ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142720 topics in this forum
-
03 MAY, 2025 | 07:31 PM தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள். அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை விரைவில் தீர்ந்துவிடும். அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம் தனித்துவத்தையும் சுயமரியாதையும் இழந்தவர்களாகி விடுவோம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் சனிக்கிழமை (03) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள். அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தார்மீக உரிமையும் ஆகும். கடந்த 70 ஆண்டுகள…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவின் தலைவர் பிள்ளையானைச் சந்திக்க மறுப்பு தெரிவித்தனைத் தொடர்ந்து அவர்களின் கிழக்கு மாகாணத்திற்கான பயணத்துக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
வடக்கில் புதிதாக திருமணபந்தத்தில் இணையும் ஐந்து ஜோடிகளுள் நான்கு ஜோடிகளுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லாமல் போகின்றதாக தென் பிரதேச ஆளுநரான பேராசிரியர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் இரசாயன உரங்களின் பாவனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடமத்திய மாகாணத்தில் மட்டுமே காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடளாவிய ரீதியல் அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் உலோகம் கலந்த நீர் வயல்வெளிகளுக்குச் செல்வதோடு, குடிநீரிலும் கலக்கப்படுவதே இதற்கான காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழவகைகள் இரசாயன பதார்த்தங்களைக் கொண்டு பதனிடப…
-
- 0 replies
- 361 views
-
-
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க திணறும் தமிழரசுக் கட்சி: சிறிநேசன் எம்.பி விடுத்த அழைப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசிய உணர்வைக் கொண்டவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சில சூழ்நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் முடிவுற்ற நிலையில் சபைகளை அமைக்கின்ற செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்ற பிரதிநிதித்துவ முறை என்பது ஒரு சிக்கலான பிரதிநி…
-
- 0 replies
- 132 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 1975 முதல் 2002 வரை நிகழ்ந்த மோதல்களில் 2,15,000 பேர் பலியாகியுள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. "வியட்நாமில் இருந்து போஸ்னியா வரை ஐம்பது ஆண்டு கால போர் வன்முறை உயிரிழப்புகள் : உலக சுகாதார ஆய்வு திட்ட தரவின் பகுப்பாய்வு" என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகியுள்ளது. 'போர்களால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை, முன்பு மதிப்பிட்டதைக் காட்டிலும் அதிக அளவிலேயே உள்ளது. மேலும், ஐம்பது ஆண்டுகளில் போர் மரணங்கள் குறைந்ததற்கான ஆதாரமேயில்லை' என்கிறது இந்த ஆய்வு. கடந்த 50 ஆண்டுகளில் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் உயிரிழப்புகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்…
-
- 0 replies
- 959 views
-
-
[size=4]2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க வெற்றிப் பெற்றிருந்தால், கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடைபெற்றிருக்காது எனவும் அப்படி நடந்திருந்தால், கிழக்கு மாகாணம், வட மாகாணத்துடன் இணைந்து ஈழ வரைப்படத்தில் இடம்பெறுவதை தவிர்த்திருக்க முடியாது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.[/size] [size=4]ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் அந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றிருந்தால், இடைக்கால நிர்வாக சபையை விடுதலைப்புலிகளுக்கு வழங்கி, இரண்டு வருடங்களில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, வடக்கு கிழக்கை ஒரு மாகாணமாக மாற்ற விடுதலைப்புலிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் எ…
-
- 0 replies
- 351 views
-
-
`இலங்கையில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் அதிகரிப்பு' `இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் அதிகரித்துள்ளன' (கோப்புப் படம்) இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, உச்ச நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2014 இல் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின் எண்ணிக்கை 370 எனவும், அந்த எண்ணிக்கை 2015 இல் 472ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. முன்னாள…
-
- 0 replies
- 333 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் மாற்றம் என்பது கட்டாயமானது-சிவசக்தி ஆனந்தன்.! எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் பொதுத் தேர்தல் ஒன்று வரவுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்? கடந்த நான்கரை வருடமாக தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். ஒரு மாற்றம் என்பது தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு தேவை. வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் முன்னெடுத்து செல்லப்படவேண்டும் என்பது ஒரு வி…
-
- 0 replies
- 390 views
-
-
04 JUN, 2025 | 03:50 PM ஆசியாவில் எச்.ஐ.வி பரவல் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும் நாடாக இலங்கையைக் கருதலாம் எனவும் குறிப்பாக நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது எச்.ஐ.வி.யுடன் வாழும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது இது மிகக் குறைவாக இருப்பது பாராட்டத்தக்கது என்றும் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். அரசாங்கத்தின் ஆதரவை தாண்டி அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவு நாட்டின் சுகாதார அமைப்பை சிறந்த முறையில் பராமரிக்க உதவியுள்ளது. சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தா…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
[size=4]இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு பிரித்தானியா, மிகவும் அவதானமாக இருக்கும்படி புதிய பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தப் பயண எச்சரிக்கைக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,[/size] [size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிவுற்றாலும், இலங்கயில் தேசியவாதம் எழுச்சி கண்டுள்ளது. இதன்விளைவாக, மேற்குலக எதிர்ப்பு- குறிப்பாக பிரித்தானிய எதிர்ப்பு வாதம் வலுவடைந்துள்ளது.[/size] [size=4]இது பிரித்தானியத் தூதரகம் மற்றும் ஏனைய இராஜதந்திர சுற்றுப்புறங்களில் எதிர்ப்பு வன்முறை போராட்டங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தப் போராட்டங்கள் பொதுவான பிரித்தானிய சமூகத்தை நோக்கியதாக இருந்தாலும், நீங்கள் மிகவும் அவ…
-
- 7 replies
- 922 views
-
-
படிப்படியாக இராணுவப்பிரசன்னத்தை குறைப்பதுதான் முறை! ஆஸி.தூதுவரிடம் வடக்கு முதல்வர் எடுத்துரைப்பு! போர் முடிவடைந்து 6வருடங்களாகி விட்டன. இராணுவப்பிரசன்னத்தை படிப்படியாக குறைப்பது தான் முறை. அதுமட்டுமல்ல இராணுவப்பிரசன்னம் தொடர்வது எமது மக்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது எனவும் வடமாகாண முதலமைச்சர் அவுஸ்திரேலிய தூதுவரிடம் எடுத்துரைத்தார். அவுஸ்திரேலிய தூதுவர் பீறின் கஸ்சன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இடையில் சந்திப்பு ஒன்று முதலமைச்சர் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஆஸி. தூதுவரிடம் கலந்தாலோசித்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே வடக்கு முதல்வர் சி.வி மேற்கண்டவா…
-
- 2 replies
- 288 views
-
-
யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்? யாழ். மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். இந்நிலையிலேயே யாழ். மாவட்ட அரச அதிபர் அவசர வேண்டுகோள் ஒன்றை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், யாழ். மாவட்டத்தில் நேற்று திங்கள் கிழமை எரிபொருளுக்காக ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக அறிந்தேன். இன்றையதினம் அநுராதபுரத்திலிருந்து 23 பௌசர்களில், ஒரு பௌரில் 6 ஆயிரத்து 63 லீற்றர் வீதம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 800…
-
- 4 replies
- 255 views
- 1 follower
-
-
[size=4]தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞரும் திரையிசை பின்னணிப்பாடகருமான உன்னி கிருஸ்ணன் அண்மையில் நல்லூர்திருவிழாவை முன்னிட்டு இந்தியத்துணைத் தூதரகத்தின் அதிகாரி மகாலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா முன்னர் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட பூங்காவின் எச்சங்கள் அழிக்கப்பட்டு உன்னி கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.[/size] [size=4]நிகழ்வினை இராணுவ துணைக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவைப் பிரநிதித்துவப்படுத்தும் ஈபிடிபி நிர்வகிக்கும் யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா உரை ந…
-
- 6 replies
- 1.4k views
-
-
27 JUN, 2025 | 05:20 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் எதிர்காலத்தில் சட்டத்துக்கு முன் இருக்கவேண்டிவரும் என கலாநிதி கயான் ஜயதிலக்க தெரிவித்தார். தனியார் தொக்காட்சி நிகழ்ச்சின்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் பாராளுமன்றத்துக்கோ மக்களுக்கோ தெரிவிக்காமல் வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதில்லை. ஆனால் அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து கைச்சாத்திடுவத…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
தொடர் தாக்குதல்களின் எதிரொலி: சிறிலங்காவின் தென்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2008, 06:12 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மொனறாகல மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து கதிர்காமம், கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளின் பாதுகாப்பினை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயா நாணயக்காரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கதிர்காமம் மற்றும் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளின் பாதுகாப்புக்களை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மொனறாகல மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் போன்று எதிர்வரும் நாட்களில் இடம்பெறாது தடுக்கும் பொருட்டே…
-
- 0 replies
- 545 views
-
-
உலகிலேயே முதலாவது எண் கோண வடிவ நீர்த்தடாகம் அமைத்து ஈழத் தமிழ் இளைஞன் சாதனை.! Friday, August 24, 2012, 17:03 [size=3][size=1][size=4]யாழ் பண்டத்தரிப்பில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் உலகிலேயே முதன் முறையாக எண் கோண வடிவிலான நீர்த்தடாகம்[/size][/size] [size=4]ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த் தடாகத்தை மல்லாகத்தைச் சேர்ந்த 28 வயதான இளம் பொறியியலாளர் அமைத்துள்ளார். இதன் கட்டுமானப் பணிகளில் முற்றுமுழுதாக இளைஞர்களே பணியாற்றியுள்ளனர். யாழில் தென்னிந்தியாவில் இருந்து வரும் கலைஞர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் காலகட்டத்தில் இந்த இளைஞரின் முயற்சி அவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. தென்னிந்திய கட்டடக் கலைக்கு மிஞ்சியதாக இந்த இளைஞனின் படைப்பு அமைந்துள்ளது.[/si…
-
- 24 replies
- 2.2k views
- 1 follower
-
-
வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பூந்தோட்டம் முகாமில் இன்று ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 112 குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியதனால் சுமார் 3,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 932 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இன்னல்கள், பிரச்சினைகள் வரும் என பொய் சொன்னவர்கள் இன்று வாயடைத்துப்போயுள்ளனர். அந்தளவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளை அனைத்து மக்களும் போற்றுகின்றனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி தெரிவித்தார். ஸ்டேண்ட் அப் வித் பிரசிடண்ட்“ ( ஜனாதிபதியை பலப்படுத்துவோம் வேலைத்திட்டம்) அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், இப்போது தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என அனைவரும் சேர்ந்து இனவாத கட்சிகளை ஒதுக்கி தேசிய ரீதியில் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய பொறிமுறையை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகின்றோம். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள், அற…
-
- 2 replies
- 580 views
-
-
வவுனியா மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்! 17 JUL, 2025 | 01:20 PM வவுனியா மாநகர சபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று (17) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். வவுனியா நகரசபையாக இருந்து மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் ஆணையாளராக இதுவரை வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் செயற்பட்டிருந்தார். இந்தநிலையில் புதிய ஆணையாளராக, வட மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளராக இதுவரை கடமையாற்றிய பொ.வாகீசன் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தினால் இந்த நியமனம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய ஆணையாளர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். https://www.virakesari.lk/article/220…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
கிளிநொச்சிப் பிரதேசத்தை படையினரிடமிருந்து பாதுகாப்பதற்காக வெள்ளான்குளம் கடல் பகுதியிலிருந்து துணுக்காய் வரை கால்வாய் ஒன்றை அமைக்கும் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்துள்ளதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இராணுவத்தின் 57ம் மற்றும் 58ம் படைப்பிரிவினர் மேற்கொண்டு வரும் உக்கிர முன்நகர்வுகளை முறியடிக்கும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் படையினர் முன்னெடுத்த தாக்குதல்களின் காரணமாக மன்னார் பகுதி பூரணமாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய வலிந்த தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கில் புலிகள் இந்…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரசுடன் சுமுகமான உறவைக் கொண்டிராத இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவுக்கு, இந்தியா மத்திய அரசு ஆறுமாத சேவை நீடிப்பை வழங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இந்தியாவின் இந்த அறிவிப்பு, அசோக் கே காந்தாவை அடுத்து பதவியேற்கும் புதிய தூதுவர் மூலம், உறவுகளை கட்டியெழுப்பத் திட்டமிட்டிருந்த சிறிலங்காவின் முகத்தில் இராஜதந்திர ரீதியாக கொடுக்கப்பட்ட அறை என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடையவிருந்தது. இதனால் சற்று நிம்மதியடைந்த சிறிலங்கா அரசு புதிதாக வரும் தூதுவர் மூலம் சுமுகமான உறவைக் கட்டியெழுப்பும் எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சியைக் கொட…
-
- 4 replies
- 1k views
-
-
எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள். தமிழகத்திலிருந்து நெடுமாறன் ஐயா . எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள்.-கவிஞர் காசி ஆனந்தன் . ஐரோப்பா வாழ் தமிழீழ மக்கள் அணைவரும் பொங்குதமிழ் நிகழ்ச்சிக்கு கடலலை பொங்குவது போல் அணிதிரண்டு செல்லவேண்டும் . http://youtu.be/vsyHr2V7TLc http://thaaitamil.com/?cat=263
-
- 0 replies
- 485 views
-
-
மன்னாரில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மீட்பு மன்னாரில் இரண்டு இடங்களில் இருந்து இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோகிராம் வெடி மருந்து மற்றும் அதற்கு பயன்படுத்தும் 27 குச்சுகளும் நேற்று (2) மாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நவடிக்கைகளின் போது குறித்த வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 341 views
-
-
Published By: DIGITAL DESK 2 07 AUG, 2025 | 04:31 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.இவ்விடயத்தில் எனக்கு உத்தரவாதம் வழங்க முடியாது. ஜனாதிபதியே தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27 இன் இரண்டின் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி.யான எஸ்.சிறிதரன் கடந்த பாராளுமன்ற அமர்வில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத தடைச்சட்டத…
-
- 2 replies
- 183 views
- 1 follower
-
-
இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்திருப்பதற்கு, துணைப்படைகுழுவின் தலைவரும்,கிழக்கு முதலைச்சர் பிள்ளையான் (விநாயகமூர்த்தி முரளிதரன்)கண்டனம் தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சி எனவும், அவர்களை மன்மோகன் சிங் சந்தித்திருப்பது தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் அவர் கூறினார்.தமது கட்சி கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்டது எனவும், மன்மோகன் சிங் தம்மை சந்திக்காது தவிர்த்திருப்பது வேதனை தருவதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் ஒன்றை சிறீலங்காவிற்கான இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, இந்திய தலைமை…
-
- 0 replies
- 1.6k views
-