ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
மாதுறு ஓயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டுகள் உடைப்பெடுத்த நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். பொத்தானை அணைக்கட்டு கடந்த வருடம் மார்கழி மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்து போக்குவரத்து மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் விசாயிகள் ஏழு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து மண் மூடையடுக்கி தற்காலிக அணைக்கட்டினை அமைத்து விவசாய செய்கையை செயள்து வந்தனர். இந்நிலையில் தற்போது ஆறு பெருக்கெடுத்தமையினால் தற்காலிக மண் மூடையில் அமைத்த அணைக்கட்டு தற்போது வெள்ளத்தில் உடைப்பெடுத்து முன்னர் உடைபட்ட பொத்தானை அணைக்கட்டு ஊடாக சும…
-
- 0 replies
- 502 views
-
-
யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (15) இதுவரை 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அனுப்பப்பட்ட 114 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்ட போது உடுவிலை சேர்ந்த 6 பேருக்கும், தெல்லிப்பழையை சேர்ந்த 3 பேருக்கும், நல்லூரை சேர்ந்த 2 பேருக்கும், சண்டிலிப்பாயை சேர்ந்த 2 பேருக்குமாக 13 பேருக்கு தொற்று உறுதியானது. அத்துடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூட சோதனையில் தெல்லிப்பழையை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. யாழில் இன்று மட்டும் 19 பேருக்கு தொற்று! - கிடுகிடுவென எண்ணிக்கை…
-
- 7 replies
- 1.4k views
-
-
கடற்றொழில் அமைச்சரின் உத்தரவாதத்திற்கமைய கவயீர்ப்பினைக் கைவிடுவதாகவும், பிரச்சினைக்கு தீர்வு இல்லாவிட்டால் போராட்டத்தில் மீண்டும் ஈடுபடவுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் ஜோன்சன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினைக் கட்டுப்படுத்தக்கோரி ஆறாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்திருந்தார். அவ்வாறு மீனவர்களைச் சந்தித்த அவர் தன்மீது நம்பிக்கையிருந்தால் மீனவர்கள் போராட்டத்தினைக் கைவிடலாம் என மீனவர்களுக்கு உத்தரவாதம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் முல்லைத்தீவு சம…
-
- 0 replies
- 398 views
-
-
(ஆர்.ராம்) சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வை மையமாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு வரைபினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி செய்துள்ளது. “இலங்கையின் புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த வரைவில், இலங்கை ஐக்கிய நாடாக நிலையான அமைதி மற்றும் செழிப்பை நோக்கி முன்னேற வேண்டுமனால் புதிய அரசியலமைப்பு அவசியம் என்று முதலாவது வரியிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்களும் இலங்கை நாட்டுப் பிரஜைகள் என்ற அடிப்படையில் பல்லின, மொழி, மதங்களைக் கொண்ட ஐக்கியமான பிரிக்கப்படாத பிரிக்க முடியாதவொன்றாக இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாடும் வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பானது, நாட்ட…
-
- 0 replies
- 285 views
-
-
காலக்கெடு வழங்க முனையவில்லை விக்கியும் கஜனும் விஷமப் பிரசாரம் - சுமந்திரன் (ஆர்.ராம்) தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாரும் விஷமத்தனமான பிரசாரங்களை முன்னெடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைவாக, ஐ.நா.விடயங்களை தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஐக்கியப்பட்டு கையாள்வதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவ…
-
- 2 replies
- 688 views
-
-
அரசாங்கம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுகின்றது – சஜித் by : Jeyachandran Vithushan சமூக ஊடகங்களின் பயன்பாட்டை அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கான அரசாங்கத்தின் செயற்பாடு ஜனநாயக விரோத செயல் என தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற முடிவுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நிற்கும் என்றும் சமூக ஊடதிற்கான சுதந்திரம் அவசியம் என்றும் குறிப்பிட்டார். பல சந்தர்ப்பங்களில் தான் சமூக ஊடகங்கள் மூலம் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச கர…
-
- 0 replies
- 306 views
-
-
நீரில் மூழ்கி காணால்போன 2 வயது குழந்தை உட்பட மூவர் பலி! முல்லைத்தீவு - வவுனிக்குள குளக்கட்டில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குள குளக்கட்டில் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் ஒன்று குளத்தில் வீழ்ந்து மூழ்கியுள்ளது. இதன்போது கெப் வாகனத்தின் சாரதியான 38 வயதுடைய நபரும் , இரண்டு வயதுடைய பெண்பிள்ளை ஒன்றும் 12 வயதுடைய ஆண்பிள்ளை ஒன்றும் நீரிழல் மூழ்கி காணால்போயிருந்தனர். முன்னதாக சிறுவன் மீட்கப்பட்ட நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்திருந்தான். அதன் பின்னர் சாரதியையும், …
-
- 5 replies
- 952 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் சம்பந்தமாகப் பாராட்டி, பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தண்டிப்பதற்காக, எதிர்காலத்தில் புதிய சட்டத்தை உருவாக்கவுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் சரத் வீரசேகர, நிட்டம்புவ மற்றும் கேகாலை பொலிஸ் நிலையங்களைப் பார்வையிடச் சென்ற போதே இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடும்போது, பாராளுமன்றத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களைத் தூண்டும் வகையிலும், சிங்கள மக்களுக்கு துவேசத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசுகின்றனர் என்பது எமக்குத் தெரியும். இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். ஜேர்மனி போன்ற நாடுகளில் பாராளுமன்றத்தில் ஹிட்ல…
-
- 0 replies
- 481 views
-
-
தமிழ்த் தரப்புக்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த பி.ரி.எப் முயற்சி (ஆர்.ராம்) அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் பொதுவான முன்மொழிவைச் செய்வதற்கு புலம்பெயர் அமைப்புக்களில் ஒன்றான பிரித்தானிய தமிழர் பேரவை கடுமையான பிரயத்தனங்களை செய்து வருகின்றது. முன்னதாக யு.எஸ்.டாக் எனப்படும் ஐக்கிய அமெரிக்க செயற்பாட்டுக்குழுவின் தலைமையில் கடந்த மாத இறுதியில் மெய்நிகர் வாயிலான ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த புலம்பெயர் அமைப்புக்களின் ஒன்று கூடலின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிப்பதற்காக தயாரித்துள்ள முன்மொழிவுகளைக் கொண்ட வரைவை பகிரங்…
-
- 2 replies
- 706 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு நீதி தொடர்பில் கதைக்க எந்த அருகதையும் கிடையாது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை அரசின் முகவர்களாகச் செயற்படும் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சர்வதேச நீதி கோருதல் விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. கடந்த காலங்களில் கூட்டமைப்பினர் இலங்கை அரசை அனைத்துலக விசாரணையிலிருந்து காப்பாற்றி ஐ.நாவில் கொலையாளிகளை நீதிபதிகளாகச் சித்தரித்து உள்ளக விசாரணைகளுக்கு ஆதரவு வழங்கி அதற்கான கால அவகாசத்தைக் கொட…
-
- 0 replies
- 491 views
-
-
கூட்டமைப்பின் கொறடா உள்ளிட்ட புதிய பதவித்தெரிவுகள்; புத்தாண்டில் எந்தப்பதவியையும் இலக்கு வைக்கவில்லை என்கிறார் சிறிதரன் (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொறாடா உள்ளிட்ட புதிய பதவிகள் அனைத்தும் புதிய ஆண்டிலேயே நியமிக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் ஆண்டின் ஐனவரி மாதம் ஐந்தாம் திகதி கூட்டமைப்பின் பாராமன்றக் குழுவைக் கூட்டி தீர்மானம் எடுப்பதாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் அடங்கிய வரைவு இறுதி செய்யப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொறடா பதவியிருந்து யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கொறாடா பதவிலிருந்து விலகியமை விடயம் கவனத்த…
-
- 0 replies
- 349 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் குறித்து 30ஆம் திகதி தீர்மானம் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதற்கான அறிவித்தலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம கடந்த 16ஆம் திகதி, மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனையடுத்து, 3 வாக…
-
- 1 reply
- 659 views
-
-
தமிழ் முஸ்லீம் சமூகத்தினை பிரிக்கும் செயற்பாட்டில் சுமந்திரன்.! - முபாறக் அப்துல் மஜீத் குற்றச்சாட்டு.! தமிழ் மக்களை ஒரு பக்கம் மூட்டி விட்டு அங்கு ஹக்கீமுடன் சேர்ந்து புரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சுமந்திரன் எம்.பி போன்றவர்கள் கல்முனை பிரச்சினையை எப்போதோ தீர்த்திருக்க முடியும் என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் கல்முனை பிரச்சினையாக இருக்கட்டும் முஸ்லீம் தமிழ் பிரச்சினையாக இருக்கட்டும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள் இரண்டு வகையான நிலைப…
-
- 5 replies
- 859 views
-
-
கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு கூட்டமைப்பு கண்டனம் கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது கலாசாரத்தை மீறி தகனம் செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, கூட்டமைப்பினால் கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், கொரோனாவால் இறக்கின்றவர்களின் சடலங்களை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வதன் ஊடாக, எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் முஸ்லிம்கள் தங்களது கலாசாரத்தின் அடிப்பட…
-
- 12 replies
- 1.5k views
-
-
சங்கர் புரம் கண்ணகி அம்மன் கோவிலில் ஆயுத வேட்டை! December 19, 2020 மட்டக்களப்பு வெல்லாவெளி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட மண்டூர் சங்கர் புரத்தில் உள்ள கண்ணகியம்மன் கோவில் வளாகத்தில், காவற்துறைனர் நேற்று (18.12.20) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். யுத்தக் காலத்தில் அந்தக் கோவில் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவற்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே காவற்துறைனர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரையில் ஆயுதங்கள் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும், எந்தவிதமான ஆயுதங்களும் காவற்துறைனரால் மீட்கப்படவில்லை. https://globaltamilnews.net/2020/154571/
-
- 11 replies
- 1.7k views
-
-
கல்முனையில் கொட்டும் மழையிலே கவனயீர்ப்பு போராட்டம் December 20, 2020 ஜனாஸா எரிப்புக்கு எதிரான வெள்ளை துணி கவனயீர்ப்பு போராட்டம் கல்முனை அமானா வங்கி சுற்றாடலில் கொட்டும் மழைக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது. காலை தொழுகையின் பிற்பாடு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நேர காலத்துடன் முடிவுறுத்தப்பட்டது. இதில் பல அரசியல், சமூக, பொதுநல, ஊடக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான வாசகங்கள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன. ஜனாஸாவை அடக்க அனுமதி தா, நல்லடக்கம் எங்கள் அடிப்படை உரிமை அதை மறுப்பது சர்வாதிகாரம், விஞ்ஞானத்தை ஏற்று கொள் இனவா…
-
- 1 reply
- 443 views
-
-
அன்புள்ள சுமந்திரனுக்கு விக்கி எழுதுவது… December 19, 2020 அன்புள்ள சுமந்திரன் அறிவது, எனது பார்வைக்காக என்னிடம் கையளித்த ஆவணத்திற்கு நன்றி. அது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்களுக்குமான கடிதத்தின் முதல் வரைவாகும். அதன் முதல் ஐந்து பக்கங்களிலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினர் முற்றிலும் அறிந்த விடயங்களே. அம்முதல் வரைவின் முன்னுரையில் நீங்கள் இருசாராரும் இயற்றிய மனித உரிமை மீறல்கள் பற்றிக் கூறியுள்ளீர்கள். நாங்கள் இவ்விடயத்தில் புறநிலை கூர் நோக்கர்களாக இருக்க வேண்டுமா அல்லது சுயநிலை முறைப்பாட்டாளர்களாக மாறவேண்டுமா என்பதில் எனக்கு மயக்கம் இருக்கின்றது…
-
- 4 replies
- 657 views
-
-
கொரோனாவின் பிடிக்குள் நாங்கள்; விடுதலையைத் துரிதப்படுத்துங்கள் – அரசியல் கைதிகள் 28 Views தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சுகாதார அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இந்த அவசர கோரிக்கையை ஊடகங்கள் வாயிலாக அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களிடம் முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளும் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெ…
-
- 1 reply
- 400 views
-
-
மாகாணசபை தேர்தலை 2021 ஏப்ரலுக்கு முன்னர் நடத்த திட்டம் அடுத்த ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், அதனை பழைய முறைப்படி நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் நேற்றைய தினம் தெரிவித்துள்ளன. மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையின்படி நடத்தப்படுவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சரவை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார் கடந்த வாரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு, விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். கொவிட்-19 வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும…
-
- 0 replies
- 319 views
-
-
(நா.தனுஜா) சர்வதேச நிதி நிலையத்தை அமைக்கும் அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக சீன துறைமுக பொறியியல் கம்பனி உள்ளிட்ட நிறுவனங்கள் இலங்கையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்துள்ளன. கொழும்பு துறைமுக நகரத்திற்குள் மேற்கொள்ளப்படும் முதலாவது முதலீடு இதுவாகும். பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் ஷீ ஜென்ஹொங் ஆகியோர் முன்னிலையில் பிரவுன்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ், எல்.ஓ.எல்.சி குழுமத்தின் தொழில்நுட்ப முதலீட்டு வலையமைப்பு, சீன துறைமுக பொறியியல் கம்பனி (சைனா ஹார்பர் என்ஜினியரிங் கம்பனி லிமிடெட்) ஆகிய நிறுவனங்கள் நேற்று காலை மேற்படி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதன்போது, கருத்து வெளியிட்ட பிரதமர் மகிந்த ராஜ…
-
- 2 replies
- 708 views
-
-
முஸ்லிம்களின் சடலங்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைக்க நடவடிக்கை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஆங்கில இணையத்தளமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் உடல்களை நீண்டகாலம் ஏனையவர்களின் உடல்களுடன் பிரேத அறையில் வைத்திருக்க முடியாது என்பதாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இறுதிசடங்குகள் முடிவடையும்வரை கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலனில் வைத்திருப்ப…
-
- 0 replies
- 457 views
-
-
(ஆர்.ராம்) • 30/1 தீர்மானத்திற்கு மேலதிகமான விடயங்களை தயார்ப்படுத்துமாறும் யோசனை • சிரியா, மியன்மார் விடயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம் • புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆழ்ந்த கரிசனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு இயலுமானதாக இருக்கும் என்று இலங்கை மற்றும் மாலை தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட …
-
- 5 replies
- 930 views
-
-
இலங்கையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம் 48 Views கொரோனாத்தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலங்களை கட்டாயத் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொரளை மயானத்துக்கு வெளியே கிறிஸ்தவ பாதிரியார்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை அமைதி வழியில் மேற்கொண்டனர். அங்கிலிக்கன், கத்தோலிக்க மற்றும் மெதடிஸ்த பாதிரியார்களே வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்,மனித உரிமை ஆர்வலர் ருகி பொ்னாண்டோ இது குறித்துக் கூறுகையில், “20 நாள் குழந்தை, பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக எரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இலங்கையில் கட்டாயத் தகனத்தை நிறுத்தக்கோரியும் பாதிரியார்கள் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப…
-
- 44 replies
- 5k views
-
-
மாலைதீவிற்கே சென்று குடியயேறுங்கள் என்பார்கள்.! இன்று மாலைதீவுக்கு ஜனாஸாக்களை அனுப்பும் அரசாங்கம் எதிர்காலத்தில் மாலைதீவிற்கே சென்று குடியயேறுங்கள் என்று கூட கூறும் : சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் நூருல் ஹுதா உமர். இலங்கை முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் இன்னல்களையும் உரிமை மறுப்பு விடயங்களையும் எடுத்து நோக்கும் போது அரசியலிலும், ஆன்மீகத்திலும் பலவீனப்படுத்தி ஓரங்கட்டுவதற்கான செயற்பாடுகளாகவே காணப்படுகிறது. இலங்கையின் சுதந்திர மீட்புப்போராளிகளாகவிருந்து அரசாங்கத்திற்கு தங்களுடைய சொந்த நிலங்களை நன்கொடை வழங்கியவர்களாகவும் இம்மண்ணில் பிறந்து இம்மண்ணின் காற்றையே சுவாசித்து அரசின் சலுகைகளையும் அனுபவித்த எமது உடன்பிறப்புகளின் கொரோனா தொற்று ஜனாஸாக்கள் ந…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டமொன்று தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு கோட்டாபய அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அதற்கான வேலைத்திட்டத்தில் கூட்டமைப்பும் களமிங்கியுள்ளது.அதற்கமைய இது குறித்து ஆராயும் பொருட்டு இக்கூட்டம் கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.இதன்போது புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகள், சமகால அரசியல் நிலவரங்கள், ஜெனீவா தீர்மானங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்க…
-
- 1 reply
- 436 views
-