ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
சனசமூக, ஆலய நிர்வாகங்களில் பெண்களை இணைக்க கோரி நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் January 11, 2022 சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 46ஆவது மாதாந்த சபை அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது சபை உறுப்பினர் சி.கௌசலா , ” சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும்” என சபையில் பிரேரணையை முன் வைத்தார். அதனை சபை உறுப்பினர்கள் ஆதரித்ததை அடுத்து சபையில் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. …
-
- 6 replies
- 500 views
-
-
திஸ்ஸநாயகம் சரீர பிணையில் இன்று விடுதலை வீரகேசரி இணையம் 1/11/2010 11:38:45 AM - யுத்தகாலத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் சரீர பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டார். நாட்டின் இறைமைக்கு எதிரான கட்டுரைக்கு உரித்துடையவர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. திஸ்ஸநாயகத்தை விடுவிக்கக் கோரி கடந்த சில…
-
- 2 replies
- 730 views
-
-
நெருக்கடிக்குள்ளாகியுள்ள பல முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக, முழுநிலவு நாளான நாளை மறுநாள் சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. பௌத்தர்களின் வழிபாட்டுக்குரிய நாளாக கருதப்படும் முழுநிலவு நாள் சிறிலங்காவில் விடுமுறை நாளாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. குறித்த நாளில் எந்த அரச பணிகளும் ஆற்றப்படுவதில்லை. இந்தநிலையில், நாளை மறுநாள்- முழுநிலவு நாளில் அமைச்சரவையை அவசரமாக கூட்டியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. நாளை மறுநாள் காலை 7 மணியளவில் சிறிலங்கா அமைச்சரவைக் கூடம்டம் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரி…
-
- 5 replies
- 733 views
-
-
"நாங்க பதுளையில ருந்து 10 வருசத்துக்கு முதல இங் வந்து குடியேறினாங்க" "நான் பிறந்தது பதுளையில"
-
- 1 reply
- 270 views
-
-
வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு ஒப்படைக்க ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுயாதீன ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து அதில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்க வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து மூன்று இன சமூகங்களுக்கும் தனித் தனி அலகுகளை வழங்குவதற்கு ஜெனரல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதனை பிரதான வேட்பாளர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்து…
-
- 13 replies
- 1.5k views
-
-
நீதி வேண்டி யாழில் நாளை ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம் யாழ்ப்பாணம் நகரில் நாளை (திங்கட்கிழமை) ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெறும் நோக்கில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்படவுள்ளது. இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர ஊடக இயக்கம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்…
-
- 0 replies
- 163 views
-
-
அத்தனை தமிழர்களும் பிரபாகரன்களாக நிமிர்ந்து நின்றால், நிச்சயம் தமிழீழம் பிறந்தே தீரும்! சிங்கள தேசத்தின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 26-ம் திகதி நடைபெறவுள்ளது. தமிழீழ மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்கள் விடுதலை பெறும்வரை அல்லது அவர்களை விடுவிக்கும்வரை அவர்களது தலைவிதியை சிங்கள தேசமே நிர்ணயிக்கப் போகின்றது என்பதனால், ஈழத் தமிழர்களும் இந்த ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகி நிற்க முடியாது. மிகப் பெரிய தமிழின அழிப்பை நிகழ்த்திய சிங்கள இனவாதிகள் இருவர் தேர்தல் களத்தில் முன்நிலை வகுப்பதால், விரும்பியோ, விரும்பாமலோ ஈழத் தமிழர்கள் இருவரில் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். எங்கள் மக்களின் வாழ்வை…
-
- 0 replies
- 513 views
-
-
கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாணவர்கள் பல சாதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அடிப்படை வசதிகள், பொருளாதாரம் போன்ற பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் ஒரு மாணவனது சாதனைதான் இது! வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் முத்துவேல் ராசன் என்னும் மாணவன் கலைப் பிரிவில் இரண்டு 'ஏ', ஒரு 'சீ' பெறுபேற்றினை பெற்று பாடசாலை சார்பாக முதலிடத்தினையும், மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக 29வது நிலையினைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கேணி எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மாணவன் தனது ஆரம்பக் கல்வியை தரம் ஒன்று முத…
-
- 5 replies
- 679 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு தீர்வு – இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கான தீர்வாக அதிகாரப்பரவல் மிகவும் முக்கியமானது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸூடனான சந்திப்பின்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நட்புறவை மேலும் வ…
-
- 4 replies
- 443 views
-
-
ஆயுதம் ஏந்தாத போராட்டத்தை முன்னெடுப்போம் : யாழில் சுமந்திரன் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒன்றாக உள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தன்தெரிவித்தார். இவ்வாறனதொரு சூழ்நிலை இதுவரை காலமும் இருந்ததில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில் - மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் நே…
-
- 5 replies
- 626 views
-
-
கடத்திச் சென்று சிறைவைத்த நடவடிக்கையானது 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மக்களுக்கு சமாதானத்தை உருவாக்கிய தமது கணவருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய பரிசு என அனோமா பொன்சேக்கா கூறியுள்ளார். ஜெனரல் பொன்சேக்காவின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஜெனரல் ஒருவரை அரசாங்கம் இவ்வாறு நடத்துமாயின் எதிர்காலத்தில் நாட்டு மக்களை நடத்தும் விதத்தை எண்ணிப் பார்க்க முடியாது. சரத் பொன்சேக்கா இரகசியமான இடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் கைதுசெய்யப்பட்டிருந்தால் ஏன் இரகசியமாக தடுத்துவைக்க வேண்டும். ஜெனரல் பொன்சேக்கா கைதுசெய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்றிரவு 9.30 அளவ…
-
- 16 replies
- 1.4k views
-
-
வடக்கு அரசுக்குமுழுச் சுதந்திரம் கூட்டு அரசால் வழங்கப்பட்டுள்ளது மங்கள சமரவீர தெரிவிப்பு “வடக்கு மாகாண சபையை கடந்த அரசு எதிரியாக நடத்தி வந்தாலும் கூட்டு அரசின் கீழ் அது மாற்றியமைக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்குரிய அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன”. இவ்வாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உற்பத்தி வரி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளையும், முத்திரை தீர்வை (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கட்டளையையும் அங்கீகரிப்பதற்கான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையா…
-
- 1 reply
- 253 views
-
-
கிழக்கில் கனத்த மழை; மட்டக்களப்பில் 70.3 மி.மீ. மழை Wednesday, February 17th, 2010 at 0:51 காலநிலையில் திடீரென ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாகவே தற்போது மழை பெய்வதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் ஆனந்த பெரேரா நேற்றுத் தெரிவித்தார். இம் மழைக் காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் நீங்கிவிடும் எனவும் அவர் கூறினார். இம்மழைக் காலநிலை காரணமாக கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம் பாந்தோட்டை மாவட்டத்திலும் அதிக மழை பெய்யும். வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் மழை பெய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று பிற்பகல் வரையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 70.3 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதுவே நேற்று பெய்த அதிக மழை வீ…
-
- 0 replies
- 548 views
-
-
மீள் வாழ்க்கையை ஆரம்பிக்கும் வன்னி மக்கள் யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகளால் சேதமாக்கப்பட்ட தண்ணீர் தாங்கிக்கு அருகில் வன்னி மக்கள் தற்காலிக சந்தை அமைத்துள்ளனர். தமது நாளாந்த வாழ்க்கையை கொண்டுசெல்லும் வன்னி மக்கள் விற்பனையில் ஈடுபடுவதை படத்தில் காணலாம். tamil mirror
-
- 7 replies
- 947 views
-
-
இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு அரசாங்கம், அமெரிக்காவிடம் கோரியுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். மாறாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற மாற்று பொறிமுறைமை ஒன்றின் மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை திரட்டி பழையவற்றை தோண்டி எடுப்பதனால் பிரிவினையே அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனங்களுக்கு இடையில் முரண்பாடு அதிகரிக்குமே தவிர, …
-
- 6 replies
- 722 views
-
-
"எமக்கு கிடைத்திருக்கும் இறுதி" ரணில் ஜனநாயகத்தை பாதுகாத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இது எமக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பமாகும். இதனை பயன்படுத்திக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும். அத்துடன் அனைவரும் இலங்கையர் என்ற சிந்தனையை ஏற்படுத்தவே ஸாஹிரா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், எமக்கு சுதந்திரம் கிடைத்த காலத…
-
- 2 replies
- 406 views
-
-
புகையிரத கட்டணமும் அதிகரிப்பு – போக்குவரத்து அமைச்சர் எதிர்வரும் காலங்களில் புகையிரத கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். பேருந்து கட்டண அதிகரிப்புக்கு நிகராக புகையிரத கட்டணத்தை அதிகரிக்குமாறு புகையிரத திணைக்களம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. இதேவேளை இன்று முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 17 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1271944
-
- 0 replies
- 458 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பில் இருந்திருந்தால் போராளிகளைக் காப்பாற்றியிருப்பேன் - தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் நேற்றுத் தெரிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் இருந்திருந்தால் விடுதலைப்புலிகளைக் காப் பாற்றியிருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பல கஷ்டங்கள், துன்பங்க ளிலிருந்து மீண்டு இன்றுதான் எட்டிப்பார்த்து மூச்சு விடக் கூடிய நிலையில் நிம்மதியைத் தேடி நிற்கும்போது; பல கட்சிகள்,சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்வாறுகளத்தில் உள்ள சில கட்சிகள், சுயேட்சைகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு ஏதோ ஒரு சக்தி தூண்டுதல் அளிப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். அலுவல…
-
- 8 replies
- 2.2k views
-
-
மின் கட்டணம்... 500 வீதத்தால், அதிகரிக்கும் அறிகுறி? மின்கட்டணம் பல மடங்களாக அதிகரிக்கக்கூடும் என தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “2 ஆயிரத்து 180 ரூபாவாக இருந்த சமையல் எரிவாயுவின் விலை, 4 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை பார்க்கும்போது தலை சுற்றுகின்றது. இந்நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படலாம். எமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 30 அலகுகளுக்கான மின் கட்டணத்தை தற்போதுள்ள விலையைவிடவும் 500 மடங்களால் அதிகரிக்குமாறு மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளது. எனவே, மின்குமிழ்களை வெறுமனே பார்த்துகொண்டிருக்க வேண்…
-
- 0 replies
- 142 views
-
-
சரத் பொன்சேகாவும் அவரது முறைகேடான இராணுவ நடவைக்கைகளும்..... சரத் பொன்சேகா எடுத்த முடிவுகளால் படைகளுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக மேலும் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன. அவர் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடான நடவடிக்கைகள் தொடர்பாக இப்போது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த போது இராணுவச் சட்டங்களுக்கு முரணாக அவர் நடந்து கொண்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளே தற்போது ஆரம்பமாகியுள்ளன. அவற்றில் பிரிகேடியர் திலகரட்ணவுக்கு 62 வயது வரை சேவைநீடிப்பு வழங்கப்பட்டு வந்த விவக…
-
- 0 replies
- 620 views
-
-
வெளிநாட்டுப் புலிகளுக்கு எதிராக ஜெனிவாவில் நாளை ஆர்ப்பாட்டம் Share இலங்கைக்கு வெளியில் வாழ்கின்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை ஒழிப்போம் என்று வலியுறுத்தி ஜெனிவாவில் நாளை 24ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளத ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகத்துக்கு முன்னாலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றும், சிங்களத் தேசியவாத அமைப்புகளின் கோரிக்கையின் பிரகாரமே புலம்பெயர் வாழ் சிங்களவர்களால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒரு…
-
- 0 replies
- 343 views
-
-
எரிபொருளுக்கு தட்டுப்பாடு? அதிகரிக்கப் படுகின்றது மின் வெட்டு நேரம்? அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்போதைய மின்வெட்டை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலியம் மற்றும் துறைமுக நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சாளர் ஆனந்த பாலித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளின் அளவு இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போதைய எரிபொருள் விநியோகம் இன்றுடன்(செவ்வாய்கிழமை) நிறைவடையவுள்ளதாகவும் மின்வெட்டை அதிகரிப்பதன் மூலம் ஓரளவு எரிபொருளை சேமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 143 views
-
-
பிரதமர் பதவியிலிருந்து.. விலக தயாராகின்றார், மஹிந்த? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு இடம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு…
-
- 7 replies
- 647 views
- 1 follower
-
-
இலங்கை அரசுக்கான ஆதரவினை விலக்கிக்கொள்ள இந்தியா திட்டம்? - மேற்குலகுடன் இணைகின்றது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இலங் கைக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒரு வரைய றைக்கு அப்பால் இலங்கைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என வும் இந்தியா, சீனா உட்பட இலங்கைக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகைப் பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக் கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு முடிப…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் உயர் பாதுகாப்பு வலயம் , பிரான்சு நாடாளுமன்றத்தில்! [Tuesday, 2014-02-11 13:27:50] சிறிலங்கா அரசபடைகளால் ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்ககைகள் மற்றும் போர்க்குற்றங்களை மறுக்கமுடியாத ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி, உலகளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய NO FIRE ZONE(சிறிலங்காவின் உயர் பாதுகாப்பு வலயம்) ஆவணப்படம், 07-02-2014 ஆம் திகதி பிரான்சு நாடாளுமன்றத்தில் காட்சிப் படுத்தப்பட்டது. பிரித்ததானியாவின் சானல் 4 தொலைக்காட்சிக்காக இந்தப் படத்தை இயக்கிய திரு.CALLUM MACRAE அவர்களும் இந்நிகழ்வின்போது நேரடியாகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். …
-
- 0 replies
- 380 views
-