ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
சங்கு சின்னம் என்பது எனக்கு எழுதித் தரப்பட்ட சின்னமல்ல. அது ஒரு சுயேட்சியின் சின்னமாகும். இலங்கை அரசியல் யாப்பில் தேர்தல் சட்டத்தின்படி, சுயேட்சை குழுவில் யாரும் போட்டியிடலாம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட்டவருமான பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசனுக்காக மட்டக்களப்பு மாவட்டம் பாட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி நகர்ப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) தேர்தல் பரப்புகளை மேற்கொண்டிருந்தனர். இதில் அரியநேத்திரனும் கலந்துகொண்டா…
-
-
- 5 replies
- 718 views
-
-
திருக்கோணமலை நகரின் அடையாளமாகவும், உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளை கவருகின்ற மற்றும் அழகு சேர்க்கும் வகையிலும் காணப்படும் மான்களைப் பாதுகாப்பதற்காக திருகோணமலை நகரசபையும், ரொட்றிக் கழகமும் இணைந்து மான்களுக்கு தண்ணீர் தாங்கியுடன் கூடிய கொட்டில் ஒன்று அமைக்கப்பட்டது. எனினும் மான்கள் தற்போது நகரின் பல பகுதிகளிலும் தனித்து நிற்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளதுடன். அவற்றுக்குப் போதிய பாதுகாப்பில்லை. மான்களின் குட்டிகளை அவ்விடத்திலுள்ள நாய்கள் வேட்டையாடி உண்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலமை நீடிக்குமாயின் திருகோணமலை நகரிலுள்ள மானினம் அருகிவிடும். எனவே இதனை பாதுகாக்கும் பொருட்டு மான்…
-
- 0 replies
- 397 views
-
-
காலி முகத்திடல் தொடர்பில் விசேட தீர்மானம்! காலி முகத்திடலை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கீழுள்ள இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள காலிமுகத்திடல் மைதானத்தை மதம் சார்ந்த நோக்கங்கள் தவிர, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கக் கூடாது என 17-04-2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டது. காலி முகத்திடல் மைதானத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கு மாதாந்தம் சுமார் 2.5 – 3.0 மில்லியன் ரூபா …
-
- 0 replies
- 269 views
-
-
சுதந்திரமான தமிழீழம் என்ற கோரிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுகையுடன் ஏற்பட்ட ஒன்றல்ல. சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு இந்தியாவை தளமாகக் கொண்ட The Pioneer ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் Priyadarshi Dutta தனது அண்மைய பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அப்பத்தியின் விபரமாவது, 500 ஆண்டுகளின் பின்னரோ அல்லது 500 நாட்களின் பின்னரோ கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எதனைப் பெற்றுக் கொடுக்கும்? சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன் அரசியல் தீர்வெதனையும் பெறாது அந்த மக்கள் தொடர்ச்சியாக துன்பப்படுவதுடன், மேலும் வதைபடும் நிலைக்கே தள்ளப்பட்டுள…
-
- 0 replies
- 654 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரன் உரை அடங்கிய இறுவெட்டு வைத்திருந்தவர் கைது 2/25/2008 7:39:14 PM வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரர் தின உரை அடங்கிய இரண்டு இறுவட்டுக்களை வைத்திருந்த மஸ்கெலியா பிரவுன்ஸ் விக்தோட்டத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு செட்டியார் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட இளைஞர் ஒருவர் தெமட்டகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளõர். ராமஜெயம் ரவிச்சந்திரன் (வயது 34) என்ற வாலிபரே ஜாஎலயிலுள்ள தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டவர். கடந்த 19ஆம் திகதி இவரது வீட்டுக்கு சென்ற இரகசிய பொலிஸார் சுமார் 105 சினிமா பாடல் திரைப்பட இறுவட்டுக்களை தகவல் ஒன்றை அடுத்து எடுத்துச் சென்றதாகவும், அதில் இரண்டு இறுவட்டுக்கள் பிரபாகரனின் மாவீரர் …
-
- 1 reply
- 2.3k views
-
-
வடக்கில் சிவில் நிர்வாகத்தை நிலைநாட்டி, அங்கு வாழும் மக்கள் எதிர்நோக்கும் பாரதூரமான பிரச்சினைக ளுக்கு மகிந்த அரசு தீர்வை வழங்கினால் தமிழ்மக்கள் தனிஈழத்தைக் கோரமாட்டார்கள் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர்ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், தீர்வு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கைவிடவே மகிந்த அரசு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம், நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்தொகை ஆகியவை குறித்து கருத்து வெளியிடும் போதே ஜே.வி.பியின் பொதுச் செயலாளர…
-
- 4 replies
- 502 views
-
-
கோரிக்கைகளை நிராகரித்தால் ஆதரவு வாபஸ் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் வெளியிலிருந்து நிபந்தனைகளின்றி வழங்கிவரும் ஆதரவை நீக்குவது குறித்து தீர்மானிக்க வேண்டி ஏற்படும் என நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்புக்கான மூன்றாவது நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த வருடம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்கு தமிழ் மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். புதிய அரசாங்கத்தின் மீது தமிழர்கள் பாரிய நம்பிக்கை வைத்திருந்தனர். எ…
-
- 0 replies
- 665 views
-
-
பலாலி விமான நிலைய புனரமைப்பு மற்று விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் யாழ் மாவட்டச் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்று மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜின ரணதுங்க தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்புனர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி…
-
- 8 replies
- 974 views
-
-
விடுதலைப் புலிகளின் வக்கீலாகவே மாறிவிட்டார் வைகோ. இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது சரியா… தவறா என்று சட்டரீதியாக நடக்கும் போராட்டங்களில் சென்னைக்கும் டெல்லிக்குமாக அலைகிறார் வைகோ. கடந்த 9-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு கோர்ட் படி ஏறிய வைகோ, சுமார் ஒன்றரை மணி நேரம் தனது வாதங்களை எடுத்துவைத்தார். ‘நீதிமன்றத்தையே பொதுக்கூட்ட மேடையாக்கிவிட்டார் வைகோ’ என்று வழக்கறிஞர்கள் சொல்லும் அளவுக்கு இருந்தன வாதங்கள். இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 1992-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தடைக்கான நீட்டிப்பை மத்திய அரசு பிறப்பித்து…
-
- 2 replies
- 1.2k views
-
-
இதற்கு முன்னர் 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்கா விட்டால், 'சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்து மடிவேன்' என்று செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்துக்குள் 2012ம் ஆண்டு ஆவேசத்துடன் உரையாற்றியிருந்தமையும், 2013ம் ஆண்டு முடிந்து, 2014ம் ஆண்டும் முடிவடைந்து, தற்போது 2015ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாத காலமே இருப்பதும், தற்போது அவர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் எனும் அரச உயர் பதவியை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 'தமிழரசுக்கட்சி வந்தாலென்ன வராவிட்டாலென்ன, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகளுடன் இணைந்து ரெலோ கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு தமிழ் கூட்டமைப்பை பதிவு செய்ய…
-
- 0 replies
- 442 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை - இராமலிங்கம் சந்திரசேகர்! சீனாவுக்கு ஆதரவாகச் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்காது எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சூரியனின் செய்திப்பணிப்பாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். அதேநேரம், இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விழுதுகள் நிகழ்ச்சியின் முழுமையான …
-
-
- 9 replies
- 473 views
-
-
இலங்கை வந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழுவைச் சேர்ந்த எம்.பி சுதர்சன நாச்சியப்பன் இலங்கை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என்று அழைத்திருக்கிறார். யாழ்ப்பாண நகரத்தில் வந்திறங்கிய எம்.பிக்களை வரவேற்கச் சென்ற அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவுக்கு இப்படியொரு அடை மொழியுடன் புகழ்ந்தது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அமைந்து விட்டது. நாச்சியப்பன் சொன்னதைக் கேட்டு டக்கிளஸ் தேவானந்தா மெய்மறந்து சிரித்துக் கொண்டு நின்றார். தொடர்ச்சியாக சர்ச்சiயாக பேசிவரும் இந்திய எம்.பி சுதர்சன நாச்சியப்பன் ஏன் இவ்வாறு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவை சொன்னார் என்ற பெரிய சந்தேகம் எழவே செய்யும். எம்.ஜி.ஆர் தமிழக மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரை ஒரு நடிகராக …
-
- 1 reply
- 702 views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (14-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில் அவர் வீடு சென்றுள்ளார். இளைஞன் யாழ்ப்பாணம் போதனா…
-
- 0 replies
- 248 views
-
-
வன்னிக் களமுனையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 870 views
-
-
உதயன் மீதான தாக்குதலின் சூத்திரதாரி நாடாளுமன்றில் சுதந்திரமாக செயற்படுகிறார் : சபையில் சுட்டிக்காட்டினார் சரவணபவன் எம்.பி. இராணுவத்தினரின் ஆதரவுடன் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள் வெறியாட்டம் நடத்தி இரண்டு ஊழியர்களைச் சுட்டுக் கொன்றார்கள். மூன்று பேரைக் காயப்படுத்தினார்கள். ஒரு கோடி ரூபா அளவிலான சொத்துக்களை நாசமாக்கினார்கள். இதனைச் செய்தவர்களின் தலைவர் -தாக்குதலின் சூத்திரதாரி - முன்னைய ஆட்சியில் அமைச்சராக இந்தச் சபையில் இருந்தார். இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சுதந்திரமாகச் செயற்படுகிறார். இவ்வாறு, நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். …
-
- 0 replies
- 397 views
-
-
ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024 ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி ச…
-
- 1 reply
- 317 views
-
-
நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கு முதலமைச்சர் அபேட்சகர் ஒருவரை பெயரிடாமலிருக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரியவரகிறது. இதன்படி, மாகாணசபைத் தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அபேட்சகரை முதலமைச்சராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பு மனுச் சபையின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இந்த விடயம் தொடர்பாக சில அரசியல் கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தமது முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையானை தெரிவு செய்துள்ளனர். இம்முறை கிழக்கு மாகாணசபைத்…
-
- 15 replies
- 5.4k views
-
-
சிறிலங்காவில் இறுதிப் போரின் போது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளதாக ஐ.நா நிபுணர் வெளியிட்ட தகவலை அம்பலப்படுத்திய ஏபி செய்தியாளர், முன்னர் சிறிலங்காவில் இருந்து வெளியேற்றப்பட்டவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் தெற்காசியப் பிரிவின் பணிப்பாளராக உள்ள ரவி நெஸ்மன் என்ற இந்திய ஊடகவியலாளரே, சிறிலங்காவில் இறுதிப்போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் ஐ.நாவிடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தார். சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தொழில்நுட்ப ஆலோசகரான அலன் போஸ்டன், ஐ.நா தலைமையகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சல் அறிக்கையை அடிப்ப…
-
- 0 replies
- 686 views
-
-
'கொழும்பிலிருந்து ஓநாய் ஒன்று ஊளையிடுகின்றது' - எஸ்.ஜெகநாதன் வடமாகாண சபையைப் பற்றி கொழும்பிலிருந்து ஓநாயொன்று நேற்று வியாழக்கிழமை (17) ஊளையிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல, ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் அதிக நிதி கோரும் நடவடிக்கையில், வடமாகாண சபை செயற்படுகின்றது' என நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற…
-
- 0 replies
- 907 views
-
-
நான் யாருடைய முகவராகவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. முஸ்லிம் சமூகத்தின் முகவராக மாத்திரம்தான் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று எந்த நேரமும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நான் படுகொலை செய்யப்பட்டால் தேர்தல் சட்டத்தின் படி உடனடியாக இன்…
-
- 2 replies
- 301 views
-
-
அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கி, அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது. விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் பாரிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. இந்த நூற்றாண்டின் …
-
- 4 replies
- 256 views
- 1 follower
-
-
'இரத்தின துவீபம்', 'இந்து சமுத்திரத்தின் முத்து' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட இலங்கை, இன்று 'இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்' என்ற கிரிமினல் பட்டத்துடன் சர்வதேச அரங்கில் தலைகுனிந்து நிற்கின்றது. வரலாற்றில் கறைபடிந்த, அழிக்க முடியாத அவமானம் இது. வன்னிப் பேரவலம் தொடர்பாக ஐ.நா. நிபுணர் வெளியிட்ட அறிக்கையும், சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இரு ஆவணங்களும் இதற்குத் தக்க சான்றுகள். நிபுணர் குழுவினர் சாதாரணமானவர்கள் அல்ல. ஆகவே அறிக்கையும் சாதாரணமானவையல்ல. சனல் 4 இல் வெளியான காணொளியானது தடயவியல் நிபுணர்கள், ஒளி, ஒலி வல்லுனர்கள், வெடிபொருள்சார் நிபுணர்கள் ஆகியோர் துல்லியமாக பரிசோதனைசெய்த பின்னர் வெளிவந்தவை என இதனைத் தயாரித்த 'கெலம் மெக்ரே' கூறுகின்றார். உலகத்தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
சஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்… October 20, 2019 சஹ்ரானுடனான காணொளி தொடர்பில் ஹக்கீம் விளக்கம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக்கினார். அதனை பார்வையிடச் சென்ற இடமொன்றில் பயங்கரவாதி ஸஹ்ரானும் இருந்திருக்கிறான். அந்த பழைய காணொளியை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முற்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (19.10.19) கண்டி, கலகெதர தேர்தல் தொகுதியில் ஹத்தரலியத்தவில் நடைபெற்ற…
-
- 1 reply
- 610 views
-
-
அரசியல் தீர்வை எட்டும் சந்தர்ப்பத்தைக் குழப்பக் கூடாது – இரா. சம்பந்தன் DEC 27, 2015 அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் உருவாக்கியிருக்கும் சூழலில் அதனைக் குழப்ப எவரும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். “யாழ்ப்பாணத்தில் அண்மையில் தமிழ் மக்கள் பேரவை என்ற பெயரில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டதாக அறிகிறேன். ஒரு சில நபர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மூன்று வகை நோக்கங்களைக் கொண்டதாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 1) தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு 2) ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறையாக முழுமையாக அமுல்படுத்தப்படுவது 3) தமி…
-
- 10 replies
- 823 views
- 1 follower
-
-
1983 ஜூலைக் கலவரத்தின்போது அன்னை இந்திராகாந்தி அனுப்பி வைத்த சிதம்பரம் கப்பல், 1987இல் இந்திய விமானங்கள் இலங்கைக்குள் நுழைந்து, தமிழர் தாயகத்தில் உணவுப் பொட்டலங்களைத் தந்துவிட்டுப்போன வரலாற்றுப் சரித்திரங்கள் என்பன வெளிநாடுகள் எங்களைக் கைவிடாது என்ற மனத்தைரியத்தைத் தந்தன. இதற்கு மேலாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் அவ்வப்போது ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகத் தெரிவிக்கின்ற கருத்துக்கள், ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அறிக்கைகள், சர்வதேச மன்னிப்புச் சபையின் முன் மொழிவுகள் என எல்லாமும் சேர்ந்து வெளிநாடுகள் எங்களைக் கைவிடாது என்ற நம் பிக்கையைத் தந்தது. அதிலும் அண்டை நாடான இந்தியா எங்களைக் காப்பாற் றும் என்ற நம்பிக்கைககள் இன்றுவரை எங்கள் மக்களிடம் இருக்கிறது.…
-
- 0 replies
- 858 views
-