ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
இனப் பிரச்சினைக்கான தீர்வு: மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை – எரிக் சொல்ஹெய்ம் இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.. இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை என எரிக் ஹொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளதாகவும் அதன்படி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் …
-
- 8 replies
- 597 views
-
-
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது - சோபித தேரர் By DIGITAL DESK 2 26 DEC, 2022 | 05:16 PM (எம்.மனோசித்ரா) அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களிடமிருந்து இதுவரையில் 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது. அந்த கட்டணத்தை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என குறிப்பிட்டார். மாறாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால், அதற்கெதிராக சட்ட ரீதியாக குரல் கொடுப்பதற்கு மக்கள் சார்பாக செயற்படும் சட்டத்தரணிகளுக்க…
-
- 1 reply
- 507 views
- 1 follower
-
-
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்! யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை 10.50 அளவில் சென்னையில் இருந்து புறப்படும் விமானம் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும். இதனையடுத்து மீண்டும் எலையன்ஸ் ஏர் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும். இதற்கமைய, சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இதேவேளை 2019 ஒக்டோபர் மாதம் பலாலி விமான நிலையம் நல்லாட்சி அரசாங்கத்தினால் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1315030
-
- 240 replies
- 16.3k views
- 2 followers
-
-
190நாடுகளை உள்ளடக்கிய பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்! உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கை 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப் பட்டுள்ளதோடு முதல் இடத்தை மியன்மார் பெற்றுள்ளதுடன், அந்தநாட்டில் நடப்பாண்டில் மாத்திரம் 32 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நேபாளம் இரண்டாம் இடத்திலும், ஈரான்3ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கை இந்த பட்டியலில் 4ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தவருடத்தில் இதுவரை 25 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப…
-
- 1 reply
- 315 views
- 1 follower
-
-
சுனாமியில் இறந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை By VISHNU 25 DEC, 2022 | 06:22 PM (எம்.வை.எம்.சியாம்) சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் 26 ஆம் திகதி காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை 'தேசிய பாதுகாப்பு தினம்' நாளை (26) கொண்டாடப்படவிருக்கிறது. காலி பறலிய சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக பிரதான நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் ஏனைய அரசியல் பிர…
-
- 1 reply
- 200 views
- 1 follower
-
-
தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு ! இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தீர்வு விடயத்தில் பெரும்பான்மையின கட்சிகள் எதிர்ப்பினை வெளியிடவில்லை என கூறினார். ஐ.நா. உட்பட உலக நாடுகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். எவ்வாறாயினும் தமிழர்களுக்கான தீர்வு குறித்த விடயத்தில் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதால் நியமன தீர்வு கிடைக்கலாம் என்றும் குறிப்பி…
-
- 0 replies
- 733 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப் பேரலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம் செலுத்தி ஈகைசுடரேற்றப்ட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின், பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1317364
-
- 3 replies
- 560 views
-
-
அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர் – கொழும்பு பேராயர் நாட்டில் அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர் என குற்றம் சாட்டிய அவர், இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோய் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே இன்றைய சூழலில் பொய்களுக்குப் பின்னால் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற ஆராதனைல் உரையாற்றும் போதே பேராயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்ற…
-
- 0 replies
- 220 views
-
-
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்று சந்திப்பு ! தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று சனிக்கிழமை இரவு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் அடுத்த வருடம் தேர்தல் இடம்பெற்றால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடியாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் அரசாங்கம் தேர்தலை பிற்போடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்த சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் …
-
- 17 replies
- 1.1k views
- 2 followers
-
-
கிளிநொச்சி. பளை பகுதியில் சற்று முன்னர் (21-12-2022) இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது. பளை முள்ளியடிபகுதியில் ஏ - …
-
- 5 replies
- 905 views
- 1 follower
-
-
அடி மட்டத்திலிருந்து உயர்மட்டத்திலுள்ளவர்கள் வரை சட்டத்திற்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர் - பேராயர் By NANTHINI 25 DEC, 2022 | 04:45 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் இன்று நேர்மை காணப்படுகின்றதா? அடி மட்டத்திலிருந்து உயர்மட்டத்தில் உள்ளவர்கள் வரை அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர். நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர். இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோயாகும். பல ஆண்டுகளாக நாம் இந்த நோய்க்கு அடிமையாகியுள்ளோம். இதிலிருந்து விடுபடுவதற்கான பலம் எம்மிடமில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (டி…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
அமெரிக்காவிலிருந்து வந்த “குஷ்” போதைப்பொருள் அமெரிக்காவில் இருந்து சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களுடன் விமான தபாலில் அனுப்பப்பட்ட பொதியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 2 கோடி பெறுமதியான குறித்த போதைப்பொருள் பொதியை பெறுவதற்காக வருகைத்தந்திருந்த நபரை சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான நபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என குறிப்பிட்டனர். குறித்த பொதியில் குஷ் ரக போதைப்பொருள் 1.367 கிலோகிராம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/அமரககவலரநத-வநத-கஷ-பதபபள/175-309598
-
- 0 replies
- 565 views
-
-
ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்பு தேர்தல் திகதி அறிவிப்பு எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும், சில காரணங்களினால் தேர்தல் குறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்புமனு கோரல் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.ta…
-
- 0 replies
- 548 views
-
-
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை. இது வெறுமனே காலத்தை கடத்தும் செயல்பாடு என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் வைத்து இன்று (25) ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது நாட்டினுடைய புதிய ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை நோக்கிய அறிவிப்பு அல்லது முன்மொழிவை அவர் பல இடங்களில் கூறி இருக்கிறார். அவர் கூறுவதற்கு சர்வதேச நாடுகளுடைய அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம். ஏனென்ற…
-
- 0 replies
- 703 views
-
-
போராட்டகாரர்கள் தேர்தலில் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும்-நிமல் சிறிபால டி சில்வா உத்தேச உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படாது கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதில் சில சிக்கல்கள் இருந்த போதிலும் நடந்த முடிந்த முதல் சந்தர்ப்பத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் தேர்தலில் போராட்டகாரர்கள் அனைவரும் போட்டியிட்டு தமது பலத்தை நிரூபிக்க வேண்டும். ரெட்டா, பெட்டா மட்டுமல்லாது தொலைக்காட்சிக்குள் புகுந்து போதனை நடத்தியவர்களும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் சமூகத்திற்குள் தமக்கு இருக்கும் பல…
-
- 0 replies
- 636 views
-
-
வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் ஆளும்கட்சி நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஆளும்கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆராய முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட தலைமையில் முன்னாள் விமான படைத்தளபதி ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க உள்ளிட்ட குழுவை கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார். இவர்கள் மிரிஹான போராட்டம், காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல், அமரகீர்த்தி அதுகோரல படுகொலை, நாடாளுமன்ற உற…
-
- 0 replies
- 101 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு – கம்மன்பில ! சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என உதய கம்மன்பில தெரிவித்தார். இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து, நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவே அவர் முயற்சி செய்கின்றார் என்றும் குற்றம் சாட்டினார். எனவே சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை நகைப்புக்குரியது என்றும் கட்சித் தலைவர் கூட்டத்திலேயே மாறுபட்ட பல கருத…
-
- 0 replies
- 536 views
-
-
ஏறாவூரில் மின்னல் தாக்கி 27 உயிர்கள் பலி By NANTHINI 25 DEC, 2022 | 10:42 AM நாட்டின் காலநிலை மாற்றம் காரணமாக இன்று (டிச. 25) அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய இடி, மின்னல் தாக்கத்தினால் ஏறாவூரிலுள்ள வீடொன்றிலிருந்த பண்ணை மீது இடி, மின்னல் விழுந்ததில் அந்தப் பண்ணை முற்றாக கருகி சாம்பலாகியுள்ளது. கூலித் தொழிலாளியான இஸ்மாயில் அன்வர் என்பவர் தனது வீட்டிலேயே குறித்த பண்ணையை அமைத்து, ஆடு, கோழி மற்றும் வாத்து என்பவற்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நேற்று மாலையிலிருந்து பாரிய இடி, மின்னலுடன் மழை பெய்துகொண்டிருந்ததை தொடர்ந்து, இன்று…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
பஸ்ஸில் மீட்கப்பட்ட தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு ; கல்முனையில் சம்பவம் By T. SARANYA 14 DEC, 2022 | 02:17 PM பஸ்ஸில் சக பயணி தொலைத்த தங்கச்சங்கிலியை கண்டுபிடித்துக்கொடுத்த நபரை கல்முனை பொலிஸ் தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். கல்முனை பஸ் நிலையத்திலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் தவறவிடப்பட்ட சங்கிலியை பயணியொருவர் மீட்டு ஒப்படைத்துள்ளார். இந்த சங்கிலி செவ்வாய்கிழமை பொலிஸார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கல்முனை பஸ் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (13) காலை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி சென்ற களுவாஞ்சிக்…
-
- 23 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான சமுதாய சமையலறைத் திட்டம் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நாட்டின் பொருளாதார நிலை மந்தகதியில் காணப்பட்டபோது யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் போதியளவு உணவினை பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் ஆரம்பித்த இந்த திட்டம், மாணவர்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் பசியினை ஆற்றிச்செல்கின்றனர். இந்நிலையில் சமையலறையில் மரக்கறி வெட்டுவதில் இருந்து மாணவர்களுக்கு உணவ…
-
- 10 replies
- 804 views
- 1 follower
-
-
இணைய வழி பண மோசடியுடன் தொடர்புடைய மூவர் கைது By T. SARANYA 24 DEC, 2022 | 03:38 PM (எம்.வை.எம்.சியாம்) கையடக்க தொலைபேசி செயலி மூலம் பல்வேறு நபர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெற்று, அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு கோடிக்கும் அதிக பண மோசடியில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அண்மையில் இது தொடர்பில் 12 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இணையவழியூடான பொருள் விற்பனைக்காக நபர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பெற்று அதன் மூலம் மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு குறித்…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
அமெரிக்க டாலர் கையிருப்பு கரைந்தது: இந்திய ரூபாய் இலங்கைக்கு உதவுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இலங்கையில் அமெரிக்க டாலருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், இரு தரப்பு வணிகம் மேற்கொள்ள இலங்கை அரசு இந்திய ரூபாயைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது இலங்கைக்கு எந்த அளவுக்கு பலன் தரும் என்பதையும், அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் இந்தக் கட்டுரை அலசுகிறது. இந்திய ரூபாயில் இருதரப்பு…
-
- 0 replies
- 624 views
- 1 follower
-
-
வியட்நாமிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம் கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் குறித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.…
-
- 0 replies
- 736 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரின் வழக்குகள் விரைவுபடுத்தப்படும் பாரதூரமான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் சிறைச்சாலையில் உள்ளார்கள். அவ்வாறு பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து நிறைவு செய்ய நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். தலதா மாளிகை, மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல், கோட்டபய ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிறைச்சா…
-
- 0 replies
- 558 views
-
-
இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் சுற்றிவளைப்புகள் இந்த வருடத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் 61 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் 27 சோதனைகள் வெற்றியடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 09 சுற்றிவளைப்புகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், 18 சுற்றிவளைப்புகளின் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=169046
-
- 0 replies
- 326 views
-