ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
திருகோணமலை கடற்படைசிப்பாய் பாலியல் துஷ்பிரயோகம்- அவரின் ஆணுறுப்பை அறுத்த பெண்! ) தனது வீட்டில் தனிமையில் இருந்த குடும்பப் பெண்ணொருவரை சிறிலங்கா கடற்படையை சேர்ந்த ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த போது அவரின் ஆணுறுப்பை அப்பெண் அறுத்து எடுத்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் தம்புழுகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆணுறுப்பை பறிகொடுத்த கடற்படை வீரர்(?) திருகோணமலை கடற்படை தளத்தில் பணியாற்றுபவராவார். இரத்தம் ஓட ஓட கந்தளாய் வைத்தியசாலையின் ஏழாவது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 22 வயதான இந்த கடற்படை வீரர் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்றிருந்த போது …
-
- 6 replies
- 1.6k views
-
-
புங்குடுதீவில் 18 வயதான மாணவி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதான சந்தேக நபர்களுக்கு இன்று மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கைதான 9 பேரும் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது அவர்களை எதிர்வரும் 15ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. http://www.pathivu.com/news/40513/57//d,article_full.aspx
-
- 3 replies
- 1.6k views
-
-
நெதர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எவரையும் எதிர்வரும் ஜூலை வரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில்லையென அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. நேற்று இடம்பெற்ற நெதர்லாந்து அரசின் அமைச்சரவை மாநாட்டிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் யுத்த நிலைமைகள் மீண்டும் தோன்றியுள்ளதாலும் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்துள்ளதாலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நெதர்லாந்து அமைச்சரவை தெரிவித்துள்ளது.. முக்கியமாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வன்முறைகளினால் தமிழ் மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி வரை நெதர்லாந்தில் புகலிடம் கோரியுள்ள தம…
-
- 7 replies
- 1.6k views
-
-
மகிந்த பணம் கேட்டு வர உள்ளாரா? அமெரிக்காவில் 2-3 வருடங்களுக்கு முன்னதாக ஏற்பட தொடங்கிய பொருளாதார நெ ருக்கடி உலகில் பாரிய சிக்கலை உருவாக்கியிள்ளது. தமிழின அழிப்பையே தொழிலாகக் கொண்டுள்ள மகிந்தரும் "மாசி 4ம் திகதி" தொடக்கம் புலம் பெயர்ந்த "சிறிலங்கரிடம்" 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கேட்டு வர உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. முதலீடு செய்பவர்களுக்கு "சிங்கள் அரசின் உறிதல் பத்திரம் (பொண்ட்)" வழங்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால் முன்பு வெளினாட்டு வங்கிகள்க்கு விற்ற இனவாத அரசு அவர்கள் சிங்கள அரசின் திருப்பி கட்டக்கூடிய வலு குறைக்கப்பட்ட நிலையில் "தமிழின அழிப்பின் வெற்றியை" மூலதனமாக்கி மக்களை முட்டாளாக்க வெளிக்கிட்டுள்ளது. அ) அன்னிய நாட்டு செலாவாணி: வெளினாட்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
மெல்பேன் நகரில் இன்று பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது இதில் ஏறத்தாள 700-800 வரையிலான மக்கள் பங்கு பற்றினர்.இந்த ஊர்வலத்தை அவுஸ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நகரின் இதயத்தில் இருக்கும் பெடரேசன் சதுக்க்கத்தில் இருந்து விக்ரோரியா பாராளமன்று வரை ஊர்வலமாக சென்ற மக்கள் பாராள மன்றுக்கு முன்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் மீண்டும் பெடரேசன் சதுக்கத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.பின் அங்கு சிறப்பு உரைகள் ஆற்றப்பட்டன. இளையோர் அமைப்பினரின் தொண்டர்களால் சனக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு நகரின் வழமையான செயற்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காமலும் எமது மக்களின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட்டது தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழகத்தில் வெ…
-
- 12 replies
- 1.6k views
-
-
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் ஐ.நா. நிபுணர் குழு விடுத்த அறிக்கையால் இலங்கை அரசு குழம்பிப் போயுள்ளது. குழப்பத் தின் உச்சக்கட்டத்தில் அறிக்கையை வாசிக்கவே நேரமில்லை என்று பாதுபாப்புச் செயலாளர் கூறுமளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டதை உணர முடிகின்றது. வாசிப்பதற்கு நேரம் இல்லை என்பதன் பொருள் திரும்பத்திரும்ப வாசித்தாயிற்று என்பதாகும். திரும்பத்திரும்ப வாசித்ததன் முடிபு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசுக்கு சாதக மானதல்ல என்பதாகும். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் குறை கூறுவதாக அமைந்திருந்தாலும் போரில் தோற்கடிக்கப்பட்ட அமைப்பாக விடுதலைப் புலி கள் இருப்பதனால், அவர்கள் மீதான குற்றச் சாட்டு வலுவிழந்து விடுகின்றது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
தாஜூதீன் படுகொலை விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர் யார்? போட்டுடைத்தார் ராஜித “அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்தார்” என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று கண்டி நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ராஜித சேனாரத்ன, “ரணிலுடனான அசாத்தியமான அரசியலில் பயணம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய புத்தகமொன்றை எழுதப் போவதாக தெ…
-
- 0 replies
- 1.6k views
-
-
இந்த தமிழீழ காவல்துறை அதிகாரி இப்போ எங்கே ..? இறுதி யுத்த தாக்குதல் முள்ளி வாய்க்கள் பகுதியை நெருங்கி கொண்டிருந்த போது விழுப்புண் அடைந்த நிலையில் சிங்கள படைகளினால் தோளில் வைத்து தூக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருக்கும் இந்த தாமிழீழ காவல்துறை கான்ஸ்டபிள் அதிகாரி என சிங்கள படைகளினால் கூறபட்ட இவர் தற்போது எங்கே..? துன்னாலை சவுத் நெல்லியடி 23 வயது குணராசா நர்மலன்,என்ற இந்த நபர் இடம்பெயர்ந்து கிளிநொச்சி ராமநாத புரம் பகுதியில் வகித்து வந்தார் பின்னர் புலிகளின் காவல்துறையில் இணைந்தார் . இவரை கிளிநொச்சி அக்கரையான் பகுதியில் வைத்து சிங்கள படைகளினால் கைது செய்ய பட்டார் . தற்போது இவர் எங்கே ....? இவரை அறிந்தவர்கள் தகவல் தெரிந்தால் தெரிவியுங்கள் 11 Dec 2010…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஞாயிறு 04-11-2007 14:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] இறுதி யுத்தத்தில் பங்கேற்குமாறு பல்கலைக்கழக சமூகம் அழைப்பு தமிழீழ மக்கள் அனைவரையும் இறுதி யுத்தத்தில் பங்கேற்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் இழப்பு தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக்கொடிய வான்வெளித் தாக்குதலை நடத்தி தமிழ்ச்செல்வனின் உயிரைப் பறித்ததன் மூலம் இனிவரும் காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடம் இல்லை என்ற தெளிவான செய்தியை சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்திற்குத் தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் இறுதி யுத்தத்தில் அனைத்து தமிழீழ மக்களும் பங்கேற்று த…
-
- 0 replies
- 1.6k views
-
-
"பிரபாகரன் கொடுத்த வேலையை மங்கள சமரவீர தற்போது சிறப்பாக செய்துவருகின்றார். இதுவரை "தமிழ் நெட்' செய்த பணியை இப்போது மங்கள சமரவீர செய்துவருகின்றா'ரென அமைச்சரும் பாதுகாப்பு பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ""கடந்த காலங்களில் இராணுவத்தினர் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று ஜனாதிபதியின் நடவடிக்கைகளால் இராணுவத்தினரின் நிலை மாற்றியமைக்கப்பட்டது. 500 இராணுவத்தினருக்கு 30 கரும்புலிகள் போதுமானவர்கள் என்று கூறப்பட்ட கருத்துகளும் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. இராணுவத்தினரை கேலி செய்த புலிகள் இன்று அழிக்கப்பட…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு: தமிழக ஊடகம் தகவல் [புதன்கிழமை, 13 யூன் 2007, 14:04 ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தமிழ் ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: இலங்கையில் உள்நாட்டுப் போர் வலுத்து வரும் நிலையில், இலங்கை அரசின் பக்கம் இந்தியா, மெல்ல மெல்ல சாயத் தொடங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிக்கும் என தெரிகிறது. இலங்கையில் அமைதி முயற்சி பலன் தராததால், மீண்டும் உள்நாட்டுப்போர் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் கடும் போர…
-
- 5 replies
- 1.6k views
-
-
நிலக்கீழ் கண்ணியில் படையினரின் வாகனம் வெடித்துச் சிதறியது: 3 படையினர் பலி. மட்டக்களப்பு புலுட்டுமான் பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடியில் சிறீலங்கா படையினரின் வாகனம் ஒன்று சிக்கியதில் சிறீலங்காப் படையினர் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இன்று புலுட்டுமான் பகுதியில் ஊடாகச் வானம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த போதே வாகனம் புதைத்து வைக்கப்பட்ட நிலக்கீழ் கண்ணியில் சிக்கியதிலேயே இப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நிலக்கண்ணில் சிக்கிய வானம் தூக்கி வீசப்பட்டு வெடித்துச் சிதறியுள்ளது. -Pathivu-
-
- 0 replies
- 1.6k views
-
-
பேரணியின் இடைநடுவில் வந்து சிவ பூஜையில் கரடி புகுந்த மாதிரி சிலர் கோஷங்களை முன் வைப்பது ஆபத்தானது!-ரவூப் ஹக்கீம் By கிருசாயிதன் February 8, 2021 (நூறுல் ஹுதா உமர்)காலாகாலமாக எமக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை இந்த பேரணியுடன் முடிச்சிப்போட்டு எங்களின் ஒற்றுமைக்கு கலங்கம் ஏற்படுத்த கூடாது. எமது ஒற்றுமையை குலைத்து விடாது நாங்கள் எல்லோரும் ஒருமித்த வகையில் நியாயமான கோரிக்கைகளை எங்களுக்கிடையே பேசி தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறான போராட்டங்களின் போது அதை மட்டும் மையப்படுத்தி கோஷங்களை எழுப்புவதன் மூலம் எமக்கிடையில் உருவாகி வரும் இணைக்கப்பாடு சிதைந்து விடும். எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு மத்தியிலும் நல்லிணக்…
-
- 8 replies
- 1.6k views
-
-
விபத்தில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் பலி -சொர்ணகுமார் சொரூபன் யாழ். காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், தாவடி காளி கோவிலடியைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது 17) என்ற மாணவனே உயிரிழந்தார். சைக்கிளில்; பாடசாலைக்குச் சென்ற மாணவனை வேகமாக வந்த பட்டா வாகனம் மோதித்தள்ளியது. இதில் மாணவன் பலத்த காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். …
-
- 14 replies
- 1.6k views
-
-
வணக்கம் உறவுகளே, கடந்த 21/06/2008 சனி, 22/06/2008 ஞாயிறு தினங்களில் புறூஸ் பைன் எனும் அமரிக்க சட்டத்தரணி, டொரொன்டோ வந்திருந்தார், இவர் நீதிக்கான தமிழ்ர் எனும் அமேரிக்க அமைபிற்கான நிதி திரட்டல், மற்றும் தமிழர்கெதிரான சிரி லங்காவின் மனித உரிமை மீறல் பற்றிய சாட்சியங்களை திரட்டும் முயர்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவர் தனது குறிக்கோளாக 1)அமரிக்கவில் விடுதலைபுலிகளுக்கெதிரான தடை நீக்கம் 2)தமிழீழம் பிரிந்துசெல்வதற்கான வாகெடுப்பிர்கு ஐநா வாக்கெடுப்பை நடாத்தல் 3)மகிந்த சகோதரர்க்கெதிரான மனித உரிமை மீறல் வழகுதொடர்தல். இவருக்கு ஆதரவாக கனேடிய மாணவர் அமைப்புக்கள் சில முன்வந்துள்ளன அவை இன்று ஒரு கூட்டம் ஒன்றையும் நடத்துகின்றன விபரங்கள் இந்த இணையதளத்தில் …
-
- 4 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் மன்செஸ்ரரில் 2009, 2010 காலப்பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனைக்கு வந்தபோது அவர்களை பாலியல் முறைகேடு செய்துள்ளார் ஓர் சிங்கள வைத்தியர். டாக்டர் பிரியந்த பெரேரா என்பவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டார். எனினும் இவர் தான் சுற்றவாளி எனக்கூறி வாதிட்டார். ஆனால் இந்த டாக்டரை விசாரணை செய்த பிரிட்டனின் மருத்துவ கவுன்சில் இவரது நடவடிக்கை காரணமாக பணி இடை நீக்கம் செய்துள்ளது. . மகப்பேற்று மருத்துவரான இவர் இளம் கர்ப்பிணி தாய்மார் பரிசோதனைக்காக சென்றவேளை அவர்களை பரிசோதனை செய்வதாக கூறி வித்தியாசமாக அணுகியதாகவும் கூடவே பாலியல் கருத்துப்பட பேசியதாகவும் முறைப்பாடு செய்தனர் கர்ப்பிணி தாய்மார்கள். ஆகவே இவர் தொழில்சார் விதிமுறைகளை மீறியதாகவும், தொடர்ந்தும் பணிகளை செய…
-
- 13 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு உலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி தின கொண்டாட்டத்தில் இலங்கை வாழ் இந்துக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “இந்து சமய பஞ்சாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமயக் கிரியைகள் மூலம் துர்க்குணங்கள் இருந்து விலகி உரிமையை பெற்றுக்கொள்ள முடி…
-
- 16 replies
- 1.6k views
-
-
இன்றைய ஈவினிங் ஸ்டான்டட் (EVENING STANDARD) நாளிதழ்,.. பிரித்தானியாவில் ஈழத் தமிழர்கள் நடத்தும் போராட்டம் அடேல் பாலசிங்கம் அம்மையாரால் தூண்டிவிடப்பட்ட போராட்டம் என வர்ணித்து செய்தி வெளியிட்டுள்ளது. உடல் நலம் குன்றிய நிலையில் உள்ள அடேல் பாலசிங்கம் அம்மையாரை, சிறுவர்களுக்கு சயனைட் வழங்கியவர் என்றும் அவர் தூண்டுதலின் பெயரில் பிரித்தானியாவில் பலபோராட்டங்கள் நடப்பதாகவும் செய்தியை வெளியிட்டுள்ளது ஈவினிங் ஸ்டான்டட்(EVENING STANDARD) நாளிதழ்.எமது விடுதலைப் போராட்டத்தை வெளிநாடுகளில் சீர்குலைக்க, இலங்கை அரசு சில செய்தியாளர்களை விலைக்கு வாங்கி இப்படியான கட்டுரைகளை நாளிதழ்களில் பிரசுரிக்கச் செய்கிறது. இந்த கட்டுரையை எழுதியவர் அமர் சிங் எனும் ஒரு சீக்கியர் ஆவார். பி…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழினத்தின் பேரழிவுக்குக் காரணம் இந்தியாவே – சோவன்ஸ அமரசிங்க சிறிலங்காவில் தமிழ் மக்களிடையே பிரிவினைவாத சிந்தனைகளை விதைத்து தமிழினத்தின் பேரழிவுக்கு இந்தியாவே காரணமாகியுள்ளது. ஆனால் இன்று இந்தியாவை தமிழ் மக்களின் விடுதலை வீரனைப்போல சிறி லங்கா அரசாங்கம் உலகத்திற்குக்காட்ட முனைகின்றது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவைவிட பேருவதி செய்த நாடென்றால் அது பாகிஸ்தான் ஆகும். எனவே சிறி லங்காப் பிரச்சினைகளுக்குரிய தீர்வுத்திட்டம் தொடர்பாக அழுத்தம் கொடுக்க ஏனைய நாடுகளை விட பாகிஸ்தானுக்கே முழு உரிமையும் தகுதியும் உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று புதன…
-
- 8 replies
- 1.6k views
-
-
வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பிபிசிக்கு அளித்த செவ்வி குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் மிகநேர்மையான உண்மை இது என்று அவர் வர்ணித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பாதுகாப்புச்செயலர் கூறியுள்ளது மிகச்சரியான உண்மை. இந்த நாட்டின் இன, மத, மொழி வேறுபாடுகளை வெறுக்கும் மக்கள் இந்த அறிக்கைக்காக அவரைக் கௌரவிக்க வேண்டும். இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முனையும் ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். வடக்கு, கிழக்கு தமிழர்…
-
- 16 replies
- 1.6k views
-
-
மஹிந்த இராஜபக்ஷவிற்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையே நியூயோர்க்கில் மனக்கசப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இதனால் மஹிந்த இராஜபக்ஷ சவேந்திர சில்வாவை மனம் நொந்துபோயுள்ளார்.. இது சவேந்திர சில்வா திட்டமிட்டு செய்தாரா? அல்லது பாலித கேகன்னவும் அமெரிக்காவிற்கான தூதர் ஜாலிய விக்கிரமவும் சேர்ந்து செய்த திருவிளையாடலா என தெரியவில்லை என கொழும்பு செய்திகள் கூறுகின்றன.. மஹிந்த இராஜபக்ஷவிற்கும் சவேந்திர சிலாவவில் நம்பிக்கை இல்லை. இதுபற்றி கோத்தாவிற்கு மஹிந்தர் ஏற்கனவே பலதடவைகள் எச்சரித்துள்ளார். ஆனால் கோத்தா எதற்காக சவேந்திர சில்வாவை தூக்கிப்பிடிக்கின்றார் என தெரியவில்லை என கொழும்பு ஆங்கில இணையம் ஒன்று கூறியுள்ளது.. மஹிந்த உரையின் போது காலியான இருக்கைகள் …
-
- 3 replies
- 1.6k views
-
-
அண்மையில் இனக்கொலை நடந்த நாடு - தில்லி பொதுநலவாய விளையாட்டுப் போட்டித் தொடக்க விழாவில் இலங்கையணிக்குக் கிடைத்த அறிமுகம். கடந்த இரவு புது தில்லியில் 19 ஆம் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகியது. அதில் ஆரம்ப தொடக்க விழா பெரும் எடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. விழாவின் ஒரு கட்டத்தில் இப்போட்டிகளில் பங்குபற்றும் நாட்டணிகளை ஒரு இந்திய அழகி வழிநடத்திச் செல்ல அவரைத் தொடர்ந்து அந்தந்த நாட்டிற்குரிய தேசியக் கொடிகளைக் காவும் வீரருரும் அவருக்குப் பின்னால் அந்தந்த நாட்டு அணி வீரர்களும் அணிவகுத்துச் சென்றார்கள். இங்கிலாந்து, அவுஸ்த்திரேலியா, நைஜீரியா, நியூசிலாந்து என்று அணிகள் அணிவகுத்துச் சென்றபின்னர் இந்திய அணி மண்டபத்தினுள் நுழைய இசையமைப்புகள் வானைக்…
-
- 3 replies
- 1.6k views
-
-
யாழ் குடாநாட்டில் சேவையாற்ற தென்பகுதி சிங்கள வைத்தியர்கள் முன்வந்துள்ளனர். 2/11/2008 3:10:04 PM வீரகேசரி இணையம் - குடாநாட்டு மக்களின் வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தென்பகுதிச் சிங்கள டாக்டர்கள் பதினொரு பேர் மீண்டும் சேவையாற்றுவதற்கு முன்வந்துள்ளனர். இதனால் யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க முடியும் என பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது குடாநாட்டுக்கு வந்துள்ள பதினொரு தென்பகுதி டாக்டர்களில் 04 பேர் மந்திகை ஆஸ்பத்திரிக்கும், 03 பேர் தெல்லிப்பழை ஆஸ்பத்திரிக்கும் இருவர் ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரிக்கும் மற்றும் சங்கானை, கோப்பாய், காரைநகர், நெடுந்தீவு ஆஸ்பத்திரிகளுக்கு…
-
- 7 replies
- 1.6k views
-
-
பீரிஸ் நடத்திய சந்திப்பை புறக்கணித்தாரா சீனத் தூதுவர்? - கொழும்பு விசாரணை ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை சர்வதேச தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் Yang Xiuping கலந்து கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக கொழும்பின் நிலைப்பாடு குறித்து சர்வதேச தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கில் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்த போதிலும், சீனத் தூதுவர் Yang Xiupin…
-
- 2 replies
- 1.6k views
-
-
கோவையில் மூடிக்கிடந்த பல வார்ப்பு தொழிற்சாலைகள் மீண்டும் புத்துணாச்சி பெற்று இரவு பகலாக வேலைகளை ஆரம்பித்துள்ளதையடுத்து அங்கு விடுதலைப்புலிகளுக்கு ஆயுத உற்பத்தி நடைபெறுவதாக சந்தேகமடைந்த பொலிஸார் 200 ம் மேற்பட்ட வார்ப்பு தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் விடுதலைப்புலிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் தமிழகத்திலிருந்து மறைமுகமாக கடத்திச் செல்லப்படுவததாக தழிழக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக அவை கோவையில் தயாரிக்கபடுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், கோவை மாவட்டத்தில் தான் ஏராளமான பவுண்ரிகள் (வார்ப்புத் தொழிற்சாலை) உள்ளன. குறிப்பாக கோவையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பவுண்டரிகள் உள்ளன. இவற்றில் சில தொழிற்சாலைகளில் கொள்ளவனவு கோரல் கொடு…
-
- 1 reply
- 1.6k views
-