ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சிக்குன்குனியா May 27, 2025 9:58 am நாட்டில் தற்போது சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் விரிவான நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்தைச் சுற்றியுள்ள சூழலை நுளம்புகள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வாரத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது ஒதுக்கி, தங்கள் வீடுகள், அலுவலக வளாகங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் சிறப்பு வேண்டுகோளையும் விடுத்தார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டு, நுளம்புகள் இனப்பெருக்கம் …
-
- 0 replies
- 178 views
-
-
இந்தியாவின் சிறப்பு படையினர் 1500 பேர் கொழும்பை வந்தடைந்தனர். சனி, 28 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்பிற்கு இந்தியாவின் சிறப்பு படையினர் 3000 பேர் வரவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அதன்படி முதல்கட்டமாக கொழும்பிற்கு இந்தியாவின் 1500 பேர் அடங்கிய சிறப்பு பாதுகாப்பு படையினர் கொழும்பு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறீலங்காவிற்கு ஒகஸ்ட் மாதமளவில் செல்லவிருக்கும் நிலையில் அவரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான ஒரு நடவடிக்கையினை இந்தியா மேற்கொண்டுள்ளது. இவர்கள் சிறீலங்கா படையினருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப…
-
- 2 replies
- 2.2k views
-
-
புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவளிக்கும் நாடுகளி மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை நிறுத்த தவறின், சமாதானத்தை ஏற்படுத்துவதிலும் வழமை நிலையைக் கொண்டுவருவதிலும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டு அவை தடைப்பட்டு போகலாம் எனவும் பெருந்தோட்டத்துறை அமைச்சரும் ஜனாதிபதியின் மனித உரிமைத் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இன்றைய காலத்தில் பயங்கரவாதம் பல வடிவங்களில் வெளிப்பட்டு பல நாடுகளையும் பாதித்து வருகின்றது. கூட்டுச் செயற்பாடு, தகவல்களை பகிர்ந்துகொள்ளல், ஒத்துழைப்பு என்பவை மூலமே இந்த நாசகார சக்திகளை ஒழிக்க முடியும் எனவும் அவர் கூறினார். இழந்தவற்றை ஈடுசெய்தல், அறவிடுதல், அரவணைத்தல் என்பவையே பலனளிக்கும். சகல பிரச்சினைகளுக்கும் பொருத்தமான சர்வ நிவாரணி என்று எதுவுமில்லை.' நியாயமான…
-
- 0 replies
- 491 views
-
-
சிங்கள மொழியில் தேசிய கீதம்- அரசாங்கத்தின் தீர்மானத்திற்கான காரணத்தை விளக்கினார்சி.வி சிங்கள மக்களின் வாக்குகளை இலக்காக கொண்டே சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் பகுதியில் இந்த வாரம் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியக் கீதம் இசைக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறித்து வினவப்பட்டது. இதற்கு பதிலளித்து விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள பிரதியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு தனித்துவமான கலாசாரம், மொழி மற்றும் நிலம் ஆகியன இருந்த போதும் அதனை விட்டுக்கொடு…
-
- 5 replies
- 800 views
-
-
யுத்த காலத்தில் மீட்கப்பட்ட நகைகளை வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்த முடிவு! யுத்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் மக்களிடம் மீளக் கையளிக்க முடியாத நகைகளை வடக்கின் அபிவிருத்திக்கான நிதியத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட தங்க நகைகளை ஆதாரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார். இவ்வேளையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதிய…
-
- 0 replies
- 140 views
-
-
13 இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துகிறது சிறிலங்கா 13 இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் சிறிலங்கா அரசாங்கம் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளது. சிறிலங்கா அமைச்சரவை இதற்கு அனுமதி அளித்துள்ளதாக சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கௌதமாலா, பெலிஸ், நிக்கரகுவா, பார்படோஸ், கிரெனடா, சென்.கிட்ஸ் அன்ட் நெவிஸ், சென்.வின்சென்ட் அன் கிரெனடின்ஸ், சூரினாம், ஹொண்ரடூராஸ், அன்டிகுவா அன் பர்புடா, டொமினிக்கா, ஹெய்டி, சென்.லூசியா ஆகிய நாடுகளுடனேயே சிறிலங்கா அரசாங்கம் புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளது. இலத்தீன் அமெரிக்காவில் உள்ள 33 நாடுகள் ஐ.நாவில் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 20 நாடுகளுடன் ச…
-
- 2 replies
- 530 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பேரவைக்கு 14 உறுப்பினர்கள் நியமமனம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு வெளிவாரியாக 16 உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டிய நிலையில் இம்முறை 14 உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகம் வன்னி பல்கலைக்கழகம் என்று உருவாக்கப்படவுள்ள நிலையில் அந்த வளாகத்தின் மூன்று உள்வாரி உறுப்பினர்கள் நீங்கலாக, உள்வாரி உறுப்பினர்கள் 13 பேர் என்ற அடிப்படையில் பேரவைக்கு வெளிவாரியாக 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் எஸ்.மோகனதாஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன், கலாநிதி ஆறு. திருமுருகன், வெளிநாட்டு தூதரக மூன்றாம் நிலைச் செயலர் விதுர்சன் வின்சன்ற் ராஜாரா…
-
- 0 replies
- 292 views
-
-
18 Jun, 2025 | 05:13 PM உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று புதன்கிழமை (18) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு எந்த சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதோ, அந்த சபைகளில் நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகள் எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாங்கள் கூறி இருந்தோம். இதனை ஒரு கோட்பாடாக நாங்க…
-
- 1 reply
- 135 views
-
-
[size=4]- சிறப்பு நிருபர்.. சென்னை 14,2012 "தமிழரது தாயகத்தை "சிங்களமயப்படுத்தல்" என்பது தமிழர்களது காணி, கடல் மற்றும் வளங்களைக் கைப்பற்றி அவற்றைப் பன்னாட்டு வணிக நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் ஒரு சூழ்ச்சியாகும்" என நவ சமஜமாஜ கட்சியின் தலைவரான விக்கிரமபாகு கருணரத்தின குற்றம் சாட்டினார்.[/size] [size=4]திரு விக்கிரமபாகு தெசோ மாநாட்டில் பங்குகொள்ள இங்கு (சென்னை) வந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது "சிங்களமயப்படுத்தல்" என்பது ஒரு கேலிக்கூத்தாகும். சிங்களமயப்படுத்தலை தனது வறிய சிங்களமக்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள அவர்களை ஒரு பகடக்காயாகப் பயன்படுத்துகிறார். சிங்கள மக்கள் தமிழர்பகுதிகளில் குடியமர்த்தப்படுகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாத…
-
- 0 replies
- 303 views
-
-
கொழும்பு கோட்டையில் விமானப்படைத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள மக்கள் குடியிருப்பிலிருந்து மக்களை ஒரு வாரத்திற்குள் வெளியேறுமாறு விமானப் படையினர் விடுத்துள்ள உத்தரவால் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதி நிலைக்குச் சென்றுள்ளன. றீகல் திரையரங்குக்குச் சமீபமாக விமானப் படைத் தலைமையகத்தின் பின்புறத்திலுள்ள "களனி பசேஜ்' குடியிருப்பைச் சேர்ந்தவர்களையே ஒரு வாரத்திற்குள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விமானப்படையினர் அவசர உத்தரவை விடுத்துள்ளனர். தங்களுக்கு எதுவித மாற்று ஏற்பாடும் செய்யாதுஇ ஒரு வாரத்திற்குள் குடியிருப்புகளைக் காலி செய்துவிட வேண்டுமென்றும் இல்லையேல் அனைத்து வீடுகளையும் புல்டோசர்களால் இடித்துத் தள்ளிவிடப் போவதாகவும் வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
வலிகாமம் பகுதயில் பற்றைகள் துப்பரவாக்குவதாகக் கூறி பொது மக்கள் அற்ற வளவுகளில் உள்ள மரங்கள் தறித்து விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் வலி வடக்குப் பிரதேச சபைத் தவிசாளரிடம் முறையிட்டுள்ளார்கள். கடந்த முப்பது வருட இடைவெளிக்குப் பின்னர் அண்மைக்காலத்தில் இந்தப் பகுதியிகளில் மக்கள் மீளக் குடியேற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்தப் பகுதியில் உள்ள பற்றைகளை அகற்றுவதற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி சங்கத்திற்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தப் பகுதயில் உள்ள ஆட்கள் அற்ற காணிகளில் உள்ள பாரிய மரங்களையும் தறித்து ஏற்றிச்செல்வதாகவும் இதனை எந்த வகையான கேள்விகளும் இன்றி மேற்கொண்டுவரவுதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச சபைத் தவிசாளரிட…
-
- 0 replies
- 483 views
-
-
இனவாத அடிப்படையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புகளில் மஹிந்த தரப்பு ஈடுபட்டுள்ளது? இனவாத அடிப்படையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன மற்றும் மதவாத அடிப்படையில் தூண்டுதல்களை மேற்கொண்டு அதன் ஊடாக பிளவுகளை உருவாக்கி அரசாங்கத்தை கவிழ்கும் வியூகமொன்றை மஹிந்த தரப்பு முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.முப்படையினர் மற்றும் பௌத்த பிக்குகளே இந்த முயற்சிக்கான பகடை காய்களாக பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்…
-
- 0 replies
- 196 views
-
-
செம்மணியில் இரண்டாவது புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்! adminJuly 10, 2025 யாழ்ப்பாணம் செம்மணியில் இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் அகழ்வாய்வு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த புதைகுழியில் இருந்து நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (08.07.25) வரையில் 56 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 50 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அந்நிலையில், செய்மதி படங்களின் அடிப்படையில் அருகிலுள்ள ஒரு பகுதியும் புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் த…
-
- 0 replies
- 88 views
-
-
பாலமீன்மடு புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் வகையிலான சர்வதேச விசாரணைகளுக்கு மஹிந்தவின் அரசு தயாராவென த.தே.கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மைகளை மூடிமறைத்து சர்வதேசத்தை ஏமாற்றுவதில் கற்றுத் தேர்ந்த பேரினவாத அரசு தனது குற்றச்செயல்கள் அனைத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போட்டு விட்டு தப்பித்துக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் மட்டு. பாலமீன்மடுப் பகுதியில் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதிலிருந்து மனித எலும்புப் பாகங்கள் மீட்கப்பட்டிருந்தன. இவ்விடயம் தொடர்பில் இலங்கை இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார வெளிநாட்டு செ;யதிச் சேவையொன்றிற்கு வழங்கியிருந்த தகவலில், மேற்படி புதைகுழியின் அமைவ…
-
- 2 replies
- 729 views
-
-
இலங்கையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டுமென்பதிலும், சிவில் நிர்வாகம் முழுமையாக வடகிழக்குப் பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலும், கனடிய அரசு மிகத் தெளிவாக இருப்பதாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்தார். அஜெக்ஸ் தொகுதிக்கான கனடிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிய நாடுகளுக்கான வெளிநாட்டு அமைச்சின் ஆலோசகரும், மக்கள் செல்வாக்குள்ள இராஜதந்திரியுமான கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சாண்டரர் உடனான மக்கள் சந்திப்பொன்று, ரொறன்ரோ பெரும்பாகத்தில் வாழும் தமிழ் மக்களால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 7 மணியளவில் மார்க்கம் நகரிலுள்ள, முன்னாள் படைவீரரின் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் மண்டபத்தை நிறைத்தி…
-
- 5 replies
- 1k views
-
-
அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பதவியில் சலசலப்பு..! அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரராக இருந்த கலகம அத்ததஸ்ஸி தேரர்அண்மையில் காலமானதையடுத்து, அஸ்கிரிய மகாநாயக்கதேரர் பதவியைப் பெறுவதற்கு இரண்டு மகாநாயக்கர்கள் களத்தில் குதித்துள்ளனர். மகியங்கனை விகாராதிபதியான வரகாகொட ஞானரத்னதேரரும் பொலனறுவை 12 தலங்களின் விகாராதிபதியான வெண்டருவே உபாலி தேரருமே இப்பதவிக்கான போட்டியில் குதித்துள்ளனர். தற்பொழுது அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர்களாக பதுளை மகியங்கனை விகாராதிபதியும் பொலனறுவை 12 தலங்களின் விராதிபதியும் உள்ளனர். இது தொடர்பாக அஸ்கிரிய பீடாதிபதி தேரர்கள் குழுவுக்கு இவர்கள் இருவரும் முறையாக அறிவித்துள்ளனர். இதற்குத் தகுதியான ஒருவரை தேர்ந்தெடுப்…
-
- 0 replies
- 584 views
-
-
தற்போது செயலிழந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பாகவே காணப்படும் என மலேஷியா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு மலேஷிய சட்ட மா அதிபர் முன்வைத்த பரிந்துரைக்கு பதிலளிக்கும் வகையில் மலேஷிய உள்துறை அமைச்சர் Muhyiddin Yassin இதனை தெரிவித்துள்ளார். இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலிலேயே உள்ளடக்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மலேஷிய ஆளும் பக்காத்தான் ஹரப்பன் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சி…
-
- 0 replies
- 334 views
-
-
Published By: DIGITAL DESK 2 18 JUL, 2025 | 06:57 PM சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து, அவை காலாவதியான பிறகும் கிருலப்பனை பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 இந்திய பிரஜைகள், இணையம் மூலமாக சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை (18) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இடர் மதிப்பீட்டுப் பிரிவு சார்ந்த அதிகாரிகள், தங்கள் வசமுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், இந்த இந்திய பிரஜைகள் சட்டவிரோத இணைய சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளும் 22 - 36 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களை உடனடியாக இந்தியாவுக…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
கிடைக்குமா கச்சத்தீவு? மீனவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் இப்போது களமிறங்கியுள்ளன. சிங்கள கடற்படையின் தாக்குதலைக் கண்டிப்பதில் போட்டிபோடும் அரசியல் தலைவர்கள், கச்சத்தீவு பிரச்னையைப் பற்றிப் பேசவும் தவறவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டில் இந்தப் பிரச்னையை மத்திய அரசு எழுப்பவேண்டும், மீண்டும் கச்சத்தீவை நாம் மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களின் தலையாயப் பிரச்னையாக விளங்குகின்ற கச்சத்தீவுப் பிரச்னை எப்படி உருவானது? அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அப்போது அதை எதிர்க்க வில்லை என சொல்லப்படுவது உண்மைதானா என்பதைத் தெரிந்துகொள…
-
- 0 replies
- 835 views
-
-
எதிர்ப்புகள் இருந்தாலும் மகிந்த ராஜபக்சே இந்தியா செல்வார்: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2012, 11:28 [iST] கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது உறுதி என்று அவரது செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர உறுதியாகத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி அருகே பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து சாஞ்சியிலேயே கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார். இந்நிலையி…
-
- 3 replies
- 777 views
-
-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பிரிவிவைச்சேர்ந்த இரு இளம் பெண்கள் சிறிய ரக சொகுசு வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது. கலாசாரத்தினை சீரழிக்கும் வகையில் மக்களின் வறுமையை காரணமாக பயன்படுத்தி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகின்றது. இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர். http://www.tnnlk.com/?p=3410
-
- 1 reply
- 1.3k views
-
-
கறுப்பு ஜூலையை முன்னிட்டு நெல்லியடியில் தீப்பந்தப் போராட்டம்! கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு யாழ்.வடமராட்சி நெல்லியடி பேருந்து நிலையம் முன்பாக தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் குறித்த தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற தீப்பந்தப் பேராட்டத்தில், மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ,உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். தமிழர்களின் இனப்படுகொலையை முன்னிறுத்துவதான கறுப்பு ஜூலை இனப்படுகொலை நடைபெற்று முடிந்து 42 வருடங்கள் ஆகின்றன. எனினும…
-
- 0 replies
- 91 views
-
-
விடத்தல்தீவைச் சென்றடைந்த இராணுவத்தினரின் அடுத்த இலக்கு கிளிநொச்சியே என்று தெரிவித்துள்ளார் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெகலிய ரம்புக்வெல. இதேபோன்ற கருத்தை திருகோணமலையில் நடந்த வன இலாகா கட்டடத் திறப்பு விழாவில் உரையாற்றும்போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தெரிவித்திருந்தார். இராணுவத்தினர் விரைவில் கிளிநொச்சியை பிடித்ததும் அங்கேயும் இதேபோன்றதொரு அலுவலகமும் ஏனைய அலுவலகங்களும் திறக்கப்படும் என்று அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார். இதுதவிர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த 3 ஆம் திகதி தேசிய விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது கிளிநொச்சியிலும் விரைவில் இதுபோன்றதொரு விளையாட்டுப் போட்டியை நடத்துவோம் என்று சூளுரைத்திருந்தார். விடத்தல்தீவை சென…
-
- 1 reply
- 2.9k views
-
-
புலிகள் கோரிய தனிநாட்டைக் கோரும் சி.வி.யை கைது செய் 20-04-2016 08:49 புலிப் பயங்கரவாதிகளினால் துப்பாக்கி முனையில் முன்வைக்கப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கையை, முன்வைத்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனைக் கைதுசெய்து, அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிஹல ராவய அமைப்பு கோரியுள்ளது. நாட்டில், பெரும்பான்மையான மக்களாக சிங்களவர்கள் இருப்பார்களாயின், அந்த இன விகிதாசாரத்துக்கு ஏற்ப எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படவேண்டும். அவ்வாறாயின், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனை விலக்கிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவராக சிங்களவரை நியமிக்கவேண்டும் என்றும் அவ்வமைப்புக் கோரியுள்ளது. கொழும்பு-05இல் உள்ள பொதுபலசேனா தலைமையகத்தில், நேற்று செவ்வா…
-
- 5 replies
- 995 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட கட்சியின் செயற்குழுவில் தீர்மானித்த பின்னரும் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவித்திருப்பது ராஜபக்ஷ்வினரின் தேவையை நிறைவேற்றுவதற்காகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மனுஷ் நாணயக்கார தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவில் தீர்மானித்ததுடன் கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அதேபோன்று கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவையும் செயற்குழு அங்கிகரித்தது. அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி குழுவும் சஜித் பிரேமதாச சார்ப்பாக …
-
- 1 reply
- 332 views
-