Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய மாயையில் இருந்து தமிழ்மக்கள் விடுபட வேண்டும்! -நக்கீரன் இலங்கையின் இனநெருக்கடி பற்றி இந்தியாவின் அணுகுமுறை என்ன? அதன் கோட்பாடு என்ன? இந்தியா அதில் தலையிடுமா? இது போன்ற கேள்விகளே இப்போது தமிழ் மக்களது மண்டையைக் குடைந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு அண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கை பதிலாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் “இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்த…

  2. "1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்." By Way of Deception: The Making of a Mossad officer "இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையில் யுத்தத்தை நடத்துவதற்கு மொசாட் வழிகாட்டி வந்துள்ளது. இலங்கையில் ஈழப்போரை முடிக்க விடாது தொடர்வதற்…

  3. போரினை முடிவுக்குக் கொண்டுவர 38முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன – விக்கிலீக்ஸ்! Posted by admin On May 10th, 2011 at 9:01 am மேற்குலகின் இராஜதந்திரிகள் 2009 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களும் இலங்கைத் தீவின் போரினை முடிபுக்குக் கொண்டு வருவதற்கு எவ்வாறு முனைப்புடன் முயன்றனர் என்பதை வெளிப்படுத்தும் 38 வரையான-விக்கிலீக்ஸ் ஊடாகக் கசிந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஆவணங்களை நோர்வேயின் ஆப்தன்போஸ்தன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆபதன்போஸ்தன் வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழகத்தினை இங்கே முழுமையாகத் தருகின்றோம். 2009 மார்ச் மாதம் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் போரினால் பாரிய மனிதாபிமான அழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார். அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் ப…

  4. இந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெறாது என்பதை இந்தியா தற்போது உணர்ந்துள்ளது. அதனால் தான் தீர்வு யோசனைகளை முன்வைக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் : நடைபெற இருக்கின்ற சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைத் தேர்தலில், எமது கட்சி போட்டியிடுகின்றது. சப்ரகமுவ மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சமில் ஜெயநெத்தியும், வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக குணசேன விஜயசிங்கவும் போட்டியிடுகின்றனர். இந்த அரசு இரண்டு பாதைகளில் பயணிக்கின்றது. ஒரு பக்கத்தில் யுத்தத்தை முன்னேடுத்து தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு முயல்கிறது. மறுபக்கத்தில் ஏகாதிபத்த…

  5. இலங்கைப் பிரச்னையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாரும் தனிமைப்படுத்திவிட முடியாது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகையின் ஏற்பாட்டின் பேரில் சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியது: இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்திலிருந்து இலங்கைத் தமிழர்கள் பக்கம் காங்கிரஸ் உறுதியாக நின்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. 1983ல் இருந்து இலங்கைத் தமிழர்களுக்குத் துணையாக நின்றுள்ளோம். ராஜீவ் காந்தியை இழந்துள்ளோம். அந்த இழப்பு ஏற்பட்டது தமிழ் மண்ணில்தான்.அந்த இழப்புக்கு யார் காரணம் என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது.காங்கிரசை பொருத்தவரை இலங்கை…

  6. சிறிலங்கா இராணுவத்தில் ஊழல் நபர்களும் பலவீனமான தளபதிகளும் உள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சரத் பொன்சேகா அளித்துள்ள நேர்காணல்: சிங்கப்பூரிலிருந்து நான் திரும்பிய போது மாவிலாறு பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. நான் பொறுப்பேற்ற பின்னர் படை நகர்வுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உத்திகள் வகுக்கப்பட்டன. இப்போது முழு அளவில் இயங்கி வருகிறேன். மூதூர் மீட்புக்கான சமர் எனது கட்டுப்பாட்டின் கீழ்தான் நடந்தது. நாம் படை பின் நகர்வை மேற்கொண்டு மேலதிக படையினரை வவுனியாவிலிருந்து அழைத்துக் கொண்டு விரைவில் மீட்டோம். 24 மணி நேரம் அல்லது 48 மணிநேரம் தாமதமாகியிருந்தால் முகாம்களும் மூதூர் நகர…

    • 3 replies
    • 1.5k views
  7. மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் என்பதனால் இம்மடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மட்டில் கூடிய கரிசனை செலுத்துவீர்கள் என நான் திடமாகவே நம்புகின்றேன். இலங்கைத்தீவில் சுதந்திரத்திற்கு பின்னதான காலப்பகுதியில் பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்கள் பல வேளைகளில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அகிம்சைப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் ஏறக்குறைய சுதந்திரமடைந்து முப்பது வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டது. கடந்த 30 வடங்களுக்கு மேலான காலப்பகுதியில் சிறிது சிறிதாக நமது தேசம் வளர்ந்து இறுதியில் ஒரு தேசத்திற்கு வேண்டிய பெரும்பாலான கட்டமைப்புகள…

    • 3 replies
    • 1.5k views
  8. கதிர்காமத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட முருகன் சிலை தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. [ வியாழக்கிழமை, 12 யூன் 2008, 12:03.52 PM GMT +05:30 ] கதிர்காமத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் பழமை வாய்ந்த முருகன் சிலையை தமிழக காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் இந்த சிலை சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்தது என அகழ்வாராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த சிலை தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய உலோகங்களினால் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இந்த சிலையை உ:ள்ளுர் சந்தையில் விற்பனை செய்ய முயன்ற போது கைதுசெய்யப்பட்டதுடன் சிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

  9. பிரபாகரனின் மொழியும் இந்த நாட்டின் சிலரின் மொழியும் இன்று ஒன்றாகிவிட்டது வீரகேசரி நாளேடு பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வெற்றிவெறும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இருப்பினும் என்னை தவறிழைக்கச் செய்வதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதும் எங்களை பதவி விலகுமாறு இத்தகையவர்கள் கூறுகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எம்மை பதவி விலகுமாறு கோருபவர்கள் மிக் ரக விமானங்கள் குறித்தான தகவல்களை வெளியிட்டு பயங்கரவாதிகளுபு உதவிபுரிகின்றனர். பிரபாகரனின் மொழியும் இன்று இந்த நாட்டின் சிலரின் மொழியும் ஒன்றாகிவிட்டது. புலிகள் இந்த வலயத்துக்கு மட்டுமல்லஇ முழு உலகத்திற்குமே அச்சு…

  10. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை எமது நாட்டுக்கு கிடைக்காவிட்டால் நாட்டின் ஆடைக் கைத்தொழில்துறை வீழச்சியடைந்து விடும். இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்க நேரிடும். அரசாங்கம் சர்வதேச சமூகத்தை பகைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச நாடுகளுடனான நட்புறவை இலங்கை இழந்து வருகிறது என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் சுதந்திரத்திற்கான அரங்கின் பிரதான அமைப்பாளர்களில் ஒருவருமான பிட்டோ பெர்னாந்து கூறியுள்ளார். சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பின் கம்பஹா மாவட்ட பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வு நீர்கொழும்பு மல்வத்தை வீதியில் அமைந்துள்ள மீள ஒத்துழைப்பு இயக்கத்தின் கூட்ட மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்…

  11. வட்டுக்கோட்டையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட ஈழத் தமிழர்களது விடுதலைப் போர் புதிய பரிமாணங்களோடு புலம்பெயர் தேசங்களில் பலம் பெற்று வருகின்றது. இது சிங்கள தேசம் முற்றிலும் எதிர்பார்க்காத புதிய களமாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளது இராணுவக் கட்டமைப்பை அழித்துவிட்டால், ஈழத் தமிழர்களின் விடுதலை வேட்கையை இல்லாமல் ஆக்கி விடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் கணிப்பாக இருந்தது. பிரபாகரன் அவர்களை மையப்படுத்தியே விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கி வந்ததால் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும் பிளவுகளும் உருவாகும் என்பதே சிங்களத்தின் கனவாக இருந்தது. அதற்கான பல சதிகாரர்களும் தமிழ் மக…

  12. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டபின்னர் அது தமிழர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் என பலரும் ஆர்ருடம் கூறினர் ஏன் காங்கிரஸ் கட்சியினை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் சில தமிழ் எம்.பி க்களும் கூட அப்படித்தான் கூறினர். ஆனால் நடந்தது , நடக்கின்றது வேறு மாதிரித்தான் சிங்களம் தான் கூறியது போலவே செய்துவருகின்றது. அதாவது இந்தியா, உலக நாடுகள் மீது தமது எதி்ர்ப்பினை காட்டிவருகின்றது சிங்களம். மகாத்மா காந்தி சிலையினை உடைத்தார்கள், தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றார்கள், சிங்கள குடியேற்றங்களைச் செய்துவருகின்றார்கள்,ஊடகங்கள் ஊடாக இனவாத கருத்துக்களும், சர்வதேசத்திற்கு எதிரான கருத்துக்களும் பரப்ப…

  13. பிரதமரை புலிகள் இலக்கு வைக்கின்றார்களா? - பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது Tuesday, 13 May 2008 பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கவைப் படுகொலை செய்வதற்கும், ஹொரணைப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளைக் குண்டு வைத்துத் தகர்ப்பதற்கும் விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதையடுத்து, பிரதமரினதும், ஆடைத் தொழிற்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக கொழும்பில் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர் ஒருவர்தான் இந்தத் தகவல்களைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து ஹொரணைப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ள காவல்துறையினர், அங்கு பணிபுரியும் ஊழ…

    • 1 reply
    • 1.5k views
  14. மூதூர் படுகொலையில் மறைக்கப்பட்ட மிக முக்கிய "சாட்சி ஆவணம்": அம்பலப்படுத்தியுள்ளது அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம். மூதூர் படுகொலையில் முக்கியமான "சாட்சி ஆவணம்" ஒன்றை நீதிமன்றில் சிறிலங்க அரசாங்கம் மறைத்ததனை அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது. பிரித்தானிய சட்ட வல்லுநர் மைக்கேல் பிரின்பௌம் அந்த ஆணையத்திடம் மூதூர் படுகொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை கையளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் உடல்களை பரிசோதனை செய்த அவுஸ்திரேலியாவின் மல்கொல்ம் டொட் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த ஒக்ரோபர் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டோரின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனை …

  15. பொல்லா வேடச் சாக்கியப் புல்லர் -மறவன்புலவு க. சச்சிதானந்தன் (தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினர்) புத்தத் துறவியான வணக்கத்துக்குரிய அத்துரிலிய இரத்தின தேரர், இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர். தேசிய எல (ஈழ) உறுமல் கட்சியின் நாடாளுமன்றக் குழத் தலைவர். 45 வயதினர். புத்த சமயத்தவர் ஆய்தம் ஏந்திப் போராட வேண்டும், போர்மூலம் தமிழரின் எதிர்ப்பை முறியடிக்க வேண்டும். சிங்கள புத்த மேலாட்சியை நிலை நிறுத்த வேண்டும். இவ்வாறாக அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறார். சிங்களச் சிற்றூர்கள் தொடக்கம் நகரங்கள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணித்து இலங்கைப் போர்ப் படைக்குச் சிங்கள இளைஞர்களைத் திரட்டுகிறார். போர் முனைகளுக்குச் சென்று சிங்…

    • 1 reply
    • 1.5k views
  16. ஞாயிறு 20-01-2008 22:31 மணி தமிழீழம் [மகான்] யாழில் படையினரின் வணிக நிலையங்களுக்கு செல்லவேண்டாம் - எல்லாளன் படை எச்சரிக்கை சிறீலங்காப் படையினரால் நடாத்தப்படும் வணிக நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ் வலிகாமப் பகுதியில் காணப்படும் அப்பக்கடைகள், வணிக நிலையங்கள் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களின் தகவல் மையமாகவும், திட்டங்கள் தீட்டப்படும் இடமாகவும் திகழ்வதால் அப்பகுதிகளுக்குச் சென்று தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் துணை போக வேண்டாம் என எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  17. (ஆர்.யசி) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும் எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்ப…

  18. மட்டக்களப்பு தாழங்குடாவில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தாழங்குடா கல்முனை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.05 மணிக்கு சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் ஒன்று கூடிய இடத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிரடிப்படையினரில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். மேலும் பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 0 replies
    • 1.5k views
  19. வீரகேசரி நாளேடு - வடக்கில் உக்கிரமடைந்துள்ள மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் தமிழ் சகோதர, சகோதரிகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை விடவும் எமக்கு அக்கறை அதிகம் என்று அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமாகிய கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அதனாலேயே இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுக்காக 800 மெட்ரிக் தொன் உலர் உணவுப் பொருட்களை அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  20. மியான்மாரில் தோல்வி கண்ட அணுகுமுறையை இலங்கையில் கடைப்பிடிக்கும் இந்தியா [13 - June - 2007] ஷ்ரீலங்காவில் புலிகள் இயக்கப் பயங்கரவாதத்தை ஆரம்பித்து வைத்தது இந்திய அரச உளவு அமைப்பாகிய `றோ'தான். இன்றும் அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் ராமன் ஷ்ரீலங்கா படையினருக்கு இந்தியா, ஆயுதங்கள் வழங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இந்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் பொருள், ஷ்ரீலங்காவில் தொடர்ந்தும் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு வழங்கி அதன் பயங்கரவாத செயற்பாடுகளை ஊக்குவிப்பதேயாகும். அண்மையில் தமிழ்ச்செல்வன் பி.எஸ். 89 ரக நவீன தொழில்நுட்பம் கொண்ட ரொக்கட் லோஞ்சர் ஏவுகணையை தோளில் வைத்துக் கொண்டு அதன் செயற்பாட்டை பரிசீலிக்கும் முறையைக் காட்டும் புகைப்படம் புலிகளின் சர்வத…

  21. வன்னியில் உக்கிரமுறும் வான் தாக்குதல்கள் 03.10.2008 விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவர்களை ஒழித்துக் கட்டும் போர் முடிவுக்கு வந்துகொண் டிருப்பதாக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட அரச தரப்பின் உயர்மட்டப் பிரமுகர்கள் பலரும் கடந்த சில நாட்களாக ஆரூடம் ஒன்றைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் கேந்திரமையமான அவர்களின் அரச நிர்வாகக் கட்டமைப்புகள் அமைந்துள்ள கிளிநொச்சி நகர் மீது, படைநகர்வு பெரிய அளவில் தொடங்கப்பட உள்ளதாக அவர்கள் அடிக்கடி அறிவித்து வந்தார்கள். கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னும் சிறிது தூரமே உள்ளது. எமது படையினர் கிளிநொச்…

  22. வன்னிக்களத்தில் சிறப்பாகச் செயற்பட்ட களப்பிடிப்பாளர்கள் மதிப்பளிப்பு திகதி: 21.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] வன்னிக்களமுனையில் சிறப்பான முறையில் படப்பிடிப்புக்களை மேற்கொண்ட களப்படப்பிடிப்பாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நேற்று புதுக்குடியிருப்பில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு ஒளிக்கலைப்பிரிவுப் பொறுப்பாளர் செந்தோழன் தலைமையில் இடம்பெற்றது. வன்னிக் களமுனையில் சிறிலங்காப் படையினரோடு தீரமிகு தாக்குதலில் ஈடுபடும் தாக்குதல் அணிகளோடு படையினரின் தாக்குதல்களுக்கு மத்தியில் களத்தில் படப்பிடிப்புகளை மேற்கொண்டு வரலாற்றுப் பதிவுகளை ஒளிக்கலைப் பிரிவு போராளிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந் நிகழ்வில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப…

  23. இரகசியம் என்றோ ஒரு நாள் பரகசியம் ஆகும் என்று பேச்சு வழக்கில் கூறப்படுவது உண்டு. இன்றைக்கு நீ இரகசியமாக வைத்திருக்க முயல்வது என்றோ ஒரு நாளைக்கு வெளியே தெரியவராமலா போகும் என்று விட யங்களை மூடிமறைக்க முயல்வோரைப் பார்த்து உண்மை அறிய விரும்புபவர்கள் நையாண்டியாகக் கேட்பதுமுண்டு. இலங்கை விவகாரத்தில் இந்தியா வெளிப்படுத்த விரும்பாமல், மறைத்து வைத்திருந்த, இரகசியம் பேணிய விடயம், கொழும்பு நாடாளுமன்றத்தில் பரகசியப்படுத் தப்பட்டுவிட்டது. சபை முதல்வரும் சுகாதார அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை உண்மையைக் கட்டவிழ்த்துவிட்டார். இந்திய வைத்தியர்களின் வருகை குறித்து ஜே.வி.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபத்துக்கும் கண்டனத்துக்கும் பத…

  24. ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய மகிந்த முயற்சி. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 7 முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்ய மகிந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து சட்டமா அதிபர் சி.ஆர்.டீ சில்வா மற்றும் சிறிலங்கா காவல்துறைத் தலைவர் விக்ரர் பெரேரா ஆகியோரிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க முறைப்பாடு செய்துள்ளார். மகிந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இத்தகைய எந்த ஒரு நடவடிக்கையும் ஜனநாயகத்தன்மையற்று- சட்டவிரோதமானது. மனித உரிமை மீறலானது என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் பணிகளை மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொ…

    • 2 replies
    • 1.5k views
  25. திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறுத்தம்! மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் நடவடிக்கை! written by adminAugust 12, 2023 திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நிர்மாணிக்க இருக்கும் விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன. திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கவிருக்கும் பௌத்த விகாரையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.