ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
இங்கிலாந்து எம்.பி.க்களால் இலங்கை எம்.பி.களுக்கு கருத்தரங்கு இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தப்படும் விசேட கருத்தரங்கு, இன்று திங்கட்கிழமை (15) ஆரம்பமாகிறது. நாடாளுமன்றத்தின் 1ஆவது செயற்குழு அறையில், மூன்று நாட்கள் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கில், கண்காணிப்புச் செயற்குழுப் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது. சட்டமூலங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும், இதன்போது விளக்கமளிக்கப்படும் என்றும் இந்த கருத்தரங்கில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. -…
-
- 0 replies
- 244 views
-
-
[ சனிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2011, 04:12.45 மு.ப GMT ] இங்கிலாந்து நாட்டின் புதிய ராணுவ அமைச்சராக பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணுவ அமைச்சராக லியாம் பாக்ஸ் பதவி வகித்து வந்தார். இவர் தன்னுடைய பதவி காலத்தில் தன் நெருங்கிய நண்பர் ஆதம் வெரைட்டிக்கு சலுகை தந்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்க ஆளானார். இதனையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து அதற்கான கடிதத்தை பிரதமர டேவிட் கமரூனிடம் வழங்கினார். பாக்ஸ் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் டேவிட் கமரூன் தங்களின் உண்மையான விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன், நீங்கள் பதவி விலகுவது வருத்தத்திற்குரியது என தெரிவித்தார். பாக்ஸ் விலகலுக்கு பின்னர் புதிய அமை…
-
- 0 replies
- 615 views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகளுக்கு ஆலோசனை வழங்க இங்கிலாந்து குழு கொழும்பு வந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய சிறிலங்காவின் இராணுவம் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்த பாதுகாப்புத் துறை அபிவிருத்தி ஆலோசனைக் குழு கொழும்பு வந்துள்ளது என்று இங்கிலாந்தில் உள்ள தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார். இக்குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது பணியைத் தொடங்கியது என்றும் மறுசீரமைப்புப் பணிக்காக பலமுறை சிறிலங்காவுக்கு வந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். தற்போதைய பயணத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளை சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது. http://www.eelampage.com/?cn=29739
-
- 0 replies
- 1.1k views
-
-
வரும் 14/ 02/ 2009 அண்று புலிகள் பயங்கரவாதிகள் எனும் தொனியிலும், போரை நிறுத்துமாறு இங்கிலாந்து வெளிநாட்டு அமைச்சர் டேவிட் மில்பானின் கோரிக்கையை கண்டித்துக்கும் சிங்களவர்கள் எல்லாம் இணைந்து இங்கிலாந்து பிரதமரின் வீட்டுக்கு முன் போராட்டம் அறிவிக்க பட்டு உள்ளது... இந்த செய்தியின் நோக்கம், ஆனான பட்ட தமிழ் மக்கள் எல்லாம் அறிவது என்ன எண்றால். பெருந்திரளாக திரண்டு தமிழர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்ததை சில சிங்களவர் சேர்ந்து தங்களது பேரினவாத குரலால் அடக்கி விடலாம் எண்று பார்க்கிறார்கள்... ஒருவேளை சிங்களவர்கள் சிலரது போராட்டமானது பிரித்தானிய அமைச்சரவைக்கு திருப்தி அளித்தாலும் அளிக்கலாம்... இந்த சின்ன கோட்டுக்குக் அருக்கில் ஒரு பெரிய கோட்டை போட வேண்டும்.... இல்லையே…
-
- 2 replies
- 1.3k views
-
-
இங்கிலாந்து புறொன்லைன் கிளப் இன் 24 ம் திகதி நடைபெறும் கலந்துரையாடலில் இலங்கை பற்றி. இத்தொடர்பை அழுத்தி உங்கள்/எங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் அவசரம் http://frontlineclub.com/events/2009/02/ne...ow-victory.html http://frontlineclub.com/events/2009/02/ne...ow-victory.html http://frontlineclub.com/events/2009/02/ne...ow-victory.html
-
- 0 replies
- 610 views
-
-
இங்கிலாந்து வரும் இலங்கை கிறிக்கெற் அணியின் பாதுகாப்புக்கு பிரிட்டன் ஏற்பாடு ஞாயிற்றுக்கிழமை, 08 மே 2011 10:23 இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வர இருக்கும் இலங்கைக் கிறிக்கெற் அணியினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரித்தானிய அரசு ஈடுபட்டு வருகின்றது. எதிர்வரும் 14 ஆம் திகதி ஒக்ஸ்பிறிச்ட் கிறிக்கெற் மைதானத்தில் இலங்கை கிறிக்கெற் அணியின் முதலாவது ஆட்டம் ஆரம்பம் ஆகின்றது. அன்றைய தினம் இலங்கைக் கிறிக்கெற் அணியினருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் மைதானத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில் இலங்கைக் கிறிக்கெற் அணியினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரித்தானிய அரசு ஈடுபட்டு வ…
-
- 1 reply
- 720 views
-
-
-
- 4 replies
- 789 views
-
-
இங்கிலாந்துக்கான சகல விஸா விண்ணப்ப கட்டணங்களையும் இணையத்தின் மூலமாகவே எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் செலுத்தவேண்டும் என்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர்களிலேயே கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது விசா அல்லது மாஸ்டர்காட் பற்று அல்லது கடனட்டைகள் ஆகியவற்றின் ஊடக செலுத்த முடியும் என்றும் அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/92596-2013-12-09-14-46-46.html
-
- 1 reply
- 403 views
-
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிட்டனில் நிரந்தரக் குடியுரிமை வைத்திருக்கின்றார். இங்கு ஏதாவது பிரச்சினை என்றால் அங்கு ஓடிவிடுவார். ஆனால் அவர்களின் குழப்பியடிக் கும் வேலைகளால் பாதிப்படையப்போவது என்னவோ, இங்குள்ள தமிழ் மக்கள் தான். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமராட்சியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலர் செல்வராஜா கஜேந்திரனின் தம்பி கடத்தப்பட்ட போது கோத்தபாய ராஜபக்சவிடம் ஓடிபோய…
-
- 0 replies
- 277 views
-
-
இங்கு ஏன் வந்தோம் வவுனியா தடுப்பு முகாம்களின் சோகக் கதை தொடர்கிறது கடிதம் கூறும் துயரம்:
-
- 1 reply
- 1.4k views
-
-
இங்கு வார்த்தைகளில் மட்டும்தான் நல்லிணக்கம்; செயலில் ஏதுமில்லை நல்லிணக்கம் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது. செயலில் எதுவும் இல்லை. நல்லிணக்கம் இதயத்திலிருந்து வரவேண்டும். இப்போதும் தமிழர்களின் உரிமைக் கோரிக்கைகளைப் பயங்கரவாதம் என்ற பெயரால் நசுக்கவே பார்க்கின்றனர். நாம் சிங்களவர்களுக்கோ பௌத்தர்களுக்கோ எதிரானவர்கள் அல்லர். ஆனால் சிங்கள மக்களே இல்லாத இடங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதையும், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதையும் நிச்சயம் எதிர்க்கின்றோம். இவ்வாறு நேற்றுப் பொரிந்து தள்ளினர் வடக்…
-
- 0 replies
- 296 views
-
-
இங்கும் இலவசங்கள் news வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து இலவசங்களை அள்ளி வீசும் படலமும் தொடங்கியுள்ளது. யாழ். மாவட்டத்தில் சமுர்த்தித் திட் டப் பயனாளிகளில் தெரிந் தெடுக்கப்பட்ட 6,000 பேருக்கு இலவச சேலை மற்றும் சாரம் என்பனவற்றை அரசு வழங்கி வருகிறது. இவை தவிர நீர் இறைக்கும் இயந்திரம், மருந்து தெளிகருவிகள், தையல் இயந்திரம், மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் என்பனவும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இலவச சேலை, சாரம் என்பன தவிர்ந்த பொருள்கள்கள் ஏற்கனவே பிரதேச செயலகங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டவை என்று அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு மக்களைத் திரட்ட…
-
- 1 reply
- 466 views
-
-
(செ.தேன்மொழி) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்கா பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மூன்று நாட்களுக்குள் நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டு கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தை கோத்தாபயவின் ஆதரவாளர்கள் கலைக்க முற்பட்டதாக குறிப்பிட்டு அவர்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். சுதந்திர சதுக்கத்தின் முன்பாக இன்று இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 100 பேர் வரை இணைந்துக் கொண்டுள்ளனர். இதன்போது இவர்கள் கோத்தாபயவின் …
-
- 0 replies
- 347 views
-
-
பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துகின்றனர் என்ற புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியமையை அடுத்து இலங்கையில் அகதிகளாகப் பதிந்துவிட்டு இங்கு தரித்திருக்கும் சுமார் ஆயிரத்து 475 பாகிஸ்தானியர்களைச் சுற்றி வளைத்து மடக்கும் நடவடிக்கை ஒன்றை இலங்கை குற்றவியல் புலனாய்வுப் பொலிஸாரின் (சி.ஐ.டியினரின்) உதவியுடன் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த வியாழனன்று சத்தம் சந்தடியின்றி ஆரம்பித்திருக்கின்றனர். இந்த நடவடிக்கையின் கீழ் குறிப்பிடப்படாத எண்ணிக்கை பாகிஸ்தானியர்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தில் பதிந்துவிட்டு இங்கு தங்கியிருக்கும் 1,475 பாகிஸ்தானியர்களை வளைத்துக…
-
- 0 replies
- 544 views
-
-
இங்குள்ள குழந்தைகள் தாலாட்டுப் பாடல்களைக் கேட்கவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் இறந்து கொண்டிருப்பவர்களின் மரண ஓலத்தைத் தான்: இலங்கை அரசாங்கம் அதனைப் பாதுகாப்பு வலயம் என்று கூறலாம். ஆனால் அங்கு பாதுகாப்பில்லை. எந்தக் கவனிப்பும் இல்லாத பிரதேசம் அது. உணவும் கூட எதுவும் இல்லை. கடந்த மாத ஆரம்பத்தில் 24 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் காயமுற்றிருந்தார். 12 நாட்களின் பின்னர் மார்ச் 14ஆம் திகதி தற்காலிக இடத்தில் இயங்கி வரும் ஒரேயொரு வைத்தியசாலையில் அவர் ஒரு குழந்தையைப் பிரசவித்தார். குழந்தையின் தொடையில் ஒரு சிறிய ஷெல்துண்டு இருப்பதை மருத்துவப் பணியாளர்கள் அவதானித்தனர். பிறந்த அந்தக் குழந்தை பால்குடிப்பதற்கு முன்பதாகவே சத்திரசிகிச்சைக்கு…
-
- 0 replies
- 669 views
-
-
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்…! எதிர்காலம் இதைச் சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டுகோள்! தமிழினத்தின் தன்மானத்திற்குச் சாவாலாகத் – தமிழ்த்திரைப்படத் துறையினரின் வேண்டுகோள் புறக்கணித்து, ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்துக் கொடூரமான இனஅழிப்பினை முனைப்போடு செய்து முடித்த கொலைகாரன் ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா அரசிற்கு சர்வதேசத்தின் முன் நற்சான்றிதழ் வாங்கிக் கொடுப்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து மகிழ்வு கொண்டாடிய ஸ்ரீலங்கா இராணுவத்தினரைக் கு~pப்படுத்தவும், தமிழின அழிப்புக்கானசாட்சியங்களை மூடிமறைத்து….. உலக அரங்கில் ஸ்ரீலங்கா அரசின் அனைத்துக்குற்றங்களையும் மூடிமறைக்கவும், உலகின் பல நாடுகள் போட்டிபோட்டு தங்கள் நா…
-
- 0 replies
- 1.8k views
-
-
இங்கே தமிழருக்கு எதிரான செயல்கள் நிறுத்தப்பட்டால் அங்கே தானாகவே நிறுத்தப்படும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்களும், பிரபல இந்திய நடிகர் ஷாருக் கான் மீது கொழும்பில் வெடிகுண்டு வீசியவர்களும், இலங்கை வந்த அமெரிக்க-பிரித்தானிய-பிரான்சிய அமைச்சர்களுக்கு எதிராக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களும், இன்று தமிழகத்தில் இலங்கை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை விமர்சிப்பது நல்ல வேடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெர…
-
- 1 reply
- 835 views
-
-
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்களும், பிரபல இந்திய நடிகர் ஷாருக் கான் மீது கொழும்பில் வெடிகுண்டு வீசியவர்களும், இலங்கை வந்த அமெரிக்க-பிரித்தானிய-பிரான்சிய அமைச்சர்களுக்கு எதிராக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களும், இன்று தமிழகத்தில் இலங்கை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களை விமர்சிப்பது நல்ல வேடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இலங்கை அமைச்சர்களுக்கு, இந்திய-தமிழக அரசுகள் பாது…
-
- 0 replies
- 646 views
-
-
Aljazeera interview with Mahinda. இங்கே யாரு முட்டாள்? மகிந்தவா?.. இல்லை நாங்களா?
-
- 11 replies
- 2.2k views
-
-
இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற இருவர் விபத்தில் பலி ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையிலுள்ள சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் சனிக்கிழமை (22) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில், இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு காளிகோயில் வீதியைச் சேர்ந்த வி. ரதிதன் (வயது 17) மற்றும் கே. விதுஷன் ஆகியோரே இதன் போது பலியாகியுள்ளனர். மட்டக்களப்பில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பதற்காக, ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து…
-
- 0 replies
- 206 views
-
-
இசைஞானி இளையராஜா இலங்கைக்கு வருகை. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை (27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று (24) இலங்கைக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜாவை இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரபா வரவேற்றார். https://www.virakesari.lk/article/174759
-
-
- 6 replies
- 1.4k views
-
-
இசைத்துறையில் யாழ் இளைஞனுக்கு விருது! இலங்கையின் தேசிய ரீதியிலான அரச இசை விருது வழங்கும் விழா கடந்த 21 ஆம் திகதி மாலை நெளும்பொக்குண மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டிய பலருக்கு விருதுகள் வழங்கப்படடன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறந்த இசையமைப்பாளர் – கிராமிய இசை (நவீன வடிவம்) விருது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பிராஜா பிரியனுக்கு வழங்கப்பட்டது. குறித்த விருதினை இலங்கை கலாச்சார அமைச்சர் எஸ்.பி நாவின்ன வழங்கினார். அத்துடன் இவர் சார்ந்த குழுவினரின் 7 படைப்புக்கள் விருதுக்…
-
- 1 reply
- 544 views
-
-
இசைப் பிரியாவைக் கொன்று விடுமாறு உத்தரவிட்ட இராணுவ உயரதிகாரி யார்? ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 04:21 தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியில் பணி புரிந்த இசைப் பிரியாவை இராணுவத்தின் 53 ஆவது படைப் பிரிவுதான் கொன்றது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாகவே நாம் இந்தக் கொலையுடன்; தெடர்பட்ட 53 ஆவது படைப் பிரிவின் மீது குற்றஞ் சாட்டியிருந்தோம். ஆனால், இராணுவ பதவி நிலையை ஆராய்ந்து, கிரிமினல் குற்றத்துக்கு இராணுவத்தினர்;தான் பொறுப்பா என்பது போன்ற தகவல்களைக் குற்ற விசாரணையில் தான் வெளிக் கொண்டுவர முடியும். ஏன மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்ட இயக்குனர் ஜிம் ராஸ் பி.பி.ஸிக்குத் தெரிவித்துள்ளார். இசைப் ப…
-
- 2 replies
- 1.7k views
-
-
http://pagetamil.com/?p=2427 தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராயிருந்த இசைப்பிரியா உயிருடன் இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இசைப்பிரியாவின் இறந்த உடல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின அதனைத் தொடர்ந்து அவரை உயிருடன் பிடித்துச் செல்லும் வீடியோக்காட்சிகளும் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஆளும் தரப்பினர் யுத்த வெற்றியின் நினைவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மே 18 அன்று இப்புதிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத் தக்கது. Share.
-
- 1 reply
- 1.6k views
-
-
இசைப்பிரியா உள்ளிட்ட அனைத்து மாவீரர்களிற்கும் கரவெட்டி பிரதேசசபை அஞ்சலி:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா உள்ளிட்ட அனைத்து மாவீரர்களிற்கும் கரவெட்டி பிரதேசசபை அஞ்சலியை செலுத்தி மாவீரர் தினத்தை அனுஸ்டித்திருக்கிறது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கரவெட்டிப்பிரதேச சபையில் பிரதேசச பை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் சகிதம் இன்று மாவீரர்களிற்கு மலரஞ்சலி செலுத்தியும் சுடரேற்றியும் மௌன வணக்கம் செலுத்தியும் அஞ்சலிக்கப்பட்டுள்ளது. வட-கிழக்கெங்;கும் மாவீரர் தினத்தை முன்னிட்டு கண்களுள் எண்ணெய் விட்டவாறு இராணுவமும் அதன் புலனாய்வுத்துறையும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் தமிழ் தரப்புக்களோ கிடைக்கின்ற சந்தர்ப்…
-
- 0 replies
- 441 views
-