ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143622 topics in this forum
-
கூட்டமைப்புடன் இணைந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்! by : Benitlas தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று(வியாழக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருகோணமலையில் உள்ள கள நிலவரங்களின் அடிப்படையில் தமிழ் பிரதிநிதித்துவத்தினை காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தாம் இருப்பதாக வரதன் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட மக்களின் வாக்குகளை சிதறடித்து பெரும்பான்மையை குறைத்துக்கொள்…
-
- 0 replies
- 532 views
-
-
'மனித உரிமை'களுக்கு அடிப்படையானது 'சுயநிர்ணய உரிமை'யே; அதற்காகவே நாம் போராடுகின்றோம்; இது பயங்கரவாதம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 537 views
-
-
பல்கலைக்கழக மாணவர் கைது விவகாரம்: உயர்நீதிமன்றை நாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்! வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் உயர் நீதிமன்றத்தை நாடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களான வி.பவானந்தன், ப.தர்ஷானந்த், க.ஜெனமேஜெயந், எஸ்.சொலமன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்யுமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த மாத முற்பகுதியில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சட்டத்துக்கு முரண…
-
- 2 replies
- 521 views
-
-
சமாதியை கடக்கும் போது சத்தமில்லை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில், எவ்விதமான சத்தமும் இன்றி, கொடிகளை கீழே பணித்தவாறு கடந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதனைச் செய்தாலும், அவருடைய பெற்றோர்களான எஸ்.டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகிய இருவரும் நாட்டுக்கு செய்த சேவையை மறக்கமுடியாது. ஆகையால்தான், அவர்களின் சமாதிக்கு கௌரவம் செலுத்தினோம் என்று பாதயாத்திரையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/178299/சம-த-ய-கடக-க-ம-ப-த-சத-தம-ல-ல-#sthash.W3TSzYFE.dpuf
-
- 1 reply
- 562 views
-
-
ஊருக்குள் புகுந்த முதலை சிக்கியது! மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் செய்துவந்த முதலையொன்று அப்பகுதி மக்களினால் பிடிக்கப்பட்டது. பாலமீன்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த நிலையிலேயே நேற்று (29) மாலை குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 அடி நீளமான முதலையானது நீண்ட நாட்களாக அப்பகுதி மக்களை அச்சுறுத்திவந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். https://newuthayan.com/ஊருக்குள்-புகுந்த-முதலை/
-
- 0 replies
- 762 views
-
-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி தமிழகத் தலைநகர் சென்னையில் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் பணியாளர்களும் இருநாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.சென்னையில் 13.12.08 சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போராட்டத்தை தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழின உணர்வாளரான இயக்குநர் சீமான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினர். இயக்குனர் சீமான் ஆற்றிய உரையின் ஒளிப்பதிவுப் பகுதிகளைக் காண: http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 2 replies
- 2.3k views
-
-
ஐவருக்கு மாத்திரமே அனுமதி இனிவரும் காலங்களில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பயணியொருவரை வழியனுப்புவதற்கு 5 பேர் மாத்திரமே, விமான நிலையத்தின் பயணிகளை வழி அனுப்பி வைக்கும் பகுதிக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுவரென, விமான நிலைய ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். அத்துடன், விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும், அவர் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஐவரகக-மததரம-அனமத/175-252859
-
- 0 replies
- 353 views
-
-
தமிழீழத்தின் வரலாற்றுப் பதிவாய் விளங்கும் இந்நூல் 1993-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழ. நெடுமாறன் தடா-வில் கைது செய்யப்பட்ட போது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்த பிறகு, 2002-ஆம் ஆண்டு அந்நூலை வெளியிடுவதற்கான தயார் நிலையில் இருந்த போது, 2002 ஏப்ரலில் அந்நூல் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமான நூல் என வழக்கு தொடரப்பட்டது. அந்நூலை ஏற்றுமதி செய்யவிருந்ததாக சாகுல் அமீது கைது செய்யப்பட்டார். அண்மையில் நூல் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்; தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்நூல் சட்டத்திற்கு புறம்பான நூல் அல்ல என நீதிபதிகள் தீர்ப்புரைத்துள்ளனர். இத்தனை தடைகளை கடந்த இந்நூல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அந்நூலில் இருந்து சிலப் பகுதிகள…
-
- 1 reply
- 1.3k views
-
-
அபிவிருத்தி குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பதை விட காணி உரிமையை பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுப்பேன். காணி உரிமை விடயத்தில் நாம் கவனயீனமாக இருப்போமானால் அதனால் முஸ்லீம் சமூகம் அபிவிருத்தியை இழந்தும் நிலங்களை இழந்தும் ஒரு அநாதையான சமூகமாக மாறிவிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபை சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் முஸ்லிம் காங்கிரஸில் இணையும் நிகழ்வு வியாழக்கிழமை(16) இரவு அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது . இதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் மேற்கண்டவாறு கு…
-
- 0 replies
- 272 views
-
-
பதவி விலகுவாரா மேர்வின்: களனி தொகுதி அமைப்பாளாராக பஷில்? By General 2013-01-11 12:30:20 களனி தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக பதவி விலகும்படி அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவலவின் கொலை மீதான விசாரணைகள் முடியும் வரை மேர்வினின் தொகுதி அமைப்பாளர் பதவியின் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இப்பதவிக்கு பஷில் ராஜபக்ஷவை தற்காலிகமாக நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹசித்த மடவலவின் கொலையுடன் மேர்வின் சில்வாவே த…
-
- 1 reply
- 318 views
-
-
அவளுக்கு ஒரு வாக்கு தேர்தல் பிரச்சாரம் யாழில் ஆரம்பம் July 23, 2020 அவளுக்கு ஒரு வாக்கு எனும் தொனிப் பொருளில் பெண் வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. வடமாகாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் பெண்களின் கூட்டினைவில் ஆரம்பமானது. குறித்த பிரச்சார பணி குறித்து செயற்பாட்டாளர்களான எஸ். தீபா. ஜ.நாகநந்தினி, சஹானா, லயன் ஆனந்தி ஆகியோர் குறிப்பிடுகையில், “பெண்கள் அரசியலில் ஈடுபடல் வேண்டும். எமது உரிமை குறித்து பெண்களால் தான் பேச முடியும். எந்தக் கட்சி என்று நாம் குறிப்பிடவில்லை. ஆனால் ஆளுமையான கெட்டித்தனமுடைய பெண்களை நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். அந்த வகையில் மூன்று விருப்பு வாக்கு…
-
- 0 replies
- 505 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் நாளும் தொடரும் திட்டமிட்ட சிறிலங்காவின் இனப்படுகொலை: த.தே.கூ. [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 07:19 மு.ப ஈழம்] [ப.தயாளினி] வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்காவின் திட்டமிட்ட இனப்படுகொலை நாள்தோறும் தொடர்கின்றபோதும் அனைத்துலக சமூகம் மௌனம் காத்து வருவதுடன் சிறிலங்காவுக்கே படைத்தரப்பு உதவிகளையும் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: - டிசம்பர் 17 இல் வட்டக்ககச்சி பகுதியில் 4 முறை சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் 5 மாத குழந்தை மற்றும் 25 வயது இளைஞர் கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் ஏதிலிகளாயினர். - டிசம…
-
- 0 replies
- 408 views
-
-
இங்கிலாந்தில் நிதி மோடியில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்ட்ட ஸ்ரீலங்கா மாணவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நிறுவனமொன்றில் இருந்து 2 இலட்சம் பவுண்ஸ் நிதியை மோசடி செய்வதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் குறித்த மாணவருக்கும் இந்தியர் ஒருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் தலா 22 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வணிக கற்கைகளுக்காக பிரித்தானியாவிற்கு வருகைதந்த குறித்த ஸ்ரீலங்கா மாணவன், விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தண்டனை காலம் நிறைவடைந்த பின்னர் உடனடியாக அவர் நாடு கடத்தப்படுவார் என பிரித்தானிய அதிகாரிகள் குறிப்…
-
- 0 replies
- 380 views
-
-
பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ளாது நுகேகொடை வழியாக தும்முல்ல சந்தியின் ஊடாக கொள்ளுபிட்டி வரை வந்த பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கொள்ளுபிட்டி சந்தியில் வைத்து இந்த கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/180845/பல-கல-க-கழக-ம-ணவர-கள-ன-ப-ரண-ம-த-கண-ண-ர-ப-ப-க-ப-ரய-கம-#sthash.vpdN4nHd.dpuf
-
- 0 replies
- 217 views
-
-
யாழ்ப்பாணத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வாக்களிப்பு நடவடிக்கை ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு செயற்பாடுகள் காலை 7.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி மக்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதை காணமுடிகிறது. காலையிலேயே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று சமூக இடைவெளி யினை பேணி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிக்கின்றனர் யாழ் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் எந்தவிதமான அச்சமும் இன்றி கட்டுப்பாடுகளுமின்றி மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/87360
-
- 0 replies
- 336 views
-
-
28 புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம் – Live Updates 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது இடம்பெற்றுவருகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் பியங்கர ஜெயரத்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் துமிந்த திசாநாயக்க – சூரிய சக்தி காற்று நீர்மின் உத்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் தயாசிறி ஜயசேகர – கைத்தறி துணிகள் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் …
-
- 9 replies
- 1.7k views
-
-
2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிராவிட்
-
- 10 replies
- 1.7k views
-
-
பல பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லை முப்பதாயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்ற கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளில் 380 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவுதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றனர். கிராமப்புறப் பாடசாலைகள் பலவற்றில் இந்தப் பாடங்களை போதிப்பதற்கென ஆசிரியர்கள் முற்றிலும் இல்லாத நிலைமையே காணப்படுகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசத்திலும், வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பிரதேசத்திலும் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இந்த நிலைமைகளை உறுதிப்படுத்திய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகு…
-
- 11 replies
- 572 views
-
-
யாழில், புதுமைக்கவி பாரதியாரை நினைவுகூர்ந்த "புதுமையான" இளைஞர்களின் சமூகபற்று யாழ்.நல்லூர் பின் வீதியில் உள்ள வைமன் வீதி சந்தியில் உள்ள, பாரதியார் சிலைக்கு, பாரதியார் உருவப்படம் பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்த இளைஞர்கள் , ஞாயிற்றுக்கிழமை மாலை மலர் மாலை அனுவித்து, விளகேற்றி, அஞ்சலி செலுத்தினர். அத்துடன் நினைவு தினத்தை முன்னிட்டு, வீதியால் சென்றவர்களுக்கு, இலவசமாக மரக் கன்றுகளையும் வழங்கி வைத்தனர். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1882-ம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்தார். தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனை…
-
- 1 reply
- 503 views
-
-
ஞானசார தேரர்தான் என்னை கடத்தினார்- ரதனசார தேரர் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆகியோரால் நான் கடத்தப்பட்டேன் என அரம்பேபொல ரதனசார தேரர் தெரிவித்துள்ளார். எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளரான வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் வசிக்கும் விகாரையில் இருந்த அரம்பேபொல ரதனசார தேரர், இனந்தெரியாத குழுவினரினால் தாக்கப்பட்டதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்ற அரம்பேபொல ரதனசார தேரரே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எங்கள் சக்தி மக்கள் கட்சியில் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை மையமாக …
-
- 5 replies
- 844 views
-
-
அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற மூன்று தமிழ் கைதிகளும் கைது வீரகேசரி இணையம் 1/18/2009 9:21:50 AM - அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து நேற்று அதிகாலை தப்பிச் சென்ற மூன்று தமிழ் கைதிகளும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். இந் நபர்கள் மூவரும் அனுராதபுரம் - யாழ்ப்பாணம் சந்தியில் மஹிந்த வித்தியாலயத்திற்கு அருகாமையில் மறைந்திருந்த வேளை கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.கணேசமூரத்த
-
- 0 replies
- 822 views
-
-
முல்லைத்தீவை கைப்பற்றினால் யுத்தம் நிறைவுற்றதென இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாதென இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். “பிரபாகரனின் தமிழீழப் போராட்டம் முல்லைத்தீவைப் படையினர் கைப்பற்றுவதுடன் நின்றுவிடாது” என 1987ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த இந்திய அமைதிப் படையில் அங்கம்வகித்தவர்களில் ஒருவரான ஜெனரல் அசோக் மேதா தெரிவித்தார். இலங்கை விவகாரங்கள் தொடர்பாக அல்-ஜெசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார். விடுதலைப் புலிகளின் வசமிருக்கும் முல்லைத்தீவும் படையினரால் கைப்பற்றப்பட்டால், விடுதலைப் புலிகள் நாட்டின் ஆங்காங்கே சிறிய குழுக்களாக மீளக் குழுநிலைப்படுத்தக்கூடும் எ…
-
- 2 replies
- 3.3k views
-
-
விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றிற்கு பரிந்துரை தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston பரிந்துரை செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஆலோசகரின் இந்த பரிந்துரை கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில்லை. எவ்வாறெனினும், மிக நீண்ட காலமாக ஐரோப்பிய நீதிமன்றங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகியன தம்மை பயங்கரவாத பட…
-
- 15 replies
- 1.1k views
-
-
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபை உள்ளடக்கிய புதிய வர்த்தமானி அறிவித்தல் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது. குறித்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபில் 19 ஆவது திருத்தத்தில் இடம்பெற்றிருந்த பல விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன. 19 ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில் புதிய அரசால் 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. அதன் முதலாவது வரைபு தற்போது அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கேட்கப்பட்ட போது அதனை ஆராய்ந்த சட்டமா அதிபர் திணைக்களம் அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் …
-
- 2 replies
- 533 views
-
-
இலங்கையில் தமிழர்கள் அழிவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.மதுரையில் அவர் விடுத்துள்ள அறிக்கை:”முல்லைத் தீவு அருகே கல்மடு நரிப்பகுதியில் பேரழிவைச் சந்தித்த சிங்கள ராணுவம், அப்பாவித் தமிழ் மக்கள் வாழும் பகுதி நோக்கி ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் விளைவாக 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் பலத்த காயமும் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாத வகையில், ராணுவத்தின் ஏவுகணை வீச்சு தொடர்ந்து நடைபெறுகிறது. உயிர் காக்கும் மருந்துகள் இல்லாமலும் உணவு இல்லாமலும் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர…
-
- 0 replies
- 539 views
-