ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
திருகோணமலை சம்பூரில் 500 மெகாவோல்ட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக, இலங்கையுடன், இந்திய அரசுத்துறை நிறுவனமான என்.ரி.பி.சி இந்த மாத இறுதியில் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளவுள்ளது. அயல்நாடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளில், பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கை விரிவாக்கிக் கொள்ளும் இந்தியாவின் நோக்கத்தின் ஒரு பகுதியே இந்தத் திட்டமாகும். மின்சார கொள்முதல் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இரு முக்கியமான உடன்பாடுகளே இந்த மாத இறுதியில் செய்து கொள்ளப்படவுள்ளன. நீண்டகாலம் இழுபறியாக இருந்து வந்த இந்தத் திட்டத்துக்கான உடன்பாடுகள் செய்து கொள்ளப்படுவது தற்போது உறுதியாகி விட்டன என்பதை இந்திய அரச அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவே…
-
- 2 replies
- 590 views
-
-
யாழிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 99.45 வீதமான நிதி செலவிடப்படுள்ளது யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2016 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 7724 மில்லியன் ரூபா நிதிதில் 99.45 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு, 3623 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ்.மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் கடந்த…
-
- 5 replies
- 562 views
-
-
யாழ்.மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கங்களின் ஒன்றிய அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுக்கு 7 கிளைச் சங்கங்களையும் சேர்ந்த 800 இற்கும் மேற்பட்ட சிகை ஒப்பனையாளர்கள் காலை 9 மணிக்கு நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். . ஒன்றியத்தை அங்குரார்ப் பணம் செய்வதற்குப் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏனைய விருந்தினர்களாக அழைக்கப்பட்ட யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஆணையாளர் பிரணவநாதன் உள்ளிட்டோர் நண்பகல் 12 மணிக்குப் பின்னரே நிகழ்வுக்கு வருகை தந்தனர். . சிகை ஒப்பனையாளர்கள் அனைவருக்கும் நேற்றைய தினம் விடுமுறையாகக் கருதி கட்டாயம் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அறி…
-
- 0 replies
- 240 views
-
-
தமிழ் மொழி முதலில் - சீரமைக்கப்பட்ட பலகை முதல்வரிடம் கையளிப்பு யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடப் பலகையில் தமிழ்மொழி முதலாவதாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புக்கு அமைய உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிட பலகைகள் சீரமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. அங்கு ஒவ்வொரு மாவட்ட பேருந்துகள் தரித்து நிற்கும் இடங்களைக் குறிக்கும் காட்சிப் பலகைகளில் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியி…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்துடனான உறவுகள் தொடர்பில் கட்சித் தலைமைக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமென கட்சியின் அதி உயர் பீடம், கட்சித் தலைவர் ஹக்கீமிற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்மானம் எடுக்கத் தவறினால் கட்சித் தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் முரண்பாடு விரிவடையக் கூடி…
-
- 0 replies
- 362 views
-
-
பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியது கொழும்பிலிருந்து வந்த குண்டர்கள் குழுவே-றுகுனு பிக்குகள் முன்னணி குற்றச்சாட்டு கொழும்பிலிருந்து அழைத்து வந்த குண்டர்கள் குழுவினரால் பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அதனை தடு க்காமல் வேடிக்கை பார்த்த பொலிஸ்மா அதிபர் உட்பட நல்லாட்சி அரசாங்கம் மீது தென்னிலங்கையில் செயற்படும் பிரபல பிக்கு கள் சங்கம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. பிக்குகள் மீது தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் அதனைத் தடுக்க முயற்சிக்காத அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் மிக விரை வில் அதன் பிரதிபலனை அனுபவிப்பார்கள் என்றும் றுகுனு பிக்குகள் முன்னணி சாபமிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச…
-
- 0 replies
- 150 views
-
-
பொலிகண்டி வரையான பேரணி பருத்தித்துறைக்குள் நுழைய தடை பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன. பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு மூத…
-
- 1 reply
- 529 views
-
-
புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு பிரிட்டன் மீண்டும் வலியுறுத்தல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மீண்டும் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கையானது நாட்டின் வட பகுதியில் சாட்சியங்கள் இல்லாத ஒரு போரை நடத்திவருவதாக மிலிபாண்ட் வர்ணித்துள்ளார். போர் பகுதியில் சிக்கியுள்ள பல ஆயிரக்கணக்கான பொது மக்களுக்குஇ உடனடியாகத் தேவைப்படுகின்ற உதவிப் பொருட்களை அனுப்புவதற்காக ஐ நாவுக்கும் பிற உதவி நிறுவனங்களுக்கும் தடையற்ற அனுமதியை வழங்குமாறு மிலிபாண்ட் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாகஇ இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபஷ போர் நிறுத்தம் தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்தார். இது பற்ற…
-
- 10 replies
- 2k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யார் எறிகணைத் தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து சர்வதேச ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது. இந்த கேள்விகளுக்கு பதிலளித்த போது நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கப் படையினரா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளே குண்டுத் தாக்குதல் நடத்தினார்கள் என்பது சரியாகத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தெற்கில் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பாடசாலைகள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்ததா…
-
- 0 replies
- 452 views
-
-
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் இந்தக் குழு இயங்கவுள்ளது. வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டு திட்டமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளதாகவும் இது குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி குழுவினை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவினால் பரிந்துரைகள் குறித்து விரிவாக ஆராயப்பட உள்ளது.இந்த செயற் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் எவற்றை அமுல்படுத்த முடியும், எவற்றை அ…
-
- 1 reply
- 374 views
-
-
ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர் கொடி தூக்கியமை துர்ப்பாக்கிய நிலைமை. – சி.வி ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வாகும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உழவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவல், போட்டிகளில் மக்கள் ஈடுபடுவதுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களுக்கு அதற்கென விசேட ப…
-
- 3 replies
- 733 views
-
-
பிரபாகரனை உருவாக்கியது சிங்கள பெளத்த இனவெறிதான்; பிரபாகரன், பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் வரலாம் போகலாம் ஆனால் தமிழ் தேசியம் அடங்கிவிடாது. தமிழ்மக்களின் தேசிய உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு நா.உ. ஸ்ரீகாந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் தலையீடுகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஸ்ரீகாந்தா தொடர்ந்து பேசியதாவது:- வன்னிப் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள ஒன்றரை இலட்சம் மக்களினது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. அங்கு முன்னெடுக்கப்ப…
-
- 2 replies
- 967 views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய, அமைச்சர் விமல் வீரவங்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு இல்லை என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் கருத்துக்கள் பதிலளிக்காது இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை சில்வெஸ்டர் விடுதியில் நடைபெற்ற கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலை இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை எனவும் தேர்தல் நடத்தப்…
-
- 0 replies
- 381 views
-
-
சிறிலங்காவில் நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் பல ஊடகவியலாளர்களின் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தற்போது ஏமாற்றத்தை உண்டுபண்ணுகிறது என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்கள் கூறினார்கள். ஜனவரி 2015ல் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது தனது தேர்தல் பரப்புரைகளில் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரமானது முடிவிற்குக் கொண்டுவரப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தார். ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பல எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்…
-
- 0 replies
- 436 views
-
-
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மார்க் கானோ இலங்கை இழைத்த குற்றங்களிற்காக இலங்கையை பொறுப்புக்கூறச்செய்வதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். மனிதஉரிமை பாதுகாவலர்களுக்கான சிவில் அமைப்புகளிற்கான அச்சுறுத்தல்கள் நினைவுகூறுதலை ஒடுக்குதல் மதசிறுபான்மையினரின் உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்தல் சட்டத்தின் ஆட்சியில் வீழ்ச்சி ஆகிய உட்பட இலங்கையின் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வருவது குறித்து கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் சமீபத்தைய அறிக்கை இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு பொறுப்புக்கூறவேண்டியதன் அவ…
-
- 0 replies
- 281 views
-
-
தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை - சம்பந்தன் [sunday, 2013-06-02 19:21:29] தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை இணைத்து சர்வதேச மத்தியஸ்துடனான நிரந்தர தீர்வையே எதிர்பார்த்து நாம் பயணிக்கின்றோம். இதற்காக யாருடனும் பேச்சு நடத்த தயாரகவுள்ளோம். ஆனால் உப்புச்சப்பற்ற தீர்வை நாம் ஒரு போது ஏற்கமாட்டோம். இவ்வாறு கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். தமிழ் மக்களை நாம் ஒரு போதும் நடுத்தெருவில் கைவிடமாட்டோம். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். என்றும் அவர் கூறினார். சர்வதேச சமூகத்தின் பிடியிலிருந்து இலைங்கை அரசு ஒரு போதும் தப்பமுடியாது. தமிழருக்க…
-
- 1 reply
- 763 views
-
-
Hello friends, If you are in Europe, you would be receiving the european parliment election poll cards. Please check the date when the election is going to occur. And people in UK please vote for Jan Jananayagam! She is tamil and she is in the election to make our voice come in the EU parliment.
-
- 1 reply
- 1.3k views
-
-
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வீசிய பலமான காற்று காரணமாக விமானநிலையத்தினுள் மரமொன்று முறிந்து விழுந்துள்ளதுடன் பல விளம்பரப் பதாதைகளும் உடைந்து விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் இதன் காரணமாக சில விமானங்கள் புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=5115
-
- 0 replies
- 527 views
-
-
சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைய சிவபெருமான் அருள்புரிய வேண்டும் – ஜனாதிபதி! சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹா சிவாத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி இன்று (விாயழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் காரணமாக, இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மஹா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அந்த கட்டுப்பாடுகளில் இந்த முறை சிறிது தளர்வு இருந்தாலும் கடந்த வருடத்தைப் …
-
- 12 replies
- 1.3k views
-
-
தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் பற்றிய வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஜி 2, கீழ்த்தளம், 58, மூன்றாவது முதன்மைச் சாலை, ஆழ்வார் திருநகர் விரிவாக்கம், சென்னை # 600 087. தொலைபேசி : 91-44-2377 5536 தொலை நகல் : 91-44-2377 5537 பழ.நெடுமாறன் ஒருங்கிணைப்பாளர் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19.05.2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கி…
-
- 22 replies
- 7.8k views
-
-
மாறுப்பட்ட கருத்துக்களைவெளியிட்டு கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது. இதேவேளை தமது பேச்சுக்கு மதிப்பளிக்க முடியாதவர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிக் கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது. ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த நினைத்தவர்கள் வெளியேற்றப்பட்டடுள்ளனர். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கக் க…
-
- 1 reply
- 584 views
-
-
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே! மற்றும் மறை மாவட்ட குருமார்களே! 45 Views கடந்த 01/04/2021 அன்றையநாள் ஈழத்தமிழினத்தின் நெஞ்சங்களில் இடியாய் இறங்கிய துயரநாள் என்று மறைந்த முன்னாள் மன்னார் ஆயருக்கு “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்” தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது. ஆயரின் மறைவு குறித்து “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்” வெளியிட்டுள்ள அஞ்சலி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை, “எமது தாயகத்தில் சிங்கள இனவாத அட்டூழியங்களுக்கு எதிராகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களமயமாக்கலுக்கெதிராகவும் இறுதி வரை அறப்போர் புரிந்து வந்த மாமனிதர்…
-
- 0 replies
- 360 views
-
-
13ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை முழுமையாக வழங்குவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், 13 ஆவது திருத்தச் சட்ட மூல அமுலாக்களின் ஓர் கட்டமாகவே கிழக்கில் மாகாணசபை உருவாக்கப்பட்டதாகவும், வடக்கில் மாகாணசபை உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தவிர வேறும் அதிகாரங்களை வழங்குவது குறித்து அசராங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றி…
-
- 0 replies
- 523 views
-
-
சவுத் புளொக்கில் முக்கிய மாற்றம் – சிறிலங்காவுடன் தொடர்பில்லாதவர் வெளிவிவகாரச் செயலராகிறார் [ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 12:18 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக, சுஜாதா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, ஜேர்மனிக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றும் சுஜாதா சிங், அடுத்தமாதம் 1ம் நாள் தொடக்கம் இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயின் பதவிக்காலம், இம்மாதம் 31ம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே, சுஜாதாசிங்கை புதிய வெளிவிவகாரச் செயலராக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நியமித்துள்ளார். 59 வயதான சுஜாதா சிங் இந்திய வெளிவிவகாரச் சேவையில் மூத்த அதிகாரியாக உள்ளவர். இவருக்கும், இவருக…
-
- 0 replies
- 364 views
-
-
துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் என்று கூறப்படும் சமயங் என்றழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திரமீது, துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், அவரும் அந்த பஸ்ஸில் ஏற்றிச்செல்லப்பட்ட கைதிகளில் ஐவரும் பலியாகியுள்ளனர். சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு, சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிச்சென்றபோதே, அவர்கள் மீது களுத்துறை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இன்னும் சிலர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைகள் பேச்சாளர் உபுல் தெனிய தெரிவ…
-
- 3 replies
- 916 views
-