ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த மூன்று போராளிகளின் விபரங்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் கடற்பரப்பில் நேற்று இடம்பெற்ற மோதலில் கப்டன் றெஜி என்றழைக்கப்படும் காலியை சேர்ந்த பரமசிவம் சுப்பிரமணியம் என்ற போராளி வீரச்சாவை தழுவிக்கொண்டுள்ளார். திருமலை உப்பாறில் கடந்த 30 ம் திகதி இடம்பெற்ற மோதலில் கப்டன் ஈழவேந்தன் என்றழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தை சொந்த இடமாகவும் மல்லாவி யோகபுரம் வளநகரை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த மரியதாஸ் அந்தோனி என்ற போராளி வீரச்சாவை தழுவியுள்ளார். கடந்த 1998 ம் ஆண்டு ஜீன் மாதம் 20 ம் திகதி வன்னி மாங்குளத்தில் இடம்பெற்ற ஜெயசுக்குறு சமரில் வீரவேங்கை வெற்றிவேந்தன் என்றழைக்கப்படும் மலையகம் கண்ட…
-
- 4 replies
- 1.4k views
-
-
இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் அம்பாறை திருக்கோவில் தங்கவேலாயுதபுரப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் வாகனத்தின் மீது பகுங்கியிருந்து தாக்கியதில் 8 சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பில் கிடைத்த ஆரம்பகட்ட தகவலின்படி விடுதலைப்புலிகளின் விசேட கரந்தடிப்படையிணி ஒன்று விசேட அதிரடிப்படையிளரின் விநியோக அணிமீது மேற்கொண்ட தாக்குதலிலே இவ்இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதனைத்தொடர்ந்து கல்முனைப்பகுதியில் 41 கிலோமீற்றர் தெற்கில் அமைந்துள்ள தாக்குதல் இடம்பெற்ற இவ்இடத்தில் இருந்து தாக்குதலையடுத்து பலத்த எறிகணை, மற்றும் துப்பாக்கி சூட்டுதாக்குதல்களை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர். tha…
-
- 3 replies
- 1.4k views
-
-
திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாட சாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் அனுஷா (வயது 09) என்ற மாணவியும் இன்னொரு மாணவியும் 12.02.2010 அன்று மாலை நேர வகுப்பு முடிவுற்றதும் திகிலிவட்டையிலுள்ள தமது வீடுகளுக்கு சென்று கொண்டு இருக்கும் வழியில் 03 இரானுவ வீரர்கள் நிர்வாணமாக குளித்துக்கொண்டு இருந்த வேளையில் அந்த இரானுவ வீரர்கள் இச் சிறுமி இருவரையும் துரத்திய போது அதில் ஒரு (9 வயது) சிறுமி இராணுவ வீரர்களிடம் சிக்கியுள்ளார். மற்றவர் ஓடி தப்பிவிட்டார். பின்னர் அந்த மாணவிக்கு ஒரு இனிப்பு கொடுக்கப்பட்டதாகவும் பின்னர் அந்த மாணவி மயக்கமான நிலையில் நடக்க டியாமல் தள்ளாடிய நிலையில் வீட்டுக்கு சென்றதõகவும் அந்தரங்க உறுப்புக்களில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பிள்ளை ஒரு விரக்தியான நிலையிலும் …
-
- 1 reply
- 1.4k views
-
-
முத்து ஐயன் கட்டுப் பகுதி மக்கள் இடம்பெயர்வு திகதி: 24.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] சிறிலங்காப்படை அச்சுறுத்தல் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களான முத்து ஐயன்கட்டு மற்றும் மன்னாகண்டல் பகுதிமக்களும் இடம்பெயர்ந்துவருகின்றனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைக் கொண்ட பெரியப்பரப்பில் அமைந்துள்ள மேற்படி பகுதிகளின் மக்கள் தமது உடமைகளுடன் இடம்பெயர்ந்து செல்வதால் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி பெரும் நெருக்கடி நிறைந்ததாகக் காணப்படுகிறது. மேற்படி பகுதிகளில் நிரந்தர குடியிருப்பாளர்கள் தவிரபெருமளவான இடம்பெயர்ந்த மக்களும் தங்கியிருந்த நிலையில் அவர்களும் இடம்பெயர்ந்து செல்லும் அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். பெருமளவான வயல்நிலங்கள் …
-
- 0 replies
- 1.4k views
-
-
A Canadian government survey found that over 70% of Sri Lankan Tamil refugees have gone back to Sri Lanka for holidays raising concerns over the legitimacy of their refugee claims.[ http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamil_people
-
- 9 replies
- 1.4k views
-
-
பிரபாகரன் வீட்டு பங்கருக்குள் வீழ்ந்த சிங்களப் பெண் சாவு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வீட்டை பார்வையிடச் சென்ற சிங்களப் பெண்ணொருவர் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். ஜேபி சிறியலதா (வயது56) என்ற பெரும்பான்மையினப் பெண்ணே உயிரிழந்தவராவார். கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வீட்டை குறித்த பெண் பார்வையிடச் சென்றுள்ளார். இதன் போது அவரது வீட்டைப் பார்வையிடும்போது அங்கிருந்த பங்கர் ஒன்றினுள் தவறி விழுந்துள்ளார். இதன் காரணமாகத் தலையில் கடுமையான க…
-
- 5 replies
- 1.4k views
-
-
Posted on : Fri Apr 25 9:15:00 2008 புலிகளுக்காக வேவு பார்த்தாராம்; வெள்ளவத்தையில் பெண் கைது கொழும்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வேவு பார்த்து அது பற்றிய தகவல்களைப் புலிகளுக்கு வழங்கினார் எனக் கூறப்படும் தமிழ்ப்பெண் ஒருவரை வெள்ளவத்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வெள்ளவத்தை பெர்னாண்டோ வீதியில் சிங்களவர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த வேளையிலேயே இப் பெண்ணைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் அவர் நீண்ட காலமாகத் தங்கியிருந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவரது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பணத்தைத் தாராளமாகச் செலவிடும் போக்கு என்பனவற்றை நீண்ட காலமாகக…
-
- 0 replies
- 1.4k views
-
-
இறுதி யுத்தத்தில் நிராயுதபாணியாக பேசச் சென்ற பொழுது சிங்களப் படைகளால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவின் கொலைக்கரம் இருப்பதை உறுதிசெய்யும் ஒலிப்பதிவு அமெரிக்காவிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த போராளிகளினதும், பொதுமக்களினதும் உயிர்களைப் பாதுகாக்கும் நிமித்தம் எரிக் சொல்கைம் போன்றோர் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் 2009 மே 18 அன்று நிராயுதபாணியாக பேசச் சென்ற தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், காவல்துறைப் பொறுப்பாளர் இளங்கோ (ரமேஸ்) ஆகியோர் சிங்களப் படைகளால் கொடூரமான முறையில் சுட்டும், எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கையில் தனித் தமிழ் நாடு அமைக்கும் கனவு இன்னமும் வலுவாகவே காணப்படுவதாக கிறிஸ்தவ விஞ்ஞான அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சுதந்திர தனித் தமிழ்நாடு உருவாவதற்கான சாத்தியம் இருப்பதாகவே தமிழ் புத்தி ஜீவிகள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சரியான முறையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழர் அபிலாஷைகளை புரிந்து கொள்ளாது முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டங்கள் ஒருபோதும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தாதென கிறிஸ்தவ விஞ்ஞான அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இராணுவ வெற்றிகளை பயனுள்ளதாக மாற்ற வேண்டுமாயின் தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகளை கூர்ந்து அவதானித்து தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. நடைமுறைச் சாத்தியப்பாடுடைய அதிகாரப் பகிர்வுத் …
-
- 0 replies
- 1.4k views
-
-
கொடூரமான பயங்கவாதத்திடம் இருந்து மீட்ட நாட்டை எந்த சக்திகள் பறிக்கவும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, லண்டனில் உள்ள இலங்கையர்கள் லண்டன் பார்க் லேனில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் லண்டன் விஜயத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில், லண்டனில் வசிக்கும் இலங்கையர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டகார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையர்கள் மற்றும் சகல இனங்களுக்காகவும் கட்டியெழுப்பபட்டு வரும் நாட்டை, எதிர்கால சந்ததி…
-
- 1 reply
- 1.4k views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழுக்குரிய அடையாளமான கல்லடிப் பாலம், இப்போது மரண ஓலம் அடிக்கடி கேட்கும் இடமாக மாறியிருக்கிறது. கல்லடிப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரிட்டன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், 1924ஆம் ஆண்டு இந்தப் பாலத்தின் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, 1928ஆம் ஆண்டு நிறைவடைந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் அந்தப் பாலத்துக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகவுள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழில் குண்டுச் சத்தங்கள்? இன்று மாலை முதல் யாழ்.குடா குண்டுச் சத்தங்களால் அதிர்ந்து கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்களப் படை முகாம்களிலிருந்து உக்கிர ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்கிகள் இன்று மாலை முதல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி உக்கிர தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்i;ல.
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் ஏற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும் [19 - August - 2007] * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் பேட்டி -வன்னியூரான்- தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டால் இலங்கைப் பிரச்சினையை இலகுவாக தீர்த்துவிடலாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் `தினக்குரல்'க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். கே : யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் சொந்த மாவட்டத்தில் தமது மக்களோடு நின்று பணியாற்ற முடியாதுள்ள நிலைமை பற்றி? ப : யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை குவித்து துணை இராணுவக் குழுக்களை சுதந்திரமாக நடமாடவிட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
http://m.youtube.com/watch?v=9mrpyGH8rw8
-
- 5 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழ்ச் சமூகம் குறித்து ஒரு விசாரணை [ சனிக்கிழமை, 29 மே 2010, 06:38 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம் 01. கட்டுரைக்குள் செல்லுவதற்கு முன்னர், ஒரு சுவையான வரலாற்றுச் சம்பவத்தை இங்கு பதிவு செய்கிறேன். உலகம் தட்டையானது என்பது பண்டைய கிறிஸ்தவ நம்பிக்கை. அதனை தனது விஞ்ஞான ஆய்வுகள் மூலம் கலிலியோ கலிலி பொய்ப்பித்தார். இது குறித்து அப்போது மரணப்படுக்கையில் கிடந்த இரண்டாம் போப்பாண்டவர் கலிலியோவை அழைத்து, நீர் உமது கருத்துக்களை மாற்றியமைக்க வேண்டும் என்றார். அதனை கவனமாக செவிமடுத்த கலிலியோ ஆம் ஐயா அப்படியே செய்கிறேன் ஆனாலொன்று நான் எனது கருத்துக்களை மாற்றி எழுதினால் போல் உலகம் சுற்றாமல் விடப்போவதில்லை என்ற…
-
- 7 replies
- 1.4k views
-
-
இந்திய-சிறிலங்கா கூட்டுச்சதிக்கு பலியாகி வீரச்சாவைத் தழுவிய பன்னிரு வேங்கைகளின் 20 ஆம் ஆண்டு அகவணக்க நிகழ்வுகள் தமிழீழத் தாயகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
கிளிநொச்சி தர்மபுரத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய மிலேச்சத்தனமாக குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.4k views
-
-
வவுனியாவில் தாக்குதல் - நான்கு படையினர் பலி வவுனியாவில் உள்ள திருவேகம என்ற சிங்களக் கிராமத்தில் சிறிலங்கா ஊர்காவல்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் நான்கு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
-
- 4 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நேற்று(07) அழைப்பு விடுத்தார். இராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.…
-
- 7 replies
- 1.4k views
-
-
வன்னியில் நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கதைகள் கண்ணீர் வெள்ளத்தையும், ஆத்திரத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்ட பலர் புதிய சூழ்நிலைகளுடன் இணைந்து வாழமுடியாதவர்களாக உள்ளனர் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சி. என். என் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் செய்தியாளர் சரா சின்டர் தொகுத்து வழங்கிய செய்தியின் ஒரு பகுதியின் தமிழாகம். இளைமைக்கால இளம் வயதினரைப்போல எதிர்கால வாழ்வின் கனவுகள் ரவீந்திரன் ஜனதாவுக்கு கிடையாது. 21 வயதான அவர் தனது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளாரா என்றால் “எதுவுமில்லை” என மென்மையாக பதில் தந்தார். தனக்கு எதிர்காலம் இல்லை என்பதில் அவர் நம்பிக்;கை கொண…
-
- 7 replies
- 1.4k views
-
-
நடைபெறவுள்ள நாடாளமன்றத் தேர்தலை முன்னிட்டு குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக பல தரப்பினர்களையும் நேர்காணல் செய்து வநதோம். அந்த வகையில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் இருவரை நேர்காணல் செய்ய முற்பட்ட வேளை அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திட்டனர். அதில் எமக்கு நேர்காணல் தருவதாக கூறிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் குறித்த கேள்விகளை பார்த்துவிட்டு அவற்றுக்கு பதில் அளிக்க மறுத்திருக்கிறார். அதேவேளை குறித்த சம்பவத்தின் பின்னர் கேள்விகளை பார்க்காமலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நேர்ககாணல் செய்ய மறுப்பு தெரிவித்திருந்தார். குறித்த கேள்விகளை வாகசர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிற…
-
- 8 replies
- 1.4k views
-
-
"தமிழ் மக்களின் வாக்குகள் எனக்கு கிடைக்காது என முன்னரே எனக்கு தெரிந்திருந்தது" ககானி வீரக்கோன் -- விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்செய்திகள்- தமிழ்மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை தான் முன்னரே உணர்ந்திருந்ததாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 30 வருடங்களாக தங்கள் தலைவர், தங்களை காப்பாற்றுபவர், தங்களின் பாதுகாவலன் என அவர்கள் நினைத்திருந்த ஓருவரை அழித்த பின்னர் நீங்கள் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? தங்களுக்கு விடுதலையை வழங்கும் என அவர்கள் எதிர்பார்த்த அமைப்பை அழித்த ஒருவர் தொடர்ந்தும் பதவியிலிருப்பதை அவர்கள் விரும்புவார்களா? என்றும் கேள்விஎழுப்பியுள்ளார். சிலோன் ருடேயிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது …
-
- 15 replies
- 1.4k views
-
-
20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று நாட்டுக்கு ! இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடையுள்ளது. முட்டை விலை அதிகரிப்பிற்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதற்கமைய, இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்படவுள்ள குறித்த கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/2023/1325437
-
- 17 replies
- 1.4k views
- 1 follower
-
-
“பொலீஸ் பாதுகாப்புத்தானே… தருகிறோம். அதற்குமுன் ஆட்களைக் காட்டுங்கள்” ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Tuesday 10 May 2011, 16:16 GMT ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கொழும்பு, ஸ்ரீலங்கா: “ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலகரட்ண, தான் கூறியதுபோல கிரிக்கெட் சூதாட்ட வீரர்களின் பெயர்களை வெளியிட்டால், அவருக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்” இவ்வாறு அறிவித்தி…
-
- 2 replies
- 1.4k views
-
-
மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் இலங்கையின் பெருமையும், கௌரவமும் எந்த மட்டத்தில் உள்ளன என்பது சர்வதேச மனித உரிமை ஆர்வலர் என மதிக்கப்படும் தென்னாபிரிக்கப் பேராயர் வண.டொஸ்மண்ட் டூட்டு விடுத்துள்ள பகிரங்க அறிக்கையில் அம்பலமாகியிருக்கின்றது. மனித உரிமைகளுக்காகவும் நிற வெறிக்கு எதிராகவும் கடுமையாகப் போராடி வருபவர் வண. டூட்டு. இதற்காக 1984 இல் அவருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மிகக் கேவலமான பதிவுகளைக் கொண்டிருக்கும் இலங்கை, மனித உரிமைகளுக்கான ஐ.நா. கவுன்ஸிலில் இடம்பிடிப்பதற்கான தேர்வில் போட்டியிடுவது பெரும் அபத்தம் என்று வெளிப்படையாகவே விமர்சித்து, இலங்கைக்கு அதன் மோசமான நிலையை எடுத்துரைக்க முயன்றிருக்கிறார் பேராயர் டூட்டு. …
-
- 1 reply
- 1.4k views
-