Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவில் பிறந்த 21வயதுக்கு மேற்பட்டோருக்கு இலங்கை பிரஜா உரிமை பெற 25000.00 அபராதம் - பலர் தவிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா:- யுத்தத்தினால் இடம்பெயர்ந்து சென்று பின்னர் நாடு திரும்பியுள்ள குடும்பங்களில், இந்தியாவில் பிறந்த 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமை பெறுவதற்கு அபராதமாக 25 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தாம் கிரமமான நிரந்தர வருமானத்தி;ற்கு வழியற்ற நி;லையில் இருக்கும்போது, தமது வளர்ந்த பிள்ளைகளுக்குப் பிரஜா உரிமை பெறுவதற்கான அபராதத்தைச் செலுத்த முடியாதிருப்பதாக நாடு திரும்பியுள்ள குடும்பங்கள் கூறுகின்றன. அத்துடன் கடவுச்சீட்டு பெறுவதற்கு இந்தியாவி…

    • 0 replies
    • 440 views
  2. இரு அசுரர்களில் எந்த அசுரன், அசுரத்தனம் குறைந்தவன் என்று தேடவேண்டிய நிலை; கம்பன் விழாவில் அமைச்சர் மனோ கணேசன் நமது நிருபர் தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசி யல் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், நாடு, நகர, கிராம அபிவிருத்தி ஆகிய மூன்று துறைகளிலும் இதுவரையில் அரைக்கிணற்றைக்கூட எமது அரசாங் கம் தாண்டவில்லை என்பது அப்பட்டமான உண்மை என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு கம்பன் கழக விழாவில் நேற்று மாலை கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு உரையாற்றிய…

    • 1 reply
    • 293 views
  3. காபன் வெளியேற்றத்தை குறைக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை COP- 27 மாநாட்டில் பங்குபற்றவதற்காக எகிப்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் கொரிய ஜனாதிபதியின் காலநிலை மற்றும் சுற்றாடல் விவகாரங்களுக்கான விசேட தூதுவரும் அந்நாட்டுத் தூதுக் குழுவின் தலைவியுமான நா குயூங் வொனுக்கும் (Na Kyung-Won) இடையிலான சந்திப்பு நேற்று (07) பிற்பகல் நடைபெற்றது. காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த நா குயூங் வொன், நாட்டில் காபன் வெளியேற்ற வீதம் ஏற்கனவே குறைவாக இருக்கின்றபோதிலும் அதன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காகவும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். …

    • 0 replies
    • 225 views
  4. வரலாற்றில் இருந்து பாடம் படியாதோருக்கு அதே பாடத்தையே வரலாறு திரும்பத் திரும்பப் புகட்டும் இத்தீவின் சுதந்திரத்தை பிரித்தானிய காலனிய ஆட்சியாளரிடம் ஒரே குரலில் வலியுறுத்திக்கோரும் பொருட்டாக முன்வைக்கப்பட்ட தீர்மான வரைபில்தானே ஆட்புல பிரதிநிதித்துவமும் வலியுறுத்தப்பட்டிருந்தமையால் யாழ்ப்பாண மகாசபையின் தலைவர்களான சபாபதியும் கனகசபையும் ஆட்சேபித்து அதில் கையெழுத்திட மறுத்திருந்தார்கள். ஒற்றையாட்சி நிலவும் நிலையில் ஆட்புலப் பிரதிநிதித்துவம் தமிழ் மக்களை எண்ணிக்கையில் சிறுபான்மையினராக மாற்றிவிடும் என்பதே அவர்களது ஆட்சேபனைக்குக் காரணமாக இருந்திருத்தல் வேண்டும். தீவிலுள்ள அனைத்து அமைப்புகளையும் இணைத்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவ முற்பட்டிருந்த சிங்களத் தலைவர்க…

    • 0 replies
    • 765 views
  5. எமது இனத்தை தொடர்ச்சியாக கையேந்தும் இனமாகவைத்திருப்பது தான் மத்திய அரசினதும், அவர்களுக்கு சேவை புரியும் கும்பலினதும் வேலைத்திட்டமாக இருக்கிறது என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். கல்விரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஒரு இனம் பலவீனமாக இருக்கும் போது அந்த இனம் தான் விரும்பிய அரசியல் இலக்கை அடைவது மிகவும் கடினமானதாகும். தமிழினத்தை கல்வி, பொருளாதார ரீதியாக தொடர்ச்சியான முறையில் பலவீனப்படுத்துவதற்கு ஆள்கின்ற மத்திய அரசாங்கம், மக்களுடைய வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பிடவும், கல்வி ரீதியான உயர்வை எய்திடவும் முயற்சி எடுக்கின்ற மாகாண அரசாங்கத்தை செயற்படவிடாமல் திட்டமிட்ட வகையில் முடக்கி வருகின்றது. வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் அளவெட்டி பிரதேசத்த…

  6. பச்சிலைப்பள்ளி பிரதேச சபை கூட்டமைப்பிடம்!! கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வசமாகியுள்ளது. பச்சிலைப் பள்ளி பிரதேச சபை மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி சபை ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் முதலாவது சபை அமர்வு நடைபெற்றது. அதில் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈ.பி.டி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சி உறுப்பினர்களும் தவிசாளர் தெரிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத காரணத்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சுப்பிரமணியம் சுரேன் பச்சிலைப் பள்ளி பிரதேச சபை…

  7. வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் கிளைமோர் மீட்பு! கொழும்பு வெள்ளவத்தையில் சாளிமன்ட் லேன் கடற்கரையோரம் கடற்கரை வீதியக்கு அண்மையில் கிளைமோர் குண்டு ஒன்று காலை 10 மணியளவில் பொலிஸ் குண்டு செயலிழக்கும் பரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 15 கிலோ கிராம் எடையுள்ள இந்த கிளைமோர் குண்டு, மக்கள் வழங்கிய தகவலை அடிப்படையாகக்கொண்டே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  8. மட்டு. அம்பாறை மாவட்டத்தில் நாளை பூரண கர்த்தாலுக்கு அழைப்பு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் நாளை திங்கட்கிழமை பூரண கர்த்தால் அனுஷ்டிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட கல்விச் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் செயற்பாடுகள் மீது அரச பயங்கரவாத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கடந்த 11ம் திகதி கிண்ணையடி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆசிரியர் கதிராமப்போடி சிவஞானச்செல்வம் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மாங்கேணியில் வைத்து மாணவர்கள் இருவர் வெள்ளை வானில் வந்த ஆயுததார…

    • 0 replies
    • 686 views
  9. தமிழ் திங்கள்களை பின்பற்றும் மலையாளிகளும்; சமஸ்கிருத திங்களை பின்பற்றும் தமிழர்களும் நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம், உயிர். குடும்பம், குமுகாயம், ஊர், நகர், நாடு உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது. `நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்’ என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார். நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுது…

  10. விசாரணைகள் முடியும் முன்பே பறிக்கப்பட்ட அமைச்சு மீண்டும் ஒப்படைப்பு : பலிவாங்கப்படலாமென்று அச்சத்தில் அதிபர் ஊவா மாகாணத்தின் தமிழ்க்கல்வி தவிர்ந்த கல்வி அமைச்சின் பொறுப்புக்கள் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் மாகாண கல்வி அமைச்சின் பொறுப்புக்களை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுள்ளார். பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையக விசாரணைகள் மற்றும் ஊவா மாகாண ஆளுனரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை, ஆசிரிய தொழிற்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், பதுளைப் …

  11. பெரும் ஊடகவியலாளர் பரிவாரம் ஒன்றும் அரச செலவில் இம்முறை ஜெனிவாவுக்கு! பேச்சு தொடர்பான பரப்புரையில் அரசுத்தரப்பு முழுக்கவனம் தென்னிலங்கையின் தனியார் ஊடக நிறுவனங்கள் பலவற்றைச் சேர்ந்த செய்தியாளர், படப்பிடிப்பாளர்கள் அடங்கிய பெரும் ஊடகப் பரிவாரம் ஒன்றையும் இம்முறை அரசுத் தரப் பினர் தங்களோடு அரச செலவில் ஜெனி வாவுக்கு அழைத்து வந்திருக்கின்ற னர். அரச ஊடகங்களுக்கு மேலதிகமாக தெற்கின் சிங்கள, ஆங்கிலமொழி ஊட கங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கை யான செய்தியாளர்கள் அடங்கிய அணி ஒன்றை அரசு ஜெனிவாவுக்கு அழைத்து வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச சார்பு ஊடகங்கள் மற்றும் அர சுடன் முரண்படாத சிங்கள, ஆங்கில தனியார் ஊடக நிறுவனங்களைச் சேர்ந் தவர்களே இந்த அணியில் அதிகம் இடம்பெற்றிருக…

  12. மட்டக்களப்பு நாவலடிக் கிராமம் கடல் அரிப்பால் அழிந்துபோகும் அபாயம்! Thursday, January 20, 2011, 14:35 அண்மையில் மட்டக்களப்பில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வெட்டப்பட்ட முகத்துவாரத்தினாலேயே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையினால் நாவலடிக் கிராமம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தாலும் இவ்வாறான ஒரு பாரிய சேதம் இந்த நாவலடிக்குச் செல்லும் பாதைக்கு ஏற்பட்டிருக்கவில்லை அத்துடன் இந்த வெட்டப்பட்ட இடத்தில் கடல் நீர் நிலத்தை பாரியளவு அரித்து நிலத்தை உள்வாங்கி உள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. கடல் அரிப்பை தடுக்க நாடு பூராகவம் ஏன் உலகம் முழுவதும் பாரிய நடைமுறைகளும் சட்டதிட்டங்களு…

  13. ஈழத்தில் போர் இறக்குமதி! -சோலை ஈழப் போராளிகளுடன் பேச்சு வார்த்தை கூடாது. போர் தொடுத்து ஈழத்தை மீட்கவேண்டும் என்பது, சிங்கள இனவாதக் கட்சிகளின் கோரிக்கையாகும். அவர்களுடைய ஆதரவுடன்தான் ராஜபக்சே அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், சிம்மாசனத்தில் அமர்ந்த பின்னர்தான், போர்முனையில் ஈழப் போராளிகளை வெல்லமுடியாது என்பது சிங்கள அரசுக்குப் புரிந்தது. அந்தப் பாடத்தை சந்திரிகா அம்மையாரும் ஏற்கெனவே படித்துவிட்டார். ஈழப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று, சர்வதேச சமூகம் தொடர்ந்து நிர்ப்பந்தம் தருகிறது. பேசித் தீர்த்துக்கொள்க என்று, இந்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ராஜபக்சே அரசு அமைந்த பின்னர், சிங்கள இனவாதிகளின் கட்டளைகளை ஏற்று, ஈழப் ப…

  14. உள்ளூராட்சி தேர்தலில் கலாநிதி விக்கிரமபாகுவுடன் கஜேந்திரன் தலைமையிலான தமிழ்தேசியத்திற்கான மக்கள் முன்னணியும், சிவாஜிலிங்கம் தலைமையிலான கட்சியும் சேர்ந்து போட்டியிடவுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதுதொடர்பாக தமிழ்த்தேசியத்திற்கான முன்னணி எதுவித அறிக்கைகளையும் விடவில்லை. My link

  15. ஜே.வி.பியின் மே தின பேரணியில் சுமந்திரன் - எஸ்.நிதர்ஷன் ஜே.வி.பியின் மே தின பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டுள்ளார். ஜே.வி.பியின் மே தின பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. யாழ்.சென் பொஸ்கோ பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணியின்போது, அப்பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்டார். குறித்த பேரணி யாழ்.நகர் ஊடாக முற்றவெளி பகுதியை சென்றடையவுள்ளது. அங்கு ஜே.வி.பியின் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஜே-வி-பியின்-மே-தின-பேரணியில்-சுமந்திரன்/71-215268

  16. படையினரின் பலத்த பாதுகாப்புடன் கே.பி. நேற்று யாழ்ப்பாணம் வருகை:4 நாடுகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்களுடன் பல இடங்களுக்கு விஜயம் * Monday, January 31, 2011, 4:01 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளரும், தற்பொழுது அரசுடன் சேர்ந்து இயங்குபவருமான கே.பி. எனப்படும் குமரன்பத்மநாதன் நேற்று இராணுவத்தின் பலத்தபாதுகாப்புடன் யாழ்ப்பாணம் வந்தார்.கே.பியுடன் பிரிட்டன்,அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பேர் யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.இவர்கள் நேர்டோ (NERDO) எனப்படும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். நேர்டோ நிறுவனத்தின் இலங்கைக் கிளைச் செயலாளராக கே.பி. செயற்படுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. கே.பி. தலைமையிலான இக்குழுவினர் வெள்ளி…

    • 1 reply
    • 664 views
  17. ஐநா அதிகாரியிடம் அனந்தி நேரடி வாக்கு மூலம் https://www.youtube.com/watch?v=LGBBvUU5J9c#t=99

    • 3 replies
    • 739 views
  18. பொருத்­த­மான நேரத்­தில் சொல்­வேன்- சம்­பந்­த­ரின் வழி­யில் விக்­கி­யும் பதில்!! பொருத்­த­மான நேரத்­தில் சொல்­வேன்- சம்­பந்­த­ரின் வழி­யில் விக்­கி­யும் பதில்!! வடக்கு மாகாண சபைக்­கான தேர்­த­லில் எனது நிலைப்­பாடு என்­ன­வென்று தகுந்த நேரத்­தில் சரி­யான அறிக்கை ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­ப­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்­தில் முள்­ளி­…

  19. சுமந்திரன் உட்பட ஏனைய இலங்கை அரசியல் சக்திகள் சிங்கள அரசுக்கு சமரசம் வீசும் கையோடு தமிழ் நாட்டிற்கு வந்து இங்கு இருப்பவர்களை குழப்பும் வேலையை செய்ய வேண்டாம் என தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் பாரி மைந்தன் தெரிவித்துள்ளார். செல்லும் நாடுகள் எல்லாம் உலகத் தமிழர்களால் துரத்தி அடிக்கப்படும் சுமந்திரன், பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை பெரியார் திடலில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாய் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் தங்களுக்கு எந்த அழைப்பு இல்லை என்கின்றனர். எனவே பொய்யான செய்திகளை பத்திரிகை செய்தியாக கொடுத்து விட்டு அதே நாளில் சென்னையில் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியுள்ளார…

    • 3 replies
    • 444 views
  20. யாழ். கிளைமோர் தாக்குதலில் நான்கு பொதுமக்கள் பலி [புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006, 19:03 ஈழம்] [பூ.சிவமலர்] யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கிளேமார் தாக்குதலில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து பண்ணைப் பாலத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் வெடித்தது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நால்வர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த நால்வரும் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை…

  21. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்த வேளையில் தவறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் அதன் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள தடை தவறானது என்றும் ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளைப் பின்பற்றி வேறு காரணங்களை முன்வைக்காது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்றும் இது நடைமுறை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அத்தீர்ப்பு தெரிவிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பா இல்லையா என்பதை ஆராயாமல் ஏனைய நாடுகளின் முடிவைப் பின்பற்றி ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த முடிவில் சட்டச்சிக்கல்கள் உள்ளதால் மட்டுமே இத்தடை நீக்கத்தை ஐரோப்பிய நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. வெறுமனே சட்டம் …

  22. முன்னாள் சிறிலங்கா தூதுவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளது அமெரிக்க நீதி திணைக்களம் சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, அமெரிக்க நீதித் திணைக்களம் பணச்சலவை குற்றச்சாட்டுகளைச் சுமத்தவுள்ளதாக, அதிகாரபூர்வ வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எவ்பிஐ எனப்படும் சமஷ்டி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது. ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, பணச்சலவை குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கு நீதிபதி ஒருவர் அனுமதி அளித்துள்ளார் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. ஜாலிய விக்ரமசூரிய வொசிங்டனில் சிறிலங…

  23. யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம் By VISHNU 17 JAN, 2023 | 11:02 AM யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை 16 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவை வழங்கியுள்ளது. இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார். https://www.virakesari.lk/arti…

  24. வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 25, 2011 யாழ்ப்பாணம் தொழில் நுட்ப கல்லூரி அதிபர் யோகேஸ்வரனால் யாழ் மாவட்ட சிங்கள தளபதிக்கு கெளரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.யாழ் மாவட்டத்தில் மக்களுக்கு சமூக சேவை, கலாச்சார சேவை, பொருளாதார சேவை வழங்கி வருவதில் ஹதுருசிங்கா முன்னோடியாக செயற்பட்டுள்ளார் என கூறியே இந்த பட்டம் வழங்கபப்ட்டது. அத்துடன் தேச மானிய விருதும் கொழும்பில் வழங்கப்பட்டுள்ளதாம். http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%…

    • 3 replies
    • 1.1k views
  25. Military says Sri Lankan patrol escapes roadside bomb attack A military patrol escaped a roadside bomb attack in northern Sri Lanka, the Defense Ministry said Thursday. The patrol retaliated, killing one rebel. Brig. Prasad Samarasinghe said the attack occurred in Vavuniya on Wednesday night and was launched by the Liberation Tigers of Tamil Eelam, or LTTE. The group is fighting to create a separate homeland for Sri Lanka's 3.1 million Tamils, accusing the majority Sinhalese of discrimination. He said soldiers found the body of a rebel, along with ammunition and two bombs and cord often used to detonate them. In a separate incident in Jaffna P…

    • 0 replies
    • 889 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.