Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாகரையில் புலிகள் படையினர் மீண்டும் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றன [Friday December 08 2006 09:57:55 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் மீண்டும் நேற்றிரவு முதல் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றன விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வாகரையின் தென்மேற்க்கு பகுதியில் உள்ள கட்டு முறிப்பு பகுதியில் 5கிலோமீற்றர் தூரம் முன்னேறியுள்ளதாக புலிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தாம் பதில் தாக்குதல் நடத்திவருவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் . இன்று காலையில் அந்த பகுதியில் ஷெல் தாக்குதல் சத்தங்கள் கேட்டுகொண்டிருப்பதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன

    • 12 replies
    • 4.2k views
  2. அனனவரும் இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்றால் அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும் தொடர்புகொண்டு இதற்கு சர்வதேசத்தின் பதில் என்ன என்று கேட்க வேண்டும்? உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பியோ தொலைபேசி மூலமோ அனுகி ஒரு அழுத்ததை கொடுக்கவும். இலங்கை அரசை பயங்கரவாத அரசாக பிரகடன படுத்த வேண்டும். அனைத்து தூதரகங்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரிந்த தூதரக முகவரிகளை இணைக்கவும். ஒவ்வொருவரும் 100 பேருக்காவது தயவுசெய்து அனுப்பவும்.

    • 15 replies
    • 4.2k views
  3. வி.உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்தமடல் - சேரமான் விசுவநாதனின் ருத்திர புத்திரனே, நியூயோர்க்கை கலங்கடிக்கும் சட்ட அறிஞனே, நாடுகடந்து அரசமைக்கும் அறிஞர்களின் அதிபதியே, வணக்கம்! மே 2 - நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல்! கேட்கும் போதே மெய்சிலிர்க்கின்றது. மயிர்க்காம்பெல்லாம் கூச்செறிந்து புல்லரிக்கின்றது. புதிய வடிவம்! புதிய சிந்தனை! புதிய பாதை! தமிழீழம் தமிழர்களுக்கானது மட்டுமல்ல: அங்கு இரண்டு தாயகங்கள் என்கின்றீர்கள்! ஒன்று முஸ்லிம்களின் தாயகம், மற்றையது தமிழர்களின் தாயகம் என்கின்றீர்கள் ஈழத்தீவில் தமிழீழ அரசமைக்கும் உரிமை தமிழர்களுக்கு உண்டென்றால்... தமிழீழத்தைத் துண்டாடி அரசமைக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டென்கின்றீர்கள்! இப்படித்தான…

  4. ஏப்ரல் 2ஆம் நாள் திங்கட்கிழமை ஒட்டாவா கனடிய பாராளுமன்ற முன்றலில் நன்றி தெரிவிக்குமுகமாக திரண்ட கனடிய தமிழர்களை நாடி ஆளும் கன்சவேட்டிவ் மற்றும் புதிய சனநாயகக்கட்சி, லிபரல் ஆகிய எதிர்கட்சிகளைச் சேர்ந்த 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாறாகத் திரண்டனர். சிறீலங்கா குறித்த விடயத்தில் கடந்த ஒரு வருடமாக கனடிய தேசமே அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாக கடும்போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில் அதற்கு தமது நன்றியறிதலை தெரிவிக்கும் முகமாக ரொரன்ரோ, மொன்றியல், ஒட்டாவா இருந்து திரண்ட நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை கனடிய பாராளுமன்ற முன்றலில் நடாத்தினர். தமிழர்களின் நன்றியறிதலை ஏற்று அவர்கள் முன் வரிசையாக நீண்ட நேரமாக உரையாற்றிய அனைத்துப் பாராள…

  5. அம்மா ஒரு நாள் வீட்டிற்கு வருவா என தடுப்பு முகாம்களில் பல சிறார்கள் காத்திருக்கின்றனர்..... என்ன கொடுமை இது, அவர்கள் இறந்ததைக் கூட விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக எமது சிறார்கள் தடுப்பு முகாம்களில் தமது தாய் தந்தையர் ஒரு நாள் வருவார்கள் எனக் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் புல்மோட்டை தடுப்பு முகாமிற்கு விஜயம்செய்த, பணியாளரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கண்ணீர் மல்க கூறிய கதை நெஞ்சை உருக்கியது. தடுப்பு முகாம்களில் பல குழந்தைகள், தமது சகோதரருடன் இருப்பதாகவும், அவர்களின் தாய் தந்தையர் இறந்த விடையம் தெரியாத நிலையில் அவர்கள் ஒரு நாள் தம்மை பார்க்கவருவார்கள் என்று கூறியவாறு, அரை குறை உடுப்புடன் அங்கே சிறார்கள் இருப்பதாக ஒரு வெளிநாட்டவர் குறிப்பிட்டார். அந்தச் சி…

    • 26 replies
    • 4.2k views
  6. தமது முஸ்லிம் மக்கள் சார்பில் முதலமைச்சர் தெரிவானால் கிழக்கில் இருந்து 12 மணித்தியாலங்களில் தமிழர்கள் வன்னிக்கு விரட்டப்படுவார்கள் என ஜிகாத் என்னும் கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள பிரசுரத்தில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/12_10.html

    • 11 replies
    • 4.2k views
  7. ரோசியின் பேரழகு என்னை மயக்குகிறது. அதனால் அவரால் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு வார்த்தைகள் தடுமாறுகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரோசி சேனாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்;கையிலேயே அமைச்சர் வெல்கம இவ்வாறு குறிப்பிட்டார். 'இன்று நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கின்றேன். ஏனெனில் எனது 19 வருட அரசியல் வரலாற்றில் இன்று ஒரு பேரழகி என்னிடம் கேள்வி கேட்டுள்ளார். அந்தப் பேரழகிக்கு பதில் அளிக்க நான் கொடுத்து வைத்தவனாக இருக்கின்;றேன். இன்று நான் பிரதி சபாநாயகரைப் பார்த்து பதில் அளிக்கப் போவதில்லை…

    • 7 replies
    • 4.2k views
  8. டயஸ்போரா என்று தங்களை பெருமையாக ஆங்கிலத்தில் அழைத்துக் கொள்ளும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்கு வந்து உண்மை நிலை என்ன என்பதை உணர்ந்து கொள்ளாமல் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்த பிரதி அமைச்சர், கரு நா முரளிதர இந்த டயஸ்போராவைச் சேர்ந்த தமிழர்கள் மாலைப் பொழுதில் மதுசாலைகளுக்குச் சென்று மதுவிற்காக செலவிடும் பணத்தை மீதப்படுத்தி இங்கு வீடின்றி துன்பப்படும் மக்களுக்கு ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுத்து தங்களது தமிழ் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். யுத்த கருமேகங்கள் எங்கள் நாட்டிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு இன்று அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருப்பதுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து…

  9. வணக்கம் தமிழ் வொயிஸ் எழுதிய “ மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு” என்ற கட்டுரையைப் படித்தேன். ஆக்கத்தின் மூலம் எங்கிருந்தோ தெரியவில்லை. ஆனாலும் ஒரு சில குறிப்புக்கள். ஒவ்வொருவருக்கும் எழுதுவதற்கு உரிமையுண்டு. எல்லோரும் தங்களுடைய கருத்துக்களை எழுத வேண்டும். அத்தோடு, எது சரி, எது பிழை என்பதைக் கண்டறியக்கூடிய திறமையும் இருத்தல் அவசியம். பக்கப்பாடு இருக்கலாகாது. அன்றய காலகட்டத்த்கில் புலிகள் உருவாகி போராட்டத்தில் இறங்கிய பொழுது தாயகத்தின் அரசியல்வாதிகள் திரு அமிர்தலிங்கம் உட்பட, தங்களுக்கென்று இயக்கங்களை உருவாக்கி ஒன்றுக்கொன்று முரண்பட்டு, புலிகளைத்தவிர எனய இயக்கங்கள் அனைத்தும் ஒட்டுக்குளுக்களாக மாறினார்கள். ஒரு சில இந்தியாவின் தோள் ஒட்டு…

  10. யாழ். கோட்டைக்கு அருகில் பண்ணைக் கடற்கரையோரமாக பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்கா பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் "கிறீன் பார்க்" திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. 12 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் இந்தப் பூங்காவின் பணிகள் தற்போது 75 வீதம் பூர்த்தியடைந்துள்ளன என்று வடமாகாண நகர அமைச்சின் பணிப்பாளர் குறிப்பிட்டார். இந்த வருட இறுதிக்குள் இந்த பொழுதுபோக்கு மையம் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா திறப்பதற்கு முன்னரே அதைப் பயன்படுத்த் தொடங்கிவிட்டனர் இயற்கையை விரும்பும் பலர். யாழ்ப்பாணம் வரும் தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகளும் இங்கு பொழுதைக் களித்து புகைப்படங்களை எடுப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. படங்…

    • 29 replies
    • 4.2k views
  11. Started by BLUE BIRD,

    [size=5]ஒபாமா வென்றார்![/size] [size=5] இன்னும் நான்கு வருடங்களுக்கு ஆட்சி செய்ய அமெரிக்கர்கள் அனுமதி அளித்துள்ளனர்.வாழ்க! ஒபாமா![/size] http://www.cnn.com/

  12. தங்கம்மா அப்பாக்குட்டி காலமானார் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 05:52 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சைவத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய "சிவத்தமிழ்ச் செல்வி" தங்கம்மா அப்பாக்குட்டி இன்று காலமானார். அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 83. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகியாக இருந்து சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார். பல நாடுகளுக்கும் சென்று சைவ சொற்பொழிவுகள் ஆற்றியும் தனது ஆதரவு இல்லங்களுக…

  13. ஸ்கந்தபுரம் கோணாவில் பகுதியினூடாக சிறீலங்கா படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிப்பின் போது 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகள் மேலும் அறிவித்துள்ளதாவது, கோணாவில் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணியளவில் பெருமளவிலான முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்ட படையினர் விடுதலைப் புலிகளின் இலக்குகளை நோக்கி செறிவான எறிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை நடத்தியபடி முன்னேறினர். படையினர் மேற்கொண்ட இந்த முன்னகர்வுத் தாக்குதல்களுக்கு எதிராக உக்கிர எதிர்த்தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டன. இந்த எதிர்த்தாக்குதல்கள் சுமார் இரண்டரை மணித…

  14. யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு பொலிஸாரால் குறித்தவீடு சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை இன்று இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் விசாரணைக்கு உள்படுத்தினர். அத்துடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரிடமும் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். இதன்போது அங்கிர…

    • 44 replies
    • 4.2k views
  15. தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் தர்ஷன் தர்மராஜ் விடுதலைப்புலி சந்தேக நபர் என காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி தைபொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு> அனுராதபுரத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்ற தர்ஷனை முகத்துவார காவற்துறையினர் கைதுசெய்து அழைத்துச் சென்று காவற்துறையில் வைத்து தாக்கியுள்ளனர். கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஜீப் வண்டியில் சென்ற காவற்துறையினர் தர்ஷனை விடுதலைப்புலி சந்தேக நபர் எனக் கூறி பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர். இதன் போது தான் மச்சான் சிங்கள திரைப்படம் மற்றும் சீனவசந்தய என்ற சிங்கள தொலைக்காட்சி நாடகத்தில் நடித்துள்ளதாக தர்ஷன் தெரிவித்துள்ளார். அதனையும் பொருட்படுத்தாது காவற்துறையினர்…

  16. சென்னை : இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா, இல்லையா என்பதை அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பதுதான் நலம் என்று தான் கருதுவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கை பிரச்னை குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைப் பிரச்னையில் கட‌ந்த ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டேன், இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டுவிடுகிறேன். இதனிடையே மத்திய அரசின் அயலுறவு‌ச் செயலர் சிவசங்கர் மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் -இலங்கை அரசு அப்பாவித் தமி…

  17. கொழும்பு கொலன்னாவைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல். மேலதிக விவரங்கள் தெரியவில்லை.

    • 7 replies
    • 4.2k views
  18. (பிரபா மதன்) வித்தியாவிற்காக போராடும் நெஞ்சங்கள் சரணியாவிற்காகவும் போராட வேண்டும் ,அவரின் புகைப்படத்தையும் ஊர்வலத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் ,அந்த கொலையை மறைக்க அவரது பாட்டியை மிரட்டிய பொலிஸ்காரர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் வன்னியை சேர்ந்த 16 வயதுடைய சரண்யா எனும் பாடசாலை மாணவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையிலேயே இது தொடர்பிலான விபரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. சரண்யா பெற்றோரை இழந்த பாடசாலை மாணவி. 2006ம் ஆண்டு இடம் பெற்ற யுத்தத்தில் சரண்யாவின் தந்தை உயிரிழந்ததுடன், அவரது தாயார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது பாட்டியின் அரவணைப்பிலேயே சரண்யா மற்றும் அவரது இர…

    • 14 replies
    • 4.2k views
  19. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் இன்று தமிழர் தலைநகர் திருகோணமலையில் இடம்பெற்றது. இந்தநிலையில், 184 வாக்குகளைப் பெற்று சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

  20. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுதான் விடுதலைப் புலிகள் செய்த தவறுகளிலேயே மிகப் பெரிய தவறாகும் என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து என்டிடிவிக்கு ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில், ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததன் மூலம் இந்தியாவிடமிருந்து கிடைத்து வந்த அனுதாபத்தையும், ஆதரவையும் இழந்து விட்டார் பிரபாகரன். அந்த சம்பவத்திற்கு முன்பு வரை இந்தியாவின் அனுதாபம் பிரபாகரனுக்கு இருந்தது. ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றதன் மூலம் அதை இழந்து விட்டார் பிரபாகரன். துப்பாக்கியால் எதையும் சாதிக்க முடியும் என நினைத்தார் பிரபாகரன். ராஜீ்வ் காந்தி அமைதியான தீர்வை ஏற்படுத்த முயன்றார். அதை பிரபாகரன் ஏற்கவில்லை. இதனால் ராஜீவ் காந்தி மீது கோபம் கொண்டார்.…

    • 33 replies
    • 4.2k views
  21. சம்பந்தனின் தோளில் கைபோட்டபடி உரையாடிய ஜனாதிபதி மஹிந்த! – நாடாளுமன்றில் நடந்தது என்ன? [saturday 2014-10-25 07:00] நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைலாகு கொடுத்து கலந்துரையாடினார். தேநீர் விருந்தில், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டோர், ஒரே மேசையில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தனின் தோளில் கை போட்டபடியே மாவை சேனாதிராசாவுக்கு கைலாகு கொடுத்தார். பின்னர்…

  22. எண்ணக்கரு: செய்திக்குழுமம் & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

    • 8 replies
    • 4.2k views
  23. விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் அனந்தி சசிதரன் இலங்கையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை திங்கட்கிழமை 6-ம் திகதி முதல் 15-ம் திகதி வரையில் தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. தனித்துப் போட்டியிடுவதா- இணைந்து போட்டியிடுவதா என்பதைத் தீர்மானிக்கும் நடவடிக்கைகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இறங்கியிருக்கின்றன. வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் …

  24. உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக-எம்.கே.நாராயணன் வெள்ளி, 16 ஜனவரி 2009, 01:22 மணி தமிழீழம் [ அண்மைய சிறீலங்க இராணுவ வெற்றிகளின் பின்னர் தன்னுடன் பேசிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக்காவே என்று தன்னிடம் கூறியதாக கோதபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழர் தாயகத்தில் நிலங்களை சிறிலங்கா படைகள் கைப்பற்றி தமிழின அழிப்பை முன்னெடுப்பதை வாழ்த்திய போதே இவ்வாறு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்ததாக கோதபாய தெரிவித்துள்ளார். பதிவு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.