Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமை அரசினுடைய பின்னணியிலேயே – மணிவண்ணன் குற்றச்சாட்டு! வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசினுடைய பின்னணி இருப்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது என யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காடையர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த செயற்பாடானது முற்று முழுதாக மத பிரிவினைவாதத்தை இங்கு தூண்டி அதில் குளிர்காய எடுக்கப்படுகின்ற ஒரு அரசியல் கலந்த நடவடிக்கையாகவே நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். இந்…

  2. ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டு தடைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு - சுமந்திரன் வவுனியா வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு அண்மை நாட்களாக நெடுங்கேணி பொலிசார் தடைவிதித்து வருகின்றனர். இந் நிலையில் இவ் வழிபாட்டுத் தடைக்கு எதிராக விரைவில் அடிப்படை உரிமைமீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த ஆலயத்தில் வழிபாட்டிற்கு செல்வதற்கு பொலிசார் தடை விதித்துள்ளமை தொடர்பில், ஆலய நிர்வாகத்தினர் 16.10.2020 இன்றையதினம் வவுனியா தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சுமந்திரனைச் சந்தித்து முறையிட…

  3. தெஹியத்தகண்டிய ஹேனானிகல பிரதேசத்தில் ஆதிவாசிகளின் தலைவராக இருந்த கலுஅப்பு காலமாகும் போது 114 வயதடைந்திருந்ததோடு 14 பிள்ளைகளின் தந்தையாகவும் இருந்தார். இவருக்கு நான்கு தலைமுறையைச் சேர்ந்த பேரன் பேத்திகள் 105 பேர் உள்ளனர். முன்னர் ஆதிவாசிகளின் புராதன வசிப்பிடமான தம்பானையில் வசித்த இவர் மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணி வழங்கப்பட்டு ஹெனானிகலையில் குடியேறி உள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை இவரது இறுதிக் கிரியைகள் இடம்பெற உள்ளன. http://www.virakesari.lk/articles/2014/05/01/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E…

  4. ஆதிவாசிகளின் பொங்கல் விழா இன்று நடைபெற்றது ShanaJanuary 16, 2022 (ரூத் ருத்ரா) ஆதிவாசிகளின் பொங்கல் விழா இன்று வாகரை குஞ்சங் கல் குளத்தில் அவர்களுக்குரிய கலாச்சார நிகழ்வுகளுடன் இன்று நடைபெற்றது. ஆதிவாசிகளின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச மக்கள் பங்கு கொண்டு தங்களது கலாச்சார ரீதியில் மண் பானையில் பொங்கல் இட்டு சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்தனர். இதன்போது சிறுவர்கள் மற்றும் பொற்றோர்களுக்கான மரபு ரீதியான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்று போட்டி நிகழ்சிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்வர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பின்னர் மேற்படி கிராம மக்கள் இவ் பொங்கல் விழாவ…

  5. ஆதிவாசிகளின் விளையாட்டுப் போட்டிகள்... (எம்.எப்.எம்.தாஹிர்) ரதுகல ஆதிவாசிகளின் புதுவருட விளையாட்டு விழா முதன் முறையாக நேற்று செவ்வாய்க்கிழமை ரதுகல வன பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு விசேட விருந்தினராக பிரதி கல்வி அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ஆதிவாசிகளின் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றதோடு ஆதிவாசிகளின் சிறுமிகள் அழகுராணி போட்டியிலும் பங்கு கொண்டனர். அங்கு இடம்பெற்ற விளையாட்டு ஒன்றில் பிரதி கல்வி அமைச்சர் ரதுகல ஆதிவாசி தலைவர்கள் மரமேறும் போட்டியொன்றிலும் பங்குகொண்டமை விசேட அம்சமாகும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. படம் இணைத்துள்ளேன். htt…

    • 6 replies
    • 4.5k views
  6. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்ற ஆணித்தரமான அழுத்தத்தை இலங்கை அரசாங்கம்மீது பிரயோகிக்காத இந்தியப் பாராளுமன்றக் குழுவின் விஜயமானது வெறும் உல்லாசப் பயணமாகுமென விமர்சிக்கும் நவ சம சமாஜக் கட்சி, ஆதிவாசிகளைப் பார்வையிடுவது போன்று தமிழ் மக்களை இக்குழு பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், இந்திய, இலங்கை உடன்படிக்கை 1987 இல் கையெழுத்திட்டு அதன் மூலமே 13 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்களையோ அரசியல் தீர்வையோ வழங்கவில்லை. அதேபோன்று யுத்தம் முடிந்து 3 …

  7. ஆதிவாசிகளின் பூர்வீக காணிகளை கையகப்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு சோளச்செய்கை மேற்கொள்வதற்காக வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்குரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு எதிராக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (08) ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர், வனஜீவராசிகள் அமைச்சர், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். தங்களுடைய மக்கள் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காக பாதுகாத்த வனத்தில்,…

  8. ஆதிவாசிகள் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் கலந்துரையாடல்! மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த தமிழ்த் தரிசியாக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். எல்லைக் கிராமங்களில் தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளைகளை அமைப்பது தொடர்பாக சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர், குடும்பிமலை, இரணைக்குளம், மருதங்கேணிக்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது மருதங்கேணிக்குளம் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்ப…

    • 12 replies
    • 972 views
  9. ஆந்­திர முதல்­வ­ருக்கு ஜனா­தி­பதி அழைப்பு (நமது நிருபர்) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஆந்­திர பிர­தேச முதல்வர் என்.சந்­தி­ர­பாபு நாயு­டு­விற்கு அழைப்பு விடுத்­துள்ளார். தேசிய அர­சாங்­கத்தின் இரண்டாம் வருட பூர்த்தி நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி இந்த அழைப்பை விடுத்­துள்ளார். மேலும், 2017ஆம் ஆண்டு முதல் இலங்­கையின் வளர்ச்சி, அறி­வியல், தொழில்­நுட்பம் மற்றும் கண்­டு­பி­டிப்பு ஆகி­ய­வற்­றிற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் ஒன்று தொடங்­கப்­பட உள்­ள­தா­கவும் குறித்த அழைப்பு கடி­தத்தில் ஜனாதிபதி குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. வறு­மையை ஒழிப்­பது தொட…

  10. ஆந்திர முதல்வருடன் பீரிஸ் சந்திப்பு! - நேரடி விமான சேவை குறித்து கலந்துரையாடல் [Friday 2014-07-11 09:00] இலங்கை, இந்திய உறவை பலப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ், ஆந்திர மாநிலத்திற்கு சென்று அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஆந்திர பிரதேசத்தின் நாகர்ஜுனா சாகர் என்னும் இடத்திலுள்ள பரவதர்ம பெளத்த பூங்காவில் தற்போது முடிவடையும் தறுவாயிலுள்ள பெளத்த சிலையின் நிர்மாணப் பணிகள் இலங்கைக்கும் ஆந்திராவுக்குமிடையிலான உறவிற்குரிய சான்றாகுமென முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் பீரிஸிடம் தெரிவித்தார். இதேவேளை இலங்கை- ஆந்திர உறவு…

  11. ஆந்திராவில் 26 இலங்கை மீனவர்கள் கைது இந்திய கடலோர காவல் படையினர் இந்திய கடல் பகுதியில் கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது இந்திய கடல் பகுதியான காக்கிநாடா கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் படகில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். உடனடியாக கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்த 26 இலங்கை மீனவர்களை பிடித்தனர். பின்னர் கடலோர காவல் படையினர் பிடிபட்ட மீனவர்களை மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாகப்பட்டினம் கோர்ட்டில் இலங்கை மீனவர்களை திங்கட்கிழமை ஆஜர்படுத்துகிறார்கள். நக்கீரன்.

  12. இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆந்திரபிரதேசத்தில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் நிர்வாக உரிமையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரித்தானிய போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக நெக்ஸ்ட், லெவிஸ் போன்ற ஆடை நிறுவனங்களுக்கு இந்த நிறுவனத்தில் இருந்தே ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது தொடர்பான உடன்படிக்கை இரண்டு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. ஆந்திரபிரதேஸ், விசாகபட்டிணத்தில் உள்ள இந்த தொழிற்சாலையை இந்தியாவின் பினாமி என்ற அடிப்படையில் இலங்கை நிர்வாகம் செய்யும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. யுத்த குற்றங்களை புரிந்த இலங்கை அரசாங்கத்துடன் இவ்வாறு இந்தியா நெருங…

  13. ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்தியா ஆந்திரமாநிலம் திருப்பதிக்கு அருகில் 20 தமிழர்கள் செம்மரக் கடத்தலுடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறி செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் இன்று நடைபெற்று வரும் 28 ஆவது வடக்கு மாகாண சபையின் மாதாந்த கூட்டத்தில் வடக்கு முதல்வரால் சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த செயற்பாட்டிற்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் க.வி. விக்கினேஸ்வரன் , 20 தமிழர்கள் எதுவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொலை செய்யப்பட்டதனால் அங்கு தொ…

    • 15 replies
    • 1.7k views
  14. ஆனந்­த­சங்­கரி ஆதங்­கம்!! ஆனந்­த­சங்­கரி ஆதங்­கம்!! என்­னைக் காய்­வெட்டி என்­னு­டன் இணைந்த பங்­கா­ளி­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர் என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி. “என்­னு­டன் இணைந்த பங்­கா­ளி­கள் இப்­போது தமது கட்­சியை வளர்க்­கப் பார்­கின்­றார்­கள். விகி­தா­சார ஆச­னங்­கள் கட்­சிக்கு கிடைத்­துள்­ளன. அவற்­றுக்கு நான் கூறு­ப­வர்­களை அவர்­கள் நிய­மிக்­க­வில்லை. என்­னைக் “காய்­வெட்டி” செயற்­ப­டு­கின்­ற­னர். …

  15. வெள்ளிக்கிழமை 25 மே 2007 மலேசிய நிறுவனமான மக்ஸீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஷ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனப் பங்குகள் நெதர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஹகுளோபல் டெலிகொமினிகேஷன் நிறுவனத்தின்' தலைவர் ஆனந்த கிருஷ்ணனுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பாக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென தெரிவிக்கும் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதன் பின்னணியில் பெருமளவிலான லஞ்சம் பரிமாறப்பட்டுள்ளதாகவும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமென்றும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார். நெதர்லாந்தில் இயங்கும் குளோ…

    • 0 replies
    • 777 views
  16. வவுனியா ஆனந்தகுமாரசுவாமி முகாமில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் (32வயது) தீக்குளித்துள்ளார். இவர் முல்லைத்திவு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. இரத்தினசிங்கம் பிரபாகரன் என்ற மேற்படி நபர் அண்மையில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் ஆயினும் சரியான மருத்துவமோ அல்லது எதுவித சிகிச்சைக்கு அனுமதிக்கப்படாதிருந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரபாகரன் அவர்கள் நேற்று முன்தினம் தன்னை மறந்த நிலையில் தனது ஒருமாதக் குழந்தை தனது மனைவி மற்றும் தனது தாயாரையும் கத்தியால் வெட்டியுள்ளார் அதன் பின்னரேயே தன்னைத் தீமூட்டியுள்ளார். இவரது குழந்தை , மனைவி , தாயார் மூவரும் உயிர் தப்பியுள்ளனர். செட்டிகுளம் மருத்துவமனையிலிருந்து மயக்கமருந்து கொடுக்கப்பட்டு …

    • 0 replies
    • 1.1k views
  17. ஆனந்த சங்கரி செவ்வியினை வன்மையாக கண்டிக்கிறார்கள் திருமலை தமிழ் மக்கள் பேரவையினர். லக்பிம சிங்கள நாளிதழுக்கு ஆனந்த சங்கரி அவர்கள் வழங்கிய செவ்வி தமிழில் 28.06.2006 அன்று சுடர் ஒளியில் வெளி வந்தது. அவருடைய செவ்வியினை வன்மையாக கண்டிக்கிறார்கள் திருமலை தமிழ் மக்கள் பேரவையினர். அவர் கூறியுள்ள சொல் தமிழ் ஈழ விடுதலை புலிகளை புறம் தள்ளிவிட்டு ஏனைய கட்சியுடன் சேர்ந்து ஓர் தீர்வைத்தருமாறு கேட்கின்றார். இன்று தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் ஓர் நெருக்கடியான காலகட்டத்தில் நிற்கிறார்கள். சமாதானமா? யுத்தமா? என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில் இருக்கும் பொழுது இவர் ஓர் பழுத்த அரசியல்வாதியானவர் இப்படி ஓர் கீழ்த்தரமான அறிக்கைகளை …

    • 3 replies
    • 1.5k views
  18. ஆனந்த சங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளார் 22 ஜூலை 2013 தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனந்த சங்கரி போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் கடுயைமாக சாடியவர்களில் முக்கியமான தமிழ் அரசியல் தலைவராக ஆனந்த சங்கரியை ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, புளொட் அமைப்பின் தவைலர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial…

  19. -சுமித்தி தங்கராசா தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இலங்கை தமிழரசு கட்சி சார்பாக ப.அரியரட்ணம் 27,264 விருப்பு வாக்குகளையும் குருகுலராஜா 26,427 விருப்பு வாக்குகளையும் பசுபதிப்பிள்ளை 26,132 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக தவநாதன் 3,753 வாக்கு…

  20. ஆனந்த சங்கரி,சித்தார்த்தன் போன்று டக்ளஸ் தேவானந்தாவும் மாற வேண்டும்: சம்பந்தனின் விருப்பம் [Friday, 2011-07-29 08:36:33] உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உண்மையைப் பேசி தமிழ் இனம் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி,சித்தார்த்தன் ஆகியோர் செயற்பட்டார்கள். அதற்காக அவர்களை நான் பாராட்டுகின்றேன். டக்ளஸ் தேவானந்தாவும் அவ்வாறு மாற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேசசபை, குச்சவெளி பிரதேசசபை,சேருவில பிரதேசசபை ஆகியவற்றுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போது சம்பந்தன் இவ்வாறு குறிப்…

  21. ஒரு காலத்தில் தமிழீழம் தனிநாடு கிடைத்துவிடும் என்று தமிழ் இளைஞர்களுக்கு வாக்குறுதி வழங்கி, நாட்டுப் பிரிவினை நெருப்பை எரியவிட்டார் ஒருவர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் புறந்தள்ளப்பட்ட மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான அவரோ - விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு ஊடகங்கள் சில வற்றில் மறுபடியும் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டு வருகிறார். இவர் வேறு யாரும் இல்லை. தற்பொழுது செயலிழந்த நிலைக்குப் போய்விட்ட ஓர் அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் என்று தொடர்ந்து உரிமை கொண்டாகின்றவரும் கிளிநொச்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்களே! இலங்கை நீதி மன்றம் ஒன்றின் தீர்ப்பின் வாய்ப்பை ஒட்டித் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்…

  22. 'அரசு யுத்தத்தை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும்". இவ்வாறு ஐ.வி.மு தலைவன் ஆனந்த சங்கரி கேட்டுள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :- அரசு, கிழக்கு மாகாணத்தில் வெற்றி கண்ட பின் வடக்கு மாகாணத்திலும் அதே போன்று வெற்றியை நோக்கிச் செல்கிறது. இதுஅனைவருக்கும் தெரிந்த விடயம்.ஆனால், கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெற்றியைப் போல் வடக்கு மாகாணத்தில் அவ்வளவு இலகுவாக அமைதியைக் கொண்டுவர முடியாது. அரசு இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், யுத்தத்ததை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும்.நான் விடுதலைப்புலிகளுக்கு பணிவாக விடக்கூடிய வேண்டுகோள் இதுதான். இப்போது நாங்கள் இழந்த இழப்புக்கள் போதும்,இச்சந்தர்ப்பத்தில் பிடிவாதத்தைக் கைவிட்டு ஏன…

  23. ஆனந்த சங்கரியின் கட்சியில் இணைந்து கொள்வதற்காக வெயிட்ங் லிஸ்ட்டில் காத்திருக்கும் கருணா: 02 நவம்பர் 2015 ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்வதற்காக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் காத்திருப்புப் பட்டியலில் (வெயிட்டிங் லிஸ்டில்) காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருணா அம்மானுக்கு கட்சியின் உறுப்புரிமை வழங்குவது குறித்து இன்னமும் தமிழர் விடுதலைக் கூட்டணி இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். கட்சியில் இணைந்து கொள்வது குறித்து கருணா, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொஞ்ச காலத்திற்கு காத்திருக்குமாறு தாம் கருணாவிடம் கோரியதாக ஆனந்தசங்க…

  24. ஆனந்த சங்கரியின் தடுமாற்றம் எதனால்? ஆதாரத்துடன் மாகாண சபை உறுப்பினர் ஜனா சாடல் [ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 12:40.05 PM GMT ] ஆனந்த சங்கரி ஐயாவை நான் மிகவும் நேசித்தவன், இப்போதும் நேசிக்கிறவன். அவரது வயது, அரசியல் அனுபவம், நீண்டகாலமாக மக்களுக்கு குரல் கொடுத்தவர் என்ற ரீதியில் அவர் மீது ஒரு அபிமானம் இருந்தது. நான் முதல் முதலில் பாராளுமன்றம் சென்றது அவர் தற்போது வைத்திருக்கும் கூட்டணிக் கட்சியின் சின்னத்திலே தான். ஆனால் கடந்த சில வருடங்களாக ஆனந்த சங்கரி ஐயாவின் கட்டுரைகள், கடிதங்களைப் பார்க்கும்போது சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார். அவரும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பிலிருந்து வேறுபட்டுச் செல்வது மிகவும் மனவருத்தத்திற்குரியது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி …

  25. http://www.dinamalar.com/fpnnews.asp?News_...29&cls=row4

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.