ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
சிவ்சங்கர்மேனன், மற்றும் நாராயனனின் இலங்கை விஜயத்தின் உள்நோக்கம் என்ன அதிர்வின் ரிப்போர்ட்தமிழ் நாட்டு அரசியலில் பெரும் மாற்றங்கள் இடம்பெற ஆரம்பித்திருப்பது நாம் அனைவரும் அறிந்த விடையம். இருப்பினும் மறைமுகமாக பல விடையங்கள் நடந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக தற்போதைய நிலையில் இந்திரா காங்கிரஸ் கலைஞர் கூட்டணியானது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பல அதிர்சி தோல்விகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் இலங்கைத் தமிழருக்கான ஆதரவு பெருகிவரும் நிலையில், காங்கிரசுக்கு தமிழினத் துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. சரளமாக சென்னை வந்து பல கூட்டங்களை நடத்திச் சென்ற சோனியா அம்மையார் தற்போது சென்னைக்கு வரமுடியாத நிலை காணப்படுகிறது. அங்கு வந்தால் அவர் உயிருக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை, பிரித்தானியா மகாராணி இரண்டாவது எலிசபெத் புறக்கணித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 15 தொடக்கம் 17ம் நாள் வரை இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், பிரித்தானிய மகாராணி பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்ட போதும் அது தற்போது உறுதியாகிவிட்டது. இலங்கையின் மனிதஉரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் அரச தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கி கொள்ளும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பிரித்தானிய மகாராணி பங்கேற்காவிட்டால் இலங்கை அரசாங்கத்துக்கு முக்கியமான பின்னடைவாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் பிரித்தானிய ம…
-
- 4 replies
- 618 views
-
-
54 நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் - சிங்கள ஊடகம்! [sunday, 2013-05-12 08:08:40] 54 நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த அரச தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 15, 16ம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. பிரிட்டனின் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் பிரதமர் டேவிட் கமரூனின் இலங்கை விஜயத்தை தடை செய்ய தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் கடும் முயற்சி எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://seithy.com/breifNews.php?news…
-
- 0 replies
- 496 views
-
-
"1,500 மக்கள் கொல்லப்பட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக சமூகம், இப்போது வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது ஏன்?" என்று கொழும்பு சென்ற பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 494 views
-
-
குருந்தூரில் மீட்கப்பட்ட சிதைவுகள் அநுராதபுர காலத்திற்குரியவை!– தொல்பொருள் திணைக்களம் By கிருசாயிதன் February 11, 2021 முல்லைத்தீவு – தண்ணீறூற்று குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த பகுதியில் லிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட சில தொல்பொருட்கள் அடையாளம் காணப்பட்டன.குருந்தூர் மலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின்போதே இவை மீட்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.மேலும் குறித்த சிதைவுகள் அநுராதபுர காலத்திற்குரியவை என்றும் அங்கு பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்றுகள் மீட்கப்பட்டு…
-
- 1 reply
- 529 views
-
-
கிளிநொச்சி நகரில் இயங்கும் மர்மச் சிறைச்சாலைகள் கிளிநொச்சியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், அமைந்துள்ள சில வீடுகளில், 15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் அடைக்கபபட்டுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களில் இளவயது பெண்களையும், ஆண்களையும் தனியாக பிரித்தெடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் சிறு சிறு வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் முழு நிர்வாணமாக இருப்பதால் தப்பிச்செல்ல வழியின்றி வீடுகளில் இருப்பார்கள் என்ற காரணத்தால் இராணுவம் இந்த நிலையில் இவர்களை வைத்திருப்பதாகவும் க…
-
- 1 reply
- 1.8k views
-
-
அடுத்த பிரபாகரனனைப் போல மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயல்படுவதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=11829
-
- 1 reply
- 538 views
-
-
ஜோதிடத்தினால் ஆட்சியை ஒருபோதும் மாற்ற முடியாது ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட கதியே 27 இலும் ஏற்படும் என்கிறார் சஜித் பிரேமதாஸ (எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டின் ஆட்சியை ஜோதிடத்தினால் ஒரு போதும் மாற்ற முடியாது. சனி பெய ர்ச்சி என்று கூறி எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் பொது எதிரணியினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.எதிரணிக்கு சாதகமான நாள் என்பதனாலேயே இந்த தினத்தில் பேரணியை வைத்துள்ளனர். எனினும் ஜனாதிபதி தேர்தலில் இதே தரப்பினர்தான் சோதிடரை நம்பி தோல்வி அடைந்தனர். இந்த குழுவினருக்கு 27 ஆம் திகதி இருக்கும் பலம் கூட இல்லாமல் போகும் என வீடமைப்பு மற் றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதா…
-
- 0 replies
- 221 views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மக்கள் பாதுகாப்பு வலயத்தில் இடமபெயர்ந்து வாழும் மக்கள் பட்டினி அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர் என வன்னியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. உணவுத் தட்டுப்பாட்டு நிலையிலும் உமிக்குள் நெல் பொறுக்கி மக்கள் இன்று தவிட்டை மட்டும் கரைத்துக் குடிக்கின்ற மிக மோசமான பட்டினி அலவத்தை எதிர்நோக்கியுள்ளனர். வன்னி மீது சிறீலங்கா சிறீலங்கா அரசு உணவையும், மருந்தையும் போர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றமை நிலைமையில் அந்த மக்கள் ஒரு வேளையேனும் கஞ்சியை உணவாக எடுத்துக்கொண்டனர். அதனையும் இன்று இழந்து தவிட்டைக் கரைத்துக் குடிக்கும் நிலை வன்னி மக்கள் எதிர்கொண்டுள்ளனர். - பதிவு -
-
- 0 replies
- 948 views
-
-
யார் கொலை செய்தது ? : முன்னாள் ஜனாதிபதி முன்னிலையில் லக்ஷ்மன் கிரியெல்ல (ப.பன்னீர்செல்வம், எம்.எம்.மின்ஹாஜ்) ஜோசப்பரராஜசிங்கம், நடராஜாரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோரை படுகொலை செய்தது யார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார். நாட்டில் தற்போது தவறு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமறியல் இருப்பதனையிட்டு சந்தோஷப்பட வேண்டும். முன்பு விளக்கமறியலில் வைக்கவில்லை. காணாமல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சட்ட பிரச்சினையொன்றை எழுப்பி நிதிபுலனாய்வு பிரிவு தொடர்பில் கேள்வி எழுப்பும் போதே அமைச்சர் மேற்க…
-
- 0 replies
- 416 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 120 கோடிரூபா பெறுமதியான சொத்துக்களை இலங்கை அரசாங்கம் பறிமுதல் செய்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/archives/13450
-
- 20 replies
- 2.6k views
-
-
இந்தியாவிற்கு துறைமுக நிலங்களை வழங்கும் இரகசிய முயற்சிக்கு எதிராக போராட்டம் 23 Views கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேம் என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்துள்ளார். மேலும் திருகோணமலை துறைமுகத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலப்பரப்பினை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் இரகசியமான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்துடன் கூட்டினைந்த…
-
- 0 replies
- 302 views
-
-
புலனாய்வுப்பிரிவினர் என அடையாளப்படுத்தி கொள்ளை : மூவர் கைது வவுனியாவில் கடந்த சில மாதங்களாக தங்களை புலனாய்வுப்பிரிவினர் என அடையாளம் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கடந்த செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாரிக்குட்டியூர், செட்டிக்குளம், முதலியார்குளம் போன்ற பகுதிகளில் தங்களை புலனாய்வுப்பிரிவினர் என அடையாளம் காட்டி வீட்டை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து அதன் பின்னர் கத்தியினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம், பூவரசங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொல…
-
- 0 replies
- 422 views
-
-
கனடாவில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் வெடித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலையிலிருந்து கனடாவின் ரொரன்டோ மத்தியபகுதியில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக தன்னெழுச்சிகொண்ட மக்கள் முன்னறிவிப்பேதுமின்றி வன்னியில் அவலமுறும் மக்களை உடனடியாகக் காக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படிஅமெரிக்க சனாதிபதி ஒபாமவையும், ஐ. நா அமைப்பையும் கோரியபடி அவ்விடத்தில் கோசமிட்டபடி உள்ள அதே நேரத்தில் மாலையில் அங்கிருந்த ஒரு பகுதி மக்கள் தன்னெழுச்சியாக குயின் வீதிக்கும், டன்டாஸ் வீதிக்கும் இடையில் உள்ள யூனிவேர்சிற்றி அவெனியுவில் வீதிமறியலில் ஈடுபடமுயன்ற வேளை ரொரன்டோ காவல்துறையினர் மறித்து அம்மக்களை சாலையோர நடைபாதைக்குள் கட்டுப்படுத்திய வேளையில் டன்டாஸ் வீதிக்கு அண்மையில் நின்றிருந்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையில் இயங்கும் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களும், அரசசார்பற்ற நிறுவனங்களை பதிவுசெய்யும் அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு சேவையாற்றும் போர்வையில், நாட்டை கவிழ்க்கவும், அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகளில் ஈடுபடவும், கொள்ளையடிக்கவும் அரசியலில் ஈடுபடவும் முனைப்புகளை மேற்கொள்ளும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தம்மை பதிவுசெய்து கொள்ளாது ரகசியமான முறையில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்காது இருப்பதற்காகவே இந்த பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் பதிவுசெய்யாது இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும். அத்துடன் அந்த நிறுவனங்கள் இலங்கையில்…
-
- 2 replies
- 473 views
-
-
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் இன்று பேரணி! இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி பேரணியாகச் சென்று, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நிறைவடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீதிக்கான போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்…
-
- 2 replies
- 706 views
-
-
13ஆவது அரசமைப்பு இரத்துச் செய்யப்படவோ, வலுவிழக்கச் செய்யப்படவோ மாட்டாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/?p=17689
-
- 2 replies
- 512 views
-
-
உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் : த.தே.கூ 39 Views கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளால் அங்குள்ள மக்கள் மிகவும் கோபாவேசமடைந்துள்ளனர் எனவும் கடந்த 22 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் பொறுப்பான அமைச்சர் உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் க…
-
- 2 replies
- 385 views
-
-
சர்வதேச தர அடிப்படையில் இடம்பெயர்ந்தவர்கள் பராமரிக்கப்படவேண்டும் - ஜேர்மனி திகதி: 24.05.2009 // தமிழீழம் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிர்ணயங்களின் அடிப்படையில் சிறிலங்காவில் போர் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்கள் பராமரிக்கப்படவேண்டும் என ஜேர்மனிய அரசாங்கம், சிறிலங்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் வடபகுதியில் இருந்து சுமார் 3 இலட்சம் அப்பாவி தமிழ் மக்கள் நலன்புரி முகாம்களில் இடம்பெயர்நது வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்வதற்கு ஜேர்மனி தொண்டு நிறுவனங்களுக்கு பூரண அனுமதி வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு ஐந்து மில்லியன் ஈரோக்கள் உதவிகளை வழங…
-
- 1 reply
- 708 views
-
-
உலகெங்கும் தமிழர்களின் கலை வடிவங்களைக் காவிச்சென்றார் மரியசேவியர் அடிகளார்- யாழ். தமிழ் சங்கம் 44 Views திருமறைக் கலாமன்றம் எனும் அமைப்பைத் தாபித்து அதன் மூலம் உலகின் பல பாகங்களுக்கும் தமிழர்களின் கலைவடிவங்களை காவிச் சென்றவர் கலைத்தூது மரியசேவியர் அடிகளார் என அவரது மறைவையொட்டி யாழ்ப்பாண தமிழ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தனது நிர்வாகத் திறத்தினாலும் கலையாற்றலினாலும் திருமறைக் கலாமன்றம் எனும் காத்திரமான தனித்துவமான ஒரு கலை அமைப்பை நிறுவி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த அமைப்பை தளராது முன்னோக்கி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற தனித்துவம் ஈழத்தின் கலையுலக மரபில் அவருக…
-
- 0 replies
- 264 views
-
-
பாகிஸ்தான், இஸ்ரேல், பிரித்தானிய சிறப்புப்படை அதிகாரிகள் சிறிலங்காவுக்கு வந்து கொடுத்த பயிற்சி மற்றும் வகுத்துக் கொடுத்த தந்திரோபாயத்தினால் தான், 1987ல் வடமராட்சியில் சிறிலங்கா படைகளால் 'ஒப்பரேசன் லிபரேசன்' நடவடிக்கையில் வெற்றி பெற முடிந்தது. இவ்வாறு சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். “ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை மூலம் பருத்தித்துறையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், இந்தியா தலையீடு செய்திருக்கா விட்டால், சிறிலங்கா இராணுவத்தினால் யாழ்ப்பாண நகரத்தில் இருந்தும் விடுதலைப் புலிகளை அகற்றியிருக்க முடியும். துரதிஸ்டவசமாக நட்புநாடு ஒன்றுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா விடுதலைப்…
-
- 7 replies
- 941 views
-
-
கொலையான தமிழர் எண்ணிக்கையை மறைக்கவில்லை-மூன் செவ்வாய்க்கிழமை, ஜூன் 2, 2009, 12:31 [iST] ஐ.நா: இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை ஐ.நா. மூடி மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அதன் பொதுச் செயலாளர் பான் கி மூன் மறுத்துள்ளார். பான் கி மூனும் அவரது செயலாளரான விஜய் நம்பியாரும் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பலியான ஆயிரக்கணக்கான தமிழர்களின் சாவை மூடி மறைத்ததாக பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது. கடைசி கட்டப் போரில் புலிகளைக் கொல்கிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதில் சிறார்கள், பெண்கள், முதியோர் என யாருமே தப்பவில்லை. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்தியா, ஐநா போன்றவையும் இலங்கைக்…
-
- 7 replies
- 1.3k views
-
-
குறைந்தபட்சம் 38 அமைச்சர்கள் 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிப்பதற்கான ஆவணத்தில் 38 அமைச்சர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 38 ஆளும் கட்சி அமைச்சர்கள் 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பது குறித்த யோசனைக்கு அரசாங்கத்தினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்தால் அதனை எதிர்க்கப் போவதாக அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக…
-
- 0 replies
- 598 views
-
-
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/?p=22333
-
- 1 reply
- 694 views
-
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா : "இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளப்போவதில்லை" (ஆர்.யசி ) ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை இந்திய மீனவர்கள் வருடாந்தம் கலந்துகொள்ளும் நிலையில் இம்முறை இந்திய மீனவர்கள் திருவிழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளும் நிலையில், கடந்த வாரம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து இந்திய மீனவர்கள் இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலைய திருவிழாவில் கலந்துகொள்ள…
-
- 0 replies
- 224 views
-