Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக சற்றுமுன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரேரணை ஒன்றை ஜனாதிபதி சற்றுமுன்னர் பாராளுமன்றில் முன்வைத்தார். இதனடிப்படையில் நாட்டில் இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கப்படுகிறது. இலங்கையில் காணப்படும் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுடனான பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் போதும் வலியுறுத்தியது. அத்துடன் யுத்தத்தின் பின் அவசரகாலச்சட்டம் அகற்றப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் அழுத்தம் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. http://akkinikkunchu.com/new/

  2. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இந்தமாதம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று ஒழுங்கு செய்துள்ள சிறப்புக் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்கே இவர்கள் மூவரும் புதுடெல்லி செல்லவுள்ளனர். இந்தக் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கருத்தரங்கில் பங்கேற்கச் செல்லும் மூவரும், சிறிலங்காவின் அரசியல் நிலைமைகள் குறித்து இந்திய அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளனர். ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை அடுத்து, …

  3. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் காணமல் போனதற்கு பொறுப்பாகவிருந்த முதன்மை போர்க்குற்றவாளிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கத்துருசிங்காவுடன் கைகோர்த்த விக்னேஸ்வரன் வட மாகாண சபைக்காக கைதடியில் அமைக்கப்பட்ட கட்டிடத்தை இன்று திறந்த வைத்தார். அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், சிறீலங்காப் படைகளை ஐ.நா பாதுகாப்புப் படையில் இணைக்க வேண்டும் என தெரிவித்தார். ஐ.நா.பாதுகாப்பு படையில் இணைந்த சிங்கள இன அழிப்பு படைகள் கெயிட்டி உட்பட்ட சில நாடுகளில் அங்குள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், தேர்தல் காலங்களில் தமிழர் தாயகத்தை விட்டு சிங்கள ஆக்கிரமிப்பு அகல வேண்டும் எனத் தெரிவித்தனர் தமிழ்த் தேசியக் கூ…

    • 19 replies
    • 1.4k views
  4. கனடாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக போலி வெளிநாட்டு பயண முகவர்கள், ஏமாற்றி பணம் பெற்று வருவதாகவும் அவர்களிடம் ஏமாந்து போகவேண்டாம் இலங்கை வெளிநாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது. கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்காக எந்தவொரு பயண முகவர்களுக்கும் தம்மால் அனுமதி வழங்கப்படவில்லை என்று வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பொதுமக்களை ஏமாற்றி பணம் பெறுகின்ற சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்ட விரோத நிதி மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இவ்வாறு மலேச…

  5. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மா வீரம், பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான ஆவணப் பதிவு

  6. சென்னை: ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உச்சக்கட்டப் போரின்போது மனித உரிமைகளை மீறும் வகையில் ராஜபக்சே தலைமையிலான இலங்கை ராணுவம் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி விசாரித்து இலங்கை அரசின் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. திமுகவைப் பொறுத்த வரையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து 27.4.2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்…

  7. யுத்த காலத்தில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்ற இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனக்கோரி சென்னை இளைஞர்கள் "யுத்தகுற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்" என்ற பதாகை தாங்கி போராட்டம் ஒன்றினை நேற்றைய தினம் நடத்தியுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவால் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய மத்திய அரசும் நிறைவேற்ற வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் தமிழீழ ஆதரவாளர் மற்றும் திரைப்பட இயக்குனரான மணிவண்ணனும் மற்றும் தழிழர் ஆதரவான பல அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை, குறித்த போராட்டத்தில் அரசி…

    • 5 replies
    • 1.4k views
  8. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7%

    • 0 replies
    • 1.4k views
  9. வவுனியா தெற்கில் துணைப்படைக்குழுவால் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள். வவுனியா தெற்கு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தாலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களான கருணா கூலிக்குழு மற்றும் புளொட் கூலிக்குழுக்கள் ஆகியனவும் சேர்ந்து பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது. இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து நுழையும் இவ் ஆயுததாரிகள் அங்கிருப்பவர்களை மிரட்டுவதாகவும் அங்கிருக்கும் சிறுமிகள் பெண்கள் ஆகியோரை தெரிவுசெய்து அழைத்துச் செல்வதாகவும் பின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியபின் விடுதலை செய்வதாகவும் இதுதொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டால் கொலைசெய்யப்படுவீர்கள் என அச்சுறுத்துவதாகவும் மேலும் அறியமுடிகிறது. …

    • 3 replies
    • 1.4k views
  10. கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும்! October 3, 2018 1 Min Read திருமலை ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள்… கன்னியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள். நியூசிலாந்துக்குச் சென்றுள்ள திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகாரை குளோபல் தமிழ் செய்திகளின் பத்தியாளர் வரதராஜன் மரியம்பிள்ளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட திருகோணமலையின் மூத்த ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய ” இராவணதேசம்” நூல் வெளியீட்டு நிகழ்விலே திருமலையின் புதிய ஆயர் பேசிய விடயங்களை தனது கலந்துரைய…

  11. · மரணத்தின் வாசலில் உன் இனம், இதை தடுத்திட எழுந்து வா தமிழனே, அழுதது போதும், உரிமைப்போரை உன் கைல் எடு விரைவோம். விரைந்து செயல்படுவோம்! சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்மக்களை காப்பதற்கான ஒரு அவசரகால ஒன்றுகூடலுக்கு தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஒன்றுகூடல் நாளை மறுதினம் பிற்பகல் 14:00 மணிக்கு ஜெனீவா நகரின் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பசமாகி ஜநா மனித உரிமைகள் மைய முன்றலைச் சென்றடைந்து கண்டனப்பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும். இதில் · தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும், · போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் …

    • 2 replies
    • 1.4k views
  12. சீமானின் செவ்வி (ஜேர்மனியில்)

    • 3 replies
    • 1.4k views
  13. வீரகேசரி நாளேடு 10/24/2008 8:40:49 PM - தனித் தமிழ்நாடு கோரி பேசியதாக மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாளை சனிக்கிழமை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. அறிவித்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பது தான் எனது நோக்கம். ஆனால், மன்மோகன் சிங் அரசு இலங்கைக்கு ஆயுத உதவி செய்கிறது. இதற்கு தி.மு.க.வும் உடந்தையாக இருக்கிறது. இது காங்கிரஸை திருப்திப்படுத்துவது போலவும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போலவும் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார். அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்றார். ஆனால், இலங்கை …

  14. இறுதிப்போரின்போது கொத்தணி, இரசாயனக் குண்டுகள் பாவிக்கப்பட்டதாக அண்மையில் அமெரிக்க அதிகாரிகளிடம் ஆயர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கு எதிர்வினையாக இலங்கையின் ஐலண்ட் நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கொத்தணிக் குண்டுகளை வாங்கும்படி அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடம் 2002 ஆம் ஆண்டுவாக்கில் தமக்குப் பரிந்துரைத்ததாக ஒரு ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு.. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=95664 திருத்தப்பட்ட காரணம்: எழுத்துப்பிழை

    • 8 replies
    • 1.4k views
  15. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதுபற்றிய ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர்களில் அனேகர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்வரும் காரணங்களைத் தவறாது குறிப்பிடுகின்றனர். சக இயக்கங்களை அழித்தமை, மாற்றுக் கருத்துக்களில்லாத இறுகிய ஒற்றைத் தன்மை, முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை, ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமை, உலகின் புதிய ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளாமை என்பவைகளாகும். இவை, கண்ணி வெடிகளிற்குப் பயந்து அங்கும் இங்கும் விலகாத ஒரு நேர்கோட்டுத்தன்மை கொண்டவையாகவே இருக்கிறது. உலகின் புதிய ஒழுங்கு தவிர்ந்த ஏனையவை, ஒரு விடுதலை இயக்கம் என்ற வகையில் அவர்கள் மேற்கொண்டிருக்கக்கூடாத செயற்பாடுகள்தான். விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள்மீது அக்கறை கொண்டிருந்தாலும், அவ்வக்கறை இராணுவ அமை…

    • 2 replies
    • 1.4k views
  16. ஞாயிறு 04-05-2008 21:47 மணி தமிழீழம் [மயூரன்] இளவரசர் ரிட்சாட் கொழும்பை வந்தடைந்துள்ளார் இங்கிலாந்து அரச பரப்பரையைச் சேர்ந்த இளவரசர் ரிட்சாட் மூன்று நாள் பயணமாக இலங்கை வந்தடைந்துள்ளார். இன்று கொழும்பை வந்தடைந்துள்ள இவர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இளவரசர் ரிட்சாட் இரண்டாம் எலிசப் மாகாராணியின் உடன்பிறவா சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  17. வியாழன் 06-09-2007 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன மாவீரர்களின் விரிப்பு ஒன்றை தமிழீழ மாவீரர் பணிமனை விடுத்துள்ளது.27-11-1982 ம் ஆண்டு தொடக்கம் 31-08-2007 அன்று வரைக்கு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 19,539 மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர் என அறிவித்துள்ளது. மாவீரர் விரிப்பு வருமாறு... நன்றி-பதிவு

    • 2 replies
    • 1.4k views
  18. தமிழீழ விடுதலைப் புலிகளில் இரண்டு பெண் கரும்புலிகள் பற்றிய ஆவணப்படத்தின் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  19. [ வெள்ளிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2011, 00:08 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் குறித்து சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அது சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, நேற்றுமாலை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார். வடக்கில் துணை ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ஈபிடிபி பலமான ஆயுதக் குழுவை வைத்துள்ளதாகவும் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் நேற்றுமுன்தினம் கூறியிருந்தார். அதற்க…

    • 3 replies
    • 1.4k views
  20. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது.. 1999 முதல் 2009 ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்ததாக சுவிசின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேரிற்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. ஓன்பது வருட காலமாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. எனினும் 2018 யூன் மாதம் சமஸ்டி நீதிமன்றம் விடுதலைப்புலிகளிற…

    • 21 replies
    • 1.4k views
  21. ஞாயிற்றுக்கிழமை, 26, ஏப்ரல் 2009 (22:8 IST) தனி ஈழம் அமைப்பதாக இருந்தால் வேறு இடம் தேடிக்கொள்ளுங்கள்: இலங்கையில் இடம் கிடையாது: கோதபய ராஜபக்சே இலங்கையில் விடுதலைப்புலிகளுடன், ராணுவம் நடத்தும் போர் பற்றி, அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா, சமீபத்தில் தனது தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார். இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர, தனி ஈழம் அமைப்பதுதான் நல்லது என்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்து, இலங்கையின் ராணுவ செயலாளரும், அதிபர் ராஜபக்சேயின் தம்பியுமான கோதபய ராஜபக்சே கூறியதாவது: இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியாது. தனி ஈழம் அமைப்பதாக இருந்தால், அதற்கு வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள். இலங்கை தீவு அதற்குரிய இடம் அல்ல. விடுதலைப்…

  22. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியல் இணைந்து கொண்டால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வட மாகாண பிரதான அமைப்பாளர் பதவி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பு குறித்து கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் அமைச்சர் தேவானந்தா கலாந்தாலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், வடக்கு மாகாண பிரதான அமைப்பாளர் பதவி தேவானந்தாவிற்கு வழங்கப்படுவதனை அமைச்சர் கருணா உள்ளிட்ட குழுவினர் விரும்பவில்லை எனவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. …

  23. * ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் தமிழக மீனவர்களை கடத்தி 68 நாட்கள் தடுத்து வைத்திருந்த பின்னர் விடுதலை செய்தவர்கள் யார் என்பது தொடர்பான விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், விடுவிக்கப்பட்ட மீனவர்களின் வாக்குமூலங்கள் புலிகளுக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லையென்பதை உறுதிப்படுத்துவதாகவுள்ளன. விடுதலைப் புலிகள் மீது பழிபோடுவதற்காக நடத்தப்பட்ட கடத்தல் நாடகம் இன்று அம்பலத்திற்கு வந்துவிட்டது. `இலங்கை கடற்படையே எம்மை கடத்தியது' என்று விடுவிக்கப்பட்ட மீனவச் சிறுவனான அனிஸ்தனின் வாக்குமூலமும் `தமிழக மீனவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் அரசியல் நாடகமாடின' என்ற அகில இந்திய மீனவர் சங்கத்தின் குற்றச்சாட்டும் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் பேட்டிகளும் இராணுவ கட்டுப்பா…

  24. அனுராதபுரதம் மாவட்டத்துக்கு சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ண நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  25. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவரும் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கனடிய விஜயம் தொடர்பாக கனடியப் பாராளுமன்றத்தில் கனடிய குடிவரவு அமைச்சரிடம் கேள்விகள் நேரத்தில் கேள்விகளைக் கேட்டு விளக்கம் கோரும்படி ஜிம் கரிஜியானிஸ் பா.உறுப்பினரிடம் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கை அரசின் போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவரும் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கனடிய விஜயம் தொடர்பாக கனடியப் பாராளுமன்றத்தில் கனடிய குடிவரவு அமைச்சரிடம் கேள்விகள் நேரத்தில் கேள்விகளைக் கேட்டு விளக்கம் கோரும்படி கனடாவின் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியில் வாழும் தமிழ் அன்பர்கள் சிலர் மேற்படி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் கனடிய லிபரல் கட்சியின் பல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.