Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 3 வருடங்களின் பின்னர் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம் ! இன நல்லிணக்கம் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டது. 2015 முதல் 2019 வரையான நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது தேசிய நிகழ்வுகளின் தமிழ் மொழியில் தேசிய கீதம் படப்பட்டபோதும் கோட்டாபய அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டது. தேசிய சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களால் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்…

  2. சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும் பொருளாதாரம் இல்லாது தேசியத்திற்கு முக்கியத்துவமளித்தால், சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது, கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளிற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எம்மை சிங்கள கட்சி என்கின்றனர். உண்மையில் சிறிலங்கா சுதந்திர கட்சி அனைத்து இனங்கள், மதங்களையும்…

    • 3 replies
    • 707 views
  3. மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. பிரதமர் தினேஷ் குணவர்தனவும் எந்த நேரத்திலும் பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உடன்படவில்லை என்…

  4. சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை – சஜித், டலஸ் அறிவிப்பு ! Digital News Team நாளை (04) நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் குழுவினரும் இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் உடன்பட முடியாத காரணத்தினால் தான் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/2374…

  5. தமிழ்மக்கள் பூரண அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு சிங்கள மக்கள் அனுமதிக்கும் நாளே எமக்கான விடிவுநாள் - சி.வி.விக்னேஸ்வரன் By Digital Desk 5 04 Feb, 2023 | 09:27 AM ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள். அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும். நாமும் அன்றைய தினம் எமது மனோநிலையை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்போம் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும…

    • 2 replies
    • 875 views
  6. 13வது திருத்தம் தொடர்பில் முரளிதரனிடம் கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரனை இன்று ( 04) மாலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர். இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்திய இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டினார். இலங்கையின் 75வது சுதந்திர தினத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள முரளிதரன் இன்று (04) காலை இலங்கை வந்திருந்தம…

    • 0 replies
    • 680 views
  7. இலங்கையர்கள் சிலர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்... இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்த ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு புகலிடம் தேடி வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த மார்ச் முதல் இலங்கையில் இருந்து 218 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் புங்குடுதீவை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன்; (43), அவரது மனைவி மாலினி தேவி (43) மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒர…

    • 0 replies
    • 498 views
  8. கிளிநொச்சி மாவட்டத்திலும் சுதந்திர தினம் முன்னெடுப்பு! கிளிநொச்சி மாவட்டத்திலும் சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தின் அரச திணைக்களங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டதோடு மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், துப்பரவாக்கும் பணிகளும் இடம்பெற்றிருந்தன. அத்துடன் கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேசியக்கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. மேலும் பரந்தன் சந்தியிலிருந்து, டிப்போ சந்திவரை இளைஞர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1323056

    • 3 replies
    • 735 views
  9. இலங்கையின் இரு மாகாணங்களுக்கும் தனியான கர்தினால் ஒருவரை நியமிக்குமாறு வத்திக்கானிடம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையின் சிறுபான்மை தமிழ் கத்தோலிக்கர்கள் இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் வஞ்சிக்கப்படுவதாக உணர்ந்ததன் காரணமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்ததாக அருட்தந்தை ஜோசப் பத்திநாதர் ஜெபரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு நீதி கேட்கவில்லை மேலும் கூறுகையில்,“உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கொழும்பு பேராயர் நீதி கேட்பதில் தவறில்லை, ஆனால் வடக்கு கிழக்கு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு நீதி வழங்க எவரும் முன்வராத காரணத்தினால் தான்…

    • 8 replies
    • 1.1k views
  10. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு By VISHNU 02 FEB, 2023 | 04:53 PM வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை (02) யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஊடக சந்திப்பின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் வருமாறு: யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினராகிய நாம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒன்றிணைந்து சிறிலங்காவின் ச…

  11. ஜனாதிபதி விடுத்துள்ள சுதந்திர தின செய்தி 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 75 ஆண்டுகளில் இலங்கை அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகமாகும் என சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே இந்த ஆண்டு முதன்மையான நோக்கமாகும். அதற்கான புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த திட்டத்தை நாட்டில் தற்போது முன்வைத்துள்ளோம். பெருமைமிகு தேசமாக இருந்த இலங்கையர்களின், கட…

  12. யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி ஆரம்பம்! “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி, யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) இலங்கையின் சுதந்திரதினத்தை தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியில், பல்கலைகழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள் , சிவில் சமூக பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2023/1323072

  13. (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதே தவிர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அந்த அதிகாரம் இல்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அமையவே ஜனாதிபதி செயற்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 13 ஆவதுதிருத்தத்திற்கு அமைய …

  14. ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் மீண்டும் ஆஷு மாரசிங்க By DIGITAL DESK 5 03 FEB, 2023 | 12:16 PM நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரந்தனாவின் வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, பேராசிரியர் ஆசு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஆதர்ஷா கரந்…

  15. (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதே தவிர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அந்த அதிகாரம் இல்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அமையவே ஜனாதிபதி செயற்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 13 ஆவதுதிருத்தத்திற்கு அமைய …

  16. இரவு 7 மணிக்கு பின் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு By NANTHINI 22 JAN, 2023 | 04:03 PM (இராஜதுரை ஹஷான்) கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்கு பின்னர் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது. பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோக துண்டிப்பை அமுல்படுத்தாமல் இருப்பது சாத்தியமற்றது. குறித்த காலப்பகுதியில் மின்விநியோகத்தை துண்டிக்காமல் இருக்க வேண்டுமாயின், மேலதிகமாக 4 பில்லியன் ரூபாய் மின்னுற்பத்திக்காக செலவிட நேரிடும் என இலங்கை ம…

  17. சனிக்கிழமை வரை மழை தொடரும் ! காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளதாம் ! By DIGITAL DESK 5 02 FEB, 2023 | 10:49 AM யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திருகோணமலையின் சீனன்குடாவுக்கும் உப்புவெளிக்கும் இடைப்பட்ட பகுதியினூடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வெளிவளையம் நிலப் பகுதிக்குள் நுழைய ஆரம்பித்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுவதும…

  18. வசந்த முதலிகே நீதிமன்றத்தால் விடுதலை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிமன்றம், அவரை விளக்க மறியலில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட…

  19. உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை – வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்சங்க செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.”தமிழ்மக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படாதநிலையில் 37 கோடி ரூபாய்களை செலவளித்து சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. எமக்கான சுதந்திரம் 75 வருடங்களாக கிடைக்கவில்லை. எமக்கான உரிமைகள் கிடைக்காத நிலையில் இந்த சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை. வவுனியா மாவட்ட வலிந்துக…

  20. ( எம்.நியூட்டன்) கட்சிக்குள் இருந்து பிளவு ஏற்படுத்துபவர்கள் மக்களை பிளவுபடுத்துவதுடன் அரசியலமைப்பு விடயத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார் அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை தமிழரசு கட்சிக்குள் இருந்து பிளவு ஏற்படுத்துபவர்கள் மக்களை பிளவுபடுத்துவதுடன் புதிய அரசியலமைப்பு விடயத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் இதற்காக இம் மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு …

  21. அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரியாக சவேந்திர சில்வா சாதனை ! இலங்கை ஆயுதப் படைகளின் வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வா பெற்றுள்ளார். 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில், முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு களங்கமற்ற சேவையை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க விஷிஷ்ட சேவா விபூஷணயா (விஎஸ்வி) விருதை வழங்கினார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கௌரவமான நிகழ்வின் போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுதந்திர தினப் பதக்கத்தை…

  22. ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி… ஈஸ்டர் தாக்குதலுக்கும் மன்னிப்பு கோரினார் !!! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் துயரச் சம்பவம் என்றும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதி பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ரணில் வ…

  23. க. அகரன் கொள்கை என்ற பெயரில் இந்தியாவுக்கு விசுவாசமாக நின்று இனத்தை விற்பதே தமிழ் கட்சிகளுக்கு இடையேயான போட்டி என்று தெரிவித்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரெலோ புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியன இந்தியாவின் முகவர்கள் என்றும் விமர்சித்தார். அனைவராலும் இன்று பேசப்படும் 13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற ஓர் கட்டமைப்பு. ஒற்றையாட்சி என்பது சிங்கள பௌத்த ஆட்சி. வேறு எவருக்கும் அங்கு அதிகாரம் இல்லை. அதனாலேயே தமிழ் பெருந்தலைவர்கள் நீண்டகாலமாக இதனை நிராகரித்து வந்திருக்கின்றார்கள். விடுதலைபுலிகள் கூட அதனை ஏற்றுகொள்ளவில்லை என்றார். வவுனியாவுக்கு இன்று (02) விஜயம்செய்த அவர் தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் கலந்துகொண்டுவிட்டு கருத்து …

    • 3 replies
    • 732 views
  24. (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவிகளை பெற்றுக்கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பின்னணியில், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் ஆகியோருக்கிடையில் நேற்று (ஜன. 31) செவ்வாய்கிழமை டில்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இரு வாரங்களுக்குள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத…

    • 5 replies
    • 922 views
  25. பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக மீளப் பெற வேண்டுமென வலியுறுத்தல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமாறுகால நீதி குறித்து கலந்துரையாடலின் போது, பபயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக மீளப் பெற வேண்டுமென அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் வலியுறுத்தின. மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத் தொடருக்கு இணையாக இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை அரசாங்கம் கவனத்திற்கொண்டுள்ளதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.