Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் இந்தியா, அணு உலையை அமைக்காது என்று இந்திய-இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது நேற்று இரண்டு நாடுகளுக்கு இடையிலும் அணுசக்தி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன்படி, இலங்கையர்களுக்கு மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளில் அணு தொடர்பான பயிற்சிகளை இந்தியா வழங்கவுள்ளது. இந்த பயிற்சிகள் இந்தியாவில் வைத்தே வழங்கப்படவுள்ளன. எனினும் இதன்போது இந்தியாவின் கூடங்குளம், கல்பாக்கம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளமையை போன்று இலங்கையிலும் அணுஉலைகள் அமைக்கப்படாது என்று இந்தியா, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாடுகளுக்கு இடையிலும் உடன்படிக்கை இல்லாதபோதும் இந்தியா…

  2. உடனடியாக மாகாணசபைதேர்தல்கள்- மகிந்த அறிக்கை மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாய ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூட்டணியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து ஐக்கியதேசிய கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் முடிவிற்கு வந்தது. இதன் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் தோள்களில் சுமத்தப்பட்டது.புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடன் பிரதம மந்திரி பதவியை ஏற்கு…

  3. உயிரை மட்டும் காக்கும் நோக்கோடு சர்வதேசக் கடலில் தவிக்கும் எம் உறவுகளுக்கு உதவுவோம்: [Monday, 2011-07-11 21:12:47] கொடிய சிங்கள அரசின் கோரப்பிடியிலிருந்து தமது உயிரைமட்டும் காக்கும் நோக்கோடு நியூசிலாந்து நோக்கி சர்வதேசக் கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இந்தோனேசியா கடற்படையால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக இந்தோனேசிய கடற்பரப்புக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இந்தோநேசிய அரசினால் சிறீலங்காவிற்கு திருப்பியனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாகவும், அவ்வாறு நடைபெற்றால் தாம் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அக்கப்பலில் உள்ள எம் அன்பு உறவுகளில் ஒருவரான திரு.செல்வக்குமார் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்ப…

  4. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. கடந்த சுதந்திர தின நிகழ்வில் அணி வகுப்பு மரியாதையின் போது ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அது குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குண்டு துளைக்காத விசேட மேலாடையை அணிந்திருந்தாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டாம் இணைப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நாடாளுமன்றத்திற்கு அருகில் கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் போது ஜனாதிபதி உட்பட பிரதம அதிதிகள் மீது தாக்குதல் நடத்த திட…

  5. “ஏழு அல்ல பதினாறே”; கெஹலிய ரம்புக்வெல பாராளுமன்றமானது எதிர்வரும் 7 ஆம் திகதி கூட்டப்படவிருந்த நிலையில் அதுபோலியான பிரசாரம் என அரசாங்க ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய நிலைக்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதியே பராளுமன்ற கூட்டத்தொடரானது கூட்டப்படுமென அரசாங்க ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/43817

  6. தமிழ் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை இவ்வாரம் சந்திக்கும் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள் - இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்படும் 27 AUG, 2023 | 08:50 PM (நா.தனுஜா) பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் இவ்வாரம் நடைபெறவுள்ள சந்திப்பில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் த…

    • 0 replies
    • 251 views
  7. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம். [Friday, 2011-07-15 11:23:02] எதிர்வரும் இருபத்துமூன்றாம் திகதி, வடக்கில் இடம்பெற இருக்கின்ற உள்ளராட்சித் தேர்தலை, சிறீலங்கா அரசு அதிமுக்கியமாகக் கருதி, அதை வெற்றிகொள்ளும் வெறியுடன் முழுவீச்சில் தனது செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. இத்தேர்தலில் கணிசமான வெற்றியைச் சம்பாதித்துக்கொள்வதின் ஊடாக பல விடயங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என, ராஜபக்ச அரசு கருதிச் செயற்படுகின்றது. கடந்த காலங்களில் அதிகம் கவனிக்கப்படாத உள்ள+ராட்சித் தேர்தலை எதிர்கொள்ள, இம்முறை சிறீலங்கா அரசின் அமைச்சுப்பரிவாரங்கள் வடக்கு நோக்கி படையெடுத்துள்ளன. சிறீலங்கா சனாதிபதி ராஜபக்சவும் வடக்கு சென்று ஐந்து நாட்கள் தங்கிநின்று,…

  8. விக்னேஸ்வரன் சுயமாக கட்சியிலிருந்து விலகிவிட்டார் தமிழரசுக் கட்சி அறிவிப்பு Nov 07, 20180 விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளது.விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/விக்னேஸ்வரன்-சுயமாக-கட்ச/

  9. மன்னாரில் படைநகர்வு; முறியடித்தனர் புலிகள் கிளிநொச்சி,மே13 மன்னார் மாவட்டத்தில் விளாத்திக் குளம் பகுதி ஊடாக பரசங்குளம் பகுதியை நோக்கி நேற்றுமுன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் முன்னேறிய படையினரின் நகர்வை முறியடித்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். கடும் ஷெல் தாக்குதலுடன் முன்னே றிய படையினருக்கும் தமது அணியின ருக்கும் இடையில் மோதல் இடம்பெற் றது என்றும் படையினரின் நகர்வு முறியடிக்கப்பட் டது என்றும் விடுதலைப் புலிகள் அறி வித்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து அரச தரப்பில் இருந்து இச்செய்தி எழுதப்படும் வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. உதயன்

  10. கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையின் ஓடுதளம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது : 19 ஜூலை 2011 கிளிநொச்சியில் நாளைய தினம் வர்த்தக நிலையங்களை மூடினால்,மீண்டும் திறக்க சந்தர்ப்பம் வழங்கப்படாது கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையின் ஓடுதளம் கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையின் ஓடுதளம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அதனை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஷர்ச அபேவிக்ரம இன்று திறந்து வைத்தார். இன்று முற்பகல் 11.30 அளவில் வை-12 ரக விமானம் ஒன்று இந்த ஓடுத்தளத்தில் தரையிறக்கப்பட்டது. கிளிநொச்சியின் ஏ9 வீதியில் இருந்து 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விமான ஒடுத்தளம் அமைக்கப்பட்டுள்ளது என இலங்கை விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை கிளிநொச்சியில் நாளைய தினம் வ…

  11. நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் சிறிலங்கா – சீனா கூறுகிறது MAR 05, 2015 | 12:09by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சீன- சிறிலங்கா நட்பின் ஒட்டுமொத்த நலன்களுக்காக, சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள, சீன நிறுவனங்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சீனா தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாகவே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஹுவா சுன்யிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பீஜிங்கில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு குறித்து, சீனாவுக்கு சிறிலங்கா எவ்வாறு விளக்கமளித்துள்ளது, இதற…

    • 3 replies
    • 731 views
  12. November 13, 2018 கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு (11.11.2018) விசுவமடு குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 அகவையுடைய மரிய ஜெபசேன் விஜிதன் என்ற முன்னாள் போராளி திடீர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளார். புன்னை நீராவியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தரான முன்னாள்போராளி மரிய ஜெபசேன் விஜிதன் மூன்று ஆண்டுகள் புனர்வாழ்வு பெற்று நிலையில் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு அவரது வீட்ட…

  13. 16 SEP, 2023 | 08:54 PM ஆர்.ராம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி போன்று வடக்கு, கிழக்கில் மேலும் பல மனிதப் புதைகுழிகள் காணப்படலாம் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜா அச்சம் வெளியிட்டுள்ளார். அத்துடன், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தரப்பினர் தலையீடுகளைச் செய்து, துறை சார்ந்த நிபுணர்களின் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும், அதன் மூலம் தமிழின அழிப்பு நடைபெற்றது என்பது உறுதியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 17 எல…

  14. யாழில் வாக்குப் பெட்டிகள் தேர்தலிற்கு முன்பே மாயம்! Saturday, July 23, 2011, 9:07 சிறீலங்கா 1977ம் மற்றும் 1981ம் ஆண்டு தேர்தல் வன்முறைகளை ஒத்த தேர்தல் வன்முறைச் செயற்பாடுகள் தேர்தல் ஆரம்பிப்பப்பதற்கு 14 மணி நேரமே உள்ள நிலையில் தற்போது வடக்கில் மிக வேகமாகத் தொடங்கியுள்ளன. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி யாழ் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களிற்கு பொறுப்பான தேர்தல் உத்தியோகத்தர்களிற்கு விநியோகிப்பதற்காக பலத்த பாதுகாப்பின் மத்தியில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டிகளில் சுமார் 4,000 வாக்குகளை உள்ளடக்கிய வாக்களிப்பு நிலையங்களிற்கான பெட்டிகளை காணவில்லை எனத் தெரியவருகிறது. இந்த வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணியில் பொலிசாரும் அதற்குப் பாதுக…

  15. புலிகளின் விமானத் தாக்குதல் தொடர்பாக ஐ.தே.க. விவாதம் நடத்தக் கோரியதால் சபையில் கடும் சர்ச்சை வீரகேசரி நாளேடு விடுதலை புலிகளின் விமானத் தாக்குதலை எதிர்கொள்ள விமானப்படை தயாராக இல்லை. ஆகவே அது தொடர்பாக விவாதம் ஒன்றை நடத்த அனுமதியளிக்கவேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்தமையினால் சபையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த இந்த கோரிக்கையை ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. க்கள் ஏற்றுக்கொண்டு இன்றைய (நேற்று) தினமே விவாதம் நடத்தவேண்டுமென அழுத்தம் கொடுத்தமையினால் அரச தரப்பு அமைச்சர்கள் விசனமடைந்து வாய்த்தர்க்கம் புரிந்தனர். ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் நீண்ட நேரம் மேற்படி விடயம் தொடர்பாக …

  16. கொழும்பு விளையாட்டு தமிழகத்திலும் தொடர்கிறது. Wednesday, July 27, 2011, 21:41 இந்தியா, கட்டுரைகள் கொழும்பு அரசத்தலைவர் மகிந்தா கைகளுக்கு வந்த பின்பு, எல்லாவற்றிலும் தமிழருக்கு எதிரான “சதி” என்பது நாளொரு வண்ணமும் அரங்கேறி வருகிறது. அதில் ” டக்லஸ் தேவானந்தாவை” மெல்ல,மெல்ல தனது வலைக்குள் இழுத்து, கடைசியில் “தேவானந்தா” தனது ஈ.பி.டி.பி சின்னத்தில் கூட நிற்கவிடாமல்,, ராஜபக்சேவின் “வெற்றிலை” சின்னத்தில் நிற்கவைத்த “தந்திரம்” மகிந்தாவின் வெற்றியாக சிங்களவெறியர்களால் கருதப்படுகிறது. “துரோகி கருணாவை” முழுமையாக தனது கட்சியுடன் இணையவைத்ததில் மஹிந்தாவென்றதாக அதே சிங்கள இன வெறியர்கள் கூறிவருகிறார்கள்.புலிகளை “நாகப்பாம்பு” என்றும் அதை அழித்து விட்டதாகவும், இனி “ச…

  17. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஊடகவியலாளர்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான ஊடக உபகரணங்கள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நேற்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப் கலந்து கொண்டார். தினகரன், வீரகேசரி, தினக்குரல் பத்திரிகை நிருபர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் 25 பேருக்கு லெப் டொப், 10 புகைப்படக் கருவிகள், பெக்ஸ் மெசின்கள், வொயிஸ் ரேக்கோடர்கள் என்பன இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன. இதில் வீரகேசரி பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர், புகைப்பிடிப்பாளர் சலீம், வீரகேசரி ஊடகவியலாளர் மின்காஜ் ஆகியோருக்கு மடிக்கணனி வழங்கப்பட்டது. அத்துடன், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சின்னத…

  18. வலி.மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்துடன், முன்னணியின் உறுப்பினருடன் சென்ற இளைஞன் ஒருவரையும் ஈபிடிபி உறுப்பினரின் புதல்வர்கள் மற்றும் அவர் சார்ந்த கும்பல் வாளால் வெட்டிக்காயப்படுத்தினர். இந்தச் சம்பவத்தை பொலிஸ் நிலையத்துடனேயே முடிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு வழங்கியுள்ள அழுத்தத்தால், பொலிஸார் மூடி மறைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். பொலிஸாரின் இந்த நடவடிக்கை சமூகப் பிரச்சினையாக பூதாகாரமாகும் பதற்ற நிலை வட்டுக்கோட்டையில் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கார்த்திகை விளக்கீடு நாளான நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இ…

  19. புஷ்ஷை அடியொற்றி யுத்தத்தை முன்னெடுத்தால் `படுகுழிதான்' [29 - May - 2007] * தமிழ் மக்களோடு அதிகாரத்தை பங்கிட்டு அபிவிருத்தியில் அவர்களை பங்காளியாக்கினால் நாட்டுக்கு விடிவு தொலைவில் இல்லை அண்மையில் ஜோர்தானில் இடம்பெற்ற எ11 உலக பொருளாதார மன்ற மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய தனதுரையில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி தொடர்பாக விளக்கமளித்தார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பேணுவதில் தனது அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும், இலங்கை ஒரு மிகக் குறைந்த அபிவிருத்தி அடைந்த நாடு (LDC) அல்ல என்ற வகையில் சலுகை அடிப்படையில் வெளிநாட்டு நிதி உதவிகள் பெற்றுக் கொள்ளும் வசதிவாய்ப்பு கிடையா…

  20. மூதூர் உதவிப் பணியாளர்கள் படுகொலை தொடர்பாக இலங்கை நடவடிக்கை எடுக்காததை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்தது. அக்சன் ஃபம் (Action Faim) பணியாளர்கள் 17 பேரின் படுகொலைக்குப் பொறுப்பானவர்களை இலங்கை அரசு நீதியின் முன் நிறுத்தாதமை, இலங்கை அரசு உண்மைக்குப் பயப்படுவதைக் காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட இயக்குனர் ஜேம்ஸ் றொஸ் தெரிவித்தார். மூதூரில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நான்காம் திகதி இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பு என்ற பிரான்ஸ் உதவி அமைப்பின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்டது. அந்தப்படுகொலை உட்பட, 16 முக்கி…

    • 2 replies
    • 526 views
  21. வடமராட்சிக் கிழக்கு கரையோர நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் இராணுவத்தினர் Wednesday, August 10, 2011, 8:48சிறீலங்கா வடமராட்சிக் கிழக்கு கரையோர நிலங்களைக் கைப்பற்றி தம்வசமாக்கும் முயற்சியில் அங்கு நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் மும்முரமாக செயற்படத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக மருதங்கேணி ஆழியவளை வெற்றிலைக்கேணி உடுத்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது கரையோர நிலங்களை சட்டப்படி எழுதித் தருமாறு கேட்ட இராணுவத்தினர், அக்காணி, நிலங்களுக்கு எவ்வளவு பெறுமதி வேணுமானாலும் எம்மால் தரமுடியும் ஆனால் எங்களுக்கு அக்காணி நிலங்களை சட்டப்படி எழுதித் தாருங்கள் என கட்டாயப்படுத்தி கேட்டுவருகின்றனர். அவ்விடங்களுக்கு சமீபகாலத்தில்தான் மக்கள் மீள்குடியேற்றப்ப…

  22. சிறுமி துஸ்பிரயோகம் : பாதிரியாருக்கு விளக்கமறியல் வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- வவுனியாஇ வெளிக்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரை அந்தச் சிறுவர் இல்ல பாதிரியார் தனது செட்டிகுளம், துடரிகுளம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்தார் என கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட யுவதியால் (தற்போது வயது 20) முறைப்பாடு செய்யப…

  23. த.தே.கூ. எந்தவொரு ஆட்சியாளருக்கும் ஆதரவாக குரல்கொடுக்கவில்லை - கனடா உயர்ஸ்தானிகரிடம் ஆர்னோல்ட் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே கூட்டமைப்பு எதிர்த்துக் குரல் கொடுத்ததே தவிர, எந்தவொரு ஆட்சியாளருக்கும் சார்பாக குரல் கொடுக்கவில்லை என கனடா உயர்ஸ்தானிகரிடம் யாழ். மாநரக மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.யாழிற்கு விஜயம் மேற்கொண்ட கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்டை மாநகர சபையில் நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவர் பின்பு நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே ஆர்னோல்ட் மேற்கண்டவாறு கூறினார். மேலும் இந…

  24. படைத்துறை உதவி, கூட்டுக் கடற்கண்காணிப்பிற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு சிறீலங்காவிற்கான இந்தியாவின் படைத்துறை உதவி, மற்றும் இந்திய - சிறீலங்கா கடற்படைகளின் கூட்டுக் கடற்கண்காணிப்பு திட்டம் என்பவற்றிற்கு, பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் வெளியிட்ட கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி இணைந்த கடற்கண்காணிப்பை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், சிறீலங்கா அரசிற்கு தேவையான படைத்துறை உதவிகளை தமது அரசு செய்யும் எனவும் எம்.கே. நாராயணன் கூறியிருந்தார். இந…

  25. நிதி ஒழுங்கு விதிகள் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னணியில் மஹிந்த: ரவி நிதி ஒழுங்கு விதிகள் தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சதியொன்று இருந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறாயினும் இந்த தோல்வி அரசாங்கத்தின் பயணத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுப்பது போல இதற்காக அரசாங்கம் பதவி விலக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனவும் அவர் சொன்னார். நிதி ஒழுங்கு விதிகள் தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் ந…

    • 1 reply
    • 385 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.