ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.4k views
-
-
இலங்கை ஆலயங்களில் இனித் தமிழிலும் பூஜை! - முதலாவது அருட்சுனைஞர் அணி பயிற்சிகளை முடித்தது. [Monday, 2014-04-21 08:42:26] இலங்கையில் முதன்முறையாக நடத்தப்பட்ட தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி நெறியில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்றுக்காலை கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. சைவ மகா சபை, சைவ நெறிக்கூடம், தெய்வத் தமிழ் அறக்கட்டளை ஆகியன இணைந்து சைவ மகா சபையின் கொக்குவில் தலைமைச் செயலகத்தில் மேற்படிப் பயிற்சி நெறியை நடத்தியிருந்தன. இந்தப் பயிற்சி நெறியில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 36 பேர் பங்குபற்றியிருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த செந்தமிழ் வேள்விச் சதுரர் சக்திவேல் முருகனார் தலைமையிலான விரிவுரையாளர்களால் இந்தப் பயிற்ச…
-
- 21 replies
- 1.4k views
-
-
தொடருந்து - படையினரின் ஊர்தி மோதல் - ஐந்து படையினர் பலி, 17பேர் படுகாயம் இன்று காலை 6.30 மணியளவில் கம்பகா மாவட்டத்தின் எதருமுல்ல பகுதியில் ஸ்ரீலங்கா படையினரின் ஊர்தி ஒன்று தொடருந்து ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டும், மேலும் 17 படையினர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் நடவடிக்கை ஒன்றையடுத்து ஊர்தி ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்த படையினர் தொடருந்து கடவை ஒன்றை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து எற்பட்டதாக தெரியவருகிறது. இதன்போது ஐந்து படையினர் பலியாகியுள்ளதுடன் மேலும் 17பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். www.sankathi.org .
-
- 3 replies
- 1.4k views
-
-
குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் உடல்களை ஏற்க முடியாது: அகில இலங்கை ஜமியத்துல் உலமா தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அகில இலங்கை ஜமியத்துல் உலமா தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அகில இலங்கை ஜமியத்துல் உலமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த போது, தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை முஸ்லிம்கள் ஆரம்பகாலம் முதல் எந்தவொரு தீவிரவாத செயலில் ஈடுபடவில்லை எனவும் தீவிரவாத செயலுக்கு உதவி வழங்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை…
-
- 4 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு கொழும்பில் நிதி சேகரிப்பு: முஸ்லிம்கள் இருவர் கைது! ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 10:53 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக கொழும்பில் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்கிற சந்தேகத்தில் முஸ்லிம் இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இருவரும் ஹெட்டியாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களின் உடைமையில் இருந்து தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், 188240 ரூபாய் பெறுமதி உடைய ரொக்கப்பணம் ஆகியன கைப்பற்றப்பட்டு உள்ளன. இவர்கள் கொழும்பில் வர்த்தக பிரமுகர்களிடம் இருந்து புலிகள் இயக்கத்துக்காக இவற்றை எல்லாம் கப்பமாக பெற்று இருந்தனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அற்வித்து உள்ளது. இவர்கள் இன்று நீத…
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ் முன்னரங்கில் விரைவில் சடுதியான பிரமாண்டமான களமுனை திறக்கப்படும்- இராணுவத் தளபதி பொன்சேகா சூளுரை வீரகேசரி இணையம் 4/15/2008 1:13:16 PM - விடுதலைப்புலிகள் இதுவரை எதிர் கொண்டிராத யுத்த முனை ஒன்றை தாங்கள் விரைவில் வன்னியில் திறக்க உள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.அவரது பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது செவ்வியின் மேலதிக விபரங்கள் வருமாறு,அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச சமூகம் இலங்கை அரசை பேச்சு மூலமான தீர்வுக்கு வலியுறுத்தி இருந்தது.ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னரை விட உறுதியாக போரை முன்னெடுப…
-
- 5 replies
- 1.4k views
-
-
மேமாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மஹி;ந்தவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிள்ளiயான் குழு, மற்றும் ஹெல உறுமயவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. சுதந்திர கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழு கூட்டதிற்கு முன்னதாக நடைபெற்ற சந்திப்பிலேயே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அதற்கு ஹெல உறுமையவும், பிள்ளையான் குழுவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எதிர்வரும் 25ம் திகதி செவ்வாயன்று தீர்மானிக்கவுள்ளது. எனினும் சு.க வின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வதாற்கான நடவடிக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தென்பகுதி தீவிரமாகியுள்ளது. ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றிவிட்டால் எல்லாம் சரியாக வரும் என்பது தென்பகுதி சார்ந்த ஒவ்வொரு அரசியல் கட்சிகளினதும் நினைப்பாகும். இந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தெரிவுப் பிரச்சினைகளுக்குச் சிங்கள அரசியல் கட்சிகள் முகங்கொடுத்துள்ளன. இதில் மகிந்த ராஜபக் தரப்பின் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்வை நிறுத்துவதென்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றது. ஏதேனும் சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டாலன்றி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் என்பதில் மாற்றுத் தெரிவு இல்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் …
-
- 3 replies
- 1.4k views
-
-
அமெரிக்கத் தேர்தலும் வன்னிக்களமுனையும் http://epaper.virakesari.lk/ArticleImage.a..._001&mode=1 தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நிலைமை பரிதாபகரமாக உள்ளது http://epaper.virakesari.lk/ArticleImage.a..._006&mode=1 எதிர்காலப் போரும் கடற்புலிகளின் பலமும் http://epaper.virakesari.lk/ArticleImage.a..._002&mode=1 கிளிநொச்சி, பூநகரிக்குப் பின்னரும் நீளப்போகின்ற மரபுவழிப்போர் http://epaper.virakesari.lk/ArticleImage.a..._001&mode=1
-
- 0 replies
- 1.4k views
-
-
என்னடா இந்தலைப்பில் இங்கே ஒரு ...... என்று எண்ணுவதற்கு முன் ... சற்று நிமிடம் சிந்திக்க ..... உதாரணத்திற்கு யாழிலேயே செய்திகளை எடுத்து வந்து இணைக்கும் தமிழ்த்தளங்களாகட்டும் அல்லது எமக்கான ஆங்கில தளங்களாகட்டும் ஒன்றில் "தமிழ்...., ஈழம், ....., ..... " அல்லது ஆங்கிலத்தில் "tamil..., eelam..., ... " என்பவையாகவே இருக்கின்றன. நல்லது எம்மவர்களுக்கு செய்திகளை, நிலவரங்களை, உண்மைகளை சொல்லத்தான் வேண்டும். ஆனால் எதிரியின் இனத்துக்கோ அல்லது நாம் புலம் பெயர்ந்து இருக்கும் நாடுகளின் வேற்றின மக்களுக்கோ, எம் தேசத்து அவலங்களை, கள நிலவரங்களை, .... சொல்ல தவறுகிறோம் எனத் தோன்றுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓர் நண்பரை சந்திக்க நேர்ந்தது. தமிழ் இணைய ஊடகங்கள் தொடர்பாக கத…
-
- 4 replies
- 1.4k views
-
-
சுயாதீனக் குழுவை நேரில் அனுப்பி உண்மையைக் கண்டறியத் தயாரா? - உதயன் வெள்ளி, 23 ஜனவரி 2009, 17:52 மணி தமிழீழம் வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் அப்பாவித் தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பேரவலங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக சர்வதேச சமூகம் உடனடியாக சுயாதீனக் குழு ஒன்றை அப்பகுதிகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பியிருக்கின்றார்.இது அவரதும், அவரது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் கருத்து நிலைப்பாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தின் கருத்தாகவும், நிலைப்பாடாகவும் கூட கொள்ளத்தக்கது. ஆனாலும், ‘ஆசாரி இடங்கொடுத்தாலும் பூசாரி இடங்கொட…
-
- 1 reply
- 1.4k views
-
-
. வீரகேசரி இணையம் 12/9/2009 1:41:49 PM - இன்று அதிகாலையில் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது. அதிகாலையில் துப்பாக்கிப் பிரயோகச் சத்தம் கேட்டதாகவும் இதனைத் தொடர்ந்து காலையில் வீதியில் சென்றவர்கள் சடலத்தைக் கண்டு பொலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிசார் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சடலத்தை பொறுப்பெடுத்தனர். துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதிலும், குறிப்பிட்ட இடத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தமையால் உடனடியாக எவரும் செல்லிவில்லை எனவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம், பலாலி வீதியில் தபால் கட்டைச்சந்திக்கு அருகில…
-
- 3 replies
- 1.4k views
-
-
அக்சன் பெய்ம் நிறுவன பணியாளர்களின் படுகொலைக்கு அரசாங்க படைகளே காரணமாக இருக்கலாம் மூதூரில் அக்சன் பெய்ம் நிறுவன தொண்டர் நிறுவன பணியாளர்களின் படுகொலைக்கு அரசாங்க படைகளே காரணமாக இருக்கலாம் என்ற யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் குற்றச்சாட்டிற்கு அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் அக்சன் பெயம் நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்திய யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அது தொடர்பான அறிக்கையினை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கடந்தவருடம் ஓகஸ்ட் 29ம் திகதி அனுப்பி வைத்திருந்தது. கண்காணிப்புக் க…
-
- 1 reply
- 1.4k views
-
-
தம்புள்ளவ பேருந்து குண்டு வெடிப்பை அடுத்து படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் அப்பாவி தமிழர்கள் 16 கை செய்யப் பட்டுள்ளனர். இவர்களை அணைவரும் அந்த தக்கதக்கு உடைந்தையானவர்கள் என குற்றம் சாடடப்பட்டு விசாரகைள் நடைபெற்ற வருகிறது. விhவான செய்தி தொடரும்... மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=235
-
- 0 replies
- 1.4k views
-
-
கொசோவோ விடுதலை இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை லண்டனில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்ட கொசோவோவின் நகரசபை மேயர் ஒருவர் கலந்து கொண்டுள்ளனர். கொசோவோவின் நகரசபை மேயரான பஜ்ரேட் ரெக்செனாய் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்ததனை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால், அமெரிக்கா, ஜெர்மன், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்துமீட்கப்பட்
-
- 5 replies
- 1.4k views
-
-
வேண்டாம்... இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்...! விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தற்காலிகமாக ஓய்வுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உளவியல் போருக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மவர்கள் பலர் பலியாகி வருகின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட இன உணர்வுடன் கூடிய ஒற்றுமை உணர்வு திட்டமிட்ட வழிகளில் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போர்க் களத்தில் தம்மைப் பலியாக்கிக்கொண்டு, தமிழீழக் கனவோடு துயிலுறங்கும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தெரிந்துகொண்டே எதிரிகளை அழிப்பதற்காகத் தம்மையே தகர்த்துக் கொண்ட கரும்புலிகள், துரோகிகளால் பலியாகி கொள்ளப்பட்ட போராளிகள், அறுதிவரை மக்களுக்…
-
- 9 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
இறுதி யுத்தத்தில் நிராயுதபாணியாக பேசச் சென்ற பொழுது சிங்களப் படைகளால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவின் கொலைக்கரம் இருப்பதை உறுதிசெய்யும் ஒலிப்பதிவு அமெரிக்காவிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த போராளிகளினதும், பொதுமக்களினதும் உயிர்களைப் பாதுகாக்கும் நிமித்தம் எரிக் சொல்கைம் போன்றோர் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் 2009 மே 18 அன்று நிராயுதபாணியாக பேசச் சென்ற தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், காவல்துறைப் பொறுப்பாளர் இளங்கோ (ரமேஸ்) ஆகியோர் சிங்களப் படைகளால் கொடூரமான முறையில் சுட்டும், எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர…
-
- 1 reply
- 1.4k views
-
-
புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். வவனியாவில் ஜனாதிபதி வேட்பாளா சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவத்த அவர், நாங்கள் இன்று கோருவதெல்லாம் நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப்புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும். …
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழ். பருத்தித்துறையில் ரூ.10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை: எஸ்.வி.கிருபாகரன் [வியாழக்கிழமை, 21 டிசெம்பர் 2006, 18:18 ஈழம்] [ப.தயாளினி] யாழ். பருத்தித்துறையில் 3 பிள்ளைகளின் உணவுக்காக ரூ. 10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளதாக பிரான்சைச் சேர்ந்த தமிழர் மனித மையத்தின் பொதுச் செயலாளர் எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் "மெளபிம" (10.12.06) சிங்கள வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளதாவது: கேள்வி: தமிழர்களுக்கான மனித உரிமை மையம் எதற்காக நிறுவப்பட்டது? பதில்: இலங்கையில் கைது செய்யப்பட்டு, பல்வேறு முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்ட மற்றும் சித்திரவதைக்கு உள்ளானவர்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
வியாழன் 05-04-2007 21:30 மணி தமிழீழம் [கோபி] கொழும்பில் சிறிய சூறாவளி 11 பேர் காயம்: இருவர் நிலை கவலைக்கிடம் கொழும்பு நகரப்பகுதியில் சிறிய சூறாவளி ஒன்று வீசியுள்ளது. இதனால் கொழும்பில் ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை,கிரான்ஸ்பாஸ், முகத்துவாரம், போன்ற இடங்களில் உள்ள கட்டிடங்கள் பல தேசமடைந்து மரங்களும் முறிவடைந்து வீழ்ந்துள்ளன. ஒரு நிமிடம் வரை வீசிய சூறாவளியால் மரங்கள் வீழ்ந்து வீதிப் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளது என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சூறாவளித் தாக்குதலில் 11பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளன. காயமடைந்தோரில் 2 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய பொது மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். pathivu
-
- 3 replies
- 1.4k views
-
-
அவர்கள் சிங்கள கடற்படையா? இலங்கை தமிழரா? - மரியா படகின் மர்மம் விலகிய கதை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் நடுக்கடலில் பிடிக்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள்தான். அவர்கள்தான் குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றவர்கள்!’ என்று பகீர் செய்தியைக் கசிய விட்ட போலீஸ், மறுநாளே ‘அவர்கள் சிங்களர்கள் இல்லை. இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள்தான்!’ என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறது. இதனால் எது உண்மை என்று தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்கள், மீனவ அமைப்பைச் சேர்ந்தவர்கள். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், சிங்களர்களும் திடீர் திடீரென்று காக்காய் குருவிகளைச் சுடுவதைப்போல சுட்டுக்கொல்வது வாடிக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தருஸ்மன் அறிக்கை “சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் அறிக்கையே” – மர்சுகி தருஸ்மன் Friday, October 21, 2011, 9:55 சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு அளித்த அறிக்கை, “சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் அறிக்கையே” என்று அதன் தலைவரான மர்சுகி தருஸ்மன் தெரிவித்துள்ளார். ஐ.நா தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் ஐ.நா நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் ‘தருஸ்மன் அறிக்கை‘ என்றே கூறி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மர்சுகி தருஸ்மனிடம் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த மர்சுகி …
-
- 3 replies
- 1.4k views
-
-
ஏப்ரல் 14 இற்குள் புலிகளை அழியுங்கள் – இந்தியா சிறீலங்காவிற்கு உத்தரவு தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு இந்திய ஆளும் கொங்கிரஸ் கட்சி சிறீலங்கா அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் நாள் முதல் மே 13ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில்இ இந்த உத்தரவை சிறீலங்கா அரசுக்கு கொங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாகஇ கொங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள்ளக வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதன்மூலம்இ அடுத்த தேர்தலில் தாம் வெற்றிபெற முடியும் என கொங்கிரஸ் கட்சி திடமாக நம்புவதால்இ இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 1.4k views
-
-
[Wednesday September 12 2007 08:02:10 AM GMT] கொழும்பை அண்டிய கொலன்னாவை பகுதியில் இன்று காலை சூட்டு சத்தங்கள் அதிகமாக கேட்கப்பட்டள்ளது. இதனையடுத்து எகொடகெல இராணுவ முகாமிலிருந்து இராணுவ அணி ஒன்றை அப்பகுதியில் பாதுகாப்புக்காக அனுப்பியள்ளது. நன்றி-தமிழ்வின்
-
- 0 replies
- 1.4k views
-