ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143558 topics in this forum
-
கொசோவோ போன்ற நிலையை எமது தாயகப் பூமியிலும் ஏற்படுத்த முயற்சிஎன்கிறார் - வீரவன்ச 3/6/2008 9:30:55 PM வீரகேசரி நாளேடு - ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் பிரிவினை வாதத்திற்கு தூண்டுதலான பொய்க் கருத்துக்களின் அடிப்படையிலேயே இன்று கொசோவோ தனிநாடானது. இதேபோன்றதோர் நிலையை எமது தாயக பூமியிலும் தோற்றுவிக்க அவர் அரும்பாடுபட்டு வருகிறார் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். எதிர்வரும் 16 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் இலங்கையிலும் ஒரு பிரிவினை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது. இவ்வாறான பயங்கர சூழலை எதிர்…
-
- 2 replies
- 1.7k views
-
-
சம்பூரைக் கைப்பற்றியதைப் பட்டாசு வெடிக்காத குறையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது இலங்கை ராணுவம். 'விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். அவர்களை வீழ்த்துவதற்குத் தேவையான மனோபலமும் படைபலமும் எங்களிடம் உண்டு. இனி யாரும் அவர்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்!’ _ பெருமை பொங்க இப்படி அறிவித்திருக்கிறார் மகிந்த ராஜபக்சே. புலிகளை எதிர்த்து இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது எப்படி என்பதையும் அவர் விலாவாரியாக விவரித்துள்ளார். 'சரியான ஆட்களைச் சரியான பதவியில் அமர வைத்தால், எல்லாம் நல்லபடியாக நடக்கும். அதாவது, இலங்கை ராணுவத்தில் இருக்கும் ஒவ்வொரு வீரனும் அதிகாரியும் இப்படித் தேர்வு செய்யப்பட்டவர்கள்தாம். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதால்தான், தீவிரவாதிகளை (அ…
-
- 1 reply
- 1.7k views
-
-
வாளைச்சேனையில் கருணா குழுவினர் மூன்று முகாம்கள் தாக்கியழிப்பு: 20க்கு மேற்பட்டோர் பலி! பலர் காயம். செவ்வாய் 09-01-2007 22:43 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] மட்டக்களப்பு வாழைச்சேனையில் அமைந்துள்ள கருணா ஒட்டுக்குழுவினரின் மூன்று முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் எம்மிடம் கருத்துரைத்துள்ளார். அவர் மேலும் கருத்துரைக்கையில்....... நேற்றிரவு (செவ்வாய்) 8.30 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 20 தொடக்கம் 25 வரையிலான ஒட்டுக்குழுவினர் பலியாகியதோடு மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவித்த அவர் இது தொடர்பில் முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ள…
-
- 2 replies
- 1.7k views
-
-
கடந்த நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் படி நாட்டின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவி அழிந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார். உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை இலங்கை பறவையியல் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது . ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. சட்டத்தரணி ஜகத் குணவர்தன மேலும் தெரிவிக்கையில், சிட்டுக்குருவியை பாதுகாக்கப்பட்ட பறவையாக அறிவிக்குமாறு 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்படி தற்போது சிட்டுக்குருவி பாதுகாக்கப்பட்ட பற…
-
-
- 15 replies
- 1.7k views
- 2 followers
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
போர் மேலும் 20 ஆண்டுகள் நீடிக்கலாம் அதில் இந்தியா தலையிட முடியாது முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி . இலங்கையில் நடக்கும் போர் மேலும் 20ஆண்டுகள் நீடிக்லாம். ஆனால் அதில் இந்தியா தலையிட முடியாது என்று இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி கூறினார். கடலோர காவல்படை மற்றும் சென்னை பல்கலைககழகம் இணைந்து சென்னை துறைமுகத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தன. இலங்கை இந்தியா உறவு மற்றும் தற்போது நிலவிவரும் சூழ்நிலை என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி.ஆர்.ராகவன் பேசினார். கடலோர காவல்படைக்கு சொந்தமான சாரங்கப்பலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராகவன் மேலும் கூறியதாவது: இலங்கை மற்றும் இந்தியாவில் 1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் நிலவிய சூழ்நிலைகள்…
-
- 2 replies
- 1.7k views
-
-
சணல்4 வீடியோ உண்மையானது அல்ல அது போலியானது என கொழும்பில் இருந்து அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்க ஜெனிவாவில் வேறுவிதமாக அரசாங்க பிரதி நிதிகள் அறிக்கை வாசித்தனர். அங்கேயும் இரு அணியாக செயற்பட்ட குழுக்களிடையே வித்தியாசமான அறிக்கையால் சலசலப்பு ஏற்பட்டது. இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிஙக தனது அறிக்கையில் சனல்4 பொய்யானது அதனை விசாரிக்குவோ அதுபற்றி கதைக்கவோ அரசாங்கம் விரும்பவில்லை என கூறினார். ஆனால் பின்னர் உரையாற்றிய இலங்கை சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் அறிக்கை வாசிக்கும் போது சனல் 4 வீடியோ தெளிவின்மையினால் அது தொடர்பில் முழுமையான மதிப்பீடு செய்யாமல் விலக்கி வைக்கப்பட்டது என அறிக்கை சமர்ப்பித்தார். இரண்டுமே திட்டமிட்டுத்தான் வாசிக்கப்பட்டதா என்று கூட தோன்றுகின்றது…
-
- 4 replies
- 1.7k views
-
-
அம்பாறையில் அதிரடிப்படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு: இளந்திரையன். அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளதாவது: அம்பாறை பக்கிமுட்டியா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு இம்முன்னகர்வை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டனர். அப்போது சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனுடன் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டனர். அப்பகுதியில் தமிழீழ விடுத…
-
- 1 reply
- 1.7k views
-
-
http://sayanthan.blogspot.com/2007/11/blog-post_12.html
-
- 1 reply
- 1.7k views
-
-
திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள் நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் ஜனாதிபதி திடீரென விஜயம் செய்துள்ளார். ஒரு நபர் அளித்த முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி இன்று (23) குறித்த அலுவலகத்திற்கு சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ தேவை ஒன்றுக்காக குறித்த அலுவலகத்திற்கு வந்ததாகவும், எனினும் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தமது வேலையை செய்து கொடுக்கவில்லை எனவும் ஜனாதிபதியிடம் பெண் ஒருவர் முறையிட்டுள்ளார். இதன்படி, வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், அங்கு போதுமான ஊழியர்கள் இருப்பதையும் அவதானித்தார். இருந்தும் அங்கு சரியாக கட…
-
- 8 replies
- 1.7k views
-
-
வெளிநாட்டு கடன்களைப் பெறுவது அரசாங்கத்திற்கு கடினமாகத்தான் இருக்கும். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 30 துயரெயசல 2007 09:52 இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து வருமானத்தைப் பெறுவதோ, வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு கடினமானதாக அமையுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்படாவிட்டால் முதலீடுகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதில் எதிர்மறையான விளைவையே அரசாங்கம் எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென சர்வதேச நாணய நிதியம் இந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது. …
-
- 5 replies
- 1.7k views
-
-
பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் யாழில்? பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் இருவர் நேற்று யாழ் குடாநாட்டிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் கடற்படை உயர்மட்ட குழுவினரும் நேற்று குடா நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர். இக்குழுவினர் உலங்குவானூர்தி மூலம் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளை பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து இக் குழுவினர் நேற்றும் இன்றும் காங்கேசன்துறைமுக கடற்படை தளத்தில் கடற்படை உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டனா. இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளால் நடாத்தப்படும் கரும்புலித் தாக்குதல்களை கடலில் எவ்வாறு முறியடிப்பது தொடர்பாக பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் சிறிலங்கா கடற்படையினருக்கு விளக்கப்பயிற்சிகளை வழங்கியதாக காங்கேசன்துறைமுக கடற…
-
- 2 replies
- 1.7k views
-
-
செவ்வாய் 21-08-2007 03:10 மணி தமிழீழம் [மயூரன்] தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் ஆட்டிலெறி பரிமாற்றம் விடுதலைப்புலிகளும் சிறீலங்கா படையினரும் திங்கட்கிழமை மாலை கடுமையான ஆட்டிலெறி எறிகணைப்பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா படையினர் கோப்பாய் பகுதியில் இருந்து பூநகரி, முகமாலை பகுதிநோக்கி எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் விடுதலைப்புலிகள் உசன், மிருசுவில் தென்மராட்சி பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவ முகாங்களை நோக்கி எறிகணைத்தாக்குதல்களை நிகழ்த்தியதாகவும் தெரியவருகிறது. இத்தாக்குதல்களால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னமும் தெரியவரவில்லை. இதனையடுத்து கோப்பாய் பகுதியில் பதற்றம் நிலவியதாகவும் தெரியவருகிறது. இருதரப்பில் இருந்தும் உத்தியோகபூர்வ…
-
- 2 replies
- 1.7k views
-
-
"பட்டினி போட்டு சரணடைய வைக்க முடியாது!" - சுப.தமிழ்ச்செல்வன் சூடு பறக்கும் பேட்டி... "ஈழ விடுதலைப் போராட்டம் என்பது எமது தேசியத் தலைவர் பிரபாகரனால் ஒரு கைத்துப்பாக்கியோடு துவங்கி வைக்கப்பட்டது. நீதியான, நியாயமான விடுதலைப் போரை சர்வதேச சமூகத்துக்குத் தெரிவித்து, பலம் கொண்ட ஒரு போராளி அமைப்பாக இதை வளர்த்தெடுத்திருக்கிறார். ஈழவிடுதலையின் தீரத்தில் இதுவரை 18,842 மாவீரர்கள் விதைக்கப்பட்டிருக் கிறார்கள். இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் போராளிகள் ஈழ விடுதலை நெருப்பை நெஞ்சில் சுமந்தபடி ஆயுதங்க ளோடு நிற்கிறார்கள், களத்தில்! விடுதலைப் புலிகள் அமைப்பு துவங்கப்பட்ட இந்த முப்பதாண்டுகளில் கடந்துவந்த பாதைகளையும் சோதனையான காலங்களையும் தியாகங்களால் நீந்திக் கடந்திருக்கிறோம். எமது த…
-
- 1 reply
- 1.7k views
-
-
இந்தியாவின் பாதுகாப்பானது இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்திருப்பதால், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து பல சிவப்புக் கொடிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீன ஆய்வு கப்பல் வருவது தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ளன. குறிப்பாக சீன கப்பலின் இலங்கை விஜயத்தை இந்தியா வன்மையாக எதிர்த்து வருவதுடன், அதனை நிறுத்த இராஜதந்திர ரீதியில் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது. எனினும் ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்…
-
- 21 replies
- 1.7k views
- 2 followers
-
-
நல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வரமுடியுமானால் சீரழிந்துள்ள தாயகத்தை கட்டியெழுப்ப வருவதற்கு ஏன் தயக்கம்? புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வித்தியாதரன் கேள்வி நல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம்பேர் வெளிநாடுகளிலிருந்து வரமுடியுமாக இருந்தால், பாதிக்கப்பட்ட உங்கள் கிராமங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு நீங்கள் ஏன் வரக்கூடாது? புலம்பெயர்ந்துள்ள மக்கள் தாயக தேசத்துக்கு நேரடியாக வாருங்கள். அங்குள்ள யதார்த்தநிலைமையை நேரடியா பாருங்கள். இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் ந.வித்தியாதரன் சுவிஸில் நடைபெற்ற சுற்றத்து முற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது புலம்பெயர்ந்துவாழும் மக்களை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது:- …
-
- 9 replies
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=XS_sEbZnV6s&feature=player_embedded இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இலங்கை அரசினால் மனிதப் பேரழிவுகளும், யுத்தக் குற்றங்களும் நடத்தப்பட்டன என்று தீவிரமாகப் பிரசாரம் செய்து செய்து வருகின்றது. மனிதப் பேரழிவுகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் என்று அவ்வப்போது புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரம் என்று சுமார் நான்கு மாதங்களுக்கு முன் புகைப்படங்கள் சிலவற்றை வெளிப்படுத்தி இருந்தது. தற்ப…
-
- 0 replies
- 1.7k views
-
-
வி.புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்ட பின்னர், வடக்கினை பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக, இராணுவ பலத்தை மேலும் விரிவு படுத்திவருவதாக சிறிலங்கா அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. இதன் படி இராணுவத்திற்கு மேலும் 50,000 படைவீரர்கள் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளத
-
- 0 replies
- 1.7k views
-
-
என் சாவினைத் தடுப்பதற்கு பான்கி மூனினால் மட்டும்தான் முடியும்:விமல்வீரவன்ஸ திகதி: 10.07.2010 // தமிழீழம் யார் வற்புறுத்தினாலும் தன்னுடைய உண்ணாவிரதத்தினை கைவிடப்போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ஸ இன்று அறிவித்திருக்கிறார். ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி, இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்னால் நேற்று முன்தினம் தனது உண்ணாவிரதத்தினை அவர் ஆரம்பித்திருந்தார். 3ஆவது நாளாகவும் தனது உண்ணாவிரதத்தினை அவர் தொடர்கின்றார். ஊடகவியலாளர்களிடம் இன்று அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி என்னை வற்புறுத்தினாலும் நான் என்னுடைய விரதத்தினை முடிக்கப்போவதில்லை. என் சாவின…
-
- 23 replies
- 1.7k views
-
-
யுத்தத்தை நிறுத்தி அரசுடன் பேசுவது உடனடி சாத்தியம் இல்லை என்று புலிகள் தெரிவிப்பு.. தீவு பகுதிகள் பல விடுதலை புலிகளால் முற்றுகை கண்கானிபு குழு தெரிவிப்பு.........
-
- 0 replies
- 1.7k views
-
-
அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே, மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிரையே ஈகம் செய்த உன்னதமான விடுதலைவீரர்களை மாவீரர்களாகப் போற்றி வழிபடும் உயரிய பண்பாட்டினை செலுமையூட்டி – அதனை அரசியல், சமூக, பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக்கியவர்கள் தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமுமாகும். எமது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம் காலஓட்டத்தில் விரிவடைந்து முழு மக்கள் திரளையும் ஒன்றிணைக்கும் உணர்வும் - உயிரும் கொண்ட நிகழ்வாகியுள்ளது. இந்த நிகழ்வு 2009ல் தமிழீழ விடுதலைப் போரட்டமும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் எதிர்கொண்ட நெருக்கடிகளினால் பலவித சிக்கல்களை எதிர்கொண்டது. முழு மக்களின் நிகழ்வு - தமிழீழ விடுதலை இலட…
-
- 15 replies
- 1.7k views
-
-
இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை மதித்து புலிகள் நிபந்தனையற்ற பேச்சிற்கு சம்மதித்ததை தவறாக அர்த்தப்படுத்தியது சிங்கள அரசு. புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும் சிங்களப்படைகள் இராணுவ பலத்தில் மேலோங்கி உள்ளார்கள் என்றும் எண்ணியது. அதன் வெளிப்பாடுகள் தான் பேச்சு ஆரம்பிக்க முன்கேகலிய ரம்புக்வெல புலிகளுக்கு விதித்த மூன்று நிபந்தனைகள். ஆனால் பின்னர் தான் நிபந்தனைகள் விதிக்கவில்லை என கரணமும் அடித்திருந்தார். சர்வதேச நாடுகளின் உதவித்தொகையில் சீவியம் நடத்தும் சிங்கள அரசுக்கு என்று தனியான கொள்கைகள் ஏதும் இருக்க முடியுமா? அதுதான் ரம்புக்வெலவின் குத்துக்க ரணத்திற்குக் காரணம். ரம்புக்வெல நிபந்தனை விதித்ததன் அர்த்தம் என்ன? தாம் பலமாக இருக்கிறோம் என்பதை தெரி விற்கும் முயற்சி. அதாவ…
-
- 2 replies
- 1.7k views
-
-
சீனா குறித்த கவலை வேண்டாம்! - புதுடில்லியில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பீரிஸ் பதில்!! இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் சீனா மேற்கொள்வதற்கு இடமளிக்கமாட்டோம் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெறும் நோக்குடன் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லிக்குச் சென்றிருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தனது பயணத்தின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு நேற்று (17.05.11) மாலை கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சீனாவின் மேலாதிக்கம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்காவின் வெ…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவுக்கு மேலதிக ராடார்களை அனுப்பியது இந்தியா: "இந்து" சிறிலங்காவுக்கு ஓராண்டுக்குப் பின்ன்ர் மேஎலதிகமாக ராடார்களை இந்தியா அனுப்பியுள்ளதாக சென்னையிலிருந்து வெளிவரும் "இந்து" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஓராண்டுக்குப் பின்னர் மேலதிகமான ராடார்களை சிறிலங்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ளதாக புதுடில்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2005ஆம் ஆண்டு இரண்டு ராடார்களை இந்தியா சிறிலங்காவுக்கு அளித்திருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் ஒரு இரணுவ ராடாரை சிறிலங்காவுக்கு அனுப்பியது. அதே வகையான ராடார் கடந்த ஜுன் மாதமும் அனுப்பி …
-
- 4 replies
- 1.7k views
-
-
பேச்சு வார்த்தை ஒன்றிற்கு தயாராகுமாறு கூட்டமைப்பிற்கு இந்தியா தகவல் அனுப்பியுள்ளது. மஹிந்த 8 ஆம் திகதி தீர்வு பொதியுடன் டில்லி செல்கின்றார். மஹிந்தவின் பொதியினை வைத்து பேச்சுவார்த்தை நடக்கலாம் என கூறப்படுகின்றது.அதே வேளை கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே தமது தீர்வு யோசனைகள் அமையும் என்று கூறியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்பு தேர்தலில் வெற்றிபெறும் தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சுகளை நடத்துவேன் என்று ஜனாதிபதி அறிவித்திருந்த போதும் இதுவரை கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை. என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இப்படியான நிலையிலேயே மஹிந்தவின் புதுடில்லி விஜயம் இடம்பெறுகிறது. மஹிந்தவின் இந்த புதுடில்லி விஜயத்தின் பின்பு பேச்சுக்கான ச…
-
- 6 replies
- 1.7k views
-