ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேக்காவை, எதிர்க்கட்சிகளின் கூட்டணி முன்னிறுத்தவுள்ளதாக உள்ள நிலையில், சரத் பொன்சேகாவுடனோ அல்லது அவரது பிரதிநிதியுடனோ முக்கிய சில விடயங்களைப் பேசுவதற்கு இந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் இந்த வாரம் இலங்கை செல்லவுள்ளதாக தூதரகத் தரப்பின் தகவல்களைச் சுட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, இந்திய தூதரகத்தின் அதிகாரியொருவர் அண்மையில் சரத் பொன்சேக்காவை சந்தித்துள்ளதாகவும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்த போது, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் அவரைச் சந்தித்த ஏலவே செய்திகள் வெளிவந்துள்ளன. இந் நிலையில், சரத் பொன்சேக்காவின் விசேட …
-
- 0 replies
- 719 views
-
-
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியப் பிரதமர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி வரும், கோத்தாபய ராஜபக்சவிடம், தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும், கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால், இந்தியாவே தனிமைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரிய வசம் தெரிவித்த கருத்துக்கும் இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவிக்கவுள்ளது. இந்தத் தகவலை பிரதமர் செயலகத்துக்கான மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். எனினும் கோத்தாபய ராஜபக்ச எதற்காக புதுடெல்லிக்கு வருகிறார் என்று அவர் கூறவில்லை. http://www.puthinappalakai.com/view.php?20131027109324
-
- 16 replies
- 1.2k views
-
-
எல்லை தாண்டிய மீன்பிடியை மேற்கொண்டால் கைதுகள் தொடரும் இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டால் கைது செய்வதை தடுக்க இயலாது. எமது மீனவர்களை பாதுகாக்கவே அரசாங்கம் செயற்படுகின்றது என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட மீன்டியை நிறுத்துமாறு பல சந்தர்ப்பங்களில் நாம் இந்திய தரப்பிடம் வலியுறுத்தியுள்ளோம். இந்திய அரசும் ஏற்றுக்கொண்ட விடயத்தை தொடர்ந்தும் செய்யவேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் தமிழக மீனவர்களை கைதுசெய்வது மற்றும் தண்டப்பணம் அறவிடப்படல் குறித்து பாராளுமன…
-
- 7 replies
- 649 views
-
-
கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது! மாவீரர் நாளை முன்னிட்டு கனடாவில் உள்ள டொரொண்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட சீமானை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கனடாவில் உள்ள டொரொண்டாவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீமான், பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர…
-
- 1 reply
- 1.3k views
-
-
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பு: சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார்! இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை ஆனால் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடில்லியில் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அக்பருதீன் மேலும் தெரிவிக்கையில், பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பாரா? இல்லையா? என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கும். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வார். யாழ்ப்பாணத…
-
- 0 replies
- 532 views
-
-
உண்மையைச் சொன்னால் சுடுகிறது இலங்கைக்குக் கடந்த வாரம் பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை மிகக் கடுமையாக எதிர்த்துக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. இலங்கையின் நீதித்துறை மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவை தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படையாக எமர்சன் அறிவித்ததன் எதிரொலியாகவே விஜயதாச அவர் மீது கடும் கோபமுற்றிருந்தார். இலங்கையில் மனித உரிமைகளின் நிலமையை மேம்படுத்துவதாகக் கொழும்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் வாக்குறுதியளித்திருக்கிறது. மனித உரிமைகளின் …
-
- 0 replies
- 739 views
-
-
கார்த்திகை பூ... தொடர்பில், இந்தியத் துணைத் தூதரகம் விளக்கம்! யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற பசுமைக் கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கார்த்திகைப் பூ சூடிய விடயம் தொடர்பில் இணையத்தளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வு என திரிபுபடுத்தப்பட்டு செய்திகள் வெளியான நிலையிலேயே இந்திய தூதரகத்தினால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மரக்கன்றுக…
-
- 3 replies
- 542 views
-
-
நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். காலை 8 மணிக்கு நயினாதீவு நாக விகாரை மற்றும் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து வழிபாடுகளை மேற்கொண்டதோடு நயினாதீவு இயற்கை அரண்களையும் பார்வையிட்டனர். பின் காலை11.30 மணியளவில் யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகத்துடன் யாழ் மாவட்டத்தின் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=742282443514899474#sthash.bpFjsgYZ.dpuf
-
- 2 replies
- 718 views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் துயிலுமில்ல பகுதியை கையகப்படுத்த இலங்கை பாதுகாப்பு தரப்பு மேற்கொண்ட முயற்சிக்கு பருத்தித்துறை நீதிமன்று தடைவிதித்துள்ளது. குமரப்பா –புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளதும் நினைவு தூபிகளுடன் கேணல் கிட்டு உள்ளிட்ட போராளிகது நினைவு தூபியும் வல்வெட்டித்துறை தீருவில் தூபியிலேயே அமைக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் அவை அனைத்தையும் இடித்தழித்த படைத்தரப்பு அங்கு முகாம் அமைக்கவும் முற்பட்டது. எனினும் குறித்த காணி தமக்கே சொந்தமானதென உரிமை கோரியிருந்த வல்வெட்டித்துறை நகரசபை அங்கு சிறுவர் பூங்காவொன்றினை அமைக்கவும் அறிவித்திருந்தது. அத்துடன் பெயர்பலகை நாட்டப்பட்டு பூங்கா அமைப்பு வேலைகளும் ஆரம்பமாகியிருந்தது. எனினும் குறித்த காணிக்கு உரிமை கோரி இலங்கை பயங்…
-
- 1 reply
- 503 views
-
-
வாக்கு தவறிவிட்டார்அரச தலைவர் மைத்திரி அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை கைச்சாத்திடப்படமாட்டாது என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தங்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறியுள்ளார் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கச் சம்மேளனம் குற்றஞ்சுமத்தியிருக்கின்றது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன் தங்களது சம்மேளனத்துடன் கலந்துரையாடப்போவதாக வாக்குறுதி வழங்கிய அரச தலைவர், அவசர அவசரமாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி யிருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகம் எனவும், நாட்டின் தலைவரொருவர் ஒரே வாரத்தில் தான் கொடுத்த வாக்கு…
-
- 2 replies
- 442 views
-
-
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு சிறிலங்கா சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதனால் தொற்று நோய்களின் தாக்கமும் கூடவே அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சிறிலங்காவில் டெங்கு நோயின தாக்கம் காரணமாக 06 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 26பேர் வரையில் டெங்குநோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் சுகாதாரத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சீரற்ற காலநிலை தொடரும் நிலை காணப்படுவதாகவும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை தொடரும் எனவும் சிறிலங்காவின் காலநிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. http://meenakam.com/?p=844
-
- 0 replies
- 531 views
-
-
யாழ். இரவு நேர ஊரடங்கு நாளை முதல் நீக்கம் நாளை நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ். குடாநாட்டில் அமுலிலுள்ள இரவு நேர ஊரடங்குச்சட்டம் நீக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. பல வருடங்களாக அமுலிலுள்ள இந்த ஊரடங்குச் சட்டத்தினை நீக்குமாறு மக்கள் பல்வேறு வேளைகளில் கோரிக்கை முன்வைத்தபோதும் அது நீக்கப்படவில்லை. தற்போது நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் யாழ். மக்களின் மனங்களை வெல்வதற்காக மகிந்த அரசு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போது இரவு நேர ஊரடங்குச்சட்ட நீக்கமும் பார்க்கப்படுகின்றது. நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை தற்போது யாழ். குடா நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. h…
-
- 0 replies
- 585 views
-
-
பருவமழை பொய்யதுள்ளமையினால் தற்போது இரணைமடுக்குளத்தினுடைய நீரின் அளவு குறைந்து காணப்படுகின்றது. கிளிநொச்சியிலுள்ள இந்த இரணைமடுக்குளம் வழமையாக நவம்பர் மாத காலப்பகுதியில் நீர் நிறைந்து வான் பாயும் நிலையில் காணப்படும். ஆனால் தற்போது நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையிலும் மழை பொய்த்துப் போயுள்ளதால் இரணைமடுக் குளத்தினுடைய நீரின் அளவு குறைந்து காணப்படுகின்றது. இவ்வருடம் இரணைமடுக்குளத்தில் போதுமானதளவு நீர் தேக்கி வைக்கப்படாமல் போனால் 2014ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையிலும் பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்படும். என தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99753/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 729 views
-
-
அரசமைப்பு உருவாக்க தாமதத்துக்கு ஐ.தே.கவின் சுயநலனும் காரணம் சம்ப ந்தன் நேற்றுச் சாடல் புதிய அரசமைப்புக்கான முயற்சி தாமதமடைவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரம் அன்றி ஐக்கிய தேசியக் கட்சி யின் சுயநலனும் காரணம் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன். இதுவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியே சுயநலத்துடன் செயற்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டி வந்த அவர், அண்மைக் காலத்தில் முதற்றடவை யாக ஐக்கிய தேசியக் கட்சி மீதும் நேற்றுக் குற்றஞ்சாட்டினார். அத்துடன் நாட்டில் நியாயமான தீர்வு எட்டப்படாவிட்டால், தமிழ் மக்கள் மீண்டும் புலம்…
-
- 0 replies
- 251 views
-
-
கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை January 2, 2022 கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நசீர் அகமட் எம்.பிக்கு பதில் !! கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தொலைக்காட்சி நிகழ்வொன்றில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீ…
-
- 30 replies
- 1.5k views
- 1 follower
-
-
தென்னாபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5ம் நாள் இரவு காலமான நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வு வரும் 15ம் நாள், அவர் பிறந்து வளர்ந்த மலைப்பகுதி கிராமமான கியூணு என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க வரலாறு காணாத வகையில் உலகத் தலைவர்கள் தென்னாபிரிக்காவுக்கு படையெடுக்கவுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர்கள், புஷ், கிளின்டன், மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தென்னாபிரிக்கா செல்லத் தயாராகி வருகின்றனர். இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் இ…
-
- 0 replies
- 238 views
-
-
எதிர்ப்புக்களை எதிர்கொள்கிறார் வடக்கு முதலமைச்சர் முன்னாள் போராளிகள் தொடர்பாக வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்குப் பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் சார்பில் இதற்கு உடனடியாகவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் செயலாளரான ந.சிறிகாந்தா இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ் மக்களின் பேராதரவுடன் பதவிக்கு வந்த சி.வி.விக்னேஸ்வரன், போராளிகளுக்கு எதிராக இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை ஏற்று…
-
- 0 replies
- 309 views
-
-
டெனீஸ்வரன் கட்சியில் இருந்து விலக்கி வைப்பு வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரனை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கி வைக்கவுள்ளதாக ரெலோ அமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/23372
-
- 2 replies
- 343 views
-
-
புலம்பெயர் இலங்கையர்களின் வைப்புகளுக்கு உயர்வட்டி வீதம்! January 21, 2022 2022 பெப்ரவரி 1முதல் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம் பெற்ற வங்கிகள், ஏனைய முறைசார் வழிகளூடாக ரூபாய்க் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகின்ற போது பரிமாற்றல் ஒன்றுக்கு 1,000 ரூபாய் கொடுப்பனவு செய்வதன் மூலம் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணப் பரிமாற்றல் செலவினை மீள வழங்கவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டு நாணய மற்றும் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட வைப்புகள் இரண்டுக்கும் உயர்வான வட்டி வீதங்களை அறிமுகப்படுத்தல் வேண்டும் என்றும் சபை தீர்மானித்துள்ளது. தற்போதைய மற்று…
-
- 8 replies
- 693 views
- 1 follower
-
-
ஆங்கிலப் படத்திரையுலகிற்குப் பரிச்சயமானவர்கள் பலரும் இவரை நன்கு அறிவர். மோகன் பிரீமன் என்னும் பெயர் கொண்ட இவர் நெல்சன் மண்டேலவாக நடித்திருக்கிறார். மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் உயிரோடு இருக்கும் இவரது படத்தைப் போட்டுத் தமிழகத்தில் பெரிய போஸ்டர் செய்து வைத்திருக்கிறார்கள். யாகூ அதனைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. தமிழனின் மானம் கப்பலேறுகிறது.
-
- 5 replies
- 1k views
-
-
நாம் ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் போவதில்லை தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். நாம் நிச்சயமாக நமக்கு என்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் நமது தலைவர்கள் திருந்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=156878
-
- 0 replies
- 259 views
-
-
யேர்மனியில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஆரம்பமாகியது மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு யேர்மனியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது யேர்மனி வாழ் ஈழத்தமிழர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பு யேர்மனி முழுவதும் அமைக்கப்பட்ட 110 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 8மணிக்கு ஆரம்பமாகியது காலை வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டவுடன் யேர்மன்வாழ் தமிழ்மக்கள் தங்கள் வரலாற்றுக்கடமையை நிறைவேற்றுவதற்கு தங்கள் வாக்குகளை பதிவுசெய்த வண்ணமுள்ளனர் http://www.pathivu.com/news/5226/54/.aspx
-
- 0 replies
- 491 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக் கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பாணந்துறையில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் இராபோசன விருந்தையும் ஏற்பாடு செய்திருந்தார். சந்திரிக்காவுக்கு ரணிலுக்கும் இடையிலான சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேல் மாகாண சபைத் தேர்தல், அடுத்த பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து இதன் போது பேசப்பட்டுள…
-
- 2 replies
- 536 views
-
-
வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனை யாழில் இடைநிறுத்தம்! February 9, 2022 வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை அவை இடைநிறுத்தப்படுகிறது என்றார். https://globaltamilnews.net/2022/172875
-
- 0 replies
- 153 views
-
-
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நேரடியாகப் பங்கேற்ற லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக், இந்திய இராணுவத்தின் புதிய துணைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்த இவர், 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக, இந்திய அமைதிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் பவான் இராணுவ நடவடிக்கையில் பங்கேற்றிருந்தார். அப்போது இந்திய இராணுவத்தின் 53வது காலாற்படைப்பிரிவின் கீழ் செயற்பட்ட கூர்க்கா படைப்பிரிவு ஒன்றின் கொம்பனி கட்டளை அதிகாரியாக லெப்.ஜெனரல் தல்பீர்சிங் சுகக் போரில் பங்கெடுத்திருந்தார். புலனாய்வு உள்ளிட்ட கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் நிபுணரான இவர், காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், ஆயுதப்போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைக…
-
- 0 replies
- 331 views
-