Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு அரசாங்கம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தவர்களும் தமக்கு வாக்களிக்க முடியும் என ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார் எனவும், இது ஓர் பாரதூரமான கூற்று எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தலில் யார் ஆதரவு வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும், விடுதலைப் புலி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பிரபாகரனின் பெற்றோர் ஆதரவு வழங்கினாலும் ஏற்றுக்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாத்ததாகத் தெரிவித்துக் கொள்ளும் ஓர் இராணுவ ஜெனரலிடமிருந்து இவ்வாறான ஓர் கூற்றை எதிர்பார்க்கவில்லை எனவும், ஜனாதிபதியோ அ…

  2. சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை! காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, சைக்கிள் ஓட்டுவதற்காக ஒவ்வொரு வீதியிலும் ஒரு மருங்கை ஒதுக்குவதுடன், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சில ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் உள்ள போது பயணிக்கும…

    • 21 replies
    • 1.4k views
  3. தமிழ் மொழி உலகெங்கும் வியாபித்துள்ள போதிலும் சிங்களமொழி இலங்கைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது - விமல் வீரவன்ச கவலை 2/22/2008 5:41:50 PM வீரகேசரி இணையம் - சிங்களமொழியில் சட்டத்துறையினை பயில்வதற்கு தடைவிதிக்கப்படுகின்றது. 20 வருடங்களுக்கு முன்னர் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டத்துறையினை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க கற்கை நிலையத்தில் இடம்பெற்ற தேசிய மொழி அதிகார சபையின் அறிக்கை வெளியீட்டு விழாவிலேயே விமல் வீரவன்ச எம்.பி. இதனைத் தெரிவித்தார். நேற்று முன்தினம் சர்வதேச தாய்மொழி தினமாக உலகம் முழுதும் அனுஷ்டிக்கப்பட்டது. இ…

  4. கிளிநொச்சியில் இன்று காலை கிபீர் குண்டு வீசியுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரம் இதுவரை கிடைக்கவில்லை. http://www.alertnet.org/thenews/newsdesk/COL218364.htm

  5. ஐ.நா. தீர்மானம் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஆராய்வு புதிய அரசியலமைப்பு மற்றும், ஐ.நா தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஒன்றுக்கூடி ஆராயவுள்ளது. அதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி இந்த குழு கொழும்பில் கூடவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. எதிர்வரும் 5ஆம் பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடுகின்றது. எனவே, அதற்கு முன்னர் காலையில் அல்லது மாலையில் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நடைபெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பில் முக்கிய விடயங்களான தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று அதிகாரம் என்பன தொடர்பாக கட்சிகள் இடையே பொது இணக்கப…

    • 2 replies
    • 1.4k views
  6. வெள்ளிக்கிழமை, 3, ஜூன் 2011 (18:48 IST) நான் எங்கும் தப்பிச் செல்ல வில்லை; என் மீது எந்த குற்றமும் இல்லை : சீமான் பரபரப்பு பதில் 01.06.2011 அன்று மாலையில், நடிகை விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சி தலைவரும், இயக்குனருமான சீமான் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார். சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் விஜயலட்சுமி வீட்டிற்கு…

  7. ஐ.நா பொது சபை கூட்டத்தொடருக்கு உபதலைமையாக இலங்கை தெரிவு வீரகேசரி நாளேடு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 62 ஆவது கூட்டத் தொடருக்கு உபதலைமையாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நியூயோர்க்கில் 2007 யூலை 24 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாட்டு பொதுச் சபையின் 105 ஆவது மகா சபைக்கூட்டத்தில் இலங்கை ஓர் உபதலைமை நாடாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது, இத் தெரிவானது 2007 செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடங்கவுள்ள பொதுச் சபையின் 62 ஆவது கூட்டத் தொடருக்காகும். இலங்கை இப் பதவியை 15 வருடங்களுக்கு முன் அதாவது 1992 இல் நடைபெற்ற பொதுச் சபையின் நாற்பத்தேழாவது கூட்டத் தொடரில் வகித்தது ஆகும்.பொ…

  8. யாழ் செய்திகள்:சாவகச்சேரி ஹோட்டலில் பத்து லட்சம் திருடிய திருடனை கடை உரிமையாளர் தலைமையிலான குழுவினர் மடக்கி பிடித்துள்ளனர். கடந்த மாதம் 8ம் திகதி கொள்ளையில் ஈடுபட்ட திருடன் உடையார்கட்டு சுதந்திரபுரம் பகுதியில் மறைந்திருந்த வேளை இன்று பிடிபட்டார். இன்று மாலை 3.00 மணி அளவில் ஸ்ரார் ஹோட்டல் உணவக உரிமையாளரும் அவரது நண்பர்களும் இணைந்து ஐந்து கிலோ மீற்றர் வரை திருடன் ஓடீச் சென்ற போது அவரை வளிமறித்து மடக்கி பிடித்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு சாவகச்சேரி பொலிசாரை வரவளைத்து திருடனை அவர்களிடம் கையளித்தனர். கைது செய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த குமாரவேல் சந்திரகுமார் என்பது குறிப்பிடத்தக்கது https://www.todayjaffna.com/137201

  9. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாரத்தை சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று திடீரென சந்தித்துப் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் வாசிக்க

  10. விடுதலைப் புலிகளை நான் அழிக்கவில்லை – எரிக்சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் …

  11. இலங்கையில் மனித உரிமை மீறல்களை ஆராய சர்வதேச கண்காணிப்புக் குழுவினை நியமிப்பதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். வட மத்திய சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் கட்சிக்கே ஹெல உறுமய ஆதரவு வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார். இலங்கையின் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பாளர் குழு இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கக் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளமை குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்…

  12. எனது உயிருள்ளவரை ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க யாராலும் முடியாது! சிங்கக் குகையிலிருந்து முழங்கும் கே.பி செவ்வாய், 24 மே 2011 11:14 "புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் பிரச்சினைகளை உருவாக்க முயன்றால் அவர்களை நான் உயிருள்ளவரை விடமாட்டேன். அப்படிச் செய்வதாயின் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும்." இவ்வாறு கூறியிருக்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதத் தரகரும், உலக நாடுகளால் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தவரும், முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்த பின்னர் புலிகளின் அடுத்த தலைவராக அறிவித்து கொண்டவருமான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள். இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த மாத ஆரம்பத்தில் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனை…

    • 11 replies
    • 1.4k views
  13. யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் யாழில் நடைபெறாது :- இமெல்டா சுகுமார் பிரசுரித்தவர்: Sukkran May 28, 2011Add a comment யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் எதுவும் யாழ்.மாவட்ட செயலகத்திலும் அரச திணைக்களங்களிலும் நடைபெறாது எனவும் அவ்வாறு நடத்துமாறு அரசிடமிருந்து தனக்கு எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இரண்டாவது வருட யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் இக்கொண்டாட்டம் பற்றி மாவட்ட அரச அதிபரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார். யுத்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கான ஒரு நிகழ்வுகளும் யாழில் ஏற்பாடு செய்யப்படவில்லை. அரசு கொண்டாடுமாறு…

  14. நன்றி கொளத்தூர் மணி அவர்களே

    • 3 replies
    • 1.4k views
  15. நாடுகடந்த தமிழீழத்திற்கு நிதி சேகரிக்கப்படுகிறது ஆங்கில ஊடகம் தகவல் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-21 07:33:48| யாழ்ப்பாணம்] நாடுகடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களிடம் நிதி திரட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாடுகடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவுசெய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் தலா 15 அமெரிக்க டொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உருத்திரகுமாரனுக்கு எதிரான அமைப்புகளைவிடவும் தம்மை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்…

  16. வடக்கு, கிழக்கு தமிழருக்கு அரசின் செய்தி என்ன? [08 - June - 2007] [Font Size - A - A - A] தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடு என்ற பெயரில் நேற்று வியாழக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தமிழ்மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ளவத்தை, புறக்கோட்டை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் தனியார் விடுதிகளில் தங்கியிருந்த வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்களில் 500 க்கும் அதிகமானவர்களை பலவந்தமாக வெளியேற்றிய பொலிஸார் அவர்களை பஸ்களில் ஏற்றி வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். தமிழர்கள் தங்கியிருக்கும் கொழும்பு விடுதிகளில் முன்னரெல்லாம் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ளும் பொலிஸார் அவர்களை விருப்…

  17. சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் தளபதியும் கூட்டுப்படைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா செல்வதற்கு தீர்மானித்துள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னை நடத்தும் விதம் குறித்து அதிருப்தி அடைந்திருப்பதாலேயே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரச படையினர் வெற்றி பெற்றதன் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்துப் பயந்த காரணத்தாலேயே மகிந்த, அவரை தரைப் படைத் தளபதி பதவியில் இருந்து நீக்கிவிட்டார் என்றும் அவரது பாதுகாப்பைக் குறைத்துவிட்டார் என்றும் ஆங்கில இணையத் தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகா…

  18. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுனிசெஃப் அமைப்பானது நிதியுதவி வழங்கி வருவதாக ஜே.வி.பியின் நாடளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 2028 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு முதல் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜன…

  20. இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை. இந்த நிலைமையில் ஜனவரி 7-ஆம் தேதி சென்னைக்கு வர இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் …

  21. 50,000 வீடுகள் அமைக்கும் பணி தடைப்படமாட்டாது பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவிப்பு [20 டிசம்பர் 2010, திங்கட்கிழமை 6:45 மு.ப இலங்கை கொழும்பு, டிசெ.20 வடக்கு, கிழக்கில் உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகள் இடை நிறுத்தப்பட்டாலும் இந்தியாவின் உதவியுடனான 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுமெனப் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் நேற்று "உதயனு"க்குத் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்கும் நாடுகள் ஆகியவற்றின் உதவியுடனான கட்டட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தும்படி டிசம்பர் 9ஆம் திகதி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வ…

    • 4 replies
    • 1.4k views
  22. முகமாமலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து படைத்தரப்புக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  23. எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அத்தனகல்ல மக்கள் பண்டாரநாயக்க குடும்பத்தினருக்கே இதுகாலவரை வாக்களித்து வந்துள்ளனர். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ, ஆர்.டி.பண்டாரநாயக்க முதன் முதல் 1931 ஆம் ஆண்டு அத்தனகல்ல தொகுதிக்காகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் 1947 ஆம் ஆண்டில் அத்தனகல்லவுக்குத் தெரிவு செய்யப்பட்ட போது அவர் போட்டியிட்டது யானைச் சின்னத்திலாகும். 1952 இல் அவர் யானைச் சின்னத்துக்குப் பதில் கை.சின்னத்தை தெரிந்தெடுத்தபோது அந்தனகல்ல மக்கள் சின்னத்தைப் பற்றிக் கருதாமல் அவருக்கே வாக்களித்தனர். இவ்வாறே 1956 இல் சில்லுச் சின்னத்தில் அத்தனகல்ல தொகுதிகளில் போட்டியிட்டார் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்க. இதன் பின்னர் கதிரை பண்டாரநாயக்க குடும்பத்தின் தேர்தல்…

  24. உள்நாட்டுத் தீர்வின் மூலம் இலங்கையில் நீடிக்கும் அமைதி, உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சி என்பன ஏற்படுத்தப்படும் எனவும் சர்வதேச பரிந்துரைகளால் அவை செயற்படுத்தப்பட மாட்டாதெனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வொஷிங்கடன் சென்றடைந்துள்ள வெளிவிவகார அமைச்சர், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் பயங்கரவாத புலிகள் அழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன. சிறந்த ஒரு வாய்ப்பை நாங்களே தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இனப்பிரச்சினையை தீர்க்க தீர்வு அவசியம் என்பதையும் அது உள்நாட்டு தீர்வாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்து…

    • 3 replies
    • 1.4k views
  25. இராணுவத்துக்காக யாழ்ப்பாணக் கோட்டை மீது கண் வைத்துள்ள ஆளுநர்; காரணம்? நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்ப்பாணக் கோட்டைக்கு மாற்றுவது சரியான தேர்வாக அமையும் என்றும் அப்பொழுதுதான் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ள விகாராதிபதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். இங்கு மேலும் குறிப்பிட்ட அவர், ”யாழ்ப்பாணத்திலுள்ள சிங்கள மகா வித்தியாலயம் தற்போது இராணுவ முகாமாக உள்ளது. அதனை விடுவித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.