Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொடரும் `படகு அகதிகளின்' அவலம் * முதல்நாள் திருமணம், மறுநாள் மனைவியை கடலில் பலிகொடுத்த இளைஞனின் பரிதாபம் தலையில் பயணப் பெட்டியுடனும் கையில் பிளாஸ்ரிக் பையுடனும் தமது தாய் நாட்டிலிருந்து மோதிச் சிதறும் அலைகளூடாக கடும் சிரமத்துடன் இலங்கை அகதிகள் இந்தியக் கரைகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் அலைகள் மத்தியில் அவர்களை ஏற்றி வந்த மங்கலான சிறிய மீன்பிடிப் படகு நிற்கிறது. இலங்கையரை சுமந்துவரும் படகுகள் தென்னிந்தியக் கரையோரங்களுக்கு ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு வருபவர்கள் தமது பயணத்திற்கு நகைகளை விற்று பணம் செலுத்தியதுடன் தமது நிலங்களையும் மீன்பிடிப் படகுகளையும் விட்டு விட்டே வருகின்றனர். மோதலின் காரணமான பயத்த…

  2. எதற்கும் தயார் http://www.yarl.com/forum3/uploads/monthly_12_2010/post-6561-0-73914700-1292155582_thumb.jpg

  3. இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளார். சீன ஜனாதிபதியொருவர் முப்பது வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/122400-2014-08-16-05-59-05.html

  4. பயிற்சி கட்டணங்களை கூட செலுத்த முடியாத நிலையில் இலங்கை இராணுவம் - இந்திய அமைச்சர் By RAJEEBAN 21 OCT, 2022 | 12:04 PM இந்தியாவில் பயிற்சிக்கட்டணங்களை செலுத்த முடியாத நிலையில் இலங்கை இராணுவம் காணப்பட்டது என இந்தியாவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நிலைமை மிக மோசமாக காணப்பட்டது இந்தியாவில் பயிற்சிகளிற்கான கட்டணங்களை கூட செலுத்தமுடியாத நிலையில் இலங்கை இராணுவம் காணப்பட்டது என அஜய் பட் தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளை தங்கியிருப்பதால் ஜனநாயக நாடொன்று எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இலங்கையின் அனுபவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார். …

  5. சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராக செயற்பட வந்த நோர்வே இலங்கையின் உள்விவகாரங்களில அத்துமீறி தலையீடு செய்யத் தலைப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் அரசாங்கம் நோர்வேயின் செயற்பாடுகள் குறித்து மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் எச்சரித்துள்ளது. விலகிச் செல்லும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் வூல்ப் ஹென்றிக்சன், நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌர் ஆகியோர் தமது பணிகளை மறந்து அரசாங்கத்தின்மீது ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்…

  6. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை விநியோகிக்க முயன்றார் என்கிற வழக்கில் சிங்கப்பூர் நாட்டவரான பால்ராஜ் நாயுடு (வயது-48) என்பவருக்கு அமெரிக்காவின் பல்ரிமோர் மாவட்ட நீதிமன்றம் நேற்று ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தது. புலிகள் இயக்கத்துக்காக மேரிலாண்ட் மாவட்டத்தில் 2006 ஆம் ஆண்டு 900,000 அமெரிக்க டொலருக்கு ஆயுதங்கள் வாங்க முயன்றார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. ஈழ நாதம்

  7. ரணிலைக் கவிழ்க்க மைத்திரியிடம் உதவி கோருகிறது மகிந்த அணி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு பிரிவுகளும் ஆதரவளிப்பது முக்கியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமா…

  8. நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களிடம் கட்டணம் அறவிடும் முறையை அறிமுகப்படுத்தியது கொத்தலாவல வைத்தியசாலை By RAJEEBAN 02 NOV, 2022 | 09:02 AM நிதி அமைச்சு அதிக வருமானத்தை உழைக்குமாறு கேட்டுக்கொண்டது நிர்வாகம் நோயாளிகளிடமிருந்து பணத்தை அறவிடுமாறு உத்தரவிட்டுள்ளது - நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களிடமிருந்து கட்டணம் அறவிடும் முறையை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக மருத்துவமனை ஆரம்பித்துள்ளது. நோயாளியுடன் தங்கியிருப்பவர்களிடமிருந்து 350 ரூபாயை அறவிடும் நடைமுறையை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக மருத்துவமனை ஆரம்பித்துள்ளது. இதனை உறுதி செய்துள்ள மருத்துவமனையின் மருத்துவ விநியோகத்திற்கான இயக்குந…

  9. இலங்கைக்கு விஜயம் செய்த பாக். ஆளுநர் நெருக்கடியில் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-29 07:17:15| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு இரகசியமாக விஜயம் செய்த பாகிஸ்தான் பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் தாஸீரை பதவிநீக்கம் செய்யுமாறு லாகூர் மேல் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் வெளிநாடு செல்வது குறித்து அரசாங்கத்துக்கு அறிவிக்கவில்லை எனவும் அவர் நாட்டில் இல்லாதவேளை பதில் ஆளு நர் ஒருவரை நியமிக்கத் தவறியுள்ளதாகவும் நெளசாப் கான் எனும் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் மூன்று நாட்கள் ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்ததாகவும் அவர் இம்மனுவில் தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் 5ஆம் திகதி சல்மான் தாஸீர் பாகிஸ்தானிலிருந்து மர்மமாக காணாமல் போ…

  10. நாகவிகாரை விகாராதிபதியை சந்தித்த யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள்! கடலட்டை பண்ணை விடயம் தொடர்பாக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதி மீகஹஜந்துர சிறிவிமல தேரரை இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கடலட்டை பண்ணைகளை அமைக்கும் போது அதனை ஆய்வுக்குட்படுத்தி மேற்கொள்ளல், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கடலட்டை பண்ணை தொடர்பாக பேசுவதற்கான சந…

  11. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தப்பிச் சென்று இலங்கையின் பல பிரதேசங்களில் ஒழித்திருந்து கைதான விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தப்பிச் சென்று நலன்புரி முகாம்களுக்கு வெளியே பல பிரதேசங்களில் தலைமறைவாகி வாழ்ந்து வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஐம்பத்தி ஐந்து விடுதலைப் புலி உறுப்பினர்கள் நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் என்பது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தத…

  12. யார் தலையிட்டு அழுத்தங்களை பிரயோகித்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. யார், எந்த அழுத்தத்தை பிரயோகித்தாலும் வடக்கிலுள்ள முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கில் மாத்திரமில்லை, கொழும்பிலும் 50 மீற்றருக்கு ஒரு முகாம் என்ற ரீதியில் படை முகாம்கள் காணப்படுகின்றன என்றும் அமைச்சர் கெஹெலிய மேலும் கூறினார்.http://www.pathivu.com/news/33643/57//d,article_full.aspx

  13. ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பொதுச்செயலாளர் ரவிகருணாநாயக்க By RAJEEBAN 14 NOV, 2022 | 05:44 PM ரவிகருணாநாயக்க ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரவிகருணாநாயக்கவை பொதுச்செயலாளராக நியமிக்கவேண்டும் என கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவும் இதனை விரும்புகின்றார் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் இது குறித்து ரவிகருணாநாயக்கவுடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளன. ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார ஆளுநராக நியமிக…

  14. இன்றும் வான் குண்டுவீச்சு தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறிலங்கா விமானப் படையினர் இன்றும் வான் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று புதன்கிழமை காலை 9.15 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இத்தகைய தாக்குதல்கள் மூலம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஈடுபாடு கேள்விக்குறியாக உள்ளது என்றார். "எமது அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் நேற்று செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த போது பூநகரி பகுதியில் சிறிலங்கா விம…

    • 2 replies
    • 1.3k views
  15. ஐ.நாவின் புதிய மனித உரிமை ஆணையாளர் செய்யித் அல் - ஹுசைன் தமிழ் பயங்கரவாதத்திற்கு அப்பால் முஸ்லிம் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளையும் நியாயப்படுத்தவே முயற்சிக்கின்றார் என பொதுபலசேனா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவதீம்பிள்ளை தமிழ் பயங்கரவாத செயற்பாடுகளை ஆதரித்து தனது கடமையினை செய்து முடித்தார். இப்போது புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள செய்யத் அல் - ஹுசைன் தமிழ் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் தனது பணியினை ஆரம்பித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதமொன்றினை அழித்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பேசிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இன்று சிரியாவிலும…

  16. திராவிடத்திற்கு ஆதரவாக சீமான் செல்லும் பாதை – கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் சீமான் வைகோ சந்திப்பிற்கு பிறகு தமிழக அரசியலில் புதிய பரப்பரப்பு தொற்றி கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை தமிழ் நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றாத வரை தமிழனுக்கு விடிவில்லை. என்று சீமான் பரப்புரை செய்து வந்தார். அதே நேரத்தில் தி.மு.க தமிழனத்தை அழித்த துரோகி என்றும், அ.தி.மு.க தமிழனின் எதிரி என்றும் கூறி வந்த சீமான் திடீரென்று வை. கோ சந்திப்பிற்கு பிறகு அ.தி.மு.க வை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டார். இவர்கள் சந்திப்பிற்கு ஒரு நாள் முன்னால் தான் தனது பலத்தை அதி மு க உணர வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான மக்களின் கூட்டத்தை விஜயகாந்த் கூட்டியிருந்தார்…

  17. மணலாறில் தமிழர்களின் காணிகளைப் பிடுங்கி சிங்களவர்களுக்கு கொடுக்கும் அரசாங்கம்! - ரவிகரன் குற்றச்சாட்டு. [Tuesday 2014-09-16 17:00] மணலாறு பகுதியில், தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்படுவதாக வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மணலாறு பகுதியில் ஏற்கனவே குளங்களோடு உள்ள தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் வர்த்தக நோக்கத்துடன் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்னை, மாமர செய்கைக்கென 33 சிங்கள மக்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம் மொத்தமாக 325 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு வேலிகள் இடப்பட்டுள்ளன. இதற…

  18. ஜெனிவா பேச்சுவார்த்தை குறித்த நிகழ்ச்சி நிரல் அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி பேச்சுக்கள் 28ம் திகதி ஆரம்பிக்கும் வாய்ப்புகள் சந்தேகத்துக்குரியது என்கிறது கீழ் உள்ள செய்தி. Geneva talks run into agenda crisis http://www.lankaenews.com/English/news.php?id=3250

  19. வித்தியாவின் சகோதரிக்கு அரச பணி; ஜனாதிபதி வழங்கினார் புங்குடுதீவில் படுகொலை மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான, யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது நியமனத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் ஜனாதிபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளையில் மாணவி வித்தியாவின் வீட்டுக்கும் சென்று அக்குடும்பத்தினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …

    • 4 replies
    • 787 views
  20. தலைமன்னார் பகுதியில் வீட்டின் மீது இடிவிழுந்ததில் இருவருக்குக் காயம்! தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இடிவிழுந்ததில் அங்கு இருந்த கணவன் - மனைவி ஆகிய இருவரும் காயமடைந்தனர். அத்துடன் வீடும் அங்கிருந்த மின்சார உபகரணங்களும் பாதிப்படைந்தன. நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் பகுதியில் இடி மின்னலுடக் கூடிய மழை இலேசாகப் பெய்தது. அச்சமயம் மாலை 7.30 மணியளவில் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள வீட்டின் சுவர் மீது இடி விழுந்தது. இதில் வீட்டில் இருந்த கணவனும் மனைவியும் காயமடைந்தனர். வீடு சிறு சேதத்துக்கு உள்ளாகியதுடன் அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்சார வயர்கள் முற்றாக எரிந்ததுடன் மின்சார உபகரணங்கள் யாவும் சேதமடைந்தன. இந்தச் சம்பவத்தில் தலைமன்னார் தபால் அலுவலகத்தில் கடமை…

  21. மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. http://n…

  22. இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கார் இருக்கை உற்பத்தி தையல் வேலைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள SLBFE தலைமைக் காரியாலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தகுதியானவர்களை பதிவு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை, பாடசாலை வெளியேறும் சான்றிதழ், G.C.E உயர்தர சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஆகியவற்றைக் கொண்டு வருமாறு…

    • 2 replies
    • 291 views
  23. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் துயர நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, இணையத்தில் பிரசாரத் தளம் ஒன்றை தமிழ் ஆர்வலர்கள் நிறுவியுள்ளனர். சமூக வலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வலம்வரும் தமிழர்கள் தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும் வழிவகுக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவிக்கும் இணையத் தமிழர்கள் savetnfisherman -ஐ பயன்படுத்தி விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளும் இங்கே உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் முயற்…

  24. சு.க.- ஐ.தே.க. புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எஸ்.விஜெபால தொடர்ந்துள்ள இந்த வழக்கில் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட 6 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இரு கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கியிருந்தன. www.puthinam.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.