ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸாரின் பாதுகாப்பு தவிர்ந்த அனைத்து ஆயுதப்படைகளின் பாதுகாப்பும் எதிர்வரும் வாரத்தில் இருந்து நீக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) இன்று (17.12.2024) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டின் பின்னர் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 1200 மில்லியன் ரூபா மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கென ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகளும் நீக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது நடைமுறைப்படுத…
-
- 2 replies
- 321 views
-
-
இடைநிறுத்தப்பட்ட இலங்கைக்கான செயற்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் JICA ! நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) அனைத்து செயற்றிட்டங்களையும் மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் நாயகத்தை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நிறைவு பெற்றதன் பின்னர், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் செயற்றிட்டங்களை விரைவாக ஆரம்பிக்கவுள்ளதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார். நிதி நெருக்கட…
-
- 1 reply
- 476 views
- 1 follower
-
-
கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் (ODA) கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ தெரிவித்தார். இலங்கை வருகை தந்துள்ள வீடமைப்பு, நிர்மாண மற்றும் நகர்ப்புறத் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜப்பானிய உயர்மட்டக் குழு நேற்று(18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தது. இலங்கையில் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் ஜப்பானினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது மற்றும் இலங்கையில் புதிய மு…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
இடைநிறுத்தப்பட்ட நிதி உதவிகளை பெற வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக ஜனவரி மாதம் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். ”அனைத்துலக நாணய நிதியம், அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம், மற்றும் ஜப்பானின் அனைத்துலக ஒத்துழைப்பு முகவரகம் ஆகியவற்றுடனேயே பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. அனைத்துலக நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் ரூபா கடனின், ஆறாவது தவணைக் கொடுப்பனவான, 250 மில்லியன் டொலரை இடைநிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம் 480 மில்லியன் டொலர் உதவியை நிறுத்தி வைத்துள…
-
- 0 replies
- 403 views
-
-
பொது எதிரணி கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் நடைபெறும். வண. சோபித தேரர், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உட்பட கையெழுத்திடும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, இந்நிகழ்வை நடத்த விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்ற நிலைமையில், தற்போது விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் இந்நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. சோபித தேரர் தலைமையிலான …
-
- 0 replies
- 276 views
-
-
இடையூறுகளை விளைவித்தால் எதிர்காலத்தில் கவலையடைய நேரிடும் Published by MD.Lucias on 2016-12-07 21:58:30 (ஆர்.ராம், எம்.எம்.மின்காஜ்) புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில் எந்தவொரு விடயங்களும் இறுதிசெய்யப்படவில்லை. அனைத்தும் பேச்சுமட்டத்திலும் யோசனைகள் முன்மொழியப்பட்ட நிலையிலுமே காணப்படுகின்றன என சபையில் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெறுவதற்கு இடையூறுகளை விளைவித்தால் எதிர்காலத்தில் கவலையடைய நேரிடும் எனவும் எச்சரித்தார். தேசிய பாதுகாப்பை, இராணுவத்தை பலவீனப்படுத்தும் வகையில் எந்தவொரு முடிவுகளும் எடுக்கப்படாது என உறுதிபடத் தெரிவித்த ஜனாதிபதி எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயங்க…
-
- 1 reply
- 353 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியை நான்கு புறங்களிலும் சுற்றிவளைத்துள்ள சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் சிறிய பகுதி மீது இடைவிடாது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பொழிந்து கொண்டிருப்பதாக இன்று காலை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இடைவிடாத குண்டு மழையினாலும், தொடர்ச்சியாக உணவோ குடிதண்ணீரோ இல்லாமல் பதுங்குகுழிகளுக்குள் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இருப்பதாலும் பெருமளவு தமிழர்கள் உயிரிழக்கும் நிலையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனைவிட நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், உடல் உறுப்புக்களை இழந்து மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் இரத்தம் பெருகிய நிலையில் உயிருக்காகப் போரா…
-
- 0 replies
- 581 views
-
-
இடைவெளிக்குப் பின் ஒரே மேடையில் சம்பந்தன், சி.வி (ஆர்.ராம்) நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை நடைபெறும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய 'நீதியரசர் பேசுகிறார்' என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலேயே இருவரும் கலந்துகொள்ளவுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளமையினால் இந் நிகழ்வு தமிழரசுக் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த…
-
- 0 replies
- 372 views
-
-
பீகார் ஒபரா தொகுதியை சேர்ந்த சுயட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங், வயது 38,முன்னால் காவல் துறை அதிகாரி, லஞ்ச ஒழிப்பு தான் இவரது குறிக்கோள். ராஜபக்சே வருகையை கண்டித்து தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின் , அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் , தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடி கொண்டு இருந்த தமிழர்களின் மீது இறுதி கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. தமிழர்களின் உரிமைகளை கொடுபதற்கு பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 150,000 தமிழர்களின் உயிர்கள். தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிகோளோடு செயல் பட்டு கொண்டு இருக்கும் ராஜபக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொட…
-
- 5 replies
- 614 views
-
-
இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியைப் போன்றதே சர்வதேசம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுகளை தென்னிலங்கையுடனான தேசிய நல்லிணக்கத்திற்கூடாகவே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், சர்வதேசம் என்பது இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியாக பயன்டுத்திக் கொள்ள முடியுமே தவிர முழுமையாக நம்பி இருக்க முடியாது எனவும் தெரிவித்தார். கரம்பன் கிழக்கு ஸ்ரீ ஞான வைரவர் சனசமூக நிலைய முன்றலில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின் ஊடாகவும், பூகோள அரசியல் நகர்வுகளை பயன்டுத்தியும் தமிழ் மக்களின் பிரச்…
-
- 3 replies
- 586 views
-
-
அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்காகவரும் தமிழர் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜபக்சாஅரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா அரசின் ஆதரவைப் பெறுவதிலேயே முக்கிய விடையமாக கருதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமாவுகான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. . பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும், மானபங்கப்படுத்தபட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னரும், வரும் உங்கள் வருகை அந்த கொலைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் நீதி கோருவதாக அமைய வேண்டும் என்றும், இந்த அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது. . அமெரிக்கா அரசிடம் நீங்கள் பேசும் போது தமிழர்கள் அனுபவித்த துயரத்தை தெழிவாக எடுத்துக்கூற வேண்டும். அமெரிக்காவில் தீவிர…
-
- 5 replies
- 804 views
-
-
உட்கட்சி ஜனநாயகம் தமிழ்த் தேசியத்தில் வேண்டும் என கட்சிக்குள் சிலர் போராடி வந்துள்ளோம். அதனை மத்திய குழுவிடமும் பலமுறை பேசியிருக்கிறோம் என இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் சிவகரன் அவர்கள் கூறியுள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் வழங்கிய கருத்துக்களையும் ஊடகவியலாளர் கேள்விகளுக்க வழங்கும் பதில்களையும் இங்கே கேட்கலாம். https://soundcloud.com/pathivucom/mrnsivaharan-press-meet-03012015mp3 http://www.pathivu.com/news/36571/57//d,article_full.aspx
-
- 0 replies
- 334 views
-
-
இணக்க முயற்சியை குலைக்கவே வடக்கில் வன்முறை கட்டவிழ்ப்பு “அரசால் கட்டியெழுப்பட்டுவரும் நல்லிணக்கத்தையும் அதற்கான முயற்சிகளையும் சீர்குலைக்கவே வடக்கில் ஆவா குழு மூலம் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன’’ என்று அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. கூட்டு அரசின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை அரச தகவல் திணைக் களத்தில் நடைபெற்றது. அமைச்சரவை இணைப் பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர கேள்விகளுக்குப் பதிலளித்தார். வடக்கில் அதிகரித் துள்ள பொலிஸார் மீதான தாக்குதல்கள் தொடர்பில்…
-
- 0 replies
- 245 views
-
-
இணக்கச் சபைகள் நிறுவப்படும்- நீதி அமைச்சு வடக்கின் சகல மாவட்டங்களிலும் இணக்கச் சபைகள் நிறுவப்படும் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இணக்கச் சபைகள் நிறுவப்பட உள்ளதாகத் நீதி அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே மொத்தமாக 14 இணக்கச் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது யாழ்ப்பானம் தவிர்ந்த ஏனைய வடக்கு மாவட்டங்களில் முதல் தடவையாக இணக்கச் சபைகள் நிறுவப்பட உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. இணக்கச் சபைகளில் இணைய விரும்புவோர் பிரதேச செயலகத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://meenakam.com/2010/09/22/%E0%AE%87%E0%AE%A3%E…
-
- 0 replies
- 453 views
-
-
இணக்கப்பாடின்றி... நிறைவடைந்த, பிரதமர் உடனான சந்திப்பு – ஜனாதிபதியை சந்திக்கும் பங்காளிக்கட்சிகள்! கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் பேச்சு நடத்துவதற்கு ஆளும் கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அத்துடன் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் உரிமம் இலங்கை வசமே இருக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக்கட்சிகள் முடிவெடுத்திருந்தன. இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற…
-
- 1 reply
- 215 views
-
-
இணக்கப்பாடு இல்லாவிடின் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டில் சுமுகமான இணப்பாடு ஏற்படாவிடின், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் முடிவு செய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடத்தப்பட்ட ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்களில், இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ முடிவெடுத்தது. புளொட்டும் அதிருப்தி நிலையில் இருக்கின்ற போதிலும், வெளிப்படையாக எந்தக் கருத்துக்களையும் வெளியிடாமல் அமைதியாக இருந்து வருகிறது. அதேவேளை, கூட்டமைப்பின் பங்காளிக…
-
- 0 replies
- 317 views
-
-
இணக்கப்பாடுகளுடன் முடிவடைந்த டில்லி மீனவர் பேச்சுவார்த்தை: படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் மறுப்பு : இழுவைப் படகை தடை செய்வதை ஏற்றுக்கொண்டுள்ளது இந்தியா இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையில் இணக்கப்பாடுகளுக்கு சாதகமாக டில்லி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. இதற்கு இருதரப்பு பிரதிநிதித்துவம் கொண்ட கூட்டுச் சபை ஊடாக அடுத்தக்கட்ட தீர்வுக்கு இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இந்தியா இழுவை படகை தடை செய்வதை ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள இருநாட்டு மீனவர்களை விடுவிக்கவும் மீனவ படகுகளை விடுவிக்காமல் இருக்கவும் இருதரப்பிலும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. சர்வதேச க…
-
- 1 reply
- 185 views
-
-
இலங்கையின் அனைத்து மக்களும் ஆவலாகவுள்ள, ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வை காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர இணக்கப்பாடுகளை அமுல்படுத்தும்படியும் இதற்கு புதிய இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்களின் பெயர்பட்டியலை முன்வைக்குமாறு அரசாங்கத் தூதுக்குழுவினர் நேற்று கோரியதால், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மு…
-
- 0 replies
- 388 views
-
-
இணக்கப்பாட்டின்றி முடிந்தது ஐதேமு பங்காளிகளின் கூட்டம் புதிய கூட்டணியை அறிவிப்பது மற்றும் அதிபர் வேட்பாளரைத் தெரிவு செய்வது ஆகிய விடயங்கள் தொடர்பாக ஆராய, நேற்று நடந்த ஐதேமு பங்காளிக் கட்சிகளின் கூட்டம், முடிவு ஏதும் எடுக்கப்படாமல் முடிவடைந்துள்ளது. தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்குவதற்கான யாப்பு விடயத்தில் பங்காளிக் கட்சிகளுக்குள் இணக்கப்பாடு ஏற்படவில்லை. இதனால், இந்தக் கூட்டணியை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றுக்காலை 9 மணியளவில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தினர். சுமார் 3 மணிநேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், ஜனநாயக தேசிய முன்னணியில் போட்டியிட பங்காளிக்…
-
- 0 replies
- 267 views
-
-
இணக்கப்பாட்டு அரசியலும் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களும்‐ ஆனந்தத் தாண்டவன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேற்றைய பிபிஸி நேர்காணலைக் கேட்ட போது கவுண்டமணியினுடையதும் செந்திலதும் வாழைப்பழ நகைச்சுவை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழ் திரைப்பட கதாசிரியர்கள் யாராவது நேற்றைய பிபிஸியைக் கேட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அதிலிருந்து உருவி எடுத்திருப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கப்பூரின் நாளிதழான ஸ்ரெய்ட் ஸ்ரெய்ட் ரைம்ஸ் நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலை அடியொற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பி.பி.ஸிசெய்தியாளர் எழுப்பிய கேள்விகளும் அவற்றுக்கு அமைச்சர் அளித்த பதில்களுமே அந்த வாழைப்பழ நகைச்சுவையை ஞாபகத்தி…
-
- 0 replies
- 505 views
-
-
(எம்.மனோசித்ரா) ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்களின் பின்னர் எவ்வித இணக்கப்பாடுகளும இன்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேல் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் பொதுத் தேர்தல் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள், சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம் என்பன தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. புதிய கூட்டணிக்கான…
-
- 0 replies
- 991 views
-
-
இலங்கையில் அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவுக்கும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் இந்தக் கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. இந்த வேண்டுகோளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால தரப்பிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என, மஹிந்த ராஜபக்ஷவுடன் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் குமார வெல்கம செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அ…
-
- 0 replies
- 420 views
-
-
இணக்கம் காணப்பட்ட தொகுதிகளில் இணைந்தும் ஏனையவற்றில் தனித்தும் போட்டி தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானம் (நமது நிருபர்) உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கம் காணப்பட்ட தொகுதிகளில் அக்கட்சியுடன் இணைந்தும் இணக்கம் காணப்படாத இடங்களில் தனித்தும் போட்டியிடுவது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அமைச்சரும் தலைவருமான மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஒன்றுகூடி உள்ளூராட்சி தேர்தல் தொடபில் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தினர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கம் காணப்பட்ட இடங்…
-
- 0 replies
- 400 views
-
-
இணங்கி வராவிட்டால் ஐ.நாவில் இலங்கையை கைவிடும் இந்தியா: நெருக்கடிக்குள் கொழும்பு [Monday, 2011-04-25 03:42:59] தமிழர்களுடனான பிரச்சினைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணுதல் மற்றும் சீனாவுடனான உறவு ஆகிய விவகாரங்களில் தமது போக்குக்குக் கொழும்பு இணங்கி வராவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் போர்க் குற்ற அறிக்கை விவகாரத்தில் உதவமுடியாத நிலையை இலங்கையைக் கைவிடும் நிலையை புதுடில்லி எடுக்கும் என்ற எச்சரிக்கை கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து உயர் மட்டக் குழு புதுடில்லி வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது. போர்க் காலத்தில் இந்திய…
-
- 1 reply
- 573 views
-
-
http://news.lankasri.com/view.php?22GpXbc3BI34eM29303jQgdd3Qjl20X922e4cLLcb3pG02
-
- 1 reply
- 716 views
- 1 follower
-