ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142710 topics in this forum
-
சிறிலங்காவில் யுத்தம் நிறைவடைந்துள்ள போதும், இன்னும் சமாதானம் ஏற்படவில்லை என்ற கனடாவின் எதிர்கட்சியான லிபரல் கட்சி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜஸ்ரின் ரியுடோ அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனைக் கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. பலர் இன்னும் அகதி முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இறுதி யுத்ததின் போது காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பல தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காக, கனடாவின் லிபரல் கட்சி நியாயம் கிடைப்பதற்காக தொடர்ந்து வலியுறுத்தும் என்று அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார். இறுதியு…
-
- 4 replies
- 560 views
-
-
சர்வதேசத்தை திசைதிருப்ப போராளிகளின் விடுதலையை பயன்படுத்துகிறது கொழும்பு! - இராஜதந்திர வட்டாரம் தகவல் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் விடுதலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முனைவதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த 1,800 விடுதலைப் புலிகளின் போராளிகளை சிறிலங்கா அரசாங்கம் நேற்று (30.09.11) விடுதலை செய்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ வாசல்தலமான அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்கள் முன்னிலைய…
-
- 0 replies
- 673 views
-
-
யாழ்ப்பாண நகரில ஆர்ப்பாட்டங்களை நடத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவித்துள்ளது. காவற்துறையினரின் விண்ணப்பத்துக்கு இணங்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, காவற்துறை தலைமையகம் தெரிவத்துள்ளது. இதன்படி வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி இயக்கம் - மானிப்பாய் மற்றும் ராஜினி தலைமையிலான பெண்கள் இயக்கம் - கொக்குவில் ஆகிய தரப்புக்கு இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் கவச வாகனத்தில் அதிரடிப்படை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எ…
-
- 15 replies
- 892 views
-
-
கொழும்பு மக்களை வன்னியில் குடியேற்றுவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் காணப்படும் 90000 வீடுகளை உடைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், வாக்காளர்கள் அரசாங்கத்திற்கு நல்ல பாடகம் புகட்ட வேண்டுமென இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமாயின் இந்தத் தேர்தலில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குஆதரவாக்க வாக்களிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
என் தலைமீது நானே நெருப்பை அள்ளி போட்டுவிட்டேன்! - கூட்டமைப்பை விட்டு ஓடிய பியசேன எம்.பி புலம்பல். [Thursday 2015-05-28 19:00] மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டு கடந்த காலத்தில் பிழையான வழியில் சென்று விட்டேன். அதனால் நான் துடித்துக் கொண்டிருக்கின்றேன். என் தலைமீது நானே நெருப்பை அள்ளி போட்டுவிட்டேன் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. எச்.பியசேன தெரிவித்தார். அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ உள்ளிட்ட திறமை சித்திகளை பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில், தேவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார தொடக்கத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதுவரையில் பெறப்பட்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவில் பாதி உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவித்தொகை 17,000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது. அதில் 11,800 ரூபா உடனடியாக வழங்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/291253
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
மகிந்தவுக்கு சவால் விடுத்தார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க JUN 03, 2015 | 2:01by கி.தவசீலன்in செய்திகள் பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதம் பந்துல குணவர்த்தன விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமான, முன்னைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை குறித்து விவாத்த்துக்கு வருமாறு மகிந்த ராஜபக்சவிடம் சவால் விடுத்துள்ளார். சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதிக்க வருமாறு கொள்கை திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷா டி சில்வாவிடம், பந்துல குணவர்த்தன சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஹர்ஷா டி சில்வா ஏற்றுக் கொண்டுள்ளார். அதேவேளை, நாட்டைப் பொ…
-
- 0 replies
- 2.1k views
-
-
பிரதமர் நாளை யாழ் செல்கின்றார் February 13, 2019 பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். நாளை யாழ்ப்பாணம் செல்லும் பிரதமர் எதிர்வரும் சனிக்கிழமை வரை வடக்கில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். இந்தநிலையில் நாளைய தினம் வலிகாமம், கோப்பாய், யாழ்ப்பாணம், மயிலிட்டி மற்றும் காங்கேசன் துறை போன்ற பிரதேசங்களுக்கு செல்லவுள்ள பிரதமர் வலிகாமம் கிழக்குப் பகுதிக்கான பிரதேச செயலாளர் அலுவலகத்தின் திறப்புவிழா, யாழ்பாண மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ள மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெறும் கலந்துரையாடலில…
-
- 2 replies
- 461 views
-
-
பட மூலாதாரம்,FB/HARINI FERNANDO கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 27 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இந்தியாவில் அண்மையில் தெரிவித்த கருத்து தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம், செய்தியாளர் சந்திப்புகள், அரசியல் மேடைகள் என பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு, போராட்டங்களும் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். இந்தியாவின் ஹரின் என்ன சொன்னார்…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கையில் பெண்களை இலக்கு வைத்து பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்வது முதல் காதலித்து திருமணம் செய்வது வரை மிகவும் நுட்பமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. வன்புணர்வுப் படுகொலை மற்றும் இனக்கலப்பு திருணம் என்ற இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நோக்கத்திற்காகவே மேற் கொள்ளப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில்தான் வடக்கில் இன்று தீவிரமாக இடம்பெறும் பாலியல் வன் புணர்வுகளையும் துஷ் பிரயோகங்களையும் அணுக வேண்டும். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் எதிர…
-
- 1 reply
- 783 views
-
-
பொதுநலவாய அமைப்பில் மனிதவுரிமைகள் ஆணையாளர் பதவி: சிறிலங்காவுடன் இணைந்து இந்தியாவும் எதிர்ப்பு! பொதுநலவாய அமைப்பின் பதினொரு உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு மற்றும் மனிதவுரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவது குறித்த ஆலோசனைக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாக The Times of India எனும் ஊடகம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு ஸ்பெயினில் இடம்பெற்ற பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் இத்தகையதொரு பதவியை உருவாக்குவது தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமரின் தலைமையில் கானா, ஜமைக்கா, பாகிஸ்தான், உகண்டா, அவுஸ்திரேலியா, மொசாம்பிக், பிரித்தானியா, கயானா, கனடா, கரிபாதி ஆகிய பதினொரு உறுப்பு நாடுகளின் நிபுணர்கள் குழுவால் முன்வைக்கப்பட்டிருந…
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகார பணியக அமைச்சர் அகமட் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “நிலையான நல்லிணக்கத்தை எட்டுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா முழுமையான நிறைவேற்ற பிரித்தானியா ஊக்குவிக்கிறது. மேலதிக காணிகளை விடுவிப்பதற்கு எடுத்துள்ள முடிவையும், இழப்பீடு வழங்கும் செயலகத்தை உருவாக்கும் முடிவையும் பிரித்தானியா பாராட…
-
- 0 replies
- 253 views
-
-
இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்! அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700 Bombardier உளவு விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். குறித்த அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் இரத்மலானை விமான நிலையத்தில் விசேட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் வகையிலும் கடல் எல்லையை கண்காணிப்பது தொடர்பிலும் இதன்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373413
-
-
- 10 replies
- 1.2k views
-
-
திருமலையில் தந்தை செல்வாவுக்குப் புதிய சிலை Monday, October 31, 2011, 23:36 திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டதனையடுத்து, அதனை முழுமையாக அங்கிருந்து அகற்றிவிட்டு அன்னாரது புதிய சிலை ஒன்று அதே இடத்தில் நிறுவப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரத்தின சிங்கம் தெரிவித்தார்.இதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.நேற்றிரவு சில விஷமிகள் திட்டமிட்டே இந்தச் சிலையை சேதப்படுத்தியுள்ளனர் என்று கூறிய அவர், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தாம் அறிவித்துள்ளதாகவும் கூறினார் http://www.tamilthai.com/?p=29254
-
- 3 replies
- 721 views
-
-
சர்வமத பேரவையிலிருந்து இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவிப்பு! மன்னார் மாவட்ட சர்வமத பேரவையிலிருந்து மன்னார் மாவட்ட இந்து குருமார்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் இதனை அறிவித்துள்ளார். திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வீதியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவின் புனரமைப்பு வேலைகளுக்குச் சிலர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடையூறு விளைவித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தொ…
-
- 0 replies
- 234 views
-
-
சந்திரகாந்தனின்(பிள்ளையான்) ஈஸ்டர் படுகொலை நூல் வெளியிட்டு விழா! Vhg மார்ச் 25, 2024 கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா (23-03-2024) ஆம் திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது. மங்கல விளக்கேற்றப்பட்டு சர்வமத தலைவர்களின் ஆசியுரை, அழகிய வரவேற்பு நடனம் என்பவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து, நூலாசிரியரினால் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலின் முதல் பிரதிகள் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளிற்கு வழங்கி வைத்ததைத் தொடர்ந்து, சர்வமத தலைவர்களுக்கும் நூலின் பிரத…
-
- 2 replies
- 1.4k views
-
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் மாநாட்டில், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க,நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். குறித்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம். https://athavannews.com/2024/1376603
-
-
- 54 replies
- 4.4k views
- 1 follower
-
-
புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற அடிப்படையிலான முன்னேற்றத்துக்கு காரணம் சமூக உறவுகளும் ஒற்றுமையுமே - ஜனாதிபதி 10 APR, 2024 | 05:09 PM புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிப்பதாவது : புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும். புதிய வர…
-
-
- 5 replies
- 677 views
- 1 follower
-
-
போர்க்குற்ற விசாரணை: படையினரை பலிக்கடாவாக்கும் ராஜபக்ச சகோதரர்களின் இரகசிய திட்டம்! சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசின் படுகொலையுடன் தொடர்புடையவர்களையும் இனங்காணுமாறு பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு ஆலோசகர் கபில ஹெந்தவிதாரணவும் அவருடைய சிறப்பு பிரிவும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவினால் பணிக்கப்பட்டுள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவையும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவையும் போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, மேஜர் தரத்திலான மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான இராணுவத்தி…
-
- 9 replies
- 1.2k views
-
-
இலங்கையின் தற்போதைய நிகழ்வுகளை ஒரு "யுத்தமாக" கருதி விவாதிக்காத வரை தற்போதைய நிலைமைகள் முடிவுக்கு வராது. அதுவரை யுத்த கால சட்டங்கள் அனைத்தும் மேசை மீதுதான் இருக்கும் என்று அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரேன் பார்க்கர் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவும் – பிரதி தூதுவர் சிறிலங்காவில் ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு உதவுவதில், அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் நடந்த ஆட்கடத்தல் தொடர்பான தரவுகளைத் திரட்டுவது தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘சிறிலங்காவில் ஆட்கடத்தல்களைத் தடுப்பதற்காக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 3.5 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. ஆட்கடத்தல் சம்பவங்களுக்கான தண்டனை பெற்றுக் கொடுப்பது, நீதி விசாரணையைப் பலப்படுத்துவது, ஆட்கடத்தல் பற்றிய தகவல்களைத் திரட்டுவது, ஆட்கடத…
-
- 0 replies
- 261 views
-
-
30 APR, 2024 | 09:48 AM யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையிலான கால பகுதியில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள், காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாகாண காணி ஆணையாளர் அம்பலவாணர் சோதிநாதன் தெரிவித்துள்ளார். மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் 05 வீதத்திற்கும் உட்பட்டதாகவே அரச காணிகள் காணபப்டுகின்றன. சாவகச்சேரி, மருதங்கேணி, கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரச காணிகள் உள்ளன. யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் காணிகள் விஸ்தீரணம் கொண்டதாக இல்லை என தெரிவித்தார். அதேவேளை முதலீட்டு நடவடிக…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
“கடற்படை , இராணுவத்தின் தேவைகளுக்காக யாழில் காணிகளை சுவீகரிக்கத் திட்டம்” யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் கடற்படை மற்றும் இராணுவத்தின் தேவைகளுக்காக மட்டும் தற்போது 43 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அக் காணிகளை அளவீடு செய்து சுவீகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது. இதன்போது , இவ்வாறு அரசாங்கம் காணிகளை அளவீடு செய்வதனை தாங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் காணிகளை அளவீடு செய்வதற்கான அனுமதிகளை ஒருங்கிணைப்புக்குழு வழங்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில் கணிகளை வழங்குவதில்லை எனவும் மேற்கூறிய 43 இடங்கள் தொ…
-
- 0 replies
- 389 views
-
-
அனைத்து குடிமக்களினதும் விபரங்களை திரட்டுகிறது சிறிலங்கா இராணுவம் Monday, December 12, 2011, 4:18 சிறிலங்காவில் உள்ள அனைத்து குடிமக்களினதும் விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்றை சிறிலங்கா இராணுவம் மேற்கொள்ளவுள்ளது. புவிசார் குடிமக்கள் தகவல் முறைமைத் திட்டம் என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் 2.5 மில்லியன் ரூபா செலவில் இந்த தகவல்களை திரட்டவுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான நிலையமும் சிறிலங்கா இராணுவமும் இணைந்து இந்த தகவல் திரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளன. தென்கிழக்காசியாவிலேயே சிறிலங்காவில் தான் இது முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிறிலங்காவில் வாழும் அனைத்துக் குடிமக்கள் பற்றிய தகவல்களையும் …
-
- 0 replies
- 376 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் 50 கிலோ கிராம் எடையுடைய குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் இந்த குண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய பகுதியில் விவசாய அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் வாய்க்கால் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்த போது இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு கட்டுநாயக்க விமான நியைலத்தை தாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளினால் அனுப்பி வைக்கப்பட்ட விமானத்திலிருந்து இந்த குண்டு விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த குண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. http://globaltamiln…
-
- 19 replies
- 798 views
-