ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142652 topics in this forum
-
செப்டெம்பர் 7 இல் வட மாகாணசபைத் தேர்தல் - சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க அரசு திட்டம்! சர்வதேசத்தின் தொடர்ச்சியான அழுத்தங்களால் வட மாகாணசபைத் தேர்தலை செப்டெம்பர் 07 ஆம் திகதி நடத்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்பட சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால் அழுத…
-
- 1 reply
- 532 views
-
-
இலங்கையின் மாற்றங்களுக்கு ஆன் சாங் சூகி ஜனாதிபதிக்கு பாராட்டு இலங்கையில் ஏற்பட்ட ஜனநாயக மாற்றங்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஆன் சாங் சூகி ஆன் சாங் சூகி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்க்கை தொடர்பில் தனது திருப்தியினையும் வெளியிட்டார். இந்தியாவின் கோவாவில் இடம்பெற்றுவரும் பிரிக்ஸ் - பிம்ஸ்டெக் மாநாட்டில் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான ஆன் சாங் சூகி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே மியன்மாரின் அரச சபை உறுப்பினரும் அந்நாட்டின் வெளிவிவகார …
-
- 0 replies
- 804 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தமது கடமையைச் செய்யவில்லை; ஜெனீவாவில் நிஷா பீரிஸ் குற்றச்சாட்டு – காணொளி நான்கு ஆண்டுகளுக்குமுன் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் உருவாக்கபட்டது. ஆனால் இந்த அலுவலகம் தனது கடைமையைச் செய்யாததால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது” என ‘பாலம்’ அமைப்பின் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய நிஷா பீரிஸ் குற்றஞ்சாட்டினார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத் தொடரில் இரண்டாவது வாரத்தில் ஐ.…
-
- 0 replies
- 296 views
-
-
வன்னி எங்கும் நேற்று சிறிலங்கா வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 25 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 77 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை, உறவினர்கள் யாருமற்ற நிலையில் இருந்த பல உடலங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அடக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 480 views
-
-
தமிழர்களின் அதிருப்தியைப் போக்க அரசு விரைந்து செயல்படுதல் அவசியம்! இலங்கையில் தமிழர்கள் பகுதியில் சமாதான நடவடிக்கைகளில் இலங்கை அரசின் முயற்சிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறித்து இலங்கை மக்கள் கடும் அவநம்பிக்கையிலும் அதிருப்தியிலும் இருந்து வருவதாக பிரிட்டனில் உள்ள புலம்பெயர்ந்தோர் குழு தெரிவித்துள்ளது. உலக தமிழ் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றில் கூறும்போது, “வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இராணுவமற்ற பிரதேசமாக மாற்றுவதிலும் இயல்பு வாழ்க்கையை மீட்டுத்தருவதிலும் இலங்கை அரசு எந்தவித துரிதச் செயல்பாடும் இல்லாமல் மந்தமாக உள்ளது. மேலும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து சமாதானமாக வாழும் முயற்சிகளிலும் இலங்கை அரசிடம் எந்த வித முன்ன…
-
- 0 replies
- 220 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) திருகோணமலை சீனக்குடா எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இருதரப்பு உடன்படிக்கைகளை ஒரு தரப்பினருக்கு சாதகமாக மாற்றியமைக்க முடியாது. எனினும் இந்தியா பயன்படுத்தும் எண்ணெய் குதங்களை தவிர்ந்து ஏனைய எண்ணெய் குதங்களை பெற்றுக்கொள்ள இந்திய அரசாங்கத்துடனும், இந்திய எண்ணெய் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து மீண்டும் பெற்றுக்கொள்வது குறித்த நகர்வுகள் தொடர்பில் சபையில் கேள…
-
- 0 replies
- 435 views
-
-
நாட்டில் தீர்மானம் எடுக்கக்கூடிய தலைமையை காண முடியவில்லை – கோதபாய குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு நாட்டில் தீர்மானம் எடுக்கக்கூடிய தலைமையை காண முடியவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் முக்கிய தீர்மானங்கள் தீர்க்கமாக எடுக்கக்கூடிய தலைமையொன்றை காண முடியவில்லை எனவும் சில தீர்மானங்கள் எடுக்கப்படும் போது ஒன்றுக்கு ஒன்று முரணான வகையில் தலைமைத்துவங்கள் தீர்மானங்கள் எடுப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தில் எந்தவொரு நபரும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத்…
-
- 0 replies
- 197 views
-
-
வன்னியில் உணவு நெருக்கடியை தணிப்பதாகக் கூறி உலகத்துக்கு காட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இழு படகு மூலம் உணவுப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வன்னிக்கு இன்று அனுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
பலாலியில் எஞ்சியுள்ள காணிககை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியாது: யாழ். இராணுவ கட்டளைத்தளபதி By General 2013-03-03 09:47:07 பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள காணிகளை உரியர்களிடம் ஒப்படைக்க முடியாது. அந்த காணிகளுக்கு இன்றைய சந்தை விலைப்படி நஷ்டஈடு வழங்கப்படும். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 6000 ஏக்கர் காணிகள் மீண்டும் விரைவில் உரிவர்களிடம் ஒப்படைக்கப்படுமென நான் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என யாழ். இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்க தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் இப்போது இல்லை. 6000 ஏக்கர் காணி எனக் கூறும் போது அதில் இலங்கை சீமெந்துக் கூட்டுதாபனத்துக்குச் சொந்தமான 1000 ஏக்கர் காணி…
-
- 0 replies
- 373 views
-
-
வடக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கென 600 மில்லியன் யூரோக்களை வழங்குவதற்கு ஒஸ்ரியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் ஆகியன முன்வந்துள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் குறித்த நிதியானது நேரடியாக வடக்கு மாகாண சபையிடமோ அல்லது மத்திய அரசிடமோ வழங்காது நேரடியாக குறித்த நாடுகளே அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளன என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். குறித்த நிதி மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை வைத்தியசாலைப் புனரமைப்புச் செய்வதற்கும், வடக்கு மாகாணத்தில் விசேட தேவையுடையயோர் 42ஆயிரம் வரையில் உள்ளனர் எனவும், அவர்களுக்காக விசேட வைத்தியசாலையொன்றை முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 294 views
-
-
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அண்மையில் ஆங்கில சினிமாவின் அதியுயர் விருதான 'ஓஸ்கார்' விருதினை பெற்றுக்கொண்ட இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
வள்ளத்தில் சென்று கடலில் மூள்காமல் எப்படிப் பாதுகாப்பாக அவுஸ்திரேலியா சென்று குடியுரிமை பெறுவது என்ற இரகசியம் முரளிக்குத் தெரிந்திருக்கிறது. தகவல் வேண்டியவர்கள் அவருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்.
-
- 1 reply
- 642 views
-
-
போர் தனித்து களமுனைகளில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக களமுனை உருவாக்கங்களாலும் நிர்ணயிக்கப்படும் என்பதை லாகூரில் நடைபெற்ற சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீதான தாக்குதல் வெளிப்படுத்துகின்றது. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் பா.மதியழகன். தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 1.5k views
-
-
இன, மத ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்த பாரிய சதி முயற்சி நல்லிணக்கத்தையும் குழப்ப முயற்சி; ஜனாதிபதியும் பிரதமரும் கடும் அவதானம் என்கிறது அரசாங்கம் (ரொபட் அன்டனி) நாட்டில் மத ரீதியாகவும் இனரீதியாகவும் விரிசல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி நாட்டை அழிவுக்குட்படுத்துவதற்கு சில சக்திகள் சதிமுயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டு வருகின்றது என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்றோம் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். தேசிய நல்லிணக்…
-
- 0 replies
- 151 views
-
-
மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் மச்சான் : வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே (ஆர்.வி.கே.) வடமாகாண முதலமைச்சர் தனது பிள்ளைகளை பௌத்த மதத்தினருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளார். அதேபோல நடேசன் நிருபமா ராஜபக்ஷவை திருமணம் முடித்துள்ளார். நிருபாமா முன்னைய ஜனாதிபதி மகிந்தவின் சகோதரி. அப்படியானால் மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் மச்சான் தானே ஏன் சண்டை போடுகிறீர்கள். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேட்டுக்கொண்டுள்ளார். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் ஆறுமுகநாவலர் மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை நேர நிகழ்வு நேற்றைய தினம் நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.அதில் …
-
- 4 replies
- 578 views
-
-
இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனுக்கு தேவையான முறையில் இலங்கை பிரச்சினையை தீர்க்க முடியாது. இந்தியா இலங்கையின் வளங்களை சூறையாடும் பாரிய வேட்டையில் இறங்கியுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார். உடனடி போர்நிறுத்தத்துக்கு செல்லவேண்டும் என்ற ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெறும் இனரீதியான மோதல்களுக்கு நிரந்த தீர்வு காண தமிழ் மக்களுக்கு நேர்மையான அதிகாரப்பரவலாக்கலை வழங்கவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளமை மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தீர்மானம் குறித்து வினவியபோதே அவர் மேற்க…
-
- 1 reply
- 780 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் துரித நடவடிக்கை தேவை இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எனது இலக்காகும். புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை அடையவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உட்பட அனைவரின் நிலைப்பாடுகளையும் பெற்றுக்கொள்வோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நான் மறக்கவில்லை. இந்த நாட்டில் அனைத்து இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவே…
-
- 0 replies
- 208 views
-
-
பொதுநலவாய நாடுகள் அமைச்சர்குள் மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து பேசப்பட மாட்டாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கை விவகாரம் பற்றி பேசும் உத்தேசம் கிடையாது எனவும், நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை, வேறும் நாட்டில் நடாத்துமாறு கனடா கோரி வருகின்றது. இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகக் காணப்படுவதாகவும் இதனால் பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இந்த விடயம் குறித்து பேசப்பட வேண்டுமெனவும் கனடா வலியுற…
-
- 1 reply
- 688 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எமது மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கின்றனர். அதனை தடுப்பது துரதிஸ்டவசமானதும் எமது மக்களை அவமதிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. அரசாங்கம் ஏன் நினைவேந்தலுக்கு அஞ்சுகின்றது. அவர்களை கொடூரமாக கொலைசெய்த காரணத்தினாலா அல்லது சர்வதேச சட்டத்தை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்ற காரணத்தினாலா நினைவேந்தளுக்கு அஞ்சுகின்றீர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,…
-
- 4 replies
- 819 views
-
-
’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமெனத் தெரிவித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது என்றார். தெரிவித்தார். நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக தான் உறுதியளித்தவாறு அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணம் எனவும் கூறினார். அத்துடன், இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வை…
-
- 12 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு களமுனையில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற சமரில் சிறிலங்கா படையைச் சேர்ந்த 108 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
சிங்கள மக்களின் சனத்தொகை வீழ்ச்சி: போலிப் பிரச்சாரம் இலங்கையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நோக்கம் என்று ஏகாதிபதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டுகிறது. இந்த துரதிஸ்டவசமான நிலைமை நாட்டை அபாயமான கட்டத்தை நோக்கி தள்ளிக்கொண்டிருப்பதாக அந்த அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார். நாட்டில் சிங்கள மக்களின் சனத்தொகை கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டதாக செய்யப்படுவது போலியான பிரச்சாரம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ‘1981-ம் ஆண்டில் 74 வீதமாக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 2011-ம் ஆண்டில் 74.9 வீதமாக உள்ளது. அதேபோல 30 …
-
- 0 replies
- 392 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் அதிரடி ; 800 கோடி பெறுமதியான கொக்கைன் சிக்கியது கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தந்த கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 800 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை மீட்டுள்ளனர். குவாடோர் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த குறித்த கொக்கைன் போதைப்பொருள் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கொக்கைன் சுமார் 800 கோடி பெறுமதியானது என போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/14278
-
- 1 reply
- 285 views
-
-
வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு முன் பிணை வழங்கியது நீதிமன்று! http://athavannews.com/wp-content/uploads/2020/11/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.jpg வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோசுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று முன் பிணை வழங்கியுள்ளது. வீதி பெயர் பலகை அகற்றியமை தொடர்பாக தன்னை பொலிஸார் கைது செய்ய முற்படுவதாகவும் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை கடந்த திங்கட்கிழமை தவிசாளர் தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்திருந்தார். குறித்த விண்ணப்பத்தினை பரிசீலனைக்காக இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்த மல்லாகம் நீதிமன்றம், அச்சு…
-
- 1 reply
- 794 views
-
-
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்கும் பொருட்டும் பொதுமக்கள் மீதான தாக்குதலை நிறுத்தும் பொருட்டும் உடனடிப் போர்நிறுத்தத்துக்கு விடுக்கப்படும் அழைப்புக்களை விடுதலைப்புலிகள் வரவேற்பதாக அறிவித்துள்ள அதேவேளையில் போர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் புலிகளை அழித்து போரில் வெற்றி ஈட்டும் வரை யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சிறீலங்கா அறிவித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து புலிகளுக்கு எதிரான போர் ஒரு போதும் நிறுத்தப்பட மாட்டாது என்று சிறீலங்கா அரசு மீண்டும் சூளுரைத்துள்ளது. இதற்கிடையே வன்னியில் பொதுமக்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதை அங்குள்ள சுகாதார தரப்பினர் பிபிசிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து…
-
- 0 replies
- 1.1k views
-