Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரச பதில் இரசாயன பகுப்பாய்வாளராக கௌரி ரமணா அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக, மேலதிக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. நீதி அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதியளித்தே பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கடமையாற்றிய ஏ.வெலி அங்க நேற்று (05) 60 வயதைப் பூர்த்தி செய்த நிலையில் ஓய்வுபெற்றார். இதனையடுத்தே கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற, இலங்கை அறிவியல் சேவை தரம் ஒன…

    • 4 replies
    • 1.2k views
  2. யுத்தம் நிறைவுபெற்றிருந்த நிலையில், நாட்டில் ஜனநாயகம் நிலை நாட்டப்படவில்லை என ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிடம் யாழ். ஆயர் தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர் ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் இன்று காலை யாழ்.ஆயர் தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதில் ஜப்பான், தென்னாபிரிக்கா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நல்லிணக்கமும் ஏற்படும் என தமிழர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அத்தனையும் பொய்யாக்கப்பட்டுள்ளது நாட்டில் சகலரும் சமமானவர்களாக கணிக்கப்படும் நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆனால் தற்போது அந்த நிலை கிடையாது. ஏற்றத்…

  3. போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து ஆச்சரிமளிக்கின்றது. எனவே இந்த விவகாரத்தில் பங் காளிக் கட்சிகளை உள்ளடக்கிய தான தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் உண்மையான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டியது அவசியம் என ரெலோவின் செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில், ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையில் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் நிறுவவிருக்கும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்குபற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தாது என்று …

  4. கருணாவின் அடுத்த குறி ஆசாத் மௌலானாவா? கருணாவுக்கும் பிள்ளையானுக்குமிடையில் பிளவு உண்டாகியபோது ரி.எம்.வி.பி.யின் கட்சியிலிருக்கும் ரகு விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக கருணா அறிக்கைகளுடாக தெரிவித்திருந்தமை தெரிந்ததே. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிள்ளையானின் வேண்டுகோளுக்கமைய ரி.எம்.வி.பி. கட்சியை தன்னுடைய பெயரில் பதிவு செய்த ரகு என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபன் தானே கட்சியின் தலைவரென்றும் கருணாவிற்கு இது தொடர்பாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் அறிவித்திருந்தார். இதேவேளை ரி.எம்.வி.பி.யின் ஊடகப் பேச்சாளரான ஆஸாத் மௌலானா கருணாவை கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாக அறிவித்திருந்தார். இதை பல ஊடகங்களும் அவரது குரலை ஒலிப்பத…

    • 0 replies
    • 1.6k views
  5. இலங்கை அரசின் அடக்கு முறையை எதிர்த்து, தமது சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் பல போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள். இம்முயற்சியின் தொடர்ச்சியாக மனித உரிமைகளை மதிக்காத இலங்கை நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை, மனித நேயம் கொண்ட எமது புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவ்விடயத்தை ஜனநாயக வரைமுறையில் பரப்புரைக்கு உட்படுத்தி இலங்கை அரசிற்கு எதிராக மேலதிக அழுத்தத்தை கொடுக்க முடியும். இம் முயற்சியின் ஒரு வேலைத்திட்டமாக, அமெரிக்கத் தமிழர்களுடன் இணைந்து, இலங்கையில் உற்பத்திசெய்த ஆடையணிகளை வாங்குவதைப் புறக்கணிக்குமாறு கனேடியப் பொதுமக்களை அறிவுறுத்தும் போராட்டத்தின் விபரம் பின்வருமாறு: இடம்: டண்டாஸ் ஸ்குயர் (DAND…

    • 181 replies
    • 10.9k views
  6. யாழ். பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இன்று உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்னம், பீடாதிபதிகள் மற்றும் மாணவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்னம், “ எதிர்வரும் காலங்களில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துதல் மற்றும் பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகளை சீராக முன்னெடுத்த…

  7. உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் தவறின் பேராபத்து - வடக்கு ஆளுநருக்கு பறந்த கடிதம் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி மூலம் மீண்டும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உண்டு. மேலும் எம்மவர்களின் வாழ்வாதாரமும் சுரண்டப்படுகின்றது என மாநகர பதில் முதல்வர் து.ஈசன் வடக்கு மாகாண ஆளுநருக்கு இன்று (2020.06.15) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்திய மீனவர்கள் வடக்கின் கடல் எல்லைப் பரப்பிற்குள் அதிலும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பின்வரும் விடயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக மீன்பிடியை மட்டும் தமது வாழ்வாதாரம…

  8. இந்தியாவின் இறையாண்மை என்பது என்ன? கவிஞர் தாமரை

  9. நல்லாட்சி அரசை அட்சிபீடமேற்றிய இரு கல்விமான்கள் பணிநீக்கம்! தேசிய கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்திலிருந்து பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான கடிதங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். சிவில் சமூக அமைப்புகளின் ஊடாக நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் பாரிய பங்களிப்பை நல்கியதன் காரணமாக மேற்குறித்த இருவரும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் சிற்சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித…

  10. 71 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுர்வு இராணுவத்தைச் சேர்ந்த 71 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இராணுவத்தின் கேணல் பதவியில் இருந்த 41 அதிகாரிகள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதேபோன்று, லெப்டினன் கேணல் பதவியில் இருந்த 30 பேர், கேணல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். ஜூன் மாதம் 15ம் திகதி முதல் குறித்த பதவியுயர்வு அமுலுக்கு வந்துள்ளது. https://newuthayan.com/71-இராணுவ-அதிகாரிகளுக்கு/

  11. மஹிந்த அணியின் பாதயாத்திரைக்கு காத்திருந்த அதிர்ச்சி அர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை மாவனெல்ல நகருக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கண்டியில் நாளை ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரைக்கு மஹிந்த அணியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/9472

  12. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களை பெறும் - சம்பந்தர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களைப் பெறுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த தேர்தலை விடவும் வடக்கு, கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களை பெறும் எனவும் தமிழ் பேசும் மக்கள் வாக்குகளைப் பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும் எனவும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார். “தமிழ் மக்களுக்கான சரியான ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டிய சந்தர்ப்ப…

  13. கிளிநொச்சி புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  14. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தொடர்பான சட்டத்திட்டங்களில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர் ஜெனீவா பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையின் அடிப்படையில் இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது ஏற்கனவே இதற்கு மகிந்த தரப்பில் இருந்து எதிர்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன எனினும், இந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல் போனோர் தொடர்பான தகவல்கள் ஒன்றிணைக்கப்பட்டு, எவ்வாறு நீதிநடவடிக்கைஎடுக்கப்படும் என்பதில் தெளிவ்லை என்று கூறப்படுகிறது காணாமல் போனோர் தொடர்பான சீரான சட்டத்திட்டங்கள் எவையும் சிறிலங்காவில் இல்லாத நிலையில், இது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டி இருப்பதாக அவர்கள் தெரிவித்த…

    • 0 replies
    • 309 views
  15. "இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளைக்கொடியுடன் வந்து படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் உடனே சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். சரணடைந்தவர்களில் ஏனையோருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இது தொடர்பில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்." - இவ்வாறு நல்லிணக்க செயலணி முன் கதறியழுது வலியுறுத்தியுள்ளனர் இறுதிப்போரில் உயிர்பிழைத்த வடக்கு மக்கள். போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைப்பது என்பன தொடர்பில் நல்லிணக்க செயலணியால் வடக்கில் மக்களிடம் கருத்தறியப்பட்டு வருகின்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித…

    • 1 reply
    • 363 views
  16. இன்னுமொரு சுமந்திரனே விக்னேஸ்வரன் – மயூரன் காட்டம் by : Benitlas விக்னேஸ்வரனிற்கு போடுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் இன்னொரு சுமந்திரனை உருவாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் என வன்னி மாவட்ட வேட்பாளர் செ.மயூரன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வன்னி தேர்தல் களத்தில் இன்று பலர் பல கட்சிகளில் போட்டியிடுகின்றனர். இதில் பெரமுனவில் போட்டியிடுகின்ற ஜனகநந்தகுமாரவுக்கு வன்னியில் வாக்களிப்பதற்கு தகுதியில்லை. அதேபோல் மான் சி…

  17. இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான 22 இணையத்தளங்கள் (subdomains) பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் மூலம் உருக்குலைய செய்யப்பட்டுள்ளன. வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான இணையத்தளங்களே (subdomains) இவ்வாறு உருக்குலைய செய்யப்பட்டள்ளன. இதில் பொது சேவை ஆணைக்குழு, விளையாட்டு துறை, வேளாண்மை துறை, சுகாதார உள்ளிட்ட அமைச்சின் தளங்களும் உள்ளடங்குகின்றன. இணையத்தளங்களை உருக்குலைய செய்யமுடியாது என்று விடுக்கப்பட்ட சவாலையடுத்தே இந்த இணையத்தளங்களை உருக்குலைய செய்ததாக தெரிவித்துள்ள பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் இணையத்தளங்களுக்குள் உள்நுழைய முடியாதவகையில் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. http://tamil24news.com/news/?p=37780

    • 3 replies
    • 918 views
  18. தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் உடனடியாக மீள் ஏற்றுமதியை நிறுத்தியதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலை கலிகமுவயில் நேற்று (2020.07.09) இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றிய பிரதமர், விவசாய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எங்கள் அரசாங்கத்தின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார். 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான எங்கள் ஆட்சியின் போது நாட்டிற்கு உணவு வழங்கிய விவசாய மக்களுக்கும், விவசாயத்திற்கும், உரிய அங்கீகாரம் கிடைத்த போதிலும், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த அனைத்து சந்தர்ப்பத்திலும் விவசாயத…

    • 3 replies
    • 666 views
  19. தமிழீழ விடுதலைப்புலிகளை என்றும் ஆதரிப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தந்தை பெரியாரின் சிலையை திறந்துவைப்பதில் பெருமைப்படுகிறேன். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகவும் சாதிக் கொடுமை ஒழியவும் தீண்டாமையை அகற்றவும் பெரியார் பாடுபட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேநாள் தாயகத்தை இழுத்து மூட சதி நடந்தது. அது முடியவில்லை. துயரங்கள் நீடிப்பது இல்லை.. லட்சியம் தோற்பது இல்லை. இலங்கை தமிழர் நலனுக்காக விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம். புலிகளுக்காக அன்றும் குரல் கொடுத்தோம். …

  20. சிறிலங்காவில் தொடர்ந்தும் மனிதஉரிமைகள் மீறப்படுவதாகவும், பொறுப்புக்கூறுவதற்கோ, அரசியல்தீர்வுக்கோ உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார் கனேடிய குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜாசன் கென்னி. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் இன்று காலை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசியல் ரீதியிலான நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மனிதஉரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இது தொடர்பாக கனடா அக்கறை செலுத்தி வருகிறது. சிறிலங்கா அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது இது தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளேன். போரின்போது இரு தரப்பினராலும் இழைக்கப…

    • 7 replies
    • 774 views
  21. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்களே தனது கணவரை கொழும்பில் வைத்து கடத்தினார்கள் என காணாமல் ஆக்கப்பட்ட மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த சந்திரலிங்கம் என்பவரின் மனைவி லலிதா தெரிவித்தார். இதற்கான தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டும் எனவும் மரணச் சான்றிதழோ, அல்லது நஸ்டஈடோ தனக்கு தேவையில்லை என்றும் சந்திரலிங்கம் லலிதா குறிப்பிட்டார். நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அணியின் செயலாளர் அ.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மரண சா…

  22. போரில் காயமடையும் சிறிலங்காப் படையினருக்கு சீனா மருத்துவ உதவி திகதி: 31.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] வடக்கில் பெரும் ஆக்கிரமிப்பு போரில் சிறிலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் முன்னேற்ற நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திவரும் கடும் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் பெரும் உயிரிழப்புக்களை சந்தித்து வரும் அதேவேளை பெருமளவான படையினர் படுகாயமடைந்தும் வருகின்றனர். இந்நிலையில், காயமடைந்த படையினருக்கு சீனா பெருமளவு மருந்துப் பொருட்களையும், மருந்துவ உபகரணங்களையும் அனுப்பி வைத்துள்ளது. நகரன்பிட்டிய மருத்துவமனைக்கு தற்போது இதன் ஒரு தொகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஏற்கனவே, சீனாவின் பல்வேறு பௌத்த மத அமைப்புக்கள் போரில் பாதிக்கப…

  23. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் வழங்கியுள்ளார். குறித்த காணி இராணுவத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் நில அளவீடு செய்யும் நடவடிக்கைகள் நேற்று இடம் பெற்றுள்ளது. நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் குறித்த காணி நில அளவை செய்யப்பட்டமை குறித்து அப்பகுதி மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று (24) காலை குறித்த பகுதிக்குச் சென்று இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டு நில அளவை செய்யப்பட்ட குறித்த காணியை பார்…

    • 3 replies
    • 650 views
  24. (வீரகேசரி) விடுதலைப்புலிகள் ஆட்சிசெய்த வடகிழக்கை அரசியல் அங்கிகாரத்துடன் புலிகள்தான் ஆளவேண்டும். அது விரைவில் நடக்கும் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராஜா தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்றையதினம் -29- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்போதைய தேர்தல் தொடர்பாக புரிந்துணர்வு கடிதம் ஒன்றை தமிழரசுகட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவிடம் கடந்த இருமாதங்களுக்கு முன்னர் வவுனியாவில் வைத்து வழங்கியிருந்தோம். அது தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளி கட்ச…

  25. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னணியில் கருணா உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதபற்றி மேலும் தெரியவருவதாவது.கடந்த டிசம்பர் 31 ஆம்திகதி இரவு தன்னுடைய காதலியுடன் பெந்தொட்டையில் கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு பிரபல கோட்டலில் கருணா உல்லாசமாக இருந்ததாக பிரபல ஆங்கிலத் தினசரியான சண்டே ஐலண்ட் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை 04-01-2009 அன்று வெளியாகியிருந்தது. இச்செய்தி வெளியாகி 4 நாட்களில் அதாவது 08-01-2009 அன்று லசந்த சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி புத்தாண்டு பிறப்பதற்கு சில சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பெந்தோட்டை கடற்கரையில் தனது …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.