ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
யுத்த நிறுத்த ஒப்பந்தம்- சமாதானப் பேச்சு இனி இல்லை- சீண்டிய சிங்களம் விரைவில் மண்டியிடும்: சு.ப.தமிழ்ச்செல்வன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்காத நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளியிருக்கிறது என்றும் தமிழீழ மக்களின் பலத்தையும் உணர்வையும் சீண்டிப்பார்த்திருக்கும் மகிந்த ராஜபக்ச அதற்கான விளைவை விரைவில் சந்திப்பார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் தலைமையிலான குழுவினரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே தூதுவரைக் கொண்ட தூதுக்குழுவினரை இன்று சந்தித்து விரிவாகக் கலந்துரையாடி…
-
- 16 replies
- 3.9k views
-
-
http://www.yarl.com/files/101221-Ilankumaran.mp3
-
- 0 replies
- 1.1k views
-
-
சீனாவிடம் இருந்து இலங்கைக்கு டீசல் அன்பளிப்பு 01 NOV, 2022 | 09:47 PM இம்மாத இறுதியில் சீனாவிடமிருந்து இலங்கைக்கு டீசல் கிடைக்கும் என தான் நம்புவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று செவ்வாய்க்கிழமை (1) தெரிவித்தார். அபுதாபியில் தற்போது நடைபெறும் தொழில்துறை மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கைக்கான சீனாவின் டீசல் விநியோகம் தொடர்பில் இந்த தகவலை வெளியிட்டார். இந்நிலையில், இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 10.6 மில்லியன் லீட்டர் டீசல் சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்து…
-
- 2 replies
- 227 views
- 1 follower
-
-
ஈகி முத்துக்குமரனின் சிற்றப்பா மற்றும் பாட்டி விடுதலைச்சிறுத்தைக்கட்சியில் இணைவு விடுதலைச்சிறுத்தைக்கட்சியினரால் 26.12.2010 அன்று நடத்தப்பட்ட தமிழர் இறையாண்மை மாநாட்டில் தமிழர்க்கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நிகழ்வின்பொழுது ஈகி முத்துக்குமரனின் சிற்றப்பா, பாட்டி மற்றும் சந்தனக்காடு வீரப்பனின் மகள் விசயலெட்சுமி ஆகியோர் விடுதலைச்சிறுத்தைக்கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். படங்களை காண>>> http://meenakam.com/
-
- 0 replies
- 422 views
-
-
ரணில் கூட்டத்தை புறக்கணித்த ஹக்கீம் – கவிழ்ப்பாரா ஆட்சியை? சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் பங்கேற்கவில்லை. கூட்டு எதிரணியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதனை எதிர்கொள்வது தொடர்பாக நேற்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை நடத்தினார். அலரி மாளிகையில் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி சுமார் 3 மணிநேரம் இந்தச் சந…
-
- 0 replies
- 479 views
-
-
விலை சூத்திரத்திற்கமைவான எரிபொருள் விலை திருத்த முறைமையில் மாற்றம் இல்லை - வலு சக்தி அமைச்சு By VISHNU 07 NOV, 2022 | 08:07 PM (எம்.மனோசித்ரா) விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை திருத்தங்களை மேற்கொள்வதில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என்று வலு சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. உலக சந்தையில் காணப்படும் விலைக்கு ஏற்பவே உள்நாட்டிலும் எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மாதாந்தம் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். எனினும் இது நியாயமான விடயமல்ல என்று எரிபொருள் நிரப்பு நிலைய உர…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
கொழும்பில் பிரபல ஊடக நிறுவனம் மீது தாக்குதல்! கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனமான News First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகம் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிந்த பின்னர் அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைவராலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் ரணில…
-
- 2 replies
- 516 views
-
-
அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் இலங்கைக்கு கிடைக்கும்! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-09 10:13:59| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு வழங்கி வந்த அமெரிக்க ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் புதுப்பிப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கு இதற்கு முன்னர் அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியானது. இந்த நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க அமெரிக்க உயர் அதிகாரிகள் இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போயிருந்தது. எனினும் இந்த முறை இந்த வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் என அரச…
-
- 2 replies
- 955 views
-
-
இராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர்களிடம் கோரியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாகாணத்தில் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து தகவல்களை திரட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் வவுனியாவில் ஆற்றிய உரையொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு வாழ் மக்களின் அன்றாட நடவடிக்கைகள், ஏனைய செயற்பாடுகளை இராணுவத்தினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் பிராந்திய வலயத்தின் இராணுவத்தினரின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இரா…
-
- 1 reply
- 335 views
-
-
60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது! அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்கு…
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
பாடசாலை மாணவனை அதிபர் தாக்கி காயப்படுத்தியதாக யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பெற்றோர்களினால் முறையிடப்பட்டுள்ளது. வசாவிளான் மத்திய மகா வித்தியாலத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே அதிபரினால் தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியவராகும். காதில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இவர் சிகிச்சை பயணளிக்காத நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக் குழுவினர் எதிர்வரும் 18 ஆம் திகதி குறிப்பிட்ட விடயம் சம்பந்தமான விசாரணைகளை மேற்க்கொள்வதற்காக பாடசாலை அதிபரை ஆணைக்குழு அலுவலகத்திற்க்கு…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருந்தால் இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இணங்க வேண்டும் - சி.வி.விக்னேஸ்வரன் By DIGITAL DESK 5 12 DEC, 2022 | 10:07 AM ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஒற்றை ஆ…
-
- 3 replies
- 277 views
- 1 follower
-
-
கடந்த 10 மாத காலத்தில் 700 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் - சிறீலங்கா அரசாங்கம். வடபோர்முனை சமர், மாத்தளை தாக்குதல் ஆகியவற்றிற்கு முன்னரான பத்து மாத காலப் பகுதியில், எழுநூறுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கம், கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் நாள் முதல் இம் மாதம் 10ஆம் நாள் வரையான காலப் பகுதியில், எழுநூறுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்குப் பின்னர் கடந்த ஒக்ரோபர் மாதம் 11ஆம் நாள் நிகழ்ந்த வடபோர்முனை சமரில் நூற்று முப்பத்தெட்டு படையினரும், இதனை தொடர்ந்து கடந்த 16ஆம் நாள் மாத்தளையில் இடம்பெற்ற தாக்குதலில் நூற்றுப் பதினாறு படையின…
-
- 0 replies
- 961 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டம் தீவிர ஆயுத போராட்டமாக பரவிய அதே ஆண்டுதான் (1983) சூடான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கிறிஸ்தவப் பெரும்பான்மை மக்கள் அந்நாட்டின் இஸ்லாமிய அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் இறங்கினார்கள். சூடான் அரசு தம்மை இஸ்லாமிய மேலாதிக்கத்துக்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் உட்படுத்தி நசுக்கப் பார்க்கிறது என்பதே தென் சூடான் போராட்டக் குழுக்களின் நிலைப்பாடாக இருந்தது. இதில் உண்மை இருக்கின்றது ஆனால் இந்த உண்மையினை பெரிதாக்கி தமது நலன்களை அதற்குள் புகுத்தி தம் நலனை அடைய சர்வதேசம் முயற்சித்தது என்பதும் பேருண்மையானது. இது ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிட்டு இந்தியா எவ்வாறு தமது நலன்களை பெற முயற்சித்ததோ அதே போல சூடானிலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தமது…
-
- 3 replies
- 1.4k views
-
-
மாத்தையாவின் மரணம் தொடர்பாக புதிய கதை! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவராக இருந்த மகேந்திர ராஜா அல்லது மாத்தையா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக புதிய கதை ஒன்று வெளி வந்து உள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரை மேற்கோள் காட்டி இச்செய்தி வெளியாகி உள்ளது. பாஸ்கரன் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என்றும் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் பால்ய நண்பர்களில் ஒருவர் என்றும் கூறப்படுகின்றது. இவர் யாழ்ப்பாணத்தில் சஞ்சிகை ஒன்றில் வேலை பார்த்து உள்ளார். கொழும்பில் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி இருக்கின்றார். சிங்களவர் மீது புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்துவதை மாத்தையா கண்டித்தார் என்றும் இதனால் பிரபாகரன் ஆத்திரம் அட…
-
- 2 replies
- 3.1k views
-
-
பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை பதிவு செய்யாதவிடத்து , அவ்விசாரணை முழுமையானதாகவோ தீர்க்கமானதாகவோ அமையாது : ஐ.நா கூட்டத்தொடரில் கஜேந்திரகுமார் [Thursday 2014-09-25 22:00] ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியொர் கலந்து கொண்டிருந்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம் கீழ்வருமாறு.. மனித உரிமைகள் பேரவை 27வது அமர்வு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பாக:- மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் சிறிலங்கா தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை எமது அ…
-
- 0 replies
- 200 views
-
-
வடக்கு - கிழக்கை பிரிக்க முதலில் விண்ணப்பித்தவர் எச்.எல்.டி சில்வா (வியாழக்கிழமை 16 நவம்பர் 2006 02:22 ஈழம்) (காவலூர் கவிதன்) வடக்கு - கிழக்கைப் பிரிக்கும்படி 1992 அம் ஆண்டிலேயே தான் கோரிக்கை விடுத்திருந்ததாக, எச்.எல்.டி சில்வா தெரிவித்தார். ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் 1988 செப்ரம்பர் 8 அம் திகதி இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கைஇ மீண்டும் பிரிப்பதற்கு 18 வருடங்கள் எடுத்ததாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் 1992 இல் இதைப் பிரிக்கும்படி முதலில் கோரியது நான் தான் என்று அவர் கூறினார். எனினும், இறுதியில் தன்னிடமே இதற்கான தீர்ப்பு வழங்கும்படி தரப்பட்டதால், இதை சாத்தியமாக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு - கிழக்கு பிரிப்பை ஆராய்ந்த மூன்று உச்ச நீதிபதி…
-
- 0 replies
- 1.7k views
-
-
26/12/2022 வரைக்கும் இந்த ஆண்டில் இலங்கை வந்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 701, 331 ஆகும். இதில், ரஸ்யர் 15,681, இந்தியர் 13,892, ஐக்கிய இராச்சியத்தினர் 6000, அவுஸ்ரேலியர் 5000, ஜேர்மனி, அமெரிக்காவில் வில் இருந்து தலா 3000 பேரும் அடங்குவர். போன வருடம் வெறும் 194, 495 பயணிகள் மட்டுமே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.newswire.lk/wp-content/uploads/2022/12/Tourist-arrivals-as-at-26-12-22.pdf https://www.newswire.lk/2022/12/27/tourist-numbers-increasing-which-countries-visiting-sl/
-
- 2 replies
- 754 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் அதிசய பறவை! வெள்ளி, 04 பெப்ரவரி 2011 09:21 யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிசயமான பறவை ஒன்று மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வருகின்றது. காகங்களால் கொத்தப்பட்ட நிலையில் நீர்வேலிப் பிரதேசத்தில் இப்பறவை விழுந்து இருக்கின்றது. இப்பகுதி மக்கள் பறவையைக் காப்பாற்றி கூண்டிலில் அடைத்து வைத்து உள்ளார்கள். இதன் தோற்றம், குணம் ஆகியவற்றைப் பார்க்கும்போது இது ஒரு வகையான ஆந்தை இனத்தைச் சேர்ந்தது என்றும் பருவ கால மாற்றத்தால் வெளிநாடு ஒன்றில் இருந்து பறந்து வந்து இருக்கின்றது என்றும் ஊகிக்கப்படுகின்றது. இப்பறவையை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். tamilcnn.com
-
- 9 replies
- 1.5k views
-
-
நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பிறகு பொதுபலசேனாவை ஊக்குவித்து தனது நோக்கத்தை அடைய நோர்வே நாடு மறைமுகமாக பொதுபலசேனாவுக்கு நிதி வழங்கி வருகின்றது என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொதுபலசேனா கட்சி மக்களுக்கிடையில் உள்ள இன ஐக்கியத்தை சிதைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது. தமிழ் மக்களிடம் சிநேகபூர்வமாக உள்ளது. தற்போது தமிழ் கூட்டமைப்பின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜா பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இணைந்து தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். இனப்பிரச்சினையை தீர்க்க ஆதரவு வழங்காமல் இழுத்தடிப்பதன் மூலம…
-
- 0 replies
- 260 views
-
-
நஷ்டத்தை தாங்க முடியாமையினாலேயே எரிபொருளின் விலைகளை அதிகரித்தோம் ஒரு வருடத்தில் குறைவடைய வாய்ப்புள்ளது என்கிறார் பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ்) உலக சந்தையில் பெற்றோலின் விலை 41 டொலர்களினால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பின் நஷ்டத்தை தொடர்ந்தும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் சுமக்க முடியாது. சவூதி அரேபியா எரிபொருளின் விலையை 80 டொலர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ள போதிலும் அதற்கு ஏனைய நாடுகள் எதிர்ப்பு வெளியி டுகின்றன. எவ்வாறாயினும் இன்னும் ஒரு வருட காலப்பகுதிக்குள் உலக சந்தையில் எரிப்பொருளின் விலை குறையும் என நம்புகின்றோம். அப்படி குறையும் போது அந்த சலுகையை மக்…
-
- 0 replies
- 220 views
-
-
பிரபாகரன், தமிழ்ச்செல்வன் விரும்பினால் இவ்வாரத்திற்குள் கொரியாவுக்கு அனுப்புவேன் சபையில் பிரதியமைச்சர் மேர்வின் சில்ஜா நாட்டில் வாழ்கின்றவர்களை இனம், மொழி, மத பேதங்களை மறந்து தகுதிக்கேற்ப வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். வடகிழக்கில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறானது. பிரபாகரன், தமிழ்ச்செல்வன் விரும்பினால் இந்த கிழமைக்குள் அவர்களை கொரியா நாட்டிற்கு அனுப்பிவைப்பேன் என்று தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்…
-
- 7 replies
- 2.7k views
-
-
ஐ.நாவின் கொள்கைகளுடன் சிறிலங்கா இணங்க வேண்டும் – ஐ.நா பேச்சாளர் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா தனது படைகளை ஈடுபடுத்துவதற்கு, ஐ.நாவின் கொள்கைகளுடன் இணங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல், 49 சிறிலங்கா படையினர் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ஐ.நாவின் கொள்கைகளுக்கு அமைய, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு நடைமுறைகளை உறுதிப்படுத்துவதில், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து ஐ.நா பணியாற்ற…
-
- 0 replies
- 133 views
-
-
அமெரிக்க வைரஸ் குறித்து எச்சரிக்கை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்பிபி 1.5 கொரோனா உப பிறழ்வு இலங்கைக்குள் விரைவாக நுழையும் சாத்தியம் காணப்படுவதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல நாடுகளில் பரவியுள்ள குறித்த வைரஸ் பிறழ்வு, அந்த நாடுகளில் வேகமாகப் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இது குறித்து எச்சரிக்கை நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த மாறுபாட்டின் எக்ஸ்பிபி பிறழ்வு இலங்கையில் கடந்த நவம்பரில் கண்டறியப்பட்ட போதும் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்ட 1.5 உப பிறழ்வு இதுவரை அடையாளம் காணப்பட்டவில்லை. https://www.tamilmirror.lk/செய்திகள்/அமரகக-வரஸ-கறதத-எசசரகக/175-310293
-
- 0 replies
- 717 views
-
-
சீனாவின் நுரைச்சோலை அனல்மின்நிலையத்திட்டம் தோல்வி? Thursday, February 17, 2011, 4:48 நுரைச்சோலை அனல் மின் செயற்திட்டம் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லையென மின்வலு எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி செயற்திட்டம் இம்மாதம் 25ம் திகதி திறக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பணிகளில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டன. அதனால் திறப்புவிழா பிற்போடப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக மின்வலு, எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை செயற்திட்டம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் நுரைச்சோலை குறித்த செய்திகளை வெளியிடும் போதும், திறப்பு விழாவின்போதும் தனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்ப…
-
- 0 replies
- 1.1k views
-