ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி அங்கிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 1.7k views
-
-
கடந்த 18ம் நாள் மாசி மாத அமெரிக்க அரச இனையத்தில் இலங்கை சம்பந்தமான கேள்விக்கு பதில் அளிக்கும் அரசின்( உள்துறை.?) உதவி பணி நிலை பேச்சாளர் Gordon K. Duguid அவர்களின் பதில்... QUESTION: The Sri Lankan ambassador in a statement day before yesterday urged the U.S. to influence upon LTT not to use the cap – civilian as a captives; whereas, tomorrow – day after tomorrow, there is going to be a demonstration by Genocide Against Tamils urging the U.S. to urge upon Sri Lankan Government not to – not to kill the civilians in the (inaudible) Sri Lanka. What’s the U.S. position on that? MR. DUGUID: We have already been in touch with the Sri Lankan Government, and we h…
-
- 2 replies
- 1.7k views
-
-
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்துக்குள் பிரவேசித்துள்ள இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது. போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்த காலகட்டத்தில் அரசியலுக்குள் பிரவேசித்தவர் அவர். தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பணியாற்றிய நீண்டகால அனுபவமுடைய அவர் மக்கள்மய அரச…
-
- 4 replies
- 1.7k views
-
-
மகிந்தவுக்கு அமெரிக்கா கண்டனம் சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கிறது. இலங்கைக்குள் அந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் சுதந்திரமாக நடமாட அரசியல் யாப்பு வழங்கியுள்ள உரிமையை இது மீறுவதாகும். பயங்கரவாததத்துக்கு எதிராக தன்னைப் பாதுகாக்க சிறிலங்கா வேண்டுகோளை முன்வைப்பதை அமெரிக்கா புரிந்துகொண்டு ஆதரிக்கிறது. ஆனால் 25 ஆண்டுகால தேசிய இனப் பிரச்சனைக்கு தேசிய அளவிலான ஒருமித்த கருத்தை உருவாக்க முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நி…
-
- 4 replies
- 1.7k views
-
-
கிழக்கிலிருந்து புலிகள் பின்வாங்கிய சமயம் அங்கு அவர்கள் வைத்திருந்த ஆயுதக்களில் ஒரு தொகுதி தென்னிலங்கையில் செயற்படும் ஒரு குழுவுக்கு கைமாறியதா என்பது குறித்து அரச புலனாய்வுப் பிரிவினர் துருவத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கிழக்கின் அரசியல் வாதி ஒருவர் ஊடாகவே இந்த ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு கைமாறியதாகக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே, இது விடயத்தில் புலனாய்வாளர்கள் நுணுக்கமாக இறங்கியிருக்கிறார்கள் என சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் அண்மையில் மஹரகம பிரதேசத்தில் தேடுதல் நடத்திய சமயம், மேற்படி குழுவினரால் நடத்தப்படும் அரசியல் அலுவ…
-
- 0 replies
- 1.7k views
-
-
நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கையை வெளியேற்றியது இந்தியா?! Published on October 4, 2011-3:15 pm இந்திய இராணுவம் 16 நட்பு நாடுகளின் படைகளுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள போர்ப்பயிற்சியில் பங்கேற்க இலங்கை இராணுவத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1.13 மில்லியன் படையினரைக் கொண்ட இந்திய இராணுவம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நட்பு நாடுகளுடன் இணைந்து போர்ப்பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது. நட்பு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்தக்கூட்டுப் போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, மொங்கோலியா, கசாகிஸ்தான், உஸ்பெகிஸ் தான், கிர்கிஸ்தான், ப…
-
- 10 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு பொறுப்பான தூதுவரின் சிரேஷ்ட ஆலோசகராக இருக்கும் பேராசிரியர் மைக்கல் நியூட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் சுமத்தியுள்ள யுத்தக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், …
-
- 26 replies
- 1.7k views
- 1 follower
-
-
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அலுவலகமொன்றின் மீது இன்று அதிகாலை ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். சொறிக் கல்முனை 6ஆம் கட்டையிலுள்ள இவ்வலுவலகம் ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகமாக செயல்பட்டு வந்ததாகவும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (இனத் துரோகி கருணா ) ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்து கொண்ட பின்பு அவரது அலுவகமாக செயல்பட்டதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர். இன்று அதிகாலை இவ்வலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்ட நால்வருமே அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக அக்காரியாலயத்துடன் தொடர…
-
- 1 reply
- 1.7k views
-
-
எமக்காக தன் உயிரை பணயம் வைத்து, இந்திய அரசின் கண்களை திறக்க முயற்சிக்கும் திருமாவின் உண்ணாவிரதப் போரட்டத்திற்கு எமது கோடி நன்றிகள். இவரின் போரட்டமானது உலக தமிழர்களின் உணர்வுகளை மேலும் பற்றி எரிய வைத்துள்ளது. நாமும் இவருடன் சேர்ந்து போராடுவோம். தமிழர்கள் உள்ள எல்லா இடங்களிலும் கவன ஈர்ப்பு போரட்டம் ஓயாமல் ஒலிக்க வேண்டும்.
-
- 8 replies
- 1.7k views
-
-
தேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி கி.தவசீலன்Jun 02, 2019 | 3:56 by in செய்திகள் அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தலையீடு செய்யும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று அதிபர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “போராட்டத்தை ஆரம்பிக்க முன்னதாக, அத்துரலியே ரத்தன தேரர் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து, முதலில் கலந்துரையாடியிருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாத நிலையில், இந்த விடயத்தில் இப்போதைக்குத் தலையிடும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை” என்றும் அந்த அதிகாரி குறி…
-
- 14 replies
- 1.7k views
-
-
ஒக்டோபர் மாதம் நடத்த இலங்கை அரசு ஏற்பாடு பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க சர்வதேச மட்டத்தில் எடுக்கபட்ட வேண்டிய முயற்சிகள் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு ஒன்றை எதிர்வரும் ஒக்.18 ஆம் திகதி முதல் 20 திகதி வரை கொழும்பில் நடத்த இலங்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமன் ஞாபகார்த்த நிலையம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தும் என வெளி விவகார அமைச்சர் ரோஹித நேற்று அறிவித்தார்.நேற்று மாலை கொழுமபு 7ல் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமரின் ஞாபகார்த்த நிலையத்தில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனை அறிவித்தார். இம்மாநாடு தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கையில் மேலும் கூறியதாவது : சர்வதேச மட்டத்தில் பெரும் அச்சு…
-
- 5 replies
- 1.7k views
-
-
1980 களில் ராஜபக்ஷ தான் சொன்னதை இன்று செயலால் நிரூபித்திருக்கின்றார். அதாவது இந்தியா தமிழர் பிரச்சனை மூலம் இலங்கையில் நிரந்தரமாகக் காலூன்றி, இலங்கையையும் தனது மாநலங்களில் ஒன்றாக இணைப்பதற்குரிய செயற்பாடே ஐபிகேஎவ். இந்தியாவின் இந்தத் தலையீட்டை இலங்கையிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ன கனவு இன்று நிறைவேறியுள்ளது. பிரச்சனையை உருவாக்கிய இந்தியாவையே வைத்து அவர்களின் செலவிலும் முழுமனதுடனான பங்களிப்பிலும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் குழக்களை எல்லாம் அழித்து, முடிவில் இந்தியாவையே இலங்கையிலிருந்து அப்பால் தள்ளி, இலங்கையின் காலடியில் இந்தியாவை விழவைத்த பெருமை ராஜபக்ஸவைச்சாரும். தமிழர்களுக்குரிய உரிமையையும் சுமுகமாகத்தீர்த்தால் இந்தியாவை இலங்கையிலிருந்து முறறு முழுதாக அப்ப…
-
- 13 replies
- 1.7k views
-
-
300 கோடி ரூபா பெறுமதியான காணியை பெறும் பலாத்தகார நடவடிக்கையில் மகிந்தவும் பசிலும்: 'ராவய' வார ஏடு [திங்கட்கிழமை, 12 மார்ச் 2007, 18:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] தனியார் உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமானதும், ரஸ்ய தூதரக அலுவலகத்திற்கு சொந்தமானதுமான 300 கோடி ரூபாவுக்கு அதிகமான பெறுமதி கொண்ட காணியை பலாத்காரமாக உரிமையாக்கிக் கொண்டு அதில் வாகனத் தரிப்பிடத்தை அமைக்கும் பணி, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச அறிவுறுத்தலின் கீழ் இடம்பெற்றது. இத்தகவலை கடந்த வாரம் வெளிவந்த 'ராவய' வார இதழ் தனது செய்தியில் வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட அந்த இடத்தில் வாகனத் தரிப்பிடத்தை அமைத்து அதனை அங்குரார்ப்பணம் ச…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்கள் யார்? BBC Harftalk
-
- 3 replies
- 1.7k views
-
-
By Ranga Sirilal COLOMBO (Reuters) - Twenty-nine Tamil Tiger rebels and seven soldiers were killed in fighting in Sri Lanka's north on Wednesday, the military said. The clashes, in the northwestern district of Mannar, northern district of Vavuniya and northern Jaffna peninsula, were the latest engagements in a renewed civil war that has seen near daily air raids, bombings and land and sea battles in recent months. "Two confrontations in Mannar killed 13 terrorists and another two different attacks in Vavuniya and Jaffna killed 16 more terrorists," said a spokesman at the Media Centre for National Security. The military said a Tamil Tiger rebel attack o…
-
- 5 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சியில் பாரிய குண்டு வீச்சு Written by Ramanan - Apr 26, 2007 at 09:52 AM கிளிநொச்சி மாவட்டம் திருவையாற்றுப் பகுதி மீது இன்று காலை 7.00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள் குண்டு வீச்சை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா வான்படையின் மூன்று தாக்குதல் வானூர்திகள் திருவையாற்றுப் பாடசாலையில் இருந்து 200 மீட்டர்கள் தொலைவில் 12ற்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளன. இதன் காரணமாக வீடு ஒன்று முற்றாக அழிந்துள்ளதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் காரணமாக பொதுமக்களிற்கு சேதங்கள் எதுவும் ஏற்படாதபோதும் குறித்த பகுதியில் கடுமையான பதற்றம் நிலவுகிறது. சங்கதி
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கை முஸ்லிம்கள் நீதி கோரி ஜெனிவா செல்ல முயற்சி! - ஆதாரம் திரட்டும் பணியில் புத்திஜீவிகள் தீவிரம்!! இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் சிங்கள இனவாதக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ள முஸ்லிம் இராஜதந்திரிகள் பலர், அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் நிலையில், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கமும், அரசிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில…
-
- 1 reply
- 1.7k views
-
-
கொடூரமான கொலைகள் உள்ளிட்ட பயங்கரவ குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்த தண்டனையை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மரண தண்டனையை அமுல்படுத்துவது, முதலில் யாருக்கு அந்த தண்டனையை நிறைவேற்றுவது, அதற்கான நேரம், திகதி என்பவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. ஜனாதிபதி தண்டனை நிறைவேற்ற உத்தரவிடும் நேரத்தில், அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்காக தூக்கு மரணம் தயார் நிலையில் இருப்பதாக சிறைச்சாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படாத காரணத்தில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அச்சமின்றி பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது அண்மைய கால சம்பவங்கள்…
-
- 13 replies
- 1.7k views
-
-
விதுரன் மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது. இதனால் மடுவைக் கைப்பற்ற முன்னர் திருச்சொரூபத்தை மீண்டும் அங்கு கொண்டு வந்து வைக்கச் செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கவும், இல்லையேல் திருச்சொரூபத்தை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரச்செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியிலும் அரசும் படைத்தரப்பும் இறங்கியுள்ளன. மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் அரசியல் காரணம் கொண்டதென்பது தெளிவு. கிளிநொச்சியை புலிகளிடமிருந்து கைப்பற்றுவதுதான் அரசின் நோக்கமென்றால் அதற்கான பாதையில் இல்லாத மடுவை கைப்பற்ற ஏன் முயலவேண்டுமென்ற கேள்வி எழுந்தது. அரசின் அரசியல் நோக்கமானது தேவாலயத…
-
- 3 replies
- 1.7k views
-
-
ராஜபக்சேவுக்கு சுஷ்மா சுவராஜ் கோரிக்கை இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை கொலை செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’அண்டை நாடான இலங்கையில் இத்தகைய சம்பவம் நடைபெறுவதை, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளமுடியாது’’ என்று கூறியுள்ளார். ##################### ஆனால் ஒருத்தரை பிடித்து வைத்திருப்பதற்கு சத்தம் போடும் இந்திய அரசிய…
-
- 4 replies
- 1.7k views
-
-
நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் மோதல், கப்பல் பயணம் இடைநிறுத்தம். இன்று சனிக்கிழமை மாலை 3.45 மணியளவில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று 350 பணிகளை ஏற்றிக் கொண்டு திருகோணமலையில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு செல்லவிருந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இசசமரில் ஏற்பட்ட சேதமவிபரம் தொடர்பாக மேலதிக விபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை. -Pathivu-
-
- 0 replies
- 1.7k views
-
-
நோர்வே மாநாட்டில் இலங்கை பிரச்சனை குறித்து சிங்களத் தரப்புடன் வைகோ கடும் வாக்குவாதம் [சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 04:25 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] நோர்வேயில் நடைபெற்ற 'தெற்கு ஆசியாவின் அமைதியும், சமாதானமும்' மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சனை குறித்து பொய்யான தகவல்களை முன்வைத்த சிங்களத் தரப்பினருடன் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் வாக்குவாதங்களை நடத்தினார். தெற்காசிய இலங்கைப் பிரச்சினை குறித்து அம்மாநாட்டு அரங்கத்திலேயே விவாத மேடை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்கு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான எரிகா மான் அம்மையார் (இந்த அம்மையார்தான் கொசாவோ தனி நாடு உரிமை போராட்டத்திற்கு ஆதரவாக ஜெர்மனி நாடாளுமன்றத்திலு…
-
- 14 replies
- 1.7k views
-
-
யாழ் நகர பகுதியில் 5 நட்சத்திர விடுதி ... 25 ஜூலை 2011 ஒன்று அமைப் பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகி விட்டதாகத் தெரிய வருகின்றது. யாழ் நகர பகுதியில் 5 நட்சத்திர விடுதி ... யாழ் நகர பகுதியில் 5 நட்சத்திர விடுதி ஒன்று அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகிவிட்டதாகத் தெரிய வருகின்றது. யாழ்ப்பாணம் கோட்டையை அண்டிய குடாக்கடல் பகுதியில் இப்பணிகள் இடம்பெறுகின்றது. கொழும்பை சேர்ந்த தாஜ் ஹொட்டல் உரிமையாளர் தரப்பே காணிகளைக் கொள்வனவு செய்து விட்டதாக தெரியவருகிறது. 5 நட்சத்திர விடுதியை யாழ்ப்பாணத்தில் அமைக்க முடிவுகள் மேற்கொண்டு அதற்கேற்ப காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு யாழ் கோட்டைக்கு முன்னதாக 5 நட்சத்திர விடுதி ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. க…
-
- 19 replies
- 1.7k views
-
-
விடுதலை புலிகளின் வான் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகள் [04 - April - 2007] விடுதலைப்புலிகளின் இலகு விமானம் 26.03.07 இல் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது நடத்திய தாக்குதலானது உள்நாட்டு மற்றும் சர்வதேசளவில் அதிர்ச்சியளித்திருப்பதைக் காணலாம். இது இத்தகைய அமைப்பொன்றினால் உலகில் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் என்ற வகையில் பல்வேறுபட்ட உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இத்தாக்குதலானது இலங்கைக்கு மட்டுமன்றி, உலக நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விசேடமாக கூட்டப்பட்ட அரசியல் கட்சிகள் மாநாட்டில் கூறியுள்ளார். பயங்கரவாதம் முற்றாகக் களையப்பட வேண்டுமென்பதை இச்சம்பவம் மேலும் உணர்த்தியுள்ளதாகவும், அதற்கு எல்லோரினதும் ஒத்துழைப்பு அவசியமெனவ…
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்கிறார். முன்னதாக விழாவுக்கு ராஜபக்சவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராஜபக்சவின் விஜயத்தைக் கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அவர் இன்று ஹைதராபாத்தில் லிங்கா படப்பிடிப்பில…
-
- 24 replies
- 1.7k views
-