையடைகிறோம். தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மூத்தவர் வேலுப்பிள்ளை மனோகரனாகும். தனது தம்பி ஓர் இனத்தின் தேசியத் தலைவராகவும், சகல அதிகாரங்களுடனும் வாழ்ந்தால் அண்ணனாக இருப்பவர் எத்தகைய அதிகாரமுடையவராக இருப்பார் என்பதைச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. ராஜபக்ஷ அதிபராக இருக்க அவருடைய சகோதரரும் மகனும் அரசியலில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை எண்ணிக் கொண்டு அவர்களோடு வேலுப்பிள்ளை மன…

  12. உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது : உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த மடல் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்தகொள்ளுங்கள். காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம். அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உருத்திரகுமாரன் அண்ணா! தமிழர்களின் வரலாற்றில், முக்கியத்துவம் பெறுகின்ற உங்களின் முயற்சிக்கு, முதலில், வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். தோல்வி மனப்பான்மை நெஞ்சைத் தாக்க, ஏக்கமும், துயரமும், வேதைனையும் வாட்ட…

    • 10 replies
    • 1.1k views
  13. கிடைப்பதை பெற்று வாழப்பழகிக் கொள்ளுங்கள்: எல்லாவெல மேதானந்த தேரர் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு மகிந்த தீர்வை ஏற்படுத்திக்கொடுப்பார் எனவே நீங்கள் அதனை ஏற்று வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என ஐதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரதும் புலிகளினதும் கோரிக்கைகள் ஒரேமாதிரியானவை எனவே அரசாங்கம் ஒருபோதும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றக்கூடாது. தேர்தலில் வடக்கு கிழக்கில் வெற்றிபெற்று விடடதற்காக நாட்டை துண்டாடி தமிழீழம் அமைக்க இடமளிக்கமுடியாது நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் அரசுடன் இணைந்து செயற்படவேண்டும். கேட்பது கிடைக்காவிட்டால் தருவதை பெற்றுக்கொண்டு வாழப்பழக வேண்டும் எனவும் மேலும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்…

  14. அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை! அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை என்று குறிப்பிடுகிறர்கள் முன்னாள் பெண் பேராளிகள். நாடாளமன்றத் தேர்தல் நெருங்கும் பொழுது வாக்குகளை பிரதியீடாக கோருவதற்காக எப்படியும் முன்னாள் போராளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை விடுவிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் விடுவிக்கப்படும் சூழல் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முகாமின் வாசலுக்கு சென்று சில நிமிடங்கள் அவர்களுடன் உரையாட முடிந்தது. அவர்கள் புன்னகைக்க விரும்புகிறார்கள். காயங்களுடனும் ஆறாத குருதிகளுடனும் புன்னகைக்கிறார்கள். நாங்கள் எதையும் பகிர விரும்பவில்லை என்று உதயா என்ற முன்னாள் பெண்போராளி…

    • 0 replies
    • 1.1k views
  15. இனப்பிரச்சனை தீர்வுக்கான வாய்ப்பை தவறவிட்டால் இன்னொரு இனமோதல் வெடிக்கும்: AFP இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை எத்தகைய போக்கினை அடையப் போகின்றது என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த நகர்வுதான் தீர்மானிக்கப் போகிறது. தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தைத் தவறவிடுவோமானால், அது இன்னொரு இனமோதல் உருவாவதற்கு வழிவகுத்து விடுமென எச்சரித்துள்ளார் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளர் நிர்மல் தேவசிறி. விரிவுரையாளர் நிர்மல் தேவசிறியை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினை ஒன்றிணைத்து …

    • 0 replies
    • 776 views
  16. ஏப் 11, 2010 மணி தமிழீழம் சிறீல்ங்கா கடற்படையினரின் தாக்குதலில் 28 தமிழக மீனவர்கள் காயம் கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 28 தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இவர்களில் மூவரின்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தமிழ மீனவர் சங்கத்தின் தலைவர் அந்தோனிராஐ தெரிவித்துள்ளார். சிறீலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இவர்களது மீன்பிடி வலைகளையுமு; சேதப்படுத்தியதாகவும் இவர்களது எரிபொருள் கொல்கலன்களை கடலில் வீசி எறிந்துள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்த மீனவர்கள் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. pathivu

    • 3 replies
    • 650 views
  17. யாழ் தேர்தல் உத்தியோகபூர்வற்ற முடிவுகள் - TNA 5, EPDP 3 , UNP 1 மாவை முன்னிடம் SL Election 2010: ITAK in lead in Jaffna district

    • 71 replies
    • 6.2k views
  18. யாழ்ப்பாணத்து சுகாதார சேவையில் வசூல் ராஜாக்கள்! பாணன் இக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்பவர்கள் 'பொங்கு தமிழ் இணையத்திற்காக – பாணன்' என்பதைக் குறிப்பிட்டே வெளியிடும்படி வேண்டப்படுகிறார்கள் கலை கலாசார கட்டுக்கோப்பான யாழ்ப்பாணத்தில் அது கைநழுவத் தொடங்கிவிட்டது என்பது பழைய கதை. 1995 ம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணத்தை மீட்டாயிற்று என்று சொல்லி ஆக்கிரமித்தபோது அங்கு விரல் விட்டு எண்ணத் தகுந்தவர்களே ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்தனர். ஆனால் 1996 இல் மீள இடம்பெயர நேர்ந்தபோது யாழ்ப்பாணத்தவர் மீண்டும் யாழ் மண்ணிற்கே செல்ல முற்பட்டனர். பின்னர் பாதை திறப்பு அது இது என்று நடந்தபோது யாழ்ப்பாணம் கொஞ்சம் நிமிர தொடங்கியது. வசதி வாய்ப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெருக தொடங்க…

    • 5 replies
    • 1.3k views
  19. யுத்தம் முடிந்த பின்பும், அதன் அலையால் இழக்கப்படும் தமிழ் உயிர்கள் அரசு எம்மக்கள் மீது சுமத்திய போர் முடிந்து போனாலும் அதன் பாதிப்புக்கள் எம்மிடம் இருந்து அகலவில்லை. அவை மக்களை படிப்படியாக நசுக்குவதாகவே உள்ளன. இங்கு எமது சமூகத்திடமே எமது மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு விடப்பட்டிருக்கிறது! கடந்ட 2006 ஆண்டின் அரைப்பகுதியிலிருந்து ஆரம்பித்த யுத்தம் தெடர்சியாக மூன்று ஆண்டுகள் நடைபெற்று கடந்தவருடம் மே மாதம் முடிவடைந்தது. மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்கால் வரை தொடர்ந்த இந்த யுத்தம், தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஒரு இருண்ட பக்கத்தை தேற்றுவித்துள்ளது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்மிடையில் தொடர்சியாக இருந்த இன முரன்பாடு, இந்த இருள் நிலையை தமிழ் மக்களிற்கு அளிக்கக…

  20. அரசு பேச்சு வார்த்தைக்கு வராவிடில் ஜன நாயக போராட்டம் - சுரேஸ் பிரேமசந்திரன் யாழ் நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 11, 2010 தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராகவிருக்கிறோம். அதற்கான ஆணையை எமக்குத் தேர்தல் மூலம் மக்கள் தந்துள்ளார்கள். ஆகவே, அரசாங்கம் இதனைப் புரிந்து கொண்டு செயற்படவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வை வழங்க முடியாதென மீண்டும் மீண்டும் கூறி வருமானால் நாம் எமது உரிமைகளைப் பெறுவதற்கு இங்கும் சர்வதேச ரீதியிலும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தள்ளப்படுவோம். அவ்வாறு ஒன்று இடம்பெற்றால் அது இலங்கை அரசாங்கத்துக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற …

  21. யாழ்ப்பாணம் என்பது தமிழர்களின் பூர்வீக பூமியாகும். என்றென்றும் அழியாத வரலாறு செழுமை மிக்க பண்பாடு மறையாத கலாச்சாரம் என்பவற்றை தன்னகத்தே கொண்ட புனித இடமாகும். இதற்கு அணிசேர்ப்பதாக அமைவது யாழ் நகருக்கு அண்மையாக அமைந்துள்ள நல்லூர் பிரதேசமாகும். இந்த நல்லூர் பிரதேசமானது புனித இடமாக போற்றப்பட வேண்டிய இடமாகும். அதுமட்டுமின்றி தமிழர்களுடைய வரலாற்றுப்பூமியாகவும் போற்றப்படவேண்டியது. இவ்வாறான பெருமையும் செழுமையும் நிறைந்த நல்லுர் பிரதேசமானது இன்று கலாச்சாரம், பண்பாடு, வரலாறு திட்டமிடபட்ட ரீதியில் சீரழிவுக்குள்ளாகி வருவது என்பது ஒரு வேதனை தரும் விடையமாகும். photo: நல்லுர் கந்தன் ஆலய வளாகத்தில் சிங்கள பிக்குமார் புனித இடம் எனறு சொல்லப்படுவதற்குக் காரணம் இப்பிரதேசத்தில…

  22. மூலம்: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=5652 இலங்கைத் தீவில் வரலாற்றுக் காலம் முதல் தொடர்ச் சியாக நிலை நிறுத்தப்பட்டு வரும் தமிழ்த் தேசியம், தற் போதும் சிதைந்துவிடாமல் ஈழத்தமிழர் தாயகத்தில் நிலை நிறுத்தப்பட்டு பேணப்படவேண்டும் எனக் கருதும் தமிழ் ஆர்வலர்களுக்கு நடந்து முடிந்த, பொதுத் தேர்தலின் முடிவுகள் பேரிடியாய் வந்திறங்கியிருக்கின்றன என்று கூறினால் அது மிகையாகாது. தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுவதில் முழு ஈடு பாடு கொண்டுள்ள கட்சி அல்லது அணி எனத் தன்னைக் இனங்காட்டிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் கணிசமான ஆசனங்களைப் பெற்று வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தில் தனது தனித்துவமான இடத்தை நிரூபித்துள்ளபோதிலும், அத…

  23. சிறுபான்மையினர் பலமும் முஸ்லிம்களும் இலங்கையில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து அரசியலை எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். என்.பீ.எம்.சைஃபுதீன் செவ்வி சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் அமைக்கப்படும் புதிய அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பங்களிப்பின்றி அரசியலமைப்பு மாற்றங்களைச் செய்யக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஊக்குவிக்குமானால் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் எதிர்காலம் பலவீனமான நிலைக்கே தள்ளப்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியலறிவுத்துறையின் சிரேஷ்ட விர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.