ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142926 topics in this forum
-
சம்பந்தனின் சமஷ்டியை நிறைவேற்றும் அரசு புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்கிறது மஹிந்தவின் கூட்டு எதிரணி (பா.ருத்ரகுமார்) எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு, கிழக்குக்கான சமஷ்டிக் கோரிக்கையை உள்ளடக்கி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தார். தற் போது எதிர்க்கட்சித் தலைவரின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சூட்சுமமான தீர்மானங்கள் பலவும் பாராளுமன்ற உபகுழு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. சமஷ்டி கோரிக்கையை வெளிப்படுத்த அரசாங்கம் தயாராகவிருக்கின்றது என்று கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்த 51 உறுப்பினர்களை கொண்ட…
-
- 0 replies
- 297 views
-
-
எம் மீது கைவைத்தால் மனித உரிமைகள் பேரவை இரண்டாக உடையும்: ஐ.நாவையே மிரட்டும் வீரசேகர! உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகளை தலையீடு செய்ய வேண்டாமென கோருவதுடன், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை பக்கச் சார்பானது. ‘தருஸ்மன்’ அறிக்கையை அடிப்படையாக கொண்டதோர் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது. ‘தருஸ்மன்’ அறிக்கை பொய் காரணிகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டதென டெஸ்மன் சில்வா முதல் சர்வதேச போர்க்…
-
- 6 replies
- 1.4k views
-
-
அனைவருக்கும் வணக்கம் லண்டன் மாணவர் பேரவையால் விடப்பட்ட முக்கிய அறிவித்தல் அனைவரையும் www.tamil.co.uk இந்த இணையத்திற்கு சென்று அதில் ஒரே ஒரு கேள்வி கேட்டுயிருப்பார்கள் அதாவது உங்களுக்கு ஈழம் வேண்டுமா இல்லையா என அதற்கு ஆம் என பதிலளியுங்கள்.அனைவரையும் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
-
- 15 replies
- 2.8k views
-
-
சுதந்திர தின ஒத்திகை: கடற்படை அதிகாரி படுகாயம் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஒத்திகையின் போது, கடற்படை அதிகாரியொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெலிகொப்டரில் இருந்து குதித்த பராசூட் வீரரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/190935/ச-தந-த-ர-த-ன-ஒத-த-க-கடற-பட-அத-க-ர-பட-க-யம-#sthash.ZCrGyIG3.dpuf
-
- 2 replies
- 343 views
-
-
அரசியலில் இலங்கை ‘புலி’ அடுத்த அரசியல் புலியாக வரும் வல்லமை இலங்கைக்கு உள்ளதென, ஐக்கிய அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தில் பொது இராஜதந்திரம் மற்றும் பொது விவகாரங்களுக்கான உப செயலாளர் புறூஸ் வாட்டன், இலங்கையின் இந்த வல்லமை பற்றி ஒருபோதும் சந்தேகம் இருக்கவில்லை எனக் கூறினார். “ இப்போதைய நிலைமையில், அடுத்த ஆசியப்புலி இலங்கையாகும். அதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளது. என அமெரிக்காவில் நடந்த இலங்கையின் சுதந்திர தின கொண்டாத்தின் போது அவர் கூறினார். “வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் வணிகத்தை முன்னேற்றவும் உதவுவதன் மூலம் இலங்கையின் சிறிய நடுத்தர முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவுகின்றது என அவர் …
-
- 0 replies
- 323 views
-
-
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் வீதி மறியல் போராட்டம் 20 Views வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு, அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. எனினும், குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்ட சுகாதாரப் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அந்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப் பட்டுள்ளன. இதையடுத்து நிரந்தர நியமனக் கடிதம் பெற்ற சுக…
-
- 0 replies
- 247 views
-
-
-
எமது மகனின் கொலையுடன் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தின் முன்னிறுத்தி, கடுமையான தண்டணை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என கட்டுகஸ்தோட்ட இளைஞனின் பெற்றோர், கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை, செனரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தக்க கெலும் அலுகொல்ல என்ற 32 வயது இளைஞன், இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். கைகள் கட்டப்பட்ட நிலையில், இளைஞனின் சடலம், கண்டி - கொழும்பு வீதி, பஸ்யாலையிலிருந்து கடந்த வௌ்ளிக்கிழமை (10) மீட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் இளைஞனின் பெற்றோர் தெரிவிக்கையில், “எங்களது மகன், எவருக்கும் எவ்வித இன்னல்களையும் கொடுத்ததில்லை. அவர் அமைதியானவர். தொழில் நிமித்தமே பஸ்யாலை பிரதேசத்துக்கு சென்றார். அவர் த…
-
- 0 replies
- 411 views
-
-
கடற்படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை, மிரஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய கடற்படை வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/16747
-
- 0 replies
- 222 views
-
-
மதரஸா பாடசாலைகள் மூடல் விவகாரம்- நான் அவ்வாறு கூறவே இல்லை – அமைச்சர் சரத் வீரசேகர 15 Views இலங்கையில் உள்ள அனைத்து மதரஸா பாடசாலைகள் மூடப்படும் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், “5 வயது முதல் 16 வயது வரையான அனைத்து சிறார்களும், இன, மத வேறுபாடின்றி, கல்வி நடவடிக்கைகளை தொடர வேண்டும். இந்த சிறார்கள், நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தேசிய கல்வி கொள்கைக்கு அமைய, தமது கல்வி நடவடிக்கைககளை தொடர வேண்டும…
-
- 0 replies
- 390 views
-
-
வடக்கு மக்கள் அதிகாரங்களையும் உரிமைகளையும் அனுபவிக்கக் கூடாது என்பதே அரசின் திட்டம் : சுமந்திரன் எம்.பி வட மாகாண மக்களுக்கு மாத்திரம் மாகாண சபை அதிகாரங்களையும் உரிமைகளையும் அனுபவிக்க விடக் கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இன்று 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழர்கள் எவ்வாறு கௌரவமான அரசியல் தீர்வு ஒன்றை தற்போதைய இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.13ஆவது திருத்தச்சட்டம் இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றல்ல. அப்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தரப்பினர்களுடனான உள்ளக பேச்சுவார்த்தையின்…
-
- 1 reply
- 534 views
-
-
இழுவைப் படகுகளினால் மோதப்பட்டு உயிருக்கு போராடிய மீனவர்கள்- மாதகலில் சம்பவம் 17 Views நேற்றைய தினம் கடலுக்கு தொழிலுக்கு சென்ற மாதகல் பகுதி மீனவர்கள் இருவர் பபயணித்த படகு இந்திய இழுவைப் படகுகளினால் மோதப்பட்டு சரிந்துள்ளது. குறித்த மீனவர்கள் 15 மணிநேரத்தின் பின்னரே தேடிச் சென்ற மீனவர்களால் இன்று காப்பாற்றப்பட்டனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் மீன்பிடி நடவடிக்கைக்காக ஒரு படகில் நேற்று சென்றிருக்கின்றனர். இன்று காலை வரையில் அவர்கள் கரை திரும்பாத நிலையில் அவர்களைத் தேடி மாதகலைச் சேர்ந்த மீனவர்கள் சென்றிருக்கின்றனர். அதன் போது, கடலில் வலை மிதக்கப்பயன்படுத்தப்ப…
-
- 0 replies
- 289 views
-
-
ஒட்டமாவடி முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் திடீரென முளைத்த புத்தர் மட்டக்களப்பு, ஒட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தின் நடுவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பிரதேச முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. முழுமையாக முஸ்லிம்கள் மட்டும் வாழும் இப்பிரதேசத்திலுள்ள பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திலே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் நடுவில் மேசையொன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டு, நிழலுக்கு குடையொன்றும் நடப்பட்டுள்ளதை மறுநாள் காலையில் தாங்கள் கண்டதாகக் கூறும் பாடசாலை நிர்வாகம் வாழைச்சேனை பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளதாகவ…
-
- 4 replies
- 1.2k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, ஆயுத வர்த்தகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘கனேமுல்ல சஞ்சீவ’ அல்லது ' மாலிங்கமுவே சஞ்ச்ஜீவ ' எனப்படும் சஞ்சீவ சமரரத்ன உள்ளிட்ட 11 சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (12) விடுதலை செய்யப்பட்டனர். குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த 11 பேரையும் விடுதலை செய்வதாக நீதிவான் அறிவித்தார். தமிழீழ விடுதலை ப…
-
- 1 reply
- 628 views
-
-
கடந்த பல மாதங்களாக குண்டடியில் தப்பி , வீடு வாசல்களை இழந்து ,பெற்றோர் , உறவினர்களை இழந்து , குடிக்க நீரும் , உண்ண உணவில்லாமல் தவிட்டை கஞ்சியாக குடித்து , 30, 000 மக்களை அங்கவீனர்களாக்கி , அகதி முகாமுக்கு வந்தவர்களிலும் 13, 000 இளைஞர் , யுவதிகளை காணவில்லை என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்தும் குரோத மனப்பான்மையை என்னவென்று சொல்வது .
-
- 3 replies
- 1.3k views
-
-
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுத்து, 24 மணி நேரத்துக்குள்ளாகவே, அதனைத் தான் நிராகரித்து விட்டதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலப்பு விசாரணை நடத்தக் கோரும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அழைப்பை நிராகரித்து, அனைத்துலக சமூகத்துக்கு தனது முதுகெலும்பைக் காட்டி விட்டதாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணையை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். 24 மணித்தியாலங்களுக்குள்ளாகவே, நான், …
-
- 2 replies
- 351 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரியின் தகவல் மறைக்கப்பட்டது ஏன்? – எதிர்க்கட்சி ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரி ஒருவரை ஷானி அபேசேகர கைது செய்து விசாரித்திருந்தபோதும் அவை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. உளவுத்துறை அதிகாரி மற்றும் ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இடையிலான தொடர்புகளை ஐபி முகவரி மூலம் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கண்டுபிடித்தார் என ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், உளவுத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யால் விசாரிக்கப்பட இருந்த நேரத்தில் …
-
- 0 replies
- 226 views
-
-
கடலில் மிதந்து வந்த தேவாலயம் மீட்பு எம்.எஸ்.எம். ஹனீபா அம்பாறை, ஒலுவில் கடல் பிராந்தியத்தில் 20 அடி சதுரப் பரப்பளவு கொண்ட மரத்திலான மாதிரி தேவாலயமொன்று மிதந்து வந்த நிலையில், கடற்படையினரால் நேற்று (10) மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மரத்திலான மாதிரி தேவாலயம், திருக்கோவில் பிரதேசத்திலிருந்து கடலில் மிதந்து வந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவை ஒலுவில் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. மரத்திலான தேவாலயம் போன்று வடிவமைக்கப்பட்டு, அதனுள் பூசை வழிபாடுகள் இடம்பெற்ற தடையங்களும் மற்றும் பொரு…
-
- 0 replies
- 554 views
-
-
சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீட்கக் கோரியும் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் பிரித்தானியா, கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
தேர்தலில் சமூகவிரோதிகளுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டாம் - ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் : 19 ஜூலை 2013 எதிர்வரும் வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஊழல்வாதிகள், சமூகவிரோதிகளுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டாம் என ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒரு வருடகாலத்தில், பிரதேச சபை மற்றும் மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் 50 மேற்பட்ட அரசியல்வாதிகள், கொலை, இலஞ்சம், பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இப்படியான குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், கௌரவமான மக்கள் பிரதிநிதிக…
-
- 1 reply
- 189 views
-
-
12 நாடுகள் பிரேரணைக்கு இணை அனுசரணை : திருத்தங்கள் இன்றி 23 ஆம் திகதி நிறைவேற்றப்படும் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவுக்கு இதுவரை 12 நாடுகள் தமது இணை அனுசரணையை வழங்கியிருக்கின்றன. அந்தவகையில் இன்னும் சில தினங்களில் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ள நிலை யில் அதிகமான நாடுகள் இந்த வரைவுக்கு இணை அனுசரணை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஒருசில உறுப்பு நாடுகளும் உறுப்புரிமையற்ற சில நாடுகளும் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருக்கின்றன. அந்தவகையில் அவுஸ்திரே…
-
- 0 replies
- 342 views
-
-
சிறீலங்கா ஜனாதிபதி, புத்தரின் ஒரு அவதாரமாகின்றார் !!. Le Temps France Vanessa Dougnac Sri Lanka samedi13 juin 2009 Mahinda Rajapaksa, le président-Dieu பெரும்பான்மை சிங்களர்கள் (விடுதலைப்புலிகளிடமிருந்து) நாட்டை விடுவித்ததற்காகவும் ஒன்றுபடுத்தியதற்காகவும் நாட்டின் அதிபரை கொண்டாடுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. மிக குறைந்த எதிர்ப்பே இருந்ததால் அதிகாரம் ராணுவமயப்படுத்தப்பட்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் சக்திவாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள். வெள்ளை மேலங்கி, சிவப்பு நிற கழுத்து துண்டு சகிதம் கருப்பு மீசையுடன் புன்னகைக்கும் மஹிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகள் கொழும்பு நகர சுவரெங்கும் ஒட்டப்பட்டுள்ளன. சிலவற்றில் ராணுவ வீரர்களுடனும், சிலவற்றில் அதிபரின் ஆலோசகரு…
-
- 1 reply
- 1.3k views
-
-
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்வில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ். மாவட்டத்திலும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி. ஆனந்த சங்கரி கிளிநொச்சி மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=23990
-
- 4 replies
- 690 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொலைகாணொளி ஊடாக அனுஷ்டிக்க சுமந்திரன் அழைப்பு! மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழர்கள் அனைவரும் தொலைகாணொளி ஊடாக அதாவது Zoom வழியாக அனுஷ்டிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று (திங்கட்கிழமை) தனது முகப்புத்தகத்தில் காணொளியொன்றைப் பதிவிட்டுள்ளார். குறித்த காணொளியில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டில் தொடர்ந்து பரவிவரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒன்றுகூடி நினைவுகூர முடியாமலிருப்பது கவலைக்குரியது என தெரிவித்துள்ளார். எனினும் தொழில்நுட்பத்தின் உதவியோடு (Zoom) இணை…
-
- 0 replies
- 647 views
-
-
மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படும் இன அரசியல் இராணுவப் பிணக்குகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் மேற்கத்தேய மற்றும் வல்லரசு நாடுகள் உண்மையில் அங்கு அந்த முரண்பாடுகள் ஆயுதப்போராக மாற்றமடைவதையே விரும்புவார்கள். ஏனெனில் அந்த நாடுகளின் பிணக்குகளும், துயரங்களும், உயிரிழப்புகளும் மேற்கத்தேய நாடுகளின் வருமானத்தைப் பெரிய அளவில் உயர்த்தும்.இங்கு வீழும் ஒவ்வொரு உயிரும் அவர்கள் பணப் பையை நிரப்பவே உதவும். ஏனெனில் இரு தரப்பும் மோதிக்கொள்ளும் ஆயுதங்கள் இவர்களின் உபயமே. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் சந்தைப்பொருட்களில் ஆயுதங்களே பெருமளவில் இடம்வகிக்கின்றன. இவர்களது சந்தைப்பொருட்கள் விற்பனையாகவேண்டுமாயின், இவர்கள் உற்பத்தி பெருகவேண்டுமாயின் உலகி…
-
- 0 replies
- 984 views
-