ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
யா-எலவில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் உயிரிழந்த அமைச்சர் தசநாயக்கவின் இறுதிச் சடங்கிற்கு செல்லவுள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சர்கள் சிலருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் தங்குவதற்கு என புத்தளத்தில் உள்ள இரண்டு பாடசாலைகள் முன்னறிவித்தலின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை : தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை காட்டிக்கொடுக்கும் இழிவான நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் சாடியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை : அண்மைக் காலமாக, சிங்கள இனவெறி அரசு, ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க இந்திய அரசு, ராணுவ உதவிகளும், பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகளும், பொதுமக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள், இந்திய அரசின் உளவு நிறுவனமான 'ரா' அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழ் ஈழத்தின் கடலோரப் பகுதிகளையும், காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3-1-2009 அதிகாலையில் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடா மொன்றியலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பொங்குதமிழ் கனடா மொன்றியலில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் பெருந்திரளான தமிழீழ மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டுள்ளனர். தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழர் கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்தி இப்பொங்கதமிழ் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
-
- 7 replies
- 1.2k views
-
-
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அனைத்துலக நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று சூளுரைத்துள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோருடன் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். படையினருக்கு மாறான செயற்பாடுகள் எதனையும் அரசாங்கம் செய்யாது. அத்துடன் சிறுதுண்டு காணி கூட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு என்று கூறிய அதிபர் மகிந்த ராஜபக்ச, புலிகள் முற்றாக அழிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அனைத்துலக நாடுகள் நிதி உதவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் – நெருக்கடியில் மன்மோகன்சிங் அரசு [ புதன்கிழமை, 07 மார்ச் 2012, 01:53 GMT ] [ தா.அருணாசலம் ] ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக, முடிவு எடுக்கும் விடயத்தில் இந்திய மத்திய அரசு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் கூறுகின்றன. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமருக்கு, தமிழ்நாட்டில் இருந்து தொடர்ச்சியான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இரண்டு கடிதங்களை மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ளார். …
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழ்நாட்டில் சொனியாவின் பிரச்சாரம் ஒத்தி வைப்பு தமிழகத்திற்கு சோனியா காந்தி வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில் சொனியாவின் பிரச்சாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை காரணமாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், தமிழக மக்களின் கடும் எதிர்ப்பே இந்த ஒத்திவைப்புக்கு காரணம் என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் இந்த ஒத்திவைப்பு தி.மு.க., கொங்கிரஸ் கூட்டணியிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மேற்கொள்வதாக இருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழன் என்று சொல்வதிலேயே எனக்கு பெருமை – அமைச்சர் சுவாமிநாதன் நான் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவன் என்று சொல்வதை விட தமிழன் என்று சொல்வதிலேயே பெருமை கொள்கின்றேன் என மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு,இந்துமதவிவகார அமைச்சர் பி.சுவாமிநாதன் தெரிவித்தார்.மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு,இந்துமதவிவகார அமைச்சர் பி.சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.’ சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்- என்கிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாSEP 08, 2015 | 1:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் போர்க்குற்றங்களில், மகிந்த ராஜபக்சவோ கோத்தாபய ராஜபக்சவோ அல்லது உயர் இராணுவ அதிகாரிகளோ ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. தொலைக்காட்சி செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “மகிந்த ராஜபக்ச மாறிவிட்டார் என நான் கருதவில்லை. பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வில் மகிந்த ராஜபக்ச எனக்கு அருகில், அமர்ந்திருந்தார். பல தடவைகள் என்னைப் பார்த்து உரையாட முயற்சித்தார் அவர். நான் அவரை பார்க்காமலேயே இருந்தேன். பின்னர் ஹேமா பிரேமதாசவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கோட்டாபய ராஜபக்ஷ மீதான தாக்குதல்: வெளிநாட்டிலிருந்து வந்த தமிழ்ப்பெண் கைதானார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜ பக்ஷவைக் கொலைசெய்யும் நோக்கோடு நடத்தப் பட்ட தாகக் கூறப்படும் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சத்தியவாணி என்ற தமிழ்ப்பெண் ஒருவர் கைதுசெய்யப் பட்டிருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கிய சமயம் இவர் கைது செய்யப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப் பட்டிருக்கின்றார். இத்தகவலை பயங்கரவாதச் செயல்களை விசாரிக்கும் பொலிஸ் பிரிவு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றது. மேற்படி தற்கொலைத் தாக்குதலை…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈ.பி.டி.பி யின் கொழும்பு அலுவலகத்தை கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவு? கொழும்பு மாவட்ட நீதி மன்றம் கொழும்பு பாக் வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி யின் அலுவலகத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது. இவ் நீதிமன்ற உத்தரவினை தனியார் வங்கி ஒன்றே நீதிமன்றில் பெற்றதாகவும் எனினும் தற்காலிக உடன்பாட்டுக்கு வந்ததையிட்டு இவ் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் மே மாதம் 2009 ஆண்டு நடந்த இறுதிக்கட்ட மனிதப்படுகொலைகளுக்கு இந்திய மத்திய அரசே பதிலளிக்கவேண்டும் இலங்கையின் இறுதிக்கட்டப்போரின்போது இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அதில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தோல்வியைத்தழுவும் என்ற கருத்துக்கணிப்பே இந்தியாவின் ஊடகங்களினது கருத்தாக இருந்தது. காங்கிரஸ் தோற்றால் இதனால் போரின் இறுதி விளைவில் புலிகள் முற்றாக அழிக்கப்படமாட்டார்கள் என்ற எண்ணம் கொண்ட காங்கிரஸ் தேர்தல் முடிவகள் வரமுன் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்று விரும்பியது. இருந்தும் நம்பிக்கை இன்மையால் தேர்தலிலும் எலக்ரொனிக் வாக்குசாவடிளில் குழறுபடிகள் செய்து கருத்துக்கணிப்புக்கு மாறான தேர்தல் முடிவுகள் வெளிவந்தது. இதற்கிடையில் போரை எப்படியாவது மேமாத…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஆளும் கட்சியின் தீர்வு யோசனை தொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது! அடியோடு நிராகரித்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பு, மே 2 தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்று கூறிக்கொண்டு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டிருக்கும் அதிகாரப் பரவ லாக்கல் யோசனை சிங்கள ஆட்சியாளர் களின் நீண்டகால வரலாற்றுப்பின்னணி கொண்ட ஏமாற்று நாடகத்தின் ஓர் அங்கமே ஆகும். அதனைப் பரிசீலனைக்குக் கூட தமிழர்கள் தொட்டுப்பார்க்க மாட்டார்கள். பரிசீலிப்பதற்குக் கூட அருகதையற்றது. அந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கருத்தில் எடுக்கவே மாட்டாது. இவ்வாறு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகளை அடியோடு நிராகரித்து கருத்து வெளியிட்டிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்…
-
- 3 replies
- 1.2k views
-
-
கட்டுமானத் தள நிலையம் மீது சிறிலங்கா வான்படையின் தாக்குதல். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சுனாமிக்குப் பின்னரான துரித புனர்வாழ்வு அபிவிருத்திச் சேவை நிகழ்ச்சித் திட்டத்திற்கமைவான வேலைத்திட்டங்களில் ஒன்றான வடமராட்சி கிழக்கு நெல்லியானில் அமையப்பெற்றுள்ள படகுக் கட்டுமானத் தள நிலையம் மீது நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் சிறிலங்கா வான் படையின் கிபீர் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தியுள்ளன. இதன்போது படகு உற்பத்தித்தளம் சேதமடைந்துள்ளதோடு;; அங்கு உற்பத்திசெய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த படகுகள், உற்பத்தித் தளபாடங்கள் யாவும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. அத்துடன்; அங்குள்ள பொருட்களைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்கள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
திடுக்கிட வைக்கும் மர்மம்: படுகொலை செய்யப்பட்ட தேசியத் தலைவரின் தந்தையார் September 4, 2012, 8:48 pm[views: 455] தமிழீழத் தேசியத தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்தவில்லையென்றும், கோத்தபாய இராஜபக்சவின் நெறிப்படுத்தலில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்று பரிஸ்தமிழ்.கொம்மின் கொழும்புக்கான புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். வேலுப்பிள்ளை அவர்களை துப்பாக்கியால் படுகொலை செய்வது சர்வதேச அழுத்தங்களுக்கு வழிவகுப்பதோடு, தம்மை சர்ச்சைகளுக்குள் மாட்டிவிடும் என கருதிய கோத்தபாய அணி, குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னர் மரணமடையக்கூடிய ஒருவித நச்சு ஊசியை அவருக்கு ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
நெடியவனின் கைது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது – எமில்டா சுகுமார் 24 மே 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே தலைவர் நெடியவன் கைது செய்யப்பட்டமை மன ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மிக அண்மைக்காலம் வரையில் நெடியவன் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மின் அஞ்சல்களின் மூலம் நெடியவன் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது பதவியை இராஜினாமா செய்யுமாறு நெடியவன் தம்மிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மையும் தமது குடும்பத்தாரையும் படுகொலை செய்யப் போவதாக நெடியவன் மிரட்டி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன் …
-
- 15 replies
- 1.2k views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்கால் பகுதியில் 2,000 தமிழர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட நிலையில் போரை நிறுத்திவிட்டோம் என்று கூற கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் எப்படி மனம் வருகிறது" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "இலங்கைத் தமிழர் பிரச்சினை இன்றைக்கு உலகம் முழுவதும் வாழுகின்ற ஒவ்வொரு தமிழ் நெஞ்சையும் உலுக்குகின்ற பிரச்சினை. உலகெங்கும் வாழும் 8 கோடி தமிழர்களையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கக்கூடிய பிரச்சினை. இந்த நிமிடத்தில் கூட, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக, எந்த ஒர் உறு…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடபோர் அரங்களில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் மற்றும் பொறிவெடிகள் மற்றும் பிற சம்பவங்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 12 படையினர் கொல்லப்பட்டு மேலும் 14 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்காப் பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது. மன்னார் மன்னாரில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த ஆகிரமிப்பு நடவடிக்கைகளில் 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதூப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. நேற்று மன்னார் வெள்ளாங்குளப் பகுதியில் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் 7 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 11 படையினர் படுகாயமடைந்துள்ளனர். …
-
- 0 replies
- 1.2k views
-
-
Channel 4 News obtains exclusive footage from the "closed off"corner of northern Sri Lanka, showing evidence of camps, repression and abuse, ahead of the publication of the UN's report on war crimes. http://www.channel4.com/news/sri-lanka-evidence-of-ongoing-repression-and-abuse http://www.channel4.com/news/sri-lanka-evidence-of-ongoing-repression-and-abuse http://www.channel4.com/news/sri-lanka-evidence-of-ongoing-repression-and-abuse
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்நகரில் முக்கிய சந்திகளில் படையினரின் சோதனைகள் தீவிரம் யாழ்நகரின் முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் கடந்த சில தினங்களாக வாகனங்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துவிச்சக்கரவண்டிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணிப்போர் வழிமறிக்கப்பட்டு உடற்சோதனைகள், ஆள் அடையாள அட்டை பரிசோதனைகளுக்குட்படுத்தப்ப
-
- 1 reply
- 1.2k views
-
-
கொரோனா காலப்பகுதியில் மதுபானம், புகைத்தல் கடும் விளைவை ஏற்படுத்தும்- மருத்துவர் காண்டீபன் எச்சரிக்கை by : Litharsan கொரோனா வைரஸ் தொற்றுக் காலப்பகுதியில் மதுபானம் மற்றும் புகைத்தல் போன்றன விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள மருத்துவ சங்கம் இதனைக் கட்டுப்படுத்துமாறும் சுகாதாரப் பரிவினரை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது, “ஊரடங்குச் சட்டம் யாழ்ப்பாணத்தில் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் நாட்டில் கொரோனா தொற்றும் வாய்ப்புள்ள அசாதாரண நிலைமை நிலவுவதன் காரணமாக ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதிகளை விரட்டுமாறு இந்தியா உத்தரவு விக்ரமபாகு : அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதிகளை அதில் இருந்து விரட்டிவிடுமாறு இந்தியா தெரிவித்துள்ளதாக கலாநிதி. விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தேசியக் கொடியை அரசாங்கத்தின் கொடியாக மாற்றிக் கொண்டு, மன்னருக்கு (ஜனாதிபதிக்கு) தங்கம், வெள்ளி என அணிவித்து, பெரும் ஆட்டத்தை ஆடி வருகின்றனர். எனினும் கூரை தம் தலையில் இடிந்து விழப் போகிறது என்பதை இவர்கள் அறியவில்லை எனவும் விக்ரமபாகு சுட்டிக்காட்டியுள்ளார். உலகமே பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள வேளையில், இலங்கை போன்ற நாடு ஆட்டம் போட முடியாது. மேலும் ஒரு லட்சம் பேர் இராணுவத்தில்…
-
- 6 replies
- 1.2k views
-
-
திசை திருப்புபவர்களின் வலையில் விழாதீர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான உதவிகள் அளிக்கக் கூடாது ஆகிய இரு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகத்தில் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களைச் சீர்குலைக்கும் வகையிலும் பிரச்னையைத் திசை திருப்பவும் தமிழகக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் செயல்பட்டு வருகின்றனர். தமிழகமே ஒன்றுபட்டு நிற்கும்போது இவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கில் நடந்து கொள்வதை நான் வன்மையாகக் கண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை உடனடியாக படையினரிடம் ஒப்படைக்குமாறு வவனியா வைத்தியசாலை பணிப்பாளருக்கு அரசால் நேற்று சனிக்கிழமை அவசர பணிப்புரை விடுக்கபட்டுள்ளது. இதற்கமைய வவுனியா பொதுவைத்திசாலையின் வெளிநோயாளர் பிரிவு இன்று முதல் படையினருக்கான சிகிகிச்சைப் பிரிவாக மாற்றப்படுவதுடன் படையினர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு இன்று முதல் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படவுள்ளது. பொதுமக்களுக்கான சிகிச்சசைகள் புதிய கட்டிடத்திலுள்ள வெளிநோயாளர் பிரிவிலேயே இன்று முதல் நடைபெறும். வன்னியில் நடைபெற்றுவரும் கடும் மோதல்களில் பெருமளவு படையினர் காயமடைந்து வருவதால் வவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல் யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நேற்று இரவு யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்னால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று யாழ் இந்திய துணை தூதுவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது யாழ். பொலிசார் மற்றும் தடவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1309907
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
கொழும்பால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ள தமிழ் பிரதேசங்கள்! புதன், 12 ஜனவரி 2011 00:23 இலங்கையின் வடமேற்கு மாகாண புத்தளம் மாவட்டத்தின் கீழ் வரும் கற்பிட்டிக் குடாவிலுள்ள பல தீவுகள் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. இவை பெரும்பாலும் பாரம்பரிய தமிழ் பிரதேசங்களாகும். சுற்றுலாத் துறை மேம்பாட்டைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தப் பிரதேசத்தில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களில் 500 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்வதற்கு 11 வெளிநாட்டு நிறுவனங்கள் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளன. இவை பிரதானமாக இந்தியாவிடமிருந்து கிடைத்துள்ளதால் அரசாங்கம் இந்த விடயத்தில் போதிய மகிழ்ச்சியடையவில்லை. கற்பிட்டிக…
-
- 2 replies
- 1.2k views
-