ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
பார்வதியம்மாளின் அஸ்தி இனந்தெரியாதோரால் நாசம் பார்வதியம்மாளின் அஸ்தி நேற்று இரவு இனந்தெரியாதோரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப்பட்டுள்ளது. அவரை எரியூட்டிய இடத்தில் நாய்களை சுட்டுப் போட்டதுடன் அவரது அஸ்தியும் தாறுமாறாக அள்ளி வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று மாலை பார்வதியம்மாளின் பூதவுடல் அஞ்சலி நிகழ்வுக்குப்பின்னர் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்குப்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர். இன்று காலை மயானத்துக்குச் சென்று பார்த்தவேளை அவரது அஸ்தி எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து அள்ளி தாறுமாறாக வீசப்பட்டிருந்தது. அத்துடன் மூன்று நாய்கள் சுடப்பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தியுடன் ப…
-
- 3 replies
- 1.7k views
-
-
சோனியாவிற்கெதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தடை பலர் முன்கூட்டியே கைது தமிழகம் வருகை தரும் சோனியாவிற்கு நாளை (06.05.2009) கறுப்புக்கொடி காட்டப்படும் என்று பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார். இதற்கு காவல்துறை தடைவிதித்துள்ளது. முன்கூட்டியே பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராசேந்திரன் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நாளை மாலை 4 மணி அளவில் சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும் நேற்று சிறையிலிருந்து விடுதலை ஆன பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி சோனியாவிற்கு தமிழகத்தில் எதிர்ப்பு காட்டப்படும் என்று கூறியிருந்தார். இதனால் முன்னெச்சரிக்கை …
-
- 3 replies
- 1.7k views
-
-
வட போர்முனையான முகமாலையில் பாரிய முன்நகர்வை சிறிலங்காப் படை மேற்கொண்டது ஏன்? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
Posted by சோபிதா on 08/06/2011 in செய்தி சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் நிபுணர் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக அறிக்கையை அல்லது கண்டனத்தை வெளியிடுமாறு நாம் எந்த ஒரு நாட்டையும் கோரவில்லை என சிறீலங்காவில் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் தெரிவித்துள்ளார். சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற விவாத்தில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தேவை ஏற்படும்போது உதவிகளை பெறுவதற்காகவே நான் இந்தியா சென்றிருந்தேன். ஐ.நா அறிக்கைக்கு எதிராக கண்டனத்தை வெளியிடுமாறு இந்தியாவுக்கு கோரிக்கை விடுப்பதற்காக நான் அங்கு செல்லவில்லை. ஐ.நா அறிக்கைக்கு எதிரான கண்டனங்களை வெளியிடும…
-
- 2 replies
- 1.7k views
-
-
தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 1.7k views
-
-
மன்னாரில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து இராணுவம் தாக்குதல்! 30ற்கு மேற்பட்டோர் படுகாயம்! சிலர் கொல்லப்பட்டிருக்கலாமென அச்சம்! மன்னார் பேசாலையில் இன்று காலை சிறிலங்கா கடற்படையினர் மக்கள் குடியிருப்புக்க ளுக்குள் நுழைந்து மேற்கொண்டு கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத் தாக்குதலில் சுமார் 30ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. காயமடைந்தவர்கள்; சலர் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் காயப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு போதுமான அம்புலன்…
-
- 4 replies
- 1.7k views
-
-
08.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....3ff8c02ebfd5659
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் பிரித்தானியப் பிரதமர் வியாழன், 14 ஏப்ரல் 2011 05:41 புத்தாண்டை கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரித்தானியா பிரதமரும், கொன்சவேர்டிவ் கட்சியின் தலைவருமான டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டையிட்டு நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த நாட்டுக்கு வழங்கியிருக்கும் முக்கியமான பங்களிப்பை இந்தத் தருணத்தில் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன். அர்ப்பணிப்பு, சமூக மற்றும் குடும்பம்சார் பொறுப்புணர்வு முதலான அம்சங்களின் மீதாகவே தமிழ்ச்சமூகத்தின் இந்தப் பங்க…
-
- 8 replies
- 1.7k views
-
-
நாய் குரைத்தமைக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். நகரத்தில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளாராகக் கடமையாற்றி வருகின்றார். இவர் யாழ். நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வருகிறார். தான் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வளர்க்கும் நாய் தொடர்ந்து குரைப்பது தமக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்துவதாக நேற்று வெள்ளிக்கிழமை அவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது…
-
- 8 replies
- 1.7k views
-
-
சனி 14-07-2007 23:37 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளின் அறிவித்தலை அடுத்து சிறீலங்கா பொருளாதராத்தில் பாரிய தாக்கம் ஸ்ரீலங்காவின் பொருளாதார நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என விடுதலைப்புலிகள் அறிவித்துற்றமை ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று தீடிரென வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதி 111 ரூபா 80 சதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்னும் சில தினங்களில் டொலரின் பெறுமதி 120 ரூபாவரை உயர்வடையும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை பங்கு பரிவர்தனையும் நேற்றைய தினம் மிகவும் மந்தமடைந்துள்ளதாக பங்கு சந்தை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. …
-
- 1 reply
- 1.7k views
-
-
ஏட்டிக்குப் போட்டியான இராணுவ அணுகுமுறை கவலை தருகிறது அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளது ஏட்டிக்குப்போட்டியான இராணுவ ரீதியான அணுகுமுறை பெரும் கவலையளிக்கின்றது. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவ ரீதியான வெற்றிகள் ஒரு போதும் உதவப் போவதில்லையென இணைத்தலைமை நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன. விடுதலைப்புலிகள் நேற்று முன்தினம் பலாலி இராணுவ தளம்மீது மேற்கொண்ட விமானத்தாக்குதல். வடபகுதியை நோக்கி பாரிய படை நடவடிக்கைக்கு இராணுவம் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக கருத்துத்தெரிவித்த இணைத்தலமை நாடொன்றின் தூதரக உயர் அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவ்வதிகாரி மேலும் கூறியதாவது: இலங்கையில் மோதல்கள் நிறுத்தப்பட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீ…
-
- 4 replies
- 1.7k views
-
-
புஷ்ஷை அடியொற்றி யுத்தத்தை முன்னெடுத்தால் `படுகுழிதான்' [29 - May - 2007] * தமிழ் மக்களோடு அதிகாரத்தை பங்கிட்டு அபிவிருத்தியில் அவர்களை பங்காளியாக்கினால் நாட்டுக்கு விடிவு தொலைவில் இல்லை அண்மையில் ஜோர்தானில் இடம்பெற்ற எ11 உலக பொருளாதார மன்ற மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய தனதுரையில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி தொடர்பாக விளக்கமளித்தார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பேணுவதில் தனது அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும், இலங்கை ஒரு மிகக் குறைந்த அபிவிருத்தி அடைந்த நாடு (LDC) அல்ல என்ற வகையில் சலுகை அடிப்படையில் வெளிநாட்டு நிதி உதவிகள் பெற்றுக் கொள்ளும் வசதிவாய்ப்பு கிடையா…
-
- 0 replies
- 1.7k views
-
-
உதுகள் ஒரு புறம் கிடக்க ...... கம்போடியா அன்று கம்பூச்சியா என்றழைக்கப்பட்ட நாட்டில் 70களில் சீன ஆதரவுடன் பொல்பொட் எனும் இயக்கம் போராட்டத்தை ஆரம்பித்தது. அது நாட்டை கைப்பற்றி எல்லாம் பிழையாகிப் போய்இ இறுதியில் உள்ளுக்குள்இ வெளியில் என்று தொடங்கி வியட்னாமும் உள்ளட்டு முடிக்கபட்டது!! ஏறக்குறைய பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்!! சன இறப்பிற்கு சீனாஇ வியட்னாம்இ அமெரிக்கா ....... உட்பட பொல்பொட்டும் காரணமாக இருந்தது!!! ....... இப்போ எல்லா சாவுகளையும் பொல்பொட்டினது தலையில் உலகம் போட்டது மட்டுமல்லாதுஇ அங்குள்ள சந்ததியினரும் பொல்பொட்டையே வெறுக்க வேண்டிய சூழ்நிலை!!! உலகில் உள்ள பல அடக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்புகள் சிறிய இராணுவ அமைப்பையும்இ பலமான அரசியல் அமைப்பையும் கொண்ட…
-
- 7 replies
- 1.7k views
-
-
இன்று மாலை 5.30 மணியளவில் கோப்பாய் தெற்கு வீரகாளி அம்மன் கோவிலில் நடந்த தீ மிதிப்பு பார்ப்பவர்களைப் பதற வைத்து பக்தி மயமாக நடைபெற்றது. சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் , முதியவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பக்திமயமாக பங்குபற்றிய தீ மிதிப்புக் காட்சி இதோ thx http://newjaffna.com/
-
- 12 replies
- 1.7k views
-
-
'நாங்கள் அங்கே வருவோம் என எங்களுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்- எங்களைக் கடுமையாகத் தண்டிப்பதற்காக- செய்து முடித்தார்கள்" இவ்வாறு முகமாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சமர் தொடர்பாக யாழ். குடாநாட்டிலுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். முகமாலையில் வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக புலிகளின் நிலைகளுக்குள் நுழைந்த படையினருக்கு ஏற்பட்ட கதி சிங்கள ஆட்சித் தலைவரை சினமடைய வைத்திருக்கிறது. இராணுவ ஆய்வாளர்களை அவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகக் கொண்டிருந்த நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யத்து}ண்டியிருக்கிறது. அதிலும் சிறிலங்கா இராணுவம் கைக்கொள்ளும் இராணுவ உத்திகளை மாத்திரமல்ல. அடிப்படைத் தந்திரோபாயம் சரியானது தானா? அவ்வாறானதொரு தந்திரோபாயம் அவர்களிடம் இருக்கிறதா?…
-
- 1 reply
- 1.7k views
-
-
இக்பால் அத்தாசிடம் சிறீலங்கா அரசு மன்னிப்புக் கோரியுள்ளது சன்டே ரைம்ஸ் வாராந்தப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளரும், ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் “ஒரு துரோகி” எனக் கூறியதற்கு சிறீலங்கா அரசு தற்பொழுது கவலை தெரிவித்திருப்பதுடன், மன்னிப்பும் கோரியுள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, அத்தாஸை துரோகி என அரச தரப்பில் கூறியது தனக்குத் தெரியாது என கூறியிருக்கின்றார். இருப்பினும், அரச ஊடகங்கள் அத்தாஸை துரோகி என வர்ணித்திருந்தால், அதற்கு அரசு தற்பொழுது மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சும், படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார போன்றவர்களும் இக்பால் அத்தாஸ் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதாக…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஜே.வி.பி.யின் வேண்டுகோளுக்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சி, இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைத்த இணைப்பாட்சி நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
தடுமாறும் தமிழக அரசியல் தலைமை -எம்.காசிநாதன்- விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு கவிதை வடிவில் `இரங்கல் பா' வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் ராஜீவ் கொலை விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஒரு முதல்வர், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவருக்கு இரங்கல் கவிதை இயற்றுவது அரசியல் சட்ட விரோதம் என்று பரபரப்பு அறிக்கையைக் கொடுத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் முதல்வர் கருணா நிதியோ, `என் உடம்பில் தமிழ் இரத்தம் ஓடுகிறது. அதனால் இரங்கல் கவிதை கொடுத்தேன்' என்று பதிலடி கொடுத்தார். மீண்டும் அதையும் காட்டமாக விமர்சித்துள்ள ஜெயலலிதா, `என் உடம்பில் ஓடுவதும் தமிழ் இரத்தமே' என்ற ரீதியில் அறிக்கை கொடுத்து, `…
-
- 1 reply
- 1.7k views
-
-
அன்று எம்.ஜி.ஆர்... இன்று கலைஞர்! இது வரை வெளி உலகத்தை எட்டிப் பார்க்காத ஒரு செய்தி உண்டு. ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அழைப்பதில் வெற்றி பெற்ற ஜெயவர்தனே, அந்த ராணுவம் தமது சுட்டுவிரல் கட்டளைக்கு அடி பணிந்து செயல்படவேண்டும் என்றார். அதனையும் அன்றைய சூழ்நிலையில் இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஈழப் போராளிகளின் கடல் பயணங்களைக் கட்டுப்படுத்த இந்திய_இலங்கை கடற்படையினர் கூட்டாக ரோந்து போக வேண்டும் என்றார். அதனையும் ராஜிவ் காந்தி ஏற்கும் நிலையில் இருந்தார். உடன்பாடு தயார். கையெழுத்தாகும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அன்றைய முதல்வர் அமரர் எம்.ஜி.ஆருக்குத் தகவல் தெரிந்தது. அவர் மின்னல் வேகத்தில் தலையிட்டார். கூட்டு ரோந்து என்ற உடன்பாடு புதைகுழிக்குப் போனது. கூட…
-
- 2 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போரைதீவு பிரதேசத்தில் 12 வயதான இரண்டு பாடசாலை சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை களுவாஞ்சிகுடி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். பாடசாலை மாணவிகளான இச் சிறுமிகளை வேறு வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இச் சிறுமிகள் மருத்துவப் பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
- 0 replies
- 1.7k views
-
-
.இந்த ஊழல்கள் விசாரணைக் குழுவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளன - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட குழுவினர் முன்னைய ஆட்சிகாலத்தில் அந்த விமானச்சேவை தொடர்பாக இடம்பெற்ற பல மில்லியன் டொலர் ஊழல்கள் குறித்து கண்டுபிடித்துள்ளனர். இந்த ஊழல்கள் அந்த குழுவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. விமானத்துடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் பொறுப்பை யாருக்கு வழங்குவது போன்ற விடயங்களில் ஆரம்பித்து ஊழல் சகல விடயங்களிலும் இடம்பெற்றுள்ளது.தகுதியற்ற பணியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இது தவிர பாதுகாப்பு நடைமுறைகளில் பாரிய மீறல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட விசாரணைகளை மேற்கொண்ட மூத்த சட்டத்தரணி ஜே.சி வெலியமுன தலைமையிலான குழு…
-
- 7 replies
- 1.7k views
-
-
அனுரதாபுரம் மகாவிலாச்சிய என்ற கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் நான்கு பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கையில் உடனடியாக அவசரமாக கால் பதிக்கும் இந்தியாவா? தமிழ் நாட்டு அரசியல் மாற்றத்தினால் அதிர்ந்துபோன மத்திய அரசா? இன்று ENDLF னால் ஆரம்பிக்க பட்ட சென்னைமுதல் டெல்கி வரையிலான நடைபயணமானது மிகவும் பிரசித்தி பெற்ற கோரிக்கையுன் திட்டமிட்டு ஆரம்பிக்க பட்டுள்ளது.இதில் இரண்டு கோரிக்கை அதில் ஒன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் அப்படியே நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்பதுதான்.இவ் ஒப்பந்தம் இலங்கையில் காலாவதியாக்கப்பட்டாலும் இரு நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளபட்டதானபடியால் சர்வதேச நீதிமன்றில் வாதிட்டால் இலங்கை அரசு இதை அமுல்படுத்தியாக வேண்டும்.அல்லது உலக நாடுகளின் பல்வேறு நிந்தனைகளை சந்திக்க வேண்டி வரும்.இம்முறை இந்தியாவின் காய் நகர்த்தலானது மிகவும் திட்டமிடப்பட்டு…
-
- 4 replies
- 1.7k views
-
-
தென்மராட்சியில் இராணுவ நிலைகளிலிருந்து பாதுகாப்பாக இடம்பெயர மக்களுக்கு புலிகள் வேண்டுகோள் யாழ். முகமாலையில் சிறிலங்கா இராணுவம் தாக்குதல்களுடன் முன்நகர்வுகளை மேற்கொண்டுள்ள நிலையில் தென்மராட்சி பிரதேசத்தில் இராணுவ முகாம்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமான அறிவித்தலை மக்களுக்கு விடுத்துள்ளனர். கிளாலி புலோப்பளை மந்துவில் எழுதுமட்டுவாள் வரணி கச்சாய்இ மீசாலைஇ கொடிகாமம் உட்டபட்ட தென்மராட்சி மக்களை இராணுவ நிலைகளுக்கு அண்மைணயில் இருக்காது பாதுகாப்பான இடங்களுக்கு அதாவது இராணுவ முகாம்களிலிருந்து 1 கிலோ மீற்றர் தொலைவுக்கு இடம்பெயருமாறு மக்களுக்கு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். …
-
- 4 replies
- 1.7k views
-
-
இனி ஒருபோதும் யுத்தம் ஏற்படப்போவதில்லை என தான் நம்புவதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்தும் இராணுவத்தினர் வடக்கில் நிலைத்திருப்பது பொதுமக்களின் நன்மைக்காகவென்றும்,அவர்களின் நன்மைக்காக இராணுவம் முழுமூச்சுடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே கட்டளைத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் வடக்கில் நிகழும் அனர்த்த நிலைமைகள், வேறு அசம்பாவிதங்களின் போது இராணுவத்தினர் மக்களுடன் இணைந்து சேவையாற்றுகின்றனர். சாதாரண பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளையும் அருகில் இருக்கும் படை முகாம்களில் முன்வைத்தால் தீர்வ…
-
- 6 replies
- 1.7k views
-