• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ampanai

புலிகளை அழித்ததனால் எம்மை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் ; வவுனியாவில் சம்பந்தன்

Recommended Posts

 புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

sammanthan.JPG

வவனியாவில் ஜனாதிபதி வேட்பாளா சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவத்த அவர்,

நாங்கள் இன்று கோருவதெல்லாம் நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப்புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலை நாங்கள் பகிஸ்கரிக்க முடியாது. எமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி எமக்கு பாதகமாக தேர்தல் முடிவு அமையாமல் எமக்கு சாத்தியமாக தேர்தல் முடிவு அமைய வேண்டும். நாங்கள் சகல கடமைகளையும் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்து அந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும். 

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்திருந்தால் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. அவர் ஜனாதிபதியாகி 10 வருடங்கள் எமது மக்கள் பட்ட துயரங்கள் நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. 

அரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்த முயன்றார்கள். இருக்கும் அதிகாரத்தினை குறைப்பதற்கு முயற்சித்தார்கள். மனித உரிமை மீறல்கள் அடிப்படை உரிமை மீறல்கள் நாள்தோறும் நடைபெற்றது. எமது மக்களை மதித்து நடக்கவில்லை. ஆகவே நாங்கள் தேர்தலை பகிஸ்கரித்து தவறான வழிக்கு செல்ல முடியாது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக அதிகார பகிர்வு சம்பந்தமாகவும் மக்களிடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக கோத்தாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் கூறப்படவில்லை. அதற்கு மாறாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருக்கின்றார். அதாவது அதி உச்ச அதிகார பகிர்வு. 

அதி உச்ச அதிகாரப்பகிர்வு என்பது முதன் முறையாக எடுக்கப்பட்டதல்ல. மகிந்த ராஜபக்ஷ காலத்தில் 2006 ஆம் ஆண்டு சர்வகட்சி கூட்டத்தினை கூட்டி எல்லோருடனும் கதைத்து அவர் ஆற்றிய உரையில் அதி உச்ச அதிகார பகிர்வு அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும் என அவர் பேசியிருக்கின்றார்.

இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால் யுத்தம் நடைபெறாத காரணத்தினால் அவை எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என் நினைக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது.  தாங்கள் கூறிய விடத்தினையே நிறைவேற்ற விருப்பமில்லாமல் அவர்கள் இருக்கின்றனர். 

இன்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கள தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனம் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஸ்டி ஒழிந்திருக்கின்றது. அதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் அதனை மக்கள் ஏற்க கூடாது என அவர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68602

Share this post


Link to post
Share on other sites

மக்களின் ஆதரவு இருக்கின்றமையால் நாங்கள் எதைச்செய்தாலும் நிதானத்துடன் தான் செய்வோம் : மாவை 

(எம்.நியுட்டன்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியானமுடிவைத்தான் எடுத்து மக்களுக்கு அறிவித்துள்ளது எமக்குள்ள கடமையை நாங்கள் சரியாகச் செய்துள்ளோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிறாஜா தெரிவித்தார்.

mawai_senadhiraja.jpg

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள் மற்றும் பல்கலைகழக மாணவர்களின் ஒருமைப்பாடுகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தொரிவிக்கையில்

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாங்கள் சிந்தித்துதான் முடிவுகள் எடுத்துள்ளோம் மற்ரவர்கள்போல் நாம் செயற்பட முடியாது.

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னேடுத்த முடிவுகளுக்கு கூட நாங்கள் நிதானமாகவே செயற்பட்டோம் நாங்கள் முடிவுகளையோ அறிக்கைகளையோ விட்டுவிட்டு மாணவர்களின் சந்திப்புகளுக்கு வரவில்லை வாக்கு உரிமையை கருத்தில் எடுத்து நாம் ஒன்று கூடினோம் தீர்மானங்கள் ஏடுத்தோம். அதனை வைத்து முன்னகர்தினோம் பேச்சுவார்த்தைகள் நடாத்தினோம் என தெரவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதுவும் கூறவில்லை ஏன்றார்கள் தற்போது புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்து விட்டு அவர்களின் மேடைகளில் ஏறவில்லையேன கூறுகிறார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது ஏன்பதைப்பார்த்து சிலரும் தமக்கு சாதகமாக விடயங்களை செய்வதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் நாங்கள் மேடைகளில் ஏறித்தான் ஆதரவு திரட்டவேண்டும் என்றில்லை நாங்கள் எமது நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் எமது ஆதரவாளர்களுடன் இணைந்து செயலாற்ரத் தொடங்கி விட்டோம்.

 நாங்கள் எதைச் செய்தாலும் நிதானத்துடன் தான் செய்வோம். சஜித் பிரேமதாசவை வெல்லவைப்பதற்காக மக்களை வாக்களிக்கச் செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டோம் கலந்துரையாடல்களை செய்து கொண்டிருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68582

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ampanai said:

 புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

sammanthan.JPG

வவனியாவில் ஜனாதிபதி வேட்பாளா சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவத்த அவர்,

நாங்கள் இன்று கோருவதெல்லாம் நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப்புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

 

தேர்தல்

வடக்கில்....

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ampanai said:

 புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நாங்கள் இன்று கோருவதெல்லாம் நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப்புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

தெய்வமே உங்கட வாயில இருந்தா இந்த வார்த்தைகள் வந்தது?!

இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால் யுத்தம் நடைபெறாத காரணத்தினால் அவை எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என் நினைக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது.  தாங்கள் கூறிய விடத்தினையே நிறைவேற்ற விருப்பமில்லாமல் அவர்கள் இருக்கின்றனர். 

தமிழ் மக்களை யார் ஏமாற்றுவதைப்பற்றி ஐயா குறிப்பிடுகிறார் என்று தெரியலையே?!

இன்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கள தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனம் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஸ்டி ஒழிந்திருக்கின்றது. அதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் அதனை மக்கள் ஏற்க கூடாது என அவர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தார்.

இந்த ஒரு தகவலே போதுமே அவரை தோற்கடிக்க!

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, ஏராளன் said:

இந்த ஒரு தகவலே போதுமே அவரை தோற்கடிக்க!

என்ன இப்படிச்சொல்லிப்போட்டியள்?

அவர்  சாணக்கியர் எண்டல்லோ ஊரில  சொல்லினம்??

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, விசுகு said:

என்ன இப்படிச்சொல்லிப்போட்டியள்?

அவர்  சாணக்கியர் எண்டல்லோ ஊரில  சொல்லினம்??

அப்பிடி நம்புபவர்களுக்கு தான் அப்பிடி!
பெரும்பாலான தமிழர்களுக்கு உண்மை தெரியும், அதனை வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் சொல்லும்.

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, ஏராளன் said:

அப்பிடி நம்புபவர்களுக்கு தான் அப்பிடி!
பெரும்பாலான தமிழர்களுக்கு உண்மை தெரியும், அதனை வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் சொல்லும்.

தமிழருக்கு நீண்டதூரப்பார்வையில்  நன்மை  தரும் முடிவுகளை 

தற்போதைக்கு தமிழர்கள் எடுக்கமாட்டார்கள்

அதனால் கூட்டமைப்பும்

அதனைத்தொடர்ந்து தேசியக்கட்சிகளுமே ஆட்சி  செலுத்தும்

இறுதியில் தேசியக்கட்சிகளிலேயே படர்ந்து விடுவார்கள்

Share this post


Link to post
Share on other sites

அவர்களின் நம்பிக்கையில் தவறொன்றும் இல்லையே. I

Share this post


Link to post
Share on other sites

கோத்தாபய என்னும் பேராபத்தை தவிர்க்க, தமிழ்மக்கள் வாக்குரிமை என்னும் ஆயுதத்தை பாவிக்கவேண்டும் - சுமந்திரன்

கோத்தபாய என்னும் பேராபத்தை தவிர்கவேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்கவேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

IMG_6035_1600_1067.JPG

அத்துடன் இத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தொடர்ந்தும் கொடூரமான குடும்ப ஆட்சியைத் தக்கவைப்பதற்காக, பொதுஜன பெரமுன தரப்பினர் குடும்ப உறுப்பினரான கோத்தபாய ராஜபக்சவை இம்முறை களமிறக்குகின்றனர்.இந்த வேளையில் இது சிங்கள மக்களுக்கான தேர்தல், சிங்கள தலைவர்களுக்கான தேர்தல் எனவே இந்த தேர்தலை பகிஸ்கரிக்கவேண்டுமென சிலர் கூறுகின்றனர்.சிலர் யாருக்கென்றாலும் பறவாயில்லை, வாக்களியுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறன கருத்துக்கள் முற்றிலும் தவறானவை.

எமது குடும்பத்தைக் கொன்றொழித்த ராஜபக்ச குடும்பம் எவ்வாறு 2005ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறியது என்று நாம் பார்க்கவேண்டும்.அந்தத்தேர்தலில் எங்களுடைய வாக்களிப்பு தவிர்ப்பினால்தான் ராஜபக்ச குடும்பம் ஆட்சிபீடம் ஏறியது.அவர்கள் ஆட்சிபீடம் ஏறி, எமது இனத்தைக் கொன்றொழித்தார்கள், பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன. ஒரு கொடூரமான ஆடசி ஆவர்களுடைய ஆட்சிக்காலத்தில்இடம்பெற்றது.

ராஜபகசகடும்பம் தமிழ் மக்கள் வேண்டமென ஒதுக்கினார்கள்.அவ்வாறு எந்தமக்களை வேண்டாமென ஒதுக்கினார்களோ, அந்த தமிழ் மக்களாலேயே அவர்கள் ஆட்சியிலிருந்து துரத்தப்பட்டார்கள்.அவ்வாறு அவர் தோற்கடிக்கப்பட்டபிற்பாடு, நான் ஈழத்தின் வாக்குகளாலேயே தோற்கடிக்கப்பட்டேன் என மகிந்த ராஜபக்ச உரை நிகழ்த்தினார்.எங்குடைய ஒரே ஆயுதம் வாக்குரிமையாகும். அதை பகிஸ்கரிக்கவேண்டும், அல்லது அந்த ஆயுதத்தை பாவிக்கக்கூடாதெனக் கூறுவதற்கு எவருக்கும் அருகதையில்லை.

கடந்த 2005ஆம் ஆண்டுத் தேர்தலின்போது ரணில் விக்கிரசிங்க எமக்கு சமஸ்டி தருவதாக கூறினார். எனினும் நாம் அந்தத் தேர்தலை நாம் வாக்களிக்காது பகிஸ்கரித்தோம். ஆனால் அந்தக் காலகட்டத்தில் எம்மிடம் ஆயுதபலமிருந்தது. தற்போது அந்த ஆயுதபலமும் எம்மிடமில்லை.வாக்குரிமை என்பது எம்மைப் பாதுகாப்பதற்கான ஆயுதமாகும். அந்த ஆயுதத்தையும் கீழே வைக்கும் படியாக, சிலர் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கூறுகின்றனர்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலே 35வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவ்வாறு போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவர் நிச்சயமாக ஜனாதிபதியாக வருவார். தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக, ஜனாதிபதி தேர்வுசெய்யப்படமாட்டார் என்றில்லை. எனவே தமிழ் மக்களும் வாக்களிக்கவேண்டும்.

கோத்தாபய ராஜபக்ச என்பவர், ராஜபக்ச குடும்பத்திலேயே மிகவும் மோசமான ஒருவராவர். கடந்த கால யுத்தமும் அவருடையதுதான். கடந்த காலங்களில் "இது கோத்தாபாயவின் யுத்தம்" என்ற நூலும் வெளியிடப்பட்டது.

எனவே தமிழ் மக்களாகிய நாம், வாக்களிக்காமல் பகிஸ்கரிப்புச்செய்து அத்தகைய கொடூரமானவர்களை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றப்போகின்றோமா.?

இந்த தேர்தல் வெள்ளத்தை தடுப்பதற்கு அமைக்கப்டுகின்ற பாதுகாப்பு அணைக்கட்டு போன்றது. எனவே அனைத்து தமிழ் மக்களும் சரியான முறையில்இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எமது மக்களுக்கு சார்பான பல வாக்குறுதிகளை அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்துள்ளார்.

அரசியல்தீர்வு தொடர்பாக, ஒருமித்த பிளவுபடாத நாட்டிற்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்று அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி முன்வைத்துள்ளார்.இவ்வாறாக வாக்குறுதி வழங்குவதற்காவது அவருக்கு துணிவிருக்கின்றது.அவ்வாறான தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வாக்குறுதிகள் எதுவும் கோத்தபாயவினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை . அதற்கான துணிவும் அவரிடம் இல்லை.

நாம் கடந்த ஜனவரியில் அரசியலமைப்புத் தொடர்பில், ஒரு திட்ட வரைபை பாராளுமனறில் முன்வைத்துள்ளோம். அதை நாம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி அந்த விடையத்தை நாம் முழுமையாக்கக்கூடிய சூழ் நிலையும் இருக்கின்றது.சஜித் பிரேமதாசவை வெல்லவைப்பதற்காக அதிகமாக தமிழ்மக்கள் வாக்களிக்கவேண்டும்.

தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கவேண்டுமென கோரிக்கையாக கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.

 

https://www.virakesari.lk/article/68613

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ஏராளன் said:

இந்த ஒரு தகவலே போதுமே அவரை தோற்கடிக்க!

EI7AQaPU4AApxt_?format=jpg&name=medium

EI7ARJtUYAA1rXm?format=jpg&name=medium

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் யாருக்கு வாக்களித்தாலும் தோற்க்கப்போவது தமிழர்கள்தான்.  இதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. 

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

சம்பந்தனையும் அவரது குடும்பத்தையும் கொன்றுவிட்டு.. சம்பந்தன் அழிப்பு என்று சொல்வது எப்படி அபந்தமோ.. அப்படியான அபந்தத்தையே சம் சும் மாவை கும்பல்.. தமிழ் மக்களின் அழிப்பை.. புலி அழிப்பாக மட்டும் சித்தரிப்பது.

இதே புலிகளை பயங்கரவாதிகள் என்றும்.. இவர்களை அழித்தால்.. தீர்வு கிட்டும் என்று நம்பியவர்கள்.. சொல்லிக் கொண்டோர்.. சொல்லிக் கொண்டு யுத்தம் செய்தவர்களுக்கு வால்பிடித்தோரில்..  இந்தக் கும்பலைச் சேர்ந்தோரும் அடங்குவர். 

இன்று தமிழ் மக்களின் வாக்குச் சீட்டுக்காக.. புலிகள் மீது பச்சாந்தாபப் பேச்சுக்களோடு.. புலி அழிப்பென்று.. ஒரு தமிழினப் படுகொலைக்கு முத்திரை குத்தி.. தங்களின் சிங்கள எஜமான விசுவாசத்தையும் வெளிப்படுத்த தவறவில்லை.. இந்த கேடுகெட்ட.. சம் சும் மாவை கும்பல். 

இவர்களுக்கும் ஒட்டுக்குழு தலைவன் டக்கிளசுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

புலிகள் அழிந்தது தனக்கு சந்தோஷம் என சொன்ன ஆள்தான் இவரு அதனால்தான் திருகோணம்லைக்கு போய்வர முடிந்ததாக சொன்ன ஆளு இப்ப கேம் ஆடுது

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

புலிகள் அழிந்தது தனக்கு சந்தோஷம் என சொன்ன ஆள்தான் இவரு அதனால்தான் திருகோணம்லைக்கு போய்வர முடிந்ததாக சொன்ன ஆளு இப்ப கேம் ஆடுது

உதுகளின்ரை  குத்துக்கரணங்களை 77ம் ஆண்டிலை இருந்து பாக்கிறம் தானே.
 

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, குமாரசாமி said:

உதுகளின்ரை  குத்துக்கரணங்களை 77ம் ஆண்டிலை இருந்து பாக்கிறம் தானே.
 

இவங்களை நம்பி இன்னும் சிலர் பின்னாலே போறதும் இல்லாமல்பாடம் வேற படிப்பிக்கிறாங்கள்

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • மகஇகவில் இருந்து மருதையன் விலகல்! மின்னம்பலம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும் இருந்த மருதையன் இயக்கம் சம்பந்தப்பட்ட தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (பிப்ரவரி 24) அறிவித்திருக்கிறார். கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற மருதையனுடன், மாநில செயற்குழு உறுப்பினரான நாதனும் தனது விலகலை அறிவித்துள்ளார்.   24.2.2020 தேதியன்று கூட்டப்பட்ட ம.க.இ.க. மாநில செயற்குழுவின் அவசரக்கூட்டத்தில் மருதையனும், நாதனும் தமது விலகலை முன் வைத்தார்கள். ஆனால்,மாநில செயற்குழு தோழர்கள் அதனை ஒருமனதாக நிராகரித்தனர். தொடர்ந்து பொறுப்பில் நீடிக்க வேண்டும் என மாநில செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனாலும் இருவரும் தம் முடிவில் உறுதியாக இருந்துவிட்டனர். இதுகுறித்து மருதையன் இன்று (பிப்ரவரி 24) விளக்கமாக ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். “எனக்கும் என்னுடன் இணைந்து விலகலை அறிவித்திருக்கும் தோழர் நாதனுக்கும் இது மிகவும் கடினமான ஒரு முடிவு. கடந்த சுமார் 40 ஆண்டுகளாக எனக்கும், 30 ஆண்டுகளாக அவருக்கும் அமைப்பு நடவடிக்கைகள்தான் வாழ்க்கையாக இருந்தன. ஒரு கசப்பான போராட்டத்துக்குப் பின்னர்தான் தவிர்க்கவே இயலாது என்ற நிலையில் இந்த முடிவுக்கு நாங்கள் இருவரும் வந்திருக்கிறோம்.   அயோத்தி தீர்ப்பு, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதல், குடியுரிமை திருத்தச் சட்டம் என்று மோடி அரசின் பார்ப்பன பாசிசத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், எங்களது இந்த விலகல் அறிவிப்பு பலருக்கு வருத்தமளிக்கலாம், சிலருக்கு அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கலாம். நாடெங்கும் மாணவர்களும் முஸ்லிம் பெண்களும் இன்னும் பல்வேறு தரப்பினரும், அஞ்சாநெஞ்சினராய் பாசிசத்தை எதிர்த்துக் களத்தில் நிற்கின்றனர். ஜனநாயக சக்திகள் அனைவரும் கைகோர்த்துக் களத்தில் நிற்பதென்பது காலத்தின் தேவை. அத்தகைய முயற்சியில் முன்நிற்க வேண்டிய அமைப்பின் தலைமைத் தோழர்கள், அமைப்புக்கு உள்ளேயே இப்படியொரு நிலைமையைத் தோற்றுவிக்கிறோமே என்பது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை.   சென்ற ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு மாநாட்டிற்குப் பின்னர், எமது அமைப்புகளிலிருந்து சிலர் வெளியேறியதையும், வெளியேற்றப்பட்டதையும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பலரும் அறிந்திருப்பீர்கள். கார்ப்பரேட் காவி பாசிசம் அல்லது பார்ப்பன பாசிச அபாயத்தை அமைப்பிலிருக்கும் சில மூத்த தோழர்கள் மறுத்தனர். தங்களது எதிர்ப்பை எனக்கெதிரான தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி, சமூக ஊடகங்களின் வாயிலாக அமைப்புக்கு எதிராக ஒரு பதிலிப்போர் நடத்தினர். 1. கார்ப்பரேட் காவி பாசிசம் என்ற அரசியல் முழக்கத்தை ஆய்வின்றி சதித்தனமாக புகுத்திவிட்டேன் 2. அருந்ததி ராய், ஆனந்த் தெல்தும்டெ ஆகியோர் வழியில் காங்கிரசு – திமுக வுக்கு ஆதரவாக அமைப்பை இழுத்து செல்கிறேன் 3. நாடார் வரலாறு கருப்பா காவியா என்ற நூல் வெளியீடு மற்றும் விற்பனையை ஊக்குவித்ததன் மூலம் சாதி அரசியலையும் திராவிட அரசியலையும் மறைமுகமாக ஊக்குவிக்கிறேன். 4. அமைப்பின் மூத்த தோழர்களுக்கிடையே கலகத்தை மூட்டி பிரித்து விட்டேன் 5. கீழைக்காற்றை மூடுவதற்கு சதி செய்தேன் 6. மூத்த தோழர்களை வீழ்த்தி விட்டு மொத்த அமைப்பையும் கைப்பற்ற முயற்சிக்கிறேன்” – என்பன எனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள். (கீற்று இணையதள கட்டுரை மற்றும் எழில்மாறன் உள்ளிட்ட சிலரின் முகநூல் பதிவுகள்). இவை தவிர தரம் தாழ்ந்த பல அவதூறுகளையும் கடந்த ஓராண்டாக வாய்வழியே பரப்பி வந்தனர்.   தங்களுக்கு உவப்பில்லாத அமைப்பின் முடிவுகள் அனைத்தையும் ஒரு சதிக்கோட்பாடாக மாற்றி, குற்றத்தை என் தலையில் சுமத்தினர். ‘போம்பழியெல்லாம் அமணன் தலையோடே’ என பழி எதுவாகிலும் அதனைச் சமணர் தலையில் சுமத்திய ஆழ்வார்கள் நாயன்மார்களின் தந்திரம் இது. அவதூறு செய்தவர்கள் என்னை மட்டும் தாக்கவில்லை. சென்ற ஆண்டு அமைப்பின் பிரதிநிதிகளால் ஜனநாயக பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளைக் கொச்சைப்படுத்தினர். அவ்வாறு முடிவெடுத்த பிரதிநிதிகள் அனைவருமே “செட் – அப் செய்து கொண்டுவரப்பட்ட மோசடிப்பேர்வழிகள்” என்று அனைவரையும் தூற்றினர். இந்த நபர்களை “சீர்குலைவு சக்திகள்” என்று அமைப்பின் தலைமை அறிவித்தது. அத்தகைய சிலர் அமைப்பிலிருந்தும் நீக்கப்பட்டனர். ஆனால், வேறு சிலர் இதே அவதூறுகளை, அமைப்புக்குள் இருந்தபடியே ஓராண்டாகப் பரப்பி வந்தனர். சமூக ஊடகங்களில் அவதூறு செய்வோரைத் தூண்டிவிடுவதே அமைப்பிற்கு உள்ளே இருக்கும் இந்த தந்திரசாலிகள்தான் என்று தலைமைக்குழுவுக்கு ஆதாரபூர்வமாகத் தெரியும். இவர்கள்தான் சீர்குலைவு நடவடிக்கைகளின் ஆணிவேர் என்றும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் தலைமைக்குழு ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறது. அந்த முடிவு காகிதத்தில் இருக்கிறது.   இருப்பினும், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று, இப்பிரச்சனை, சில முன்னணித் தோழர்களின் முன் பரிசீலனைக்கு வந்தபோது, தலைமைக்குழுவின் பெரும்பான்மையான தோழர்கள், அவதூறுப் பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்ணாய் அமைப்பிற்குள் செயல்பட்டு வந்தவர்களுக்கு குற்றமற்றவர்கள் என்று நற்சான்று கொடுத்து, அவர்களை நம்பவைத்தார்கள். அமைப்பின் பொதுமேடையில் அமைப்பின் அடிப்படை உறுப்பினர்கள் தலைமைக்குழுவினரை விசாரிப்பதுதான் நியாயமான அமைப்புமுறை” என்று நானும் வெறு சில முழுநேர ஊழியர்களும் வலியுறுத்தினோம். தாங்கள்தான் அமைப்பின் அதி உயர் தலைமை என்பதால், தவறு செய்தவர்கள் தங்களுக்குள் சுயவிமர்சனம் செய்து பிரச்சனையை முடித்துக் கொள்வதுதான் அமைப்புமுறை என்பது தலைமைக்குழு பெரும்பான்மையினரின் நிலை. முதலாளித்துவ நீதிமுறையாலேயே ஒப்புக்கொள்ளப்படாத, எனக்கு நானே நீதிபதி என்ற நெறியை, இதுதான் பாட்டாளிவர்க்க அமைப்புமுறை என்று கூறியதை எங்களால் ஏற்கமுடியவில்லை.” என்று விளக்கம் அளித்திருக்கிறார் மருதையன். மேலும் அவர், “ ஜனவரி 11 ஆம் தேதியன்று எங்கள் மீதான விமர்சனம் என்ற பெயரில் 20 பக்க கடிதமொன்றை அமைப்பின் முன்னணியாளர்கள் மத்தியில் சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். எங்கள் மீதான விமர்சனத்தை எங்களிடம் கொடுத்து விளக்கம் கேட்காமல், மற்றவர்களிடம் கொடுத்து என்னைப் பற்றிக் கருத்துருவாக்கம் செய்வது நெறியற்ற செயல். எங்களுக்குக் கொடுங்கள், விளக்கமளிக்கிறோம் என்று கேட்டுவிட்டோம். தரமறுக்கிறார்கள். ஒரு குற்றச் செயலில் ஈடுபடுகின்ற அதிகாரவர்க்கம், அதனை கேள்விக்குள்ளாக்குகின்ற செயல்பாட்டாளர்களை (whistle blowers) அவதூறு செய்து, பொய்வழக்கு போட்டு உள்ளே தள்ளுவது போல, என்மீது பொய்வழக்கு தொடுத்து வெளியே தள்ளுவதற்கான வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டார்கள். மொத்த அமைப்பின் தலைமை நானல்ல என்ற போதிலும், பார்ப்பனத்தலைமை என்ற விமர்சனத்தை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து என்னை மையப்படுத்தி பலர் வைத்திருக்கின்றனர். அப்படி விமர்சித்தவர்கள் யாருக்கும் என்மீது தனிப்பட்ட பகை கிடையாது. அது அவர்களது அரசியல் பார்வை. அத்தகைய பார்வை வருவதற்கான சமூக எதார்த்தமும் உள்ளது என்ற காரணத்தினால், அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் நான் வருத்தம் காட்டியதில்லை. பொதுமேடையில் இத்தகைய விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது, தி.க வைச் சேர்ந்த எனது நண்பர்கள், அங்கேயே தமது கட்சியினரை மறுத்து வாதாடியிருக்கிறார்கள்.அவர்கள் காட்டிய நேர்மை நமது அமைப்பின் முக்கியத் தோழர்களிடம் இல்லை. நான் உள்ளேயிருந்து போராடவே விரும்பினேன். தலைமைப் பொறுப்புகளிலிருந்து விலகி, உறுப்பினராக அமைப்பில் இயங்குகிறேன் என்ற எனது கோரிக்கையை 4 மாதங்களாக முடக்கி வைத்திருந்தார்கள். தம் தவறை நியாயப்படுத்த எந்த அளவுக்கு நிலை தாழ்ந்து செல்வார்கள் என்பதை இந்த நான்கு மாதங்களில் பார்த்துவிட்டேன். நான் வெளியேறுகிறேன் என்று சொல்வதை விட, வெளியேற்றப்படுகிறேன் என்பதே உண்மை. “இந்த அரசியல் தருணம் விலகுவதற்கு ஏற்றதல்ல” என்று பலரும் கருதலாம். ஆனால் இந்த அரசியல் – அமைப்புத் தலைமை மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன். 35 ஆண்டுகள் முழுநேரமாகப் பணியாற்றி விட்டு, தவறை நேர்மையாக விமர்சித்த குற்றத்துக்காக, “சதிகாரன் – பதவி வேட்டைக்காரன் என்பன போன்ற அவதூறுகளுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில், அமைப்பில் நீடிப்பதற்கு நான் விரும்பவில்லை. இந்த நான்கரை மாதங்களில் தலைமைக்குழுவுடனான எனது கடிதப் போக்குவரத்து, முன்னணித் தோழர்கள் குழுவின் கூட்டக் குறிப்புகள், எனக்கே தரப்படாத என் மீதான விமர்சனக் கடிதம் ஆகியவை உங்களுக்கு வாசிக்க கிடைக்குமானால் என்னுடைய கூற்றில் இருக்கும் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். பாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு – அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும். அதிகாரத்துவப் போக்கிற்கு சப்பை கட்டுவது, பாசிச எதிர்ப்பு போராட்டத்துக்கு நிச்சயமாக வலுச்சேர்க்காது. அமைப்பு நலன், அமைப்பு முறை என்ற இரு சொற்றொடர்களைத் தங்களது தவறை மறைப்பதற்கான கேடயமாகவும், விமர்சிப்போரை வீழ்த்துவதற்கான வாளாகவும் இந்தத் தலைமை தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊன்றி நின்று போராடிப் பாருங்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வீர்கள். நாங்கள் இந்த அமைப்பிலிருந்து விலகுகிறோம். நாற்பதாண்டு அமைப்பு வாழ்க்கையில் தோழர்களோடு இணைந்து பணியாற்றிய நினைவுகள் அனைத்தும் இனிமையானவை. இன்று அவை வெறும் நினைவுகள் மட்டுமே. நினைவில் நிழலாடும் தோழர்கள், நிஜத்திலும் நிழல் போலவே ஒதுங்குவதைக் காணும்போது மட்டும், சற்றே கண்கள் கலங்குகின்றன.எனினும் நினைவுகளில் யாரும் வாழ்க்கை நடத்த முடியாது என்பதை நான் அறிவேன். இன்று என்னுடைய நிஜம் இதுதான்” என்று உருக்கமாக விளக்கி முடித்திருக்கிறார் மருதையன்.   https://minnambalam.com/public/2020/02/24/45/maruthaiyan-makaika-resigned-from-all-positions
  • குசினியில் இருக்கும் கொஞ்ச சாமான்களை வைத்து அருமையான முட்டை  பணியாரமும்  அதற்கேற்ற காரச்சட்னியும் .........!   😋
  • சூரியனைக் காணாமலேயே வாரத்தில் 6 நாட்கள் (சிலவேளை 7 நாட்களும்) வேலை வேலை என்று தும்படித்து தமது குடும்பம், சொந்தம் என்று உதவிக்கொண்டு வாழ்பவர்களை புலம்பெயர் நாடுகளில் காணலாம். பிள்ளைகளுடன் நெருக்கமாக இளவயதில் இருக்காவிட்டால், அவர்களுக்கு எமது பூர்வீகத்தையும் வரலாறுகளையும் சொல்லாவிட்டால் அந்நியத்தன்மை வந்துவிடும். வயது போய் நோய்வாய்ப்படும்போது புறக்கணிப்பது எதுவித குற்றவுணர்வையும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தாது.
  • Harvey Weinstein guilty over sexual assaults Harvey Weinstein has been found guilty of sexual assault, capping a stunning downfall for the former Hollywood mogul and a victory for the #MeToo movement against harassment. Weinstein, 67, was convicted in New York City of third-degree rape and first-degree criminal sexual act. But he was cleared of the most serious count of predatory sexual assault. He faces up to 25 years in prison. He still faces charges in Los Angeles of assaulting two women in 2013. At least 80 women had accused him of sexual misconduct stretching back decades, including actresses Gwyneth Paltrow, Uma Thurman and Salma Hayek. The allegations were at the centre of the #MeToo movement that inspired women to go public with misconduct allegations against powerful men. The movie executive once enjoyed phenomenal success with Oscar winners such Pulp Fiction, Good Will Hunting, The King's Speech and Shakespeare in Love. https://www.bbc.com/news/world-us-canada-51621041
  • ஆற்றில் வாழ்ந்தாலும் தண்ணீர் விடுவதில்லை ஓய்வெடுக்க  ஆற்று மேடுதான் அதுக்கு தோது ..........!   🐇