ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
"வன்முறை களைந்து பிரிவுபடாத இலங்கையினுள் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை முன்வைத்தோம்." மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2014 யாழ்ப்பாண மாவட்டம் 21.04.2014 அன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் இணைத் தலைவரின் தலைமையுரை குருர் ப்ரம்மா.............! இணைத் தலைவரவர்களே, அமைச்சர்களே, அரசாங்க அதிபர் அவர்களே, பிரதேசச் செயலாளர்களே, மற்றைய சக அலுவலர்களே! இணைத்தலைவராக நான் பங்குபற்றும் முதற் கூட்டமிது. இங்கு வந்திருக்கும் அனைவரையும் உளமாற வரவேற்று எனது நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் யாவர் மனதிலும் ஒரு கேள்வி எழக்கூடும். அதாவது சுமார் ஆறு மாதங்கள் பதவியில் இருந்த பின்னர் நான் ஏன் இந்தக் கூட்டத்த…
-
- 1 reply
- 500 views
-
-
திங்கள் 09-04-2007 18:09 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஆகக்குறைந்தது வெப்பத்தை நாடிச்சென்று தாக்கும் ஏவுகணைகளையாவது வாங்கி அனுப்புங்கள் - மேஜர் ஜெனரல் சந்திரசிறீ யாழ் குடாநாட்டில் உள்ள முக்கிய இராணுவ மையங்களில் கனரக விமான எதிர்ப்பு ஆயுதங்களை விரைவாகப் பொருத்திய சிறீலங்காப் படையினர் தற்பொழுது அவசர அவசரமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி அனுப்புமாறு கொழும்பில் அமைந்துள்ள இராணுவத் தலைமைப் பீடத்திற்கு அவசர செய்தியை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கொழும்பு இராணுவ பீடத்திற்கு செய்தியை அனுப்பியுள்ள யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வல்லைப்பாலம், குடத்தனை, எழுதுமட்டுவாள், நாவற்குளம், கெற்பெலி, வரணி, கிளாலி, பலாலி, காரைநகர், காங்கேசந்துறை போன்ற தளங்களுக்…
-
- 2 replies
- 2k views
-
-
08 Mar, 2025 | 05:52 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்து அந்த பதவியை பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன் என்று யாழ் மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே பெண்களை துணிகரமாக உலகுக்கு வெளிக்காட்டியது. சுதந்திர பறவைகள் என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பில் பெண்களை எமது தேசிய தலைவர் இணைத்துக் கொண்டார்…
-
- 2 replies
- 216 views
- 1 follower
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் பாரிய மோதல் நிலைமை ஏற்படும் என பிரபல சோதிடர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்துள்ளார். 1988ம் மற்றும் 89ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலைமைகளுக்கு இணையான நிலைமையாக அது இருக்கும் எனவும் கிரக மாற்றங்களே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அரசியல் ரீதியான குழப்பங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் எனவும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் எனவும் இந்திக்க தொட்டவத்த கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.c…
-
- 0 replies
- 163 views
-
-
ஆகஸ்ட் 1ம் நாள் விசேட விடுமுறை: சிறீலங்கா அரசாங்கம் அறிவிப்பு செவ்வாய், 15 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சார்க் மாநாட்டை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் நாள் விசேட விடுமுறையாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சார்க் மாநாட்டை முன்னிட்டு இந்த விடுமுறை நாளை சிறீலங்கா அறிவித்துள்ளது. இதேநேரம் திட்டமிட்டபடி பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ஆகஸ்ட் 4 நாளிருந்து நடைமுறைக்க வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க விமான நிலையம், பண்டார நாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், கல்கிச விடுதி ஆகிய பகுதிகள் எதிர்வரும் 25ம் நாளிலிருந்து உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 856 views
-
-
ஆகஸ்ட் 2 - வீரவணக்க நாள்! விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த போராளிகள் சிலர், ஐரோப்பிய நாடுகளிலிருந்து இரண்டு நாள்களுக்கு முன்னால் என்னிடம் தொலைபேசியில் உரையாடினர்! தமிழ் ஈழத்திற்காகவும், அந்த மண்ணின் விடுதலைக்காகவும், தொடர்ந்து பல ஆண்டுகள் களத்தில் நின்று, பெரும்படை திரட்டிப் போராடி, உலக வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீரச் சாவிற்கு வரும் ஆகஸ்ட் 2 அன்று, சுவிட்விசர்லாந்தில் மிகப்பெரும் அளவில் வீரவணக்க நாள் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு உலகத் தமிழர்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் என்றும் கூறினார்கள்! மாவீரர்களுக்கும் மரணம் உண்டு! ஆனால் அது மற்றவர்களின் மரணத்தைப் போன்றதன்று! தன் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் த…
-
- 0 replies
- 142 views
-
-
ஆகஸ்ட் 27ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல்? [sunday 2015-05-24 08:00] நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 27ம் நாள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தேர்தலை நடத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 27ம் நாள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன, அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது. 20வது திருத்தச்சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சபை தொடர்பான இணக்கப்பாடுகள் காணப்பட்ட பின்னர், நாடாளுமன்ற…
-
- 0 replies
- 235 views
-
-
Published By: DIGITAL DESK 7 18 AUG, 2024 | 11:04 AM (நா.தனுஜா) சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதியன்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி வரை விசேட கவனயீர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், கடந்த கால மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை. அதேவேளை நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என…
-
-
- 13 replies
- 651 views
- 1 follower
-
-
ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை ஏற்படாது- கஜேந்திரகுமார் July 20, 2020 ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை ஏற்படாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சுமந்திரன் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் என்ற தகுதியை இழந்து வெறுமனே ஒரு சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார் இதன் காரணமாக அவ்வாறான ஒருவருடன் நாம் விவாதிக்கவேண்டிய தேவையுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் கட்சிகளுக்கு இடையிலான விவாதமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் இந்த நிகழ்வு இரத்துச்செய்யப்பட்டது என்பதை அவர…
-
- 33 replies
- 3k views
-
-
ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும்? பாராளுமன்றம் கலைக்கப் படுவதற்கான பின்னணி என்ன? 26 ஜூன் 2015 குளோபல் தமிழ் செய்திகளின் பிரத்தியேக செய்தியாளர்:- எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது. பாராளுமன்றத்தை கலைப்பது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் நடத்தப்படுவது குறித்து நாளை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய தேர்தல் செயலகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார். வே…
-
- 0 replies
- 226 views
-
-
யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவ பாலசுந்தரன் தெரிவித்துள்ளார், யாழ் மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன இதன் காரணமாகவும் முச்சக்கரவாடகை வண்டி செலுத்துவோர் தொடர்பில் கிடைத்த பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பிலும் தீர்மானம் எடுப்பதற்காக நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் முச்சக்கர வாடகை வண்டி சங்கத்தினர் மோட்டார் போக்குவரத்து திணைக்…
-
- 7 replies
- 832 views
- 1 follower
-
-
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் எரிபொருள் வழங்கும் புதிய நடைமுறை இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் முறையை ஆகஸ்ட் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார். அன்றைய தினம் முதல் தேசிய எரிபொருள் உரிமம் (QR) முறையின் பிரகாரம் மட்டுமே எரிபொருள் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாளை (26) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிலையங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமைக்கு அமைய எரிபொருளை வழங்கவுள்ளன. http://tamil.adaderana.lk/news.php?nid=163765
-
- 0 replies
- 146 views
-
-
http://img379.imageshack.us/my.php?image=ammanamvh4.jpg லப்டினன் கோணல் கருணா அம்மணம் யாரிந்த தமிழ் அண்ணை?? மஹிந்த? கோத்தபய்யா?? நன்றி வீரகேசரி
-
- 2 replies
- 1.8k views
-
-
ஆகாய மார்க்கமாக சென்று பார்த்தால்.. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதோடு, இதனால் பாரிய அளவில் தீப்பரவல் ஏற்பட்டது. எனவே, அப் பகுதியில் இருந்த குடியிருப்பாளர்கள் வௌியேற்றப்பட்டனர். இந்தநிலையில், இந்த விபத்து காரணமாக ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதோடு, மற்றொரு இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளார். மேலும், அங்கிருந்த ஆயுதங்கள் அருகிலிருந்த வீடுகளுக்குள்ளும் விழுந்துள்ளதோடு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குறித்த இராணுவ முகாமுக்கு ஒரு கிலோமீற்றருக்குள் இருக்கும் குடியிருப்பாளர…
-
- 0 replies
- 297 views
-
-
ஆகாயத்தில் இருந்து விதைக்குண்டுகளை வீசிய விமானப்படை By NANTHINI 31 OCT, 2022 | 05:10 PM 2030ஆம் ஆண்டில் பசுமை விரிவாக்கத்தை 27% முதல் 32%ஆக உயர்த்துவதன் மூலம் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக இலங்கையின் வன அடர்த்தியை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டமொன்று இலங்கை விமானப் படையினரால் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டல் மற்றும் தலைமையின் கீழ் நடாத்தப்பட்டு, சியாம்பலா பிரதேச செயலகத்துக்குட்பட்ட வத்தேகம கபிலித்த வனப் பிரதேசத்தில் கடந்த 29ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவுபெற்றது. வீரவெல இலங்கை விமானப்படை த…
-
- 5 replies
- 545 views
- 1 follower
-
-
மறைந்த மதியுரைஞர் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறையில் உள்ள 58 தமிழ் அரசியல் கைதிகளே இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வுகளை, தொடர்ந்து மூன்று தினங்கள் நடத்தவுள்ளதாகக் கைதிகள் தெரிவித்துள்ளனர். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் உடல் அடக்கம் செய்யப்படுவரை மூன்றுவேளையும் ஆகாரம் எதுவும் அருந்தாமல் தாம் அஞ்சலி செலுத்தவுள்ளனர் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் http://www.sankathi.org/news/index.php?opt...63&Itemid=1
-
- 0 replies
- 837 views
-
-
ஆக்கிரமிப்புக்களை எதிர்க்க ஒற்றுமை அவசியம் பேராசிரியர் சொர்ணராஜா!! நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதைப் பேணிக் காக்கவேண்டும். எமது ஒற்றுமையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் எம்மீதான ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராடலாம். இவ்வாறு சிங்கப்பூர் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் மு.சொர்ணராஜா தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரின் உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே…
-
- 0 replies
- 157 views
-
-
ஆக்கிரமிக்கக்பட்ட மட்டக்களப்பு படுவான்கரையில் 27 படை முகாங்கள். ஆக்கிரமிக்கப்பட்ட மட்டக்களப்பு படுவான்கரையைச் சூழ சிறீலங்காப் படையினரால் 27 படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன. மட்டக்களப்பின் பிரதான படைமுகாங்களில் இருந்த படையினரில் பெரும்பாலானோர் புதிதாக அமைக்கப்பட்ட படைமுகாங்களில் நகர்த்தப்பட்டுள்ளார். 27 படைமுகாங்களில் பிரதான முகாங்கள் மற்றும் மினி முகாங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இந்த படைமுகாங்களை பாதுகாக்கும் காவரண்களை படையினர் அவசர அவசரமான அமைந்து வருகின்றனர். ஆக்கிரமித்த மக்கள் குடியிருப்புக்களையும் மக்களின் வீடுகளையும் மையப்படுத்தியே இப்படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறீலங்காப் படையினர் தற்பொழுது குடும…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத்தின் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் சிங்கள பௌத்த மயமாதல் இடம்பெற்றுக் கொண்டுள்ள நிலையில் அதற்கான போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் அதிகரித்துச் செல்கின்றது. ஆனாலும் சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு படைகள் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட அன அழிப்பை தொடர்ந்து பௌத்த சிங்கள மயமாக்கலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கோவில் உண்டியலில் சிங்களத்தில் எழுதி அதை சிங்கள பௌத்த ஆவயமாக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளதை எமது செய்தியாளர் ஒளிப்படம் எடுத்துள்ளார். மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையின் முன்னால் அமைந்துள்ள இவ் விநாயகர் ஆலயம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள உண்டியலை வெள்ளை வர்ணம் பூசி அழகாக்குகின்றோம் என்னு…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தமிழர் பிரதேசமான சம்பூர் ஸ்ரீலங்கா படைகளின் முழுமையான ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று கொழும்பிலிருந்து அரச ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறைகள் சார்ந்த செய்தியாளர்கள் ஸ்ரீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சினால் சம்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட எமது செய்தியாளர் ஒருவர் சம்பூரிலிருந்து எமக்கு தெரிவித்த தகவலில்,சம்பூர் பிரதேசம் இப்பேர்து படைகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும்,மனித நடமாட்டமின்றி ஒரு மயான பூமியாக அந்த ஊர் காட்சியளிப்பதாக தெரிவித்தார். தமிழ் மக்களின் இல்லங்கள் யாவும் குண்டுகள் பட்டு பலத்த சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்த அவர்…
-
- 3 replies
- 2.2k views
-
-
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் சிங்கள ராணுவம் கட்டியுள்ள உல்லாச விடுதி காங்கேசன் துறை உயர் பாதுகாப்பு வலயத்தில் சிங்கள ராணுவம் பல அறைகளைக் கொண்ட உல்லாச விடுதியொன்றை அண்மையில் தனது யாழ் மாவட்டத் தளபதியின் மூலம் திறந்து வைத்துள்ளது. 9 அதிவிசேட ஆடம்பர அறைகளையும் 22 சாதாரண ஆடம்பர அறைகளையும் கொண்ட இந்த விடுதியில் தங்குவோர் நியாய கட்டணத்தில் இதன் வசதிகளை அனுபவிக்க முடியும் என்று இலங்கை ராணுவத்தின் இணையத்தளம் கூறியுள்ளது. இதே பகுதியிலிருந்து அக்கிரமிப்பாளர்களால் விரட்டப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தாங்கள் மீளக்குடியேறுவதற்காக விடுத்த வேண்டுகோளை இரு தினங்களுக்கு முன்னர் பொய்க்காரணங்களைக் காட்டி தனது புறங்கையால் தட்டிவிட்ட சிங்கள ராணுவத் …
-
- 62 replies
- 4.6k views
-
-
வெலிஓயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழர் தாயகத்தின் 'இதயபூமி'யான மணலாற்றுப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள், தமது நலன்களைக் கவனிப்பதற்காக நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். http://www.puthinappalakai.com/view.php?222BTnBnaccaceoOA4d4deZPZc402022lJOAOd4dedOYldlc0a04m4BZe2e24KKMMMc3a0an5BZB4e
-
- 0 replies
- 873 views
-
-
வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவம் பொருளாதார ரீதியில் பயன்படுத்தி வருவதாக கூறப்படுவது தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்;ப்பாணத்துக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர், யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களின் காணிகளை இராணுவத்தினர் பொருளாதார வலயமாக பயன்படுத்துகின்றனர். வலிகாமம் வடக்கிலுள்ள 1,100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதி…
-
- 0 replies
- 367 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்களை மீட்பதற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதன் முற்கட்டமாக இன்றைய தினம் வெலிஓயா பிரதேச செயலகத்திற்கு மக்கள் திரண்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கறுக்காக்கேணி, கொக்குத்தொடுவாய் முதலிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை இராணுவத்தினர் இன்னமும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர். அதேவேளை இப்பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் பௌத்த பிக்கு ஒருவர் குடியேற்றப்பட்டு புத்த விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் தென்னிலங்கையிலிருந்து வந்த சிங்கள மக்கள் மீன்பிடியில்…
-
- 0 replies
- 461 views
-
-
வெலிஓயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழர் தாயகத்தின் 'இதயபூமி'யான மணலாற்றுப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள், தமது நலன்களைக் கவனிப்பதற்காக நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். http://www.puthinappalakai.com/view.php?222BTnBnaccaceoOA4d4deZPZc402022lJOAOd4dedOYldlc0a04m4BZe2e24KKMMMc3a0an5BZB4e
-
- 0 replies
- 606 views
-