ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
யாழ்நகரில் மக்கள் மகிழ்வுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அலங்கார விளக்குகள், வாணவேடிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் மகிழ்வுடன் கொண்டாடினர். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்று அனைவரும் சந்தோசத்துடன் கலந்து கொண்டனர்.
-
- 0 replies
- 268 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலிகளால் கடந்த வாரம் மூழ்கடிக்கப்பட்ட டோறாப் படகு, நீர்மூழ்கிக் கப்பல் அல்லது அலையுடன் பயணிக்கும் கலம் மூலம் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று கடற்படையின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 20 replies
- 4.9k views
-
-
ஈகைச்சுடர் முருகதாசனுக்கு நினைவுக் கல்லறை ஈகைச்சுடர் முருகதாசனின் ஈகமும் தன்னையே ஆகுதி ஆக்கியபடி சர்வதேசசமூகத்திடம் அவன்‘எனது மக்களை காப்பாற்றுங்கள்’ என்று கோரியதும் என்றென்றும் மனதைவிட்டு அகன்றுவிடப்போவதில்லை. ஒரு பெரும் இனப்படுகொலைக்கும் அதனூடாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தைசிதைப்பதற்கும் சிங்கள பேரினவாத படைகளும் வல்லாதிக்ககூட்டும் தனது இரும்புப்பிடியை இறுக்கி இறுக்கி எமது மக்களை கொலைவலையத்துள் நகர்த்தியபடி இருந்த பொழுதில்தான்‘எமது மக்களை காப்பாற்றுங்கள்’ என்று சர்வதேச மனச்சாட்சியை உலுப்பியபடி ஈகைச்சுடர்முருகதாசனின் தியாகம் உலகமுன்றலில் நிகழ்ந்தேறியது. அவனது தியாகமும் அவன் தனதுதாயகவிடுதலைமீது காட்டிய அளவற்ற தாகமும் வார்த்தைகளாலும் ஒப்பீடுகளாலும் வர்ணிக்க முடியாதவை. ஒரு …
-
- 0 replies
- 526 views
-
-
ஐ.நா மனித உரிமை பேரவையின் யூன் அமர்வு நிகழ்ச்சி நிரலில் ஸ்ரீலங்கா [ Wednesday,23 December 2015, 03:21:20 ] ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போர்க்குற்றம் உள்ளிட்ட மனித உரிமை மீறல் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்னும் உறுதியான வடிவத்தை வெளியிடாததனால் இந்த விடயம் குறித்த நிகழ்ச்சி நிரலில் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் வருடாந்த வரைவு வேலைத்திட்டத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த…
-
- 0 replies
- 530 views
-
-
வரி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி வாக்குறுதியளித்ததன்படி வரிகளை நீக்கினால் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லமுடியுமென ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றும் தடுமாற்றம் அடைந்தார். தேர்தல் வாக்குறுதிக்கமைய ‘வற்’ வரியை குறைத்தும் ஏனைய வரிகளை நீக்குவதுமாக இருந்தால் அதன் மூலம் வருடாந்தம் இழக்கப்படும் 350பில்லியன் ரூபாவை எவ்வாறு ஈடுசெய்யப் போகின்றாரென பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் விளக்கமளிக்க வேண்டுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சவால் விடுத்திருந்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க வைச் சேர்ந்த விஜயதாச ராஜபக்ஷ எம…
-
- 1 reply
- 822 views
-
-
வசாவிளான், குட்டியப்புலம் பகுதியில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு உள்ளே சென்ற முச்சக்கரவண்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று அதிகாலை வேளை பயணித்த ஓட்டோவே இவ்வாறு இராணுவத்தினரின் தடுப்பு வேலிகள், அலங்காரத் தொட்டிகளைத் தகர்த்து உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது. இதன்போது காவல் பணியில் இருந்த இராணுவச் சிப்பாய் பதற்றமடைந்துள்ளதுடன் தெரு நாய் ஒன்று ஓட்டோவின் குறுக்கே சென்றபோது அதனை விலகிச் செல்ல முற்பட்ட சமயமே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி கடும் சேதமடைந்ததுடன் அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயர் தப்பியுள்…
-
- 1 reply
- 289 views
- 1 follower
-
-
இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐ.நாவின் மேற்பார்வையுடன் இரு அரசு தீர்வுதான் யதார்த்தமாக அமையுமென சுவீடிஸ் பேராசிரியர் பீற்றர் சோக் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இலண்டனில் இடம்பெற்ற இன நெருக்கடி தொடர்பான கலந்துறையாடலில் ‘அமெரிக்காவுடன் தொடர்புபட்டவை,ஐரோப்பிய ஒன்றியம்,தமிழ் எதிர்ப்பு இயக்கம் என்ற கருப்பொருளில் ஆய்வறிக்கையொன்றை சமர்ப்பித்து பேராசிரியர் பீற்றர் சோக் உரையாற்றினர். துன்பப்படும் சிறுபான்மை இனங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தவேண்டிய என்பதோடு அவர்களின் நீண்டகால நலன்களுக்காகவும் குரல் கொடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்., தமிழ் எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புபட்ட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஆவணமானது சமஷ்டி புலனாய்வு பிரிவின…
-
- 6 replies
- 2.2k views
-
-
2020ம் ஆண்டு பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார் மைத்திரி? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020ம் ஆண்டு பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் வேட்பாளராக போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் சமூக செயற்பாடுகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என அவர் மீளவும் உறுதியளித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வலுவான நடவடிக்கை…
-
- 0 replies
- 548 views
-
-
19 JAN, 2025 | 07:02 PM (எம்.நியூட்டன்) 'கிளின் சிறிலங்கா' என்பது இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவது தான் நோக்கம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தேசிய தைப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (17) தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்று பின்னர் யூனியன் கல்லுரியில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இனங்களுக்கிடையில் ஒற்றுமையை, அன்பை, பாசத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகள் பேச்சளவில் மாத்திரம் நிகழ்ந்திருக்கிறதே தவிர யதார்த்தபூர்வமாக நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எ…
-
-
- 5 replies
- 543 views
- 2 followers
-
-
வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி ஆயுதமுனையில் கொள்ளை! உரும்பிராய் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் ஆயுத முனையில் துணிக கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. உரும்பிராய் கிழக்கு ஞானவைரவர் கோவில் வீதி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.மூன்று மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத ஏழு நபர்கள் தமது முகத்தினை துணியால் கட்டி மறைத்த வண்ணம் வாள், கத்தி, பொல்லு போன்று கூரிய ஆயுதங்களுடன் வந்து கொள்ளை சம்பவத்தினை மேற்கொண்டுள்ளனர். குறித்த வீட்டில் புடைவை வியாபார நிலையம் ஒன்று இருப்பதனால் எப்பொழுதும் வாடிக்கையாளர்களால் சூழ்ந்து காணப்படும். …
-
- 0 replies
- 690 views
-
-
தமிழர் பிரச்சினையை தீர்க்க கருணாநிதி முன்வர வேண்டும் - சத்தியராஜு வீரகேசரி இணையம் 4/14/2008 11:16:22 AM - "பச்சைத் தமிழன்' எனும் பட்டத்தைப் பெறுவதற்காகப் பலரும் முயற்சி செய்கிறார் கள். ஆனால் நடிகர் சத்தியராஜுக்கு உள்ள தமிழ்ப்பற்று, தமிழினத்தின் மீது அவர் கொண் டுள்ள அக்கறை காரணமாக தமிழகப் பத்திரி கைகளில் அவர் வலியுறுத்தாமலேயே அவ ரைப் "பச்சைத் தமிழன்' என்றுதான் குறிப்பிடுகி றார்கள். எந்தக் கருத்தையும் துணிவாகவும் தயக்கமில்லாமலும் சொல்லக்கூடியவர்களில் சத்தியரா ஜும் முதன்மையானவர். அண்மையில் ஒகே னக்கல் நீர்ப்பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட சர்ச் சையில் தமிழக அரசை ஆதரித்து தமிழ்த்திரை யுலகத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்ட போதும் பரபரப்பாக சில கருத்துக்களை வெளியிட்டார் சத்யரா…
-
- 0 replies
- 1.3k views
-
-
காணாமல்போதலை தடுத்து நிறுத்து! அரச பயங்கரவாதத்தை நிறுத்து! 26 .05 .2012 , சனிக்கிழமை ஆம்ஸ்டர்டாம் நகரில் ஆர்ப்பாட்டம் 31 .05 .2012 , டென் ஹாக் நகரில் மறியல் போராட்டம் அரசியல் படுகொலைகள், சித்திரவதைகள், நீண்டகால சிறைத் தண்டனைகள், இரகசிய தடுப்பு முகாம்கள், இவற்றோடு, காணாமல் போகச் செய்யும் அரச பயங்கரவாதமும் உலகின் பல நாடுகளில் நடைபெறுகின்றது. செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி காணப்படும் நாடுகளில், மக்கள் நிறுவனமயப் பட்டு எழுச்சி கொள்ளும் நேரங்களில், இந்த காணாமல்போதல்கள் இடம்பெறுகின்றன. சமூகத்தின் எதிர்ப்புணர்வை முறியடிப்பதற்கான திட்டம் அது. துருக்கி, குர்திஸ்தான், சிறிலங்கா, கொலம்பியா, மெக்சிகோ போன்ற நாடுகளில், ஆயிரமாயிரம் காணாமல்போனவர்கள…
-
- 0 replies
- 396 views
-
-
ஐனாதிபதி வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தனது தேர்தல் பிரச்சாரங்களை இன்று யாழில் ஆரம்பித்துள்ளார். தியாகி பொன் சிவகுமாரனின் யாழ் உரும்பிராயில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். நடைபெறவிருக்கும் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் தனது தேர்தல் விஞ்ஞானத்தில் திருகோணமலை பிரகடனமாக நேற்றையதினம் திருகோணமலையில் வைத்து வெளியிட்டிருந்தார். இதற்கமைய இன்று சிவகுமாரனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது தேர்தல் பிரச்சாரத்தை யாழில் ஆரம்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் நினைவுத் தூபி…
-
- 1 reply
- 432 views
-
-
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை 04 Feb, 2025 | 12:02 PM இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் தலைமையில் சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த கைதிகள் 16 பேர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/205764
-
- 0 replies
- 190 views
-
-
ஜே.வீ.பீயின் வேட்பாளர் ஒருவரும் அவருடன் இருந்த இரண்டு பேரும் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அக்கரைபற்று அரசடி சந்தியில் வைத்து தாக்கப்பட்டதாக அக்கரைப்பற்று காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 7 மோட்டார் சைக்கிள்களில் சென்ற முகமுடி அணிந்த சிலர் இவர்களை.................. தொடர்ந்து வாசிக்க........................................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_228.html
-
- 0 replies
- 1.3k views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இந்தியாவில் கைது! வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டுள்ள நிலையில் தமிழகப் பொலிஸாரால் கடந்த திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கு.திலீபன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421052
-
- 1 reply
- 282 views
-
-
சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளுக்கு வட போர்முனையிலும் மன்னார் களமுனைகளிலும் தகுந்த பதிலடி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிலடி சிங்கள அரசை ஆட்டம் காண வைத்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்தியாவின் கோவை பகுதிக்குச் சென்றுள்ள இலங்கை அமைச்சர் ஒருவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100 பேர். வரை கைது செய்யப்பட்டனர். திருமண விழா ஒன்றில் பங்கேற்க இலங்கை அமைச்சர் கோவை சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் தங்கியுள்ள விடுதிக்கு முன் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கோவை தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thaaitamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/
-
- 2 replies
- 793 views
-
-
நாளைக்கான எமது உரிமை போராட்ட அரசியலின் நிலைபாட்டையோ அல்லது எமது பிள்ளைகளின் எதிர்கால உரிமைப் போராட்ட அரசியல் நிலைப்பாட்டையோ இன்றே நாம் எடுக்க வேண்டும் என சிலர் குறிப்பாக களத்துக்கு வெளியே கொழும்பிலும் வெளியிலும் வாழும் சிலர் வலியுறுத்துகிறார்கள். போராளிகளின் நிகழ்ச்சிநிரல் தோற்றுப்போய் மெல்ல எழுகிறவர்களது நிகழ்ச்சி நிரலாக முடியாது. ஒவொரு காலக்கட்டத்துக்குமான சாத்தியமான அரசியல் நிகழ்ச்சி நிரலை புரிந்துகொள்வது முக்கியம். கால் முறிந்த ஒரு ஓட்ட பந்தயகாரர் கட்டிலில் கிடந்து சிகிட்சை செய்வதற்கான காலத்தையும் கட்டுப் போட்டபடி மெதுவாக செயல்படும் காலத்தையும் ஆதரிப்பவர்களா மறுப்பவர்களா நாளை அவர் எழுந்து போட்டிகளில் ஓடி வெல்வதற்க்கான சூழலை உருவாக்குகிறவர்? தூரத்து உறவுகள் சிக…
-
- 9 replies
- 938 views
-
-
டீ.ஏ.ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜனாதிபதி? டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/டீ-ஏ-ராஜபக்ஷ-வழக்கிலிருந/
-
- 8 replies
- 805 views
-
-
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார் ரஜீவன் எம்பி! Published By: Digital Desk 7 20 Feb, 2025 | 11:04 AM யாழ். மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவிக்கான நியமனத்தினை ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாசம் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை), தீவகம் தெற்கு (வேலணை), நல்லூர், வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) ஆகிய பிரதேச செயல்களிகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்…
-
- 0 replies
- 448 views
-
-
யாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய தனியார் நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 635 views
-
-
ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்வதை தமிழகம் நிறுத்த வேண்டும்! ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்வதை தமிழக மக்கள் நிறுத்தி அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாண்டிச்சேரியில் நடைபெற்ற உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக உயிரை கொடுத்து செயற்படுவதற்கும் தயாராக இருக்கின்றது. இன்று ஸ்ரீலங்காவில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்தியாவிலிருந்து ஸ்…
-
- 3 replies
- 511 views
-
-
மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியிலிருந்து கவச ஊர்திகள் சகிதம் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 707 views
-
-
அரசின் திட்டமிட்ட நில அபகரிப்பினை எதிர்த்தும் மக்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்யக் கோரியும் வலி. வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காவற்றுறையினரால் தடுக்கப்பட்ட போதிலும் இறுதியில் குறிப்பிட்ட அளவு மக்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் சென்று மகஜர் கையளித்தனர். வலி. வடக்குப் பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இருநூற்றைம்பது பேர் வரையான மக்கள் கலந்து கொண்டனர். தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொண்ட பினனர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கச் சென்ற மக்களைத் தடுத்த காவற்றுறையினர் ஆலய வாசலில் மறித்து மேலும் செல்லவிடாது தடுத்தனர். இதனையடுத்து, ஆப்பாட்டக்காரர…
-
- 6 replies
- 825 views
-