Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அன்று எம்.ஜி.ஆர்... இன்று கலைஞர்! இது வரை வெளி உலகத்தை எட்டிப் பார்க்காத ஒரு செய்தி உண்டு. ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அழைப்பதில் வெற்றி பெற்ற ஜெயவர்தனே, அந்த ராணுவம் தமது சுட்டுவிரல் கட்டளைக்கு அடி பணிந்து செயல்படவேண்டும் என்றார். அதனையும் அன்றைய சூழ்நிலையில் இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஈழப் போராளிகளின் கடல் பயணங்களைக் கட்டுப்படுத்த இந்திய_இலங்கை கடற்படையினர் கூட்டாக ரோந்து போக வேண்டும் என்றார். அதனையும் ராஜிவ் காந்தி ஏற்கும் நிலையில் இருந்தார். உடன்பாடு தயார். கையெழுத்தாகும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அன்றைய முதல்வர் அமரர் எம்.ஜி.ஆருக்குத் தகவல் தெரிந்தது. அவர் மின்னல் வேகத்தில் தலையிட்டார். கூட்டு ரோந்து என்ற உடன்பாடு புதைகுழிக்குப் போனது. கூட…

  2. தமிழ் தேசிய திருநாளான பொங்கல் பண்டிகை சுறவம் ( தை ) 1 தமிழ்ப்புத்தாண்டாக தற்போது தி.பி.2040ம் ஆண்டின் தமிழர்கள் முன்னெடுக்கின்றனர். அதேநேரத்தில் நம் தமிழினம் ஈழத்தில் சாவின் உச்ச நிலையில் அல்லல் பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழர்களாகிய நாம் இப்பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட இயலாது. நம்முடைய பாரம்பரிய தேசிய திருநாளை இவ்வாண்டு தி.பி 2040 ஐ தமிழீழ விடுதலை பொங்கலாக முன்னெடுப்பது என புரட்சிகர இளைஞர் முன்னணி , புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி , புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் அழைப்புவிடுத்தன. தமிழீழ விடுதலை பொங்களில் ஈழ விடுதலை எதிரிகளான இராஜபக்சே , சரத்பொன்சேகா, மன்மோகன் சிங் , சோனியா காந்தி , காங்கிரஸ் , ஜெயலலிதா,…

    • 0 replies
    • 1.7k views
  3. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போரைதீவு பிரதேசத்தில் 12 வயதான இரண்டு பாடசாலை சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை களுவாஞ்சிகுடி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். பாடசாலை மாணவிகளான இச் சிறுமிகளை வேறு வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இச் சிறுமிகள் மருத்துவப் பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • 0 replies
    • 1.7k views
  4. இலங்கையில் உடனடியாக அவசரமாக கால் பதிக்கும் இந்தியாவா? தமிழ் நாட்டு அரசியல் மாற்றத்தினால் அதிர்ந்துபோன மத்திய அரசா? இன்று ENDLF னால் ஆரம்பிக்க பட்ட சென்னைமுதல் டெல்கி வரையிலான நடைபயணமானது மிகவும் பிரசித்தி பெற்ற கோரிக்கையுன் திட்டமிட்டு ஆரம்பிக்க பட்டுள்ளது.இதில் இரண்டு கோரிக்கை அதில் ஒன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் அப்படியே நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்பதுதான்.இவ் ஒப்பந்தம் இலங்கையில் காலாவதியாக்கப்பட்டாலும் இரு நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளபட்டதானபடியால் சர்வதேச நீதிமன்றில் வாதிட்டால் இலங்கை அரசு இதை அமுல்படுத்தியாக வேண்டும்.அல்லது உலக நாடுகளின் பல்வேறு நிந்தனைகளை சந்திக்க வேண்டி வரும்.இம்முறை இந்தியாவின் காய் நகர்த்தலானது மிகவும் திட்டமிடப்பட்டு…

    • 4 replies
    • 1.7k views
  5. சோனியாவிற்கெதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தடை பலர் முன்கூட்டியே கைது தமிழகம் வருகை தரும் சோனியாவிற்கு நாளை (06.05.2009) கறுப்புக்கொடி காட்டப்படும் என்று பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார். இதற்கு காவல்துறை தடைவிதித்துள்ளது. முன்கூட்டியே பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராசேந்திரன் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நாளை மாலை 4 மணி அளவில் சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும் நேற்று சிறையிலிருந்து விடுதலை ஆன பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி சோனியாவிற்கு தமிழகத்தில் எதிர்ப்பு காட்டப்படும் என்று கூறியிருந்தார். இதனால் முன்னெச்சரிக்கை …

    • 3 replies
    • 1.7k views
  6. சிறீலங்காப் படையினரால் பிரஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் கைது சிறீலங்காப் படையினரால் பிரஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கமப் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றைப் படம் பிடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  7. குழந்தைகள் எல்லோரும் வெள்ளையுள்ளத்துடனேயே பிறக்கின்றார்கள். பின் அவர்களது வாழ்நிலையை மாற்றி விடுவதில், சூழலுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு செவ்வியில், தமிழர்களுக்காகப் போராட வேண்டுமெனும் எண்ணம் தோன்ற, தனது நான்காவது வயதில் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரமும் ஒரு காரணம் என்று சொன்னார். இளவயதுகளில் மனதில் பதிந்து விடும் நினைவுகள் எளிதில் மறைந்துவிடுவதோ, மறக்கப்படமுடிவதோ இல்லை. தற்போது ஈழமண்ணில் நிகழ்ந்துவரும் இனப்படுகொலையைச் சர்வதேசங்கள் எவ்விதம் கணிக்கின்றதோ தெரியாது ஆனால் ஈழத்தின் இளைய சமூகம் புலத்திலும் புலத்திற்கு வெளியிலும் சிறிலங்காவின் இனப்படுகொலையாகவே உள்வாங்கி…

    • 0 replies
    • 1.7k views
  8. Posted on : 2007-08-06 சர்வதேசக் கருத்து நிலைப்பாடு கொழும்புக்கு எதிராகத் திரும்புகிறது இராணுவ நடவடிக்கைப் போக்கில் - யுத்த முனைப்பில் - தீவிரமாக இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச அழுத்தம் கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிறாக இறுகி வருவதை அறிய முடிகின்றது. வரும் வாரங்களிலும் மாதங்களிலும் அது இன்னும் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் அந்தப் புறநிலை யதார்த்தத்தை இலங்கை அரசுத் தலைமை புரிந்து கொண்டிருப்பதாக - உணர்ந்துகொண்டிருப்பதாக - தெரியவில்லை. இலங்கையில் சீர்குலைந்துபோயுள்ள மனித உரிமைகள் விவகாரத்தை அடிப்படையாகச் சுட்டிக்காட்டி, இலங்கைக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் முடக்குவது குறித்து அமெரிக்க செனட்சபை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. 2…

    • 1 reply
    • 1.7k views
  9. மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி மூன்று பிள்ளைகளின் தந்தையான அயலவரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை மாலை மேற்படி சிறுமியின் தந்தையினது பலசரக்குக் கடைக்கு சென்றுள்ள சந்தேக நபர் மழை பெய்வதால் குடையொன்றை கேட்டுள்ளார். இதன்போது அந்தநபருக்கு குடையொன்றை கொடுத்துள்ள சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியையும் கூடவே அனுப்பியதுடன் சந்தேக நபரின் சகோதரியின் வீட்டில் அவரை விட்டுவிட்டு குடையை எடுத்து வருமாறு சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு இந்நபருடன் சென்ற சிறுமி நெடுநேரம் ஆகியும் வீடு வந்து சேராததால் சிறுமியின் குடும்பத்தினரும், அயலவர்களும் சிறுமியை தேடியுள்ளனர். இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கும் அறிவி…

  10. இலங்கையில் மனித உரிமை மீறலில் ஈடுபடும் அமெரிக்க பிரஜை மீது அமெரிக்க பொலிசாருக்கு தொடர்ச்சியாக முறையிட முடியும். - இதனால் பல சட்ட சிக்கலை மகிந்தவின் சகோதாரர்களுக்கு ஏற்படுத்த முடியும். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 12 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ அமெரிக்காவில் கைதிகளை சித்திரவதை செய்தமை பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியமை போன்றவற்றிற்கு எதிராக பலர் அமெரிக்க சிப்பாய்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யபட்டு விசாரணைகள் நடைபெறுகின்றது அதே போன்று இலங்கை இராணுவ சிப்பாயாக இருந்து பின்னர் அமெரிக்காவில் அகதியாகி தற்போது அமெரிக்க பிரஜையாக உள்ளவரும் இலங்கை முப்படைகளின் அமைச்சு செயலாளராக உள்ள கோதபாய றஜபக்ச மீது ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கோதபாய ராஜப…

  11. நாட்டை அபிவிருத்தியை நோக்கிச் செலுத்தக் கூடிய நடைமுறைக்குச் சாத்தியமான செயற்திட்டம் தன்னிடம் உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பலந்தோட்டை பிரதேசத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். தான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஆற்றிய உரையில் கூறியது போன்றே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய, நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூடிய, அபிவிருத்தியைத் துரிதப்படுத்தக் கூடிய செயற்பாட்டுத் திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/126225

    • 11 replies
    • 1.7k views
  12. தடுமாறும் தமிழக அரசியல் தலைமை -எம்.காசிநாதன்- விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு கவிதை வடிவில் `இரங்கல் பா' வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் ராஜீவ் கொலை விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஒரு முதல்வர், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவருக்கு இரங்கல் கவிதை இயற்றுவது அரசியல் சட்ட விரோதம் என்று பரபரப்பு அறிக்கையைக் கொடுத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் முதல்வர் கருணா நிதியோ, `என் உடம்பில் தமிழ் இரத்தம் ஓடுகிறது. அதனால் இரங்கல் கவிதை கொடுத்தேன்' என்று பதிலடி கொடுத்தார். மீண்டும் அதையும் காட்டமாக விமர்சித்துள்ள ஜெயலலிதா, `என் உடம்பில் ஓடுவதும் தமிழ் இரத்தமே' என்ற ரீதியில் அறிக்கை கொடுத்து, `…

  13. செப்டம்பர் 13,2008, ராமேஸ்வரம்: அரசின் அனுமதி பெறாமல் மண்டபத்திலிருந்து அகதிகளை இலங்கைக்கு ஏற்றிச்சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததால், இரண்டு குழந்தைகள், நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் கடலில் மூழ்கி பலியாயினர். சேலம், பழநி, திருவண்ணாமலை, கோவை, மானாமதுரை முகாம்களில் இருந்த ஐந்து பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 13 அகதிகள் செப்.,11 ம் தேதி காலை மண்டபம் வந்தனர். அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்வதற்காக மண்டபம் அண்ணாநகரைச் சேர்ந்த ஏஜென்ட் முருகனை சந்தித்தனர். இவர்களிடம் தலா ஆறாயிரம் ரூபாய் கட்டணமாகப் பெற்றுக்கொண்ட முருகன், மண்டபம் தோனித்துறை கடற்கரையிலிருந்து, இரவு 9 மணிக்கு ஒரு நாட்டுப்படகில் 13 பேரையும் இலங்கைக்கு ஏற்றிச்சென்றார். இரவு முழுவதும் வழி தெரியாமல் நடுக்கடலில்…

  14. இலங்கையில் தமிழீழ தனி மாநில அரசு ஏற்படுவதற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஜெயலிலிதா தலைமையிலான அ.தி.மு.க அறிவித்துள்ளது. நேற்று இரவு வெளியிட்பட்ட அந்த கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வருமாறு தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும் எனினும் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்க மறுத்தால் அங்கு தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை தமது கட்சி முன்னெடுக்கும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்தியாவில் ஆரம்பித்துள்ள தேர்தல்களில் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியை தீர்மானிக்கும் களமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழக மக்கள் தனித் தமிழீழம் அமைவத…

    • 15 replies
    • 1.7k views
  15. வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  16. வட போர்முனையில் இழப்புக்கள் ஏற்பட்டாலும் ஆண்டு இறுதிக்குள் வன்னியைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல "புதிய" கெடு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  17. சர்வதேசம் இலங்கையை மறந்துவிடும் அபாயம்' [21 - July - 2007] ஏ.ரஜீவன், இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான பொது இணக்கப்பாட்டை எட்டாவிட்டால் வெகுவிரைவில் சர்வதேச சமூகத்தால் நாடு மறக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளதாக தபால் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார். கொழும்பில் சுதந்திரசதுக்கத்தில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் மோதல் போக்கு தென்பட்டதாகவும் நாட்டின் தலைவர் ஒருவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனங்கள், தொழிற்துறையின் சங்கம், கொழும்பு ஜெய் ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இத…

  18. இனவெறிப்படையின் கொட்டத்தை அடக்கப் புயலாகப் புறப்படுங்கள் -மட்டு.மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை- Sunday, January 08 - 06:29:45 (நமது நிருபர்) உங்களது கைகளுக்குள் கை;குண்டையோ அல்லது துப்பாக்கி யையோ திணித்து விட்டு புலியெனக் கூற முற்படும் சிங்கள நயவஞ்சக இனவெறிப்படைகளின் கொட்டத்தை அடக்க புயலாகப் புறப்படுங்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டப் பொங்கி எழும் மக்கள் படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் இளைஞர்களே! யுவதிகளே!! சற்றுச் சிந்தியுங்கள்!!! என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டு ள்ள அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது:- அண்மைக் காலமாக தமிழர்கள் மீதான தாக்குதலையும், படுகொலையையும் சிங்கள இனவெறிப் படைகள் தமிழர் தாயக மெங்கும் தி…

    • 4 replies
    • 1.7k views
  19. தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்து கருத்து தெரிவிப்பது குற்றச்செயல் அல்ல பழ. நெடுமாறன் 1/31/2008 6:47:16 PM வீரகேசரி இணையம் - தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவிப்பது குற்றச்செயல் அல்ல என உச்ச நீதிமன்றமே தெளிவாகக் கூறியுள்ளது என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது குற்றச்செயல் அல்ல. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியதற்காக ஜெயலலிதா அரசால் கைதுசெய்யப்பட்டார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை சென்னை உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் நிராகரித்து விட்டன. விடுதலைப் புலிகள் போன்ற த…

  20. போர் ஒத்திகைகளும் சிலாவத்துறை சமரும் சி.இதயச்சந்திரன்- யாழ். குடாவின் வடமுனை கடலோர நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் நீண்ட தூர எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. மறுபடியும் காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி மீது புலிகளின் தூரப் பார்வை பதிந்துள்ள நிலையில் வடபோர்முனை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈழப் போரின் முடிவுரை வன்னியில் எழுதப்படுமென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அநுராதபுரத்தில் முழங்கியதால் அடுத்த நிகழ்விற்கான அதிர்வுகள் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/10.htm

    • 4 replies
    • 1.7k views
  21. தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வ…

    • 5 replies
    • 1.7k views
  22. 'இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின் தொடர்கின்றது': சிறீபதி சூரியாராச்சி "கடந்த சில நாட்களாக இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின்தொடர்கிறது, எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது: "மங்கள சமரவீரவையும் என்னையும் அமைச்சர் பதவிகளில் இருந்து வெளியேற்றிய பின்னர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய எமது பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டிருந்தன. எமது உயிர்களுக்கு விடுதலைப் புலிகளால் மட்டுமல்லாது வேறு சிலராலும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நோக்குடன் தான் இவை செய்யப்பட்டுள்ளன. ந…

  23. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அரைவாசி உயிர்பெற்ற புலிப் பூச்சாண்டி, ஆகஸ்ட் 17ம் திகதியுடன் முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை தேர்தல் முடிவுகளுடன் புலனாகின்றது. குறிப்பாக யுத்த வெற்றியின் கதாநாயகர்களாக கருதப்பட்ட மகிந்தவின் பிரதமர் கனவும், பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை கனவும் முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை சிறுபான்மை மக்களால் விரட்டியடிக்கப்பட்ட இனவாத அரசியல், பொதுத்தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களாலே விரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இனி, இலங்கையில் நடைபெறப் போகின்ற எந்தவொரு தேர்தலிலும், புலிப் பூச்சாண்டிக்கு இடமில்லை என்பது உறுதி. குறிப்பாக இத்தேர்தலில் பல சந்தர்ப்பங்களில் புலிப் பூச்சாண்டி …

  24. லண்டனில் அம்சா தனது வேலையை கன கச்சிதமாக செய்கிறார். பாகம் 1 http://www.yarl.com/forum3/index.php?showtopic=64833

  25. தென்மராட்சியின் சாவகச்சேரிப்பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முதல் கப்பம் கோரப்பட்டு காணாமல் போன சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருச்செல்வம் கபில்நாத் எனப்படும் 17 வயதுடைய மாணவனே கடத்தப்பட் நிலையில் சுமார் 15 நாட்களின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு ஒன்றினது உறுப்பினர் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் அவர் தமது அமைப்பில் இல்லை என அந்த அமைப்புக் கூறுகின்றது. யாழ்ப்பாண நகரின் முன்னணி வர்த்தகரின் மகனான இந்த இளைஞன் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வெளியே வந்த சிலரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு தொடர்ச…

    • 24 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.