ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
அரசுக்குழு சார்பில் ஜெனீவா பேச்சுகளில் பங்குகொள்ளச் சென்ற அமைச் சர் ஒருவரின் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரமுகர்கள் செல்லும் பாதையில் மதுபோதையில் மயங்கி விழுந்துவிட்டார் என்றும் பின்னர், அமைச்சரும், அவரது மகனும் அவரை கைத்தாங்கலாகக் கொண்டு சென்று விமானத்தில் ஏற்றினர் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது. இது குறித்து, அந்தப் பத்திரிகையில் பிரசுரமான செய்தி வருமாறு: சம்பவதினம் இரவு 8 மணிக்குப் புறப்படவிருந்த கட்டார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான கியு.ஆர்.303 என்ற விமானத்தில் பயணிப்பதற்கு அமைச்சரது குடும்பத்தினர் ஆசனங்களை ஒதுக்கியிருந்தனர். பொதுவாக எந்தத் தராதரத்தைச் சேர்ந்த பயணியும் விமானம் புறப்படுவதற்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவுக்குள் கடல்வழியாக இலங்கையர்கள் பிரவேசம், படகைக் காணாமல் அதிகாரிகள் அதிர்ச்சி! செவ்வாய், 27 ஜூலை 2010 16:33 . . அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த இலங்கையர் 06 பேர் இன்று அதிகாலை அந்நாட்டு கடற்கரை ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அந்நாட்டு கடலோர காவற்படையினர் இவர்களை 6.30 மணியளவில் கைது செய்து எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் ஒவ்வொருவரதும் காற்சட்டைகள் முழங்கால்கள் வரை நனைந்திருந்தன. இதனால்தான் கடலோர காவற்படையினர் மீது சந்தேகப்பட நேர்ந்தது. இவர்கள் கடல்வழியாக வந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகளால் நம்பப்படுகின்றது. ஆனால் இவர்களைப் பிடித்த கடல் பிரதேசத்து…
-
- 0 replies
- 1.4k views
-
-
வெளியாகியது சிறிதரனின் தொலைபேசி உரையாடல்
-
- 5 replies
- 1.4k views
-
-
வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்சம் ஈழத் தமிழர்களில் 1,19,000 பேரை அவர்கள் வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தியுள்ளோம் என்று சிறிலங்க அரசு கூறியுள்ள நிலையில், முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் இன்னல்களை நேரில் கண்டு விவரித்துள்ளது கிரவுண்ட் வியூவ்ஸ் என்கிற இணையத் தளம். கிரவுண்ட் வியூவ்ஸ் என்கிற இந்த இணையத் தளத்தை சிறிலங்கப் பத்திரிக்கையாளர்களே நடத்திவருகின்றனர். இதன் ஒரு பத்திரிக்கையாளருக்கு கடந்த வாரம் மாணிக்கம் பண்ணை முகாமிற்கும், கிளிநொச்சி, மன்னார் பகுதிகளுக்குச் சென்றுவரும் வாய்ப்பு கிட்டியுள்ளது. தனது பயணத்தில் கண்டதை உள்ளது உள்ளவாறு விவரித்துள்ளார். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறது என்று தமிழகத்தின் முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். …
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர்களால் தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனேடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் டிசெம்பர் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் திரையிடப்படவிருகின்றன. அனைத்து கனேடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டு மென கனேடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனேடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் மனோ, சுதா, கவிதா மற் றும் இயக்குநர் தரன் மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்களும் நடித்துள்ளனர். திரைப்படத்தின் பாடல்களை தமிழ்நாட்டு பாடலாசிரியர் காதல்மதி, இயக்குநர் தரன் ஆகியோர் எழுதியுள்ளனர். நிலா திரைப்படம் …
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழ் இளைஞர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள் - யாழ் இளைஞர்களின் தற்போதைய நிலை பற்றி வலம்புரி பத்திரிகையின் தலையங்கம் சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர். அன்புசால் இளைஞர்களுக்கு! அவசரமாக இக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயம். தமிழினம் படும் துயர்பற்றி எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி எல்லாம் எழுத விருப்பவில்லை. எழுதாக் குறைக்கு அழுதால் தீரு…
-
- 4 replies
- 1.4k views
-
-
உள்ளூர் சந்தையில் திடீரென காய்கறி விலை அதிகரித்துள்ளது இதனால் ஏற்கனவே விலை அதிகரிப்பால் அதிருப்தியில் இருந்த மக்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மரக்கறி ஓர் அத்தியவசியப்பொருள் என்பதனால் அனைத்து தரப்பினரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இதனால் மஹிந்தவிற்கு வருகின்ற உள்ளூராட்சி தேர்தல்களில் பாதிப்பு ஏற்படலாம். இதனைப்போக்குவதற்கு இராணுவத்தினரை மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுமாறு மஹிந்த பணித்துள்ளார். இதன்படி இராணுவம் கிராமங்களில் மரக்கறிகளை குரைந்த விலைக்கு பெற்று (பறிமுதலும் செய்யலாம்) அதனை கொழும்பு சந்தைகளில் நேரடியாக விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதன முத்தாவின் திட்டத்தினால் மரக்கறி வியாபாரிகள், விவசாயிகள் மனம் நோகலாம் இது எதிரணிக்கு நல்லதோர…
-
- 4 replies
- 1.4k views
-
-
சரி நுழைந்தாயிற்று ஒரு கையொப்பமிடுங்களேன் அவசரம் கையொப்பமிடுங்கள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் URGENT PETITION. PLEASE SIGN. http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html
-
- 3 replies
- 1.4k views
-
-
2008 இன் முதல் 100 நாட்களில் ஆறு எம்.பிக்கள் உயிரிழந்தனர் புது வருடம் பிறந்து நூறு நாட்களுக்குள் ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினரை தற்போதைய நாடாளுமன்றம் இழந்திருக்கின்றது. ஜனவரி முதலாம் திகதி மகேஸ்வரன் எம்.பி. சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த வாரத்தில் அமைச்சர் டி.எம்.திஸாநாயக்கா கிளைமோர்க் குண்டில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிவநேசன் எம்.பி. கிளைமோர்க் குண்டிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் அணியின் சிறிபதி சூரியாராய்ச்சி கார் விபத்திலும், அனுரா பண்டாரநாயக்கா சுகயீனம் காரணமாகவும் மரணமாகினர். தற்போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குண்டு வெடிப்பில் பலியாகியிருக்கின்றார். http://www.sudaroli.com/pages/news/today/04.htm
-
- 2 replies
- 1.4k views
-
-
ஊடகவியலாளர் சிவநாயகம் அவர்கள் தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார். இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொக்குவில் இந்துக்கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் ஊடகத்துறையில் சேர்ந்து டெய்லி நீயூஸ், டெய்லி மிரர் போன்ற பத்திரிகையில் கடமையாற்றினார். இவ்வூடகங்களில் வந்த இவரது ஆக்கங்களினால் இலங்கை முழுவதும் புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்ற பெயரைப் பெற்றார். இக்காலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பிக்க சிவநாயம் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணத்தில் 'Saturday Review' என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடாத்தி அதில் தமிழர்களின் சுதந்திர வேட்கையைப் பற்றிய ஆக்கங்களை எழுதினார். இதனால் இவரது பத்திரிகை நிலையம் ச…
-
- 6 replies
- 1.4k views
-
-
கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு சீனா மிரட்டல் _ சீனாவின் தென்கடல் பகுதியில் இந்தியா கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சீனாவின் தென்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்க இந்தியாவிற்கு கடந்த ஆண்டு நடந்த ஆசியான் உச்சி மாநாட்டின் போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இதைத்தொடர்ந்து இந்தியா, எண்ணெய் ,இயற்கை எரிவாயு விதேஷ் (ஓ.என்.ஜி.சி) நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கிடையே நேற்று கம்போடியாவில் ஆசியான் நாடுகளின் அரசியல் விவகாரம் தொடர்பாக நடந்த மாநாடு நிறைவுபெற்றது.இது குறித்து தென்சீனா தேசிய இன்ஸ்டியூட் தலைவர் ஷூசிஹூன் கூறுகையில், இந்தியாவுடன் சீனா எந்த வகையிலும் சர்வதேச கடல் பகுதி ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை.சர்ச்சைக்குர…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ருவான்வெல்ல பிரதேச கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் உணவுப் பொதியும் 300 ரூபா பணமும் வழங்கப்படும் என்ற உறுதிமொழியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரால் அழைத்துச் செல்லப்பட்டதக கூறப்படுகிறது. ருவான்வெல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பளரின் ஆலோசனைக்கு அமைய தோட்டங்களில் இருந்து இந்த மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இவர்களை ஏற்றிச் செல்ல இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர் உறுதியளிக்கப்பட்டவாறு உணவுப் பொதியும் 300 ரூபா பணமும் வழங்கப்படாத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள், சுதந்திரக்கட்சியின் சார்பில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை தூ…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிங்களவருக்குப் புரியும் மொழியில் பேசுங்கள் -இந்தக் கட்டுரையில் உள்ளவை, கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளே) திருப்பதிக்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ராஜபக்சே வருகிறார். கோயிலில் வழிபாடு செய்கிறார். இந்திய அரசு அவருக்கு முழுமையான பாதுகாப்புக் கவசத்தை வழங்குகின்றது. அதே நாள், அதே நேரம், நாகப்பட்டின மீனவர்கள் வேதாரணியக் கரையோரத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராஜபக்சே முப்படைத் தலைவராக இருக்கும் இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களை நோக்கி வருகிறது. மீன்பிடிப் படகுகளை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடுகிறது. இருவர் படகுக்குள்ளேயே பிணமாகிக் கிடக்கின்றனர். மீனவர் பலருக்குப் படுகாயங்கள் ஏற்படுகின்றன. மீன்பிடிப் படகுகளைக் குண்டுகள் துளைக்க, தண்ணீர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்! வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியின் செயலாளர் நாயகமாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார். அந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகியே செயற்பட்…
-
- 10 replies
- 1.4k views
-
-
நடைபெறப்போகும் சிறிலங்காவுக்கான அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுப்பதென்றால் தனது பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை தனது பெருந்தலைவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா என்ற அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தற்போது போரற்ற சூழ்நிலையில் ஏ9 உடனான சீரான போக்குவரத்து ஏற்படுத்தவேண்டும் என்றும் மக்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்பதும் போன்ற பத்து நிபந்தனைகளை சொன்னாராம். தமிழர்களின் அன்றாட வாழ்வாதார உரிமைகளையே கேட்டு பெறவேண்டிய தேவை எழுந்துள்ளதை மறந்த அமைச்சர்ளும் அவரைப் போன்றவர்களும் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி கதைப்பார்களா என்பதை மீளவும் இன்றைய நிலையில் நாம் சிந்தித்துபார்க்கவேண்டும். தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலை மைதானத்திற…
-
- 0 replies
- 1.4k views
-
-
Published By: VISHNU 06 DEC, 2023 | 09:43 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் சிறுவர்களின் மனங்களில் சிங்களவர் தொடர்பில் வைராக்கியம் விதைக்கப்படுகிறது. தனி ஈழ இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை. சிங்களவர்களும் இடமளிக்க மாட்டார்கள். நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கமாட்டோம். அவர்களும் யுத்தக் களத்துக்கு செல்ல வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்ட…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
நோர்வே, ஒஸ்லோவுக்கான இலங்கையின் தூதுவர் எசல வீரக்கோன் தமது இரண்டு வருடக்கால பதவி முடியும் முன்னரே, வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவினால் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் உயர்சிவில் அதிகாரியான பிரட்மன் வீரக்கோனின் புதல்வாரன எசலவின் மீது, ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சிகளை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டே அவர் திருப்பியழைக்கப்பட்டுள்ளார
-
- 3 replies
- 1.4k views
-
-
நெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் நாமும் பயணிப்போம் : ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிய உரை – 24.09.2018 அனைவருக்கும் வணக்கம். மதிப்புக்குரிய அவையினரே, நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டை ஐநா சபை நடத்த தீர்மானித்த்தையிட்டு அதன் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பணிப்பாளர் சபைக்கு இலங்கை அரசினதும் மக்களினதும் மதிப்புக்குரிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நெல்சன் மண்டேலா போன்ற சிரேஷ்ட மனிதநேயம் மிக்க, உலகிற்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயன்ற தலைவர்கள், உ…
-
- 1 reply
- 1.4k views
-
-
செப்டம்பர் 2009 லிருந்து இன்று வரை தொடர்ச்சியாக தமிழீழம் சார்ந்தும்,தமிழகம் சார்ந்தும் கருத்தியல் தளத்திலும், செயல்தளத்திலும்செயல்பட்டுகொண்டிருகிறோம். மேலும் அரசியல் தளத்திலும், கருத்தியல்தளத்திலும் முன்னேறி செல்ல, தொடர்ச்சியான போராட்டங்களைமுன்னெடுக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தை சார்ந்த சனநாயகவாதிகள், ஈழஆதரவாளர்கள் மற்றும் தோழர்கள் எங்களுடன் சேர்ந்து செயலாற்றுவதற்கும் நிகழ்வுகளுக்கான நிதிஉதவி அளிக்குமாறு மே பதினேழு இயக்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம். குறிப்பாக ஈழத்துபுலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். தமிழகத்தின் தமிழர்களின் உதவியை மட்டுமே கொண்டு செயல்பட தீர்மானித்து இருக்கிறோம். நிதி உதவி காசோலையாகவோ, பணமாகவோ கீழ்க்கண்ட வங்கி …
-
- 0 replies
- 1.4k views
-
-
வெளியுறவு ஆணையாளர்: Benita.Ferrero-Waldner@ec.europa.eu துணை வெளியுறவு ஆணையாளார்: Joao-Luis.Aguiar-Machado@ec.europa.eu வெளியுறவுச் செயளாளர்: Helen-C- P.Campbell@ec.europa.eu சர்வதேச வர்த்தக ஆணையாளர்: Peter.Mandelson@ec.europa.eu ஏனைய உறுப்பினர்கள்: Julian.Wilson@ec.europa.eu Catriona.Carmody@ec.europa.eu, Peter.Power@ec.europa.eu, Michael.Jennings@ec.europa.eu, Peter.Hill@ec.europa.eu
-
- 5 replies
- 1.4k views
-
-
ஜெனிவாவுக்கு 28 ஆம் திகதி பயணமாகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு! ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 28 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஜெனிவா பயணமாகின்றது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். ஜெனிவா செல்லும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேத்திரன் …
-
- 2 replies
- 1.4k views
-
-
13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தியாவின் பேச்சைக் கேட்கக் கூடாது என்றும், தேசிய பிரச்சினையை சிறிலங்கர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “இதுதொடர்பாக நாம் இந்தியாவின் பேச்சைக் கேட்கக் கூடாது. இதற்கு, இந்தியாவுடன் கொண்டுள்ள உறவுகளை இழப்பது என்று அர்த்தமில்லை. ஆனால், பிரச்சினை இருந்தால், சிறிலங்கர்களால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும். இந்தியாவினால் அல்ல. தேசியப் பிரச்சினைக்கு உள்ளகத் தீர்வு ஒன்றே காணப்பட வேண்டும். 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விவாதங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்காது. இந்தியா எமது நண்பன். தொடர்ந்தும் நல்ல உறவுகளை நாம் கொண்டிருக்க வேண்டும்.…
-
- 1 reply
- 1.4k views
-
-
கவலைக்கிடமான நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம்! அம்பலமான அரசின் பொய் வேஷம் சனி, 07 மே 2011 06:39 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கற்பாறைகள் காணப்படுவதனால் பொருட்களை ஏற்றிவரும் கப்பல்களை நிறுத்தி வைக்கமுடியாது என்று விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு கப்பலொன்று துறைமுகத்தை வந்தடைந்தது. சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த கப்பல் ஒன்று மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்ததாகவும், குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டையில் ஓய்வெடுப்பதாகவும் அரசு ஊடகங்களில் பிரச்சாரம் செய்தது. இந்தக் கப்பல் ஏற்றிக்கொண்டு வந்த 2 ஆயிரம் கொள்கலன்களும் வெற்றுக் கொள்கலன்கள் எனத் தற்போது தெரியவந்துள்ளது. வன்கை -502 என்ற அழைக்கப்பட்ட இந்தக் கப்பல் கொழும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழில் தரையிறங்கவுள்ள, முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து நாளை மறுதினம் வியாழக்கிழமை திறந்து வைக்கவுள்ளனர். இதன்போது, சென்னையில் இருந்து வரும் அலையன்ஸ் எயார் விமானம் ஒன்று தரையிறங்கவுள்ளது. இந்த விமானத்தில் விமானத்துறையைச் சார்ந்த விருந்தினர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர். இவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 19 replies
- 1.4k views
-
-
துப்பாக்கி முனையில்... தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தல் : அநுராதபுரம் சிறையில் அமைச்சர் அட்டகாசம் அநுராதபுரம் சிறைகளுக்குச் சென்ற சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து இராஜாங்க அமைச்சர் அவர்களில் இருவரை தனக்கு முன்பாக மண்டியிடச் செய்தார் என்றும் அவர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டி அந்த இடத்திலேயே கொன்றுவிடுவேன் என மிரட்டினார் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சரின் இந்த மோசமான நடத்தையை தமிழ் த…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-