ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
100 கோடி சனத்தொகையைத் தாண்டிய சீனாவிலும் இந்தியாவிலும் 30இற்கும் குறைவான அமைச்சர்களே உள்ள நிலையில், இலங்கையில் 56 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை அநீதியானது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன. நேற்று புதிதாக 9 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 56 ஆகும். அத்துடன், நேற்று பதவியேற்ற புதியவர்களுடன் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையுடன் 38 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு மேலதிகமாக 10 சிரேஷ்ட அமைச்சர்களும், வேலைத் திட்டங்களுக்கான இரண்டு அமைச்சர்களும் பதவி வகிக்கின்றனர். எனினும், தேர்தல் வாக்குறுதிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அமைச்சர…
-
- 0 replies
- 405 views
-
-
ராணுவத்தில் பணியாற்றுவோருக்கு, அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை இல்லை'என, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ராணுவத் துக்கு வெற்றி தேடித் தந்தவர் சரத் பொன்சேகா. இவர்,ராணுவத் தளபதியாக இருந்தபோது தான், போரில் வெற்றி கிடைத்தது. தற்போது இவர், இலங்கை ராணுவப் படைகளின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். ராணுவத் தளபதி யைப் போல், இந்த பதவிக்கு போதிய அதிகாரம் இல்லை என, கூறப்படுகிறது.இலங்கையில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், சரத் பொன்சேகா போட்டியிடப் போவதாக வெளியான தகவலை அடுத்து, அவருக்கு அதிகாரம் இல்லாத பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக, இலங்கையின் தற்போதைய ராணுவத் தள…
-
- 1 reply
- 1.6k views
-
-
எங்கும் பிரச்சினை உள்ளது. எங்கும் பாதிப்புக்களும் உள்ளன. எனினும் எவ்வாறான பாதிப்புக்கள் வந்தாலும் இத்திட்டம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதால் யாழ், கிளிநொச்சி குடிதண்ணீர்த் திட்டம் விரைந்து நடைமுறைப்படுத்த ஓர் அலகாக செயற்படும் மாகாண சபையும் பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும் என மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இரணைமடு யாழ் குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பான கூட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன…
-
- 3 replies
- 418 views
-
-
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய செய்தி அலைகள் நிகழ்ச்சிக்கு தவபாலன் அறிவன் வழங்கிய நேர்காணல். 5 ஆம் வகுப்பு புலமைப் பரிசிலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றவர் தவபாலன் அறிவன். http://www.yarl.com/audio/thavapalan_arivan_091109.mp3
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதபோதும், இந்த மாநாட்டில் பங்குகொள்ள வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை அது பிரத்தியேகமாகச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. இந்தப் பேச்சின்போது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், இறுதிப்போர்க் குற்றங்கள் ஆகியன தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதுடன், இவை தொடர்பில் ஆவணம் ஒன்றையும் கூட்டமைப்பு அந்தத் தலைவர்களிடம் கையளிக்கவுள்ளது என்று அதன் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. இதன்போது அடுத்த மாதம் கொழும்பில் இடம்…
-
- 0 replies
- 244 views
-
-
இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அருன்ட்டா போர்க்கப்பல் அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான "அருன்ட்டா" போர்க்கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை–அவுஸ்திரேலிய நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலகட்டத்தில் வருகை தரும் 25 ஆவது போர்க்கப்பல் இதுவாகும். அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான எச்.எம்.ஏ.எஸ். அருன்ட்டா போர்க்கப்பல் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நேற்றுக்காலை வந்தடைந்த இந்த போர்க்கப்ப…
-
- 0 replies
- 326 views
-
-
தப்புத்தாளங்கள் போடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்! முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஈழத் தமிழர்கள் தமது படைபலத்தை மட்டும் இழக்கவில்லை, தமது அரசியல் பலத்தையும் சேர்த்தே இழந்துள்ளார்கள் என்பது தற்போதைய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கதகளி நடனத்தினால் உணர்த்தப்பட்டு வருகின்றது. விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்ட பின்னரும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழர்களின் அரசியல் போர்க் களத்தை முன் நகர்த்திச் செல்லும் என்றே தமிழர்கள் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கை தற்போது சிதைவடைந்தே செல்கின்றது.முள்ளிவாய்க்கால் பேரழிவில் தப்பிப்பிழைத்தவர்களை முள்வேலி முகாமுக்குள் முடக்கிச் சித்திரவதைக் குட்படுத்திய போதும், நாளாந்தம் அங்கிருந்தவ…
-
- 2 replies
- 790 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (15-07-2017)
-
- 0 replies
- 632 views
-
-
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு அவசர அவசரமாக பல பணிகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது. இதன் ஒருகட்டமாகவே கட்டுநாயக்க - கொழும்பு நெடுஞ்சாலையும் அவசரமாக திறந்துவைக்கப்பட்டது. அந்த அவசரத்தில் என்னவோ தெரியவில்லை. அங்கு வைக்கப்பட்டுள்ள ''எச்சரிக்கை'' பலகையும் அவசரமாக எழுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக பாதசாரிகளுக்கான அறிவித்தல் பலகையில், பிரவேசிப்பதற்கு தடை என்பதற்குப் பதிலாகவே ''விரவேசிப்பதற்டு தலட'' என எழுதப்பட்டுள்ளது. அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கீழ் உள்ள அமைச்சின் மும்மொழிக் கொள்கை விஸ்தரிப்பின் அடையாளமாக இந்த அறிவித்தல் பலகை அமைந்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலை பெயர் பலகையில் தமிழ் இவ்வாறு மெல்ல செத்துக் கொண்ட…
-
- 7 replies
- 921 views
-
-
ஜனாதிபதி – பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் இல்லை அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு தொடரணிக்கு சொந்தமான அனைத்து வாகனங்களும் இலவசமாக பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் இதுகுறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நோயாளர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து நோயாளர் காவு வண்டிகளும் அதிவேக நெடுஞ்சாலையை இலவசமாகப் பயன்படுத்த முடியும் எனவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1252171
-
- 0 replies
- 272 views
-
-
தேசிய பிக்கு முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்காவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்த இந்த முன்னணி தமக்கோ நாட்டு மக்களுக்கோ வழங்கிய உறுதி மொழிகளை மகிந்த நிறைவேற்றவில்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியை சரத் பொன்சேக்கா நிறைவேற்றியுள்ளதாகவும் இந்த முன்னணியின் பேச்சாளர் அத்தனகல ரத்னசார தேரோ குறிப்பிட்டார். மூலம்: http://www.tamilstar.org
-
- 0 replies
- 578 views
-
-
இராணுவத்தின் ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே - சரத் பொன்சேகா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண, கரன்னாகொட ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே. இவர்கள் தவறிழைத்தனர், கண்டிப்பாக இவர்களை தண்டிக்க வேண்டும் என்பதை சபையில் வலியுறுத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்குகளை மீண்டும் கையில் எடுப்பதுடன், கரன்னாகொடவிற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு ,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ,அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜ…
-
- 2 replies
- 481 views
-
-
விடுதலைப்புலிகளும் அவர்களது இறுக்கமான கலாச்சார கட்டுப்பாடுகளும் இருந்த வரையில் யாழ்ப்பாணம் தலை நிமிர்ந்திருந்தது. இப்போது கரையுடைத்த காட்டாற்று வெள்ளம் போல் கலாசார சீரழிவு தலைவிரித்து ஆடுகின்றது. இவ்வாறு புலம்பெயர் உறவுகளுக்கு யாழிலிருந்து சனீஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் உறவுகளுக்குயாழ்.சனீஸ்வரன் விடுத்துள்ள அன்பான வேண்டுகோள்:- அன்பான உறவுகளே! இன்று மானமுள்ள ஈழத் தமிழனின் ஒரேயொரு பற்றுக் கோடாயிருப்பது நீங்கள் மட்டும்தான். உங்கள் செயற்பாடுகளால் மட்டும்தான் இன்று தாய் தமிழ் ஈழ அன்னை உவகை கொண்டிருக்கின்றாள். உலகப்பந்தில் எமக்கொரு நாடு வேண்டும். கல்தோன்றி மண்தோன்றாக்காலத்து மூத்த தமிழுக்கென்று ஒரு நாடு வேண்டும். ஒரு அங்கீ…
-
- 2 replies
- 1.2k views
-
-
இத்தாலிய நேரத்தின்படி நேற்றிரவு 8 மணியளவில் ரோம் விமான நிலையத்தை சென்றடைந்தார். கோத்தபாயவின் இந்த பயணம் இரகசியமான பயணம் என தெரிவிக்கப்படுவதுடன் இத்தாலி அரசின் அழைப்பின்றியே அவர் அங்கு சென்றுள்ளார். அத்துடன் அங்குள்ள இலங்கை பிரஜைகளும் எவரும் வைபவங்கள் எதற்கும் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கவில்லை. இந்தநிலையில் இத்தாலியின் ரோம் நகரில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும்.சென்ட் மெரினோ என்ற நாட்டுக்கு செல்லவே கோத்தபாய ரோம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இத்தாலிக்கு நடுவில் அமைந்துள்ள இந்த நாடு 61 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட குட்டி நாடு. அந்த நாட்டின் மொத்த சனத் தொகை 31 ஆயிரமாகும். தனிநபர் வருமானம் 55.500 அமெரிக்க டொலர்கள். இத்தாலி நாட்டின் சட்டங்கள் சென்ட் மர…
-
- 0 replies
- 514 views
-
-
யாழ்.மாநகர சபையை கலைப்பது யாழ்.மக்களின் நலனை பாதிக்கும் – க.வி.விக்னேஸ்வரன் December 14, 2021 வெறும் கட்சி சார்பான முரண்பாடுகளால் யாழ். மாநகர சபை பாதீட்டை தோற்கடித்து ஒரு தகுதி வாய்ந்த நகர பிதாவை இழக்க நாங்கள் இடம் அளிக்கக்கூடாது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதால் நகரபிதா வி.மணிவண்ணனை வெளியேற்றலாம் என்ற எண்ணத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை நான் அறிவேன். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொந்த நலன்களுக்கு, விருப்பு வெறுப்புகளுக்கு முதலிடம் கொடுப்பதால்த் தான் இவ…
-
- 3 replies
- 366 views
-
-
யாழ். பல்கலையில் 13ஆவது பன்னாட்டு மாநாடு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13ஆவது பன்னாட்டு மாநாடு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது. http://newuthayan.com/story/16711.html
-
- 3 replies
- 1k views
-
-
2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உத்தியோகபூர்வ கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வழிமுறைகள் 2021 இறுதியளவில் அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 3 பில்லியனிற்கு மேலாகக் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் என்பதனை இலங்கை மத்திய வங்கியானது பொது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. கொவிட்-19 நோய்த்தொற்றின் பொருளாதாரத் தாக்கத்தினால் ஏற்பட்ட சிக்கல்களுக்கும் வெளிநாட்டுத் துறையின் பாதகமான அபிவிருத்திகளினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களுக்கும் மத்தியில் இலங்கைப் பொருளாதாரம் 2021 ஆண்டு முழுவதும் தாக்குப…
-
- 4 replies
- 457 views
-
-
இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுவது குறித்துக் காலக்கெடு விதிக்க முடியாது என அரசாங்கம் இப்போது அறிவித் துள்ளது. இதுவரை காலமும் எதிர்வரும் வருடம் ஜனவரி மாத இறுதிக்குள் இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற முடியும் என அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட ஒர் தினத்தில் வடக்கு இடம்பெயர் மக்களை மீள் குடியேற்ற முடியுமென அரசு ஒருபோதும் அறிவிக்கவில்லை எனவும், கூடிய விரைவில் இடம்பெயர் மக்களை மீள் குடியேற்ற முடியும் எனவும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதே வேளை வன்னி புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பத்தியூன் நேற்று தனது உரையில் இரண்டு மாதத்தினுள் மீழ் குடியமர்வு முடிந்து விடும் எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு இடம்பெயர் முகாம்…
-
- 0 replies
- 312 views
-
-
நிவாரணம் இல்லாத வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று அகில இலங்கை கமநல சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத்திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும் வரவு - செலவுத்திட்டத்தில் விவசாயிகள் மறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் வயதை 60 இல் இருந்து 63 ஆக அதிகரித்தமையை உடனடியாக இரத்துச் செய்", ' விவசாயிகளின் நிலுவையான ஓய்வூதியத்தை செலுத்துவதற்கு நிதி ஒதுக்கு" போன்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இவ்வார்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. P…
-
- 22 replies
- 3.5k views
-
-
தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணம் தயார் ! தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆவணம் தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அனுப்பிவைத்த …
-
- 7 replies
- 657 views
- 1 follower
-
-
நிபந்தனையின்றி தம்மை விடுவிக்க வேண்டுமென கோரி நாடு முழுவதில் உள்ள அரசியல் கைதிகள் இன்று அதிகாலை முதல் சாகுவரையான உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.கொழும்பு களுத்துறை, யாழ்ப்பாணம், அனுராதபுரம், மட்டக்களப்பு உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ், சிங்கள, முஸ்லீம் அரசியல் கைதிகள் இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கனேடிய பிரஜையான ரோய் மனோஜ் குமார் என்ற கைதியும் இந்த உண்ணாவிரதத்தில் இணைந்து கொண்டுள்ளார். இது குறித்து சிறைச்சாலை திணைக்களத்தின் பேச்சாளர் கென்னத் பெர்ணான்டோவிடம் கேட்ட போது, புதிய மெகசீன் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மாத்திரமே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 9…
-
- 0 replies
- 532 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடம் கிழக்கு மாகாணம் தொடர்பான அக்கறையும் அரசியல் செயற்பாடுகளும் குறைந்து வருவதாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.வடக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் , வடக்கு மாகாணசபைதான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற தவறான மாயை உருவாக்கப்படுவதாகவும், தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்தப் போக்கு தூரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார். 'வடக்கு மாகாண சபை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடனான தீர்வைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து தமிழ் மக…
-
- 0 replies
- 245 views
-
-
ஞானசார தேரருக்கு மீண்டும் அழைப்பு பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக, வடறுக விஜித தேரரால், கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க, ஞானசார தேரருக்கு, கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஞானசார-தேரருக்கு-மீண்டும்-அழைப்பு/175-202409
-
- 0 replies
- 219 views
-
-
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விரைவில் தீர்மானமொன்றை எடுப்பாரென நம்புகின்றேன் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- மைத்திரிபால சிறிசேனவுக்கு அடைக்கலம் கொடுத்து அவரை பாதுகாத்து வைத்திருப்பதுதான் நாம் செய்யும் பெரும் தவறு. அதனால் பலர் எம்மீது கோபத்தில் உள்ளனர். எனவே, அவர் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை ஜனாதிபதி செய்வார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறினால்கூட அது அரசின் இருப்புக்கு சவாலாக அமையாது. மைத்திரிபால சிறிசேன அப்பம் சாப்பிட்டுவிட்டு அந்த பக்கம் தாவிய பிறகு, நாம் புதிய கட்சியொன்றை உருவாக்கினோம். மஹிந்…
-
- 0 replies
- 468 views
-
-
இரே நேரத்தில் கப்பலில் அடைக்கலம் கோரிய இலங்கைத் தமிழ் மக்களின் ஒரு பகுதியினருக்கு அடைக்கலம் வழங்கிவிட்டு மறுபகுதியினரை அவுஸ்திரேலிய அரசு ஈன கண்டும் காணாமலும் இருக்கின்றது என இந்தோநேசியா கேள்வி எழுப்பியுள்ளது . உங்கள் கருத்து source : http://www.eelamsoon...eelam.html
-
- 1 reply
- 866 views
-