ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
சங்கானைக்காக மாவை சேனாதிராஜாவை மிரட்டும் சரவணபவன்! உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர் நியமனத்தில் சர்ச்சைகளும், அடிதடிகளும் நடைபெற்றுவரும் நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதிக்குள் சங்கானை பிரதேசம் வருவதால் அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக சரவணபவன் மாவை சேனாதிராஜாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியானது முதல் இரண்டு வருடங்களும் புளொட்டுக்கும், அடுத்த இரண்டு வருடங்களும் தமிழரசுக் கட்சிக்குமென தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…
-
- 0 replies
- 349 views
-
-
தமிழர்களைப் பொறுத்த வரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதனையே எமது இலட் சியமாகக் கருதுகி றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ, தமிழர்களாக இருப்பதற்கு இலங்கையையோ என்றுமே விட்டுவிட நாம் ஒப்புக்கொள்ளமாட்டோம். கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன் நேற்றுச் சாட்சியமளித்த டக்கு கூறியுள்ளார். இந்த நாட்டின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் சிங்கள, முஸ்லிம் சகோதரர்கள் உறுதியான கரங்களை நீட்டி அதன் ஊடாக அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து மக்களும் பொதுவான சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து வாழ்வியல் உரிமைகள் செழிக்க வாழ்வோம் வாருங்கள் என்று சிங்கள சகோதர மக்களை நோக்கியும், இஸ்லாமிய சகோதர மக்களை நோக்கியும் நாம்…
-
- 6 replies
- 1.2k views
-
-
புதுடெல்லியில் இன்று நடக்கும் இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்புவதற்கு, பாஜகவும், இந்திய வெளிவிவகார அமைச்சும் மறுத்து விட்டதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மாலை நடக்கவுள்ள நரேந்திர மோதடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பை அனுப்ப வேண்டும் என்று, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அங்கம் வகிக்காத தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்திருந்தன. எனினும் பாஜகவும், இந்திய வெளிவிவகார அமைச்சும் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டன. வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு மட்டுமே, அழைப்புகள்…
-
- 14 replies
- 1.2k views
-
-
கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒரு மீனவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 30 படகுகளில் சென்ற 120 இந்திய மீனவர்களை சுற்றிவளைத்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கியுள்ளனர். இந்திய மீனவர்களை தமது படகுகளில் ஏற்றியே தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களிடம் இருந்து இறால், மற்றும் வலைகளை பறித்துக் கொண்டு துரத்தி விட்டதாகவும் பிரிஐ தெரிவித்துள்ளது. அதேவேளை இந்திய மீனவர்கள் தாக்கப்பட்ட செய்தியை சிறிலங்கா கடற்படை மறுத்துள்ளது. அப்படியான எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்றும் இது சிற…
-
- 6 replies
- 1k views
-
-
யாழ். பல்கலையில், கறுப்பு ஜீலை... நினைவேந்தல். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை கறுப்பு ஜீலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பிரதான கொடிக்கம்பத்தில் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் கறுப்பு ஜீலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு ,மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் 1983 கறுப்பு ஜீலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. https://athavannews.com/2022/1292144
-
- 0 replies
- 193 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இத்தாலியின் 3 தேர்தல் தொகுதியின் பிரதிநிதிகள் பற்றிய விபரங்களை இத்தாலி; தேர்தல் ஆணையகம் இன்று (செற்டெம்பர் 27) அறிவித்துள்ளது. தேர்தல் தொகுதி A திரு. மயில்வாகனம் பாஸ்கரநாராயணன் இத்தாலியின் மேற்பகுதி (valla d`Aosta,Piemonte,Lompardia,Trentinino Alto , Adige,Friuti venezia giulia, Veneto, Lguria மாநிலங்களில்) தேர்தல் தொகுதி B திருமதி. மேரி ஞானமலர் யேசுதாசன் இத்தாலியின் மத்திய பகுதி (Emilia Romania,Toscana,Umbria, Marche, Abruzzo,Molise,Puglia,Basilicate, Calabria, Campania,Lazio ஆகிய மாநிலங்களில்;) தேர்தல் தொகுதி C திருமதி. தாட்சாஜினி தவராஜசிங்கம் இத்தாலியின் கீழ்ப் பகுதி (Sicilia, Sa…
-
- 0 replies
- 456 views
-
-
வித்தியா படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவருக்கு சிறைத்தண்டனை வித்தியா படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரனுக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் தீர்ப்பளித்துள்ளார். குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதிப் பத்திரம், வாகன வரிப்பத்திரம் ஆகியன இல்லாது வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்து ஏற்படுவதை தடுக்காமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து இத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், குறித்த நபருக்கு 3 மாத சிறைத் தண்டனையும் 18 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரி…
-
- 0 replies
- 360 views
-
-
படையினர் வன்முறைகளைக்கு முடிவுகட்ட பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வோம்: கஜேந்திரன் [வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2006, 01:42 ஈழம்] [ம.சேரமான்] யாழ் குடா நாட்டில் சிறிலங்காப்படையின் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டி எம் மண்ணில் இருந்து வெளியேற்றும் வரை இளைஞர் யுவதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கள படைகளினால் எமது உறவுகள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவுகள், அப்பாவி மக்கள் மீதும், மாணர்கள் மீதும் கடற் தொழிலாளர் மீதும் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்படும் காரணமற்ற கைதுகள், சித்திரவதைகள்,கொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக பல ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010 நேற்று முற்பகல் 11.15 அளவில் தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் குப்பைகள் வீசப்படும் இடத்திலிருந்து வெடிமருந்துப் பை ஒன்று கைப்பற்றுபட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பை 14 கிலோ கிராம் நிறையினைக் கொண்டதெனவும், பையினுள் 25 அடி நீளம் கொண்ட 40 நூல் பந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். மேலும், கைப்பற்றப்பட்ட பை தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈழ நாதம்
-
- 0 replies
- 563 views
-
-
முதலில் கலவரம் பின்னர் வட - கிழக்கு முதலமைச்சரை கொலை செய்தல் பின்னர் இராணுவ ஆட்சியை நிலைப்படுத்தல் - இவ்வாறே இந்த சதி தொடர இருப்பதாக கலாநிதி தயான் ஜெயதிலக (முன்னர் ஐ.நா. துதூவராகவும் பிரான்சின் துதூவராகவும் இருந்தவர்)தெரிவித்துள்ளார். http://dbsjeyaraj.com/dbsj/archives/30743 இன்று கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ ஐ.நா. வில் இந்த கலவரத்தின் பின்னணியில் உள்ள புது பல சேனாவுடன் பாதுகாப்பு செயலாளர் சம்பந்தபப்ட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். https://www.colombotelegraph.com/index.php/gota-has-direct-involvement-with-the-bbs-nimalka-tells-unhrc/ குண்டர்கள் ஹம்பந்தோட்டையில் இருந்தே கொண்டுவரப்படவர்கள் என்றும் அவர்களில் ஒருவரை ஒளிப்படத்தில் ஆதாரம் காட்டியும் ஐக்கிய தேசிய…
-
- 8 replies
- 785 views
-
-
ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து... ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, அறிக்கை சமர்பிப்பு. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளனர் என அறியமுடிகின்றது. சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதோடு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் எனவும் அவர்கள் அந்த அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளனர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர …
-
- 0 replies
- 257 views
-
-
மிகஅவசரமான எதிர்ப்புமனு http://www.gopetition.com/online/8663.html More informaion about humanrights repport and Photos http://nesohr.org/human-rights-reports/ http://www.tchr.net http://tamilink.org.uk/tl/ http://www.tamilcanadian.com/eelam/hrights/ http://www.tamilnation.org/humanrights.htm
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழர் தாயகத்தை எதிரியிடம் இருந்து காத்து அங்கு தனியாட்சி நடத்தி வந்த விடுதலை புலிகளின் கட்டமைப்பு தமது மண் மீட்பு மண் காக்கும் போரில் தம் உயிர்களை நீர்த்த போராளிகளை மாவீரர் நாளில் நினைவு கூறுவது வழமை. அவ்வாறாக வரும் கார்த்திகை மாதம் இருபத்தி ஏழாம் திகதி ஐரோப்பாவில் வருகை தந்து தமிழ் மக்கள் மத்தியில் பேச இருந்த சீமானை சிறையில் அடைத்தது தமிழக அரசு. அவரது பேச்சின் வாயிலாக தமிழ் மக்கள் மீண்டும் புலிகள் பக்கம் அவர்களின் உரிமை போர் பக்கம் தூண்டபட்டு அந்த போராட்டம் துளிர்க்கும் என நம்புகிறது அந்நிய பேரினவாத படைகள் அரசுகள். தமிழ் ஈழ விடுதலை போரில் பங்கெடுத்து சிறை கூடத்தில் இருக்கும் முக்கிய போராளி தலைவர்களை புலம் பெயர் நாடுகளிட்க்கு அனுப்பி அங்கு தமிழ் மக்கள் மத்தியில…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய விசா நடைமுறை! இலங்கை சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்கு ஓராண்டு விசா வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டவர்கள் இலங்கையில் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கவும், 250,000 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தால் 10 ஆண்டு விசா வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 150,000 அமெரிக்க டொலர் முதலீட்டாளருக்கு 5 வருட விசா வழங்கப்படும், மேலும் கொழும்பிற்கு வெளியே உள்ள சொத்துக்களை முதலீடு செய்பவருக்கு 75,000 அமெரிக்க டொலர்களுக்கு 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும் விசா உரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முத…
-
- 2 replies
- 363 views
-
-
"காட்டிக்கொடுக்கும் தமிழனை விட முற்போக்கான சிங்களவர்கள் மேல்" ”காட்டிக்கொடுக்கும் தமிழனை விட முற்போக்கான சிங்களவர்கள் மேல்” நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியினர் அல்ல, பாராளுமன்றத்தில் அவர்களுடன் கூட்டணியில் மாத்திரமே இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என கலந்துரையாடல் சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளை பெற்றுக் கொடுத்தது போல் சம்மாந்துறை மாவட்டத்திலும் பிரதேச சபைகளை பெற்றுக் கொடுங்கள். ஸ்தீரமான அரசாங்கத்தின் அடித்தளமே இந்த உள்ளூராட்சி மன்றங்கள் . அதன்மூலமே கிராம அபிவிருத்தி பணிகள் நடைபெறும் எனவே அதன் அவசிய நிலையறிந்து செயலாற்றுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார். க…
-
- 1 reply
- 403 views
-
-
புலிகளின் பகுதியில் பயணிக்கும் எந்த வாகனமானாலும் தாக்குமாறு எமக்கு இராணுவ அதிகாரி உத்தரவிட்டிருந்தார் [19 - June - 2006] [Font Size - A - A - A] புலிகளினால் கைது செய்யப்பட்ட ஆயுதக்குழு உறுப்பினர்கள் தெரிவிப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரவு நேரங்களில் பயணஞ் செய்யும் எந்த வாகனமாக இருந்தாலும் தாக்குதல் நடத்துமாறும் அது எந்த வாகனமாக இருந்தாலும் தயங்க வேண்டாம் எனத் தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் மேலும், அம்பாறையில் இனிய பாரதியை கொலை செய்துவிட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த முனைக்காட்டைச் சேர்ந்த ஞான தீபனுடைய குடும்பத்தை அழித்து விட்டு வருமாறும் தமக்கு உத்தரவிடப்பட்டதாகவும் இலுப்படிச்சேனையில் கைதான கருணா குழு உறுப்பினர்கள் மூவரும் தெர…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் இரண்டாம் தரப் பிரஜைகள் - த.தே.கூ நவ 1, 2010 மகிந்த அரசைப் போறுத்தவரை, தமிழர் இரண்டாம் தரப் பிரஜைகள் என்பதை அண்மைய சம்பவங்கள் நிரூபிபபதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ். நூலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம் படித்த, நாகரிகம் தெரிந்த மக்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இந்தச் சம்பவத்தின் மூலம் இந்நாட்டில் வாழும் தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகள்தான் என்பதனை அரசாஙகம் நிரூபித்து விட்டதென - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ். ரயில்வே நிலையத்தில் சுமார் 150 சிங்கள மக்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கொழும்பிலிருந்து அமைச்சர் வந்து அவர்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார். கொழும்பிலிருந்து அவர்களுக்குச…
-
- 0 replies
- 463 views
-
-
நீங்கள் ஒரு வரலாற்றுத் தவறை விட்டுவிடக்கூடாது பெப்ரவரி - 10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர்களின் வகிபாகமானது ஆட்சி - அதிகாரங்களை நோக்கியதாக அமைந்துவிடவில்லை. அந்தவகையில் எமது இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்யும் வகையில் எங்கள் வாக்குகள் அமைய வேண்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர்களின் விடுதலைப்போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் பலமானது தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்சியத்தின் அடிப்படையில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டங்களில் நாம் எதுவித குழப்பமும் இன்றி தீர்க்கமாக முடிவெடுக்கும் வகையில் வழிகாட்டும் உன்னதத் த…
-
- 0 replies
- 348 views
-
-
தோளில் போட்டிருந்த துப்பட்டா(ஷோல்) மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்கிவிபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த தந்தையும் மகளும் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் சாவகச்சேரி மீசாலை ஐயா கடையடியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கலாசாலை வீதியைச் சேர்ந்த வல்லிபுரம் மகாலிங்கம் (வயது 61), மகாலிங்கம் கீர்த்தனா (வயது 25) ஆகிய இருவருமே காயமடைந்தவர்களாவர். http://malarum.com/
-
- 2 replies
- 580 views
-
-
"மீண்டும் எழுந்து வந்த மஹிந்த ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடும் சிவப்பு எச்சரிக்கை" தேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் எழுந்து வந்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறினார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற கல்லூரி ஸ்தாபகர் விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், "2015ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை புரிந்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தவறிவிட்டு, ஜனாதிபதியும், பிரதமரும் ஒருவருக்கு எதிராக இன்னொருவர…
-
- 0 replies
- 306 views
-
-
Nov 14, 2010 / பகுதி: செய்தி / கொழும்பு வரும் தமிழ் வர்த்தகர்கள் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்படலாம்? யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருகின்ற வர்த்தகர்கள் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான வர்த்தகர்களின் தொடர்புகள் குறித்த விசாரணைகள் இடம்பெறும் நிலையிலேயே இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொழும்பு வருகின்ற வர்த்தகர்கள், பொலிஸில் தம்மை பதிவு செய்து அறிக்கை படுத்த வேண்டும் என குற்றப் புலனாய்வுத் துறையினர் கோரியுள்ளனர். இதற்கிடையில் - விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கினார் என்ற குற்றச் சாட்டின் கீழ் யாழ்ப்பாணத்தில் முக்கிய வர்த்தகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துற…
-
- 0 replies
- 815 views
-
-
மாவிலாறு அணையை திறப்பதற்கு சகல இராணுவ உந்திகளையும் பயன்படுத்தும்படி மகிந்த உத்தரவு. மாவிலாறு அணைக்கட்டை கைப்பற்றுவதற்கு சகலவிதமான இராணுவ உந்திகளையும் பயன்படுத்தும் படி சிறிலங்காபடைகளிற்கு மகிந்த ராஜாபக்ச உத்தரவிட்டுள்ளார். மகிந்தவின் இவ் உத்தரவை அடுத்து விமான குண்டு வீச்சுக்களையும்,எறிகனைத் தாக்குதல்களையும் நேற்று மாலை சிறிலங்கா படைகள் தீவிரப்படுத்தியுள்ளன.இன்று மாலைக்குள் இப் பிரதேசத்தை கைப்பற்ற வேண்டும் என சிறிலங்கா அரசு தனது படைகளிற்கு காலக்கெடு விதித்திருந்தது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 1 reply
- 970 views
-
-
வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு அபராதம்! மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு, நீதவான் தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ள சம்பவமானது, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறை மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு மூவாயிரம்(3000) ரூபாய் தண்டம் விதித்து, ஊர்காவற்துறை நீதவான் தீர்ப்பளித்துள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்றைய தினம்(21.02.2018) பொது சுகாதரப் பரிசோதகர் குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணையின…
-
- 15 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகள் தாக்குதலில் 62 கடற்படை வீரர்கள் பலி! ஆகஸ்ட் 07, 2006 திரிகோணமலை: விடுதலைப் புலிகள் இன்று நடத்திய பயங்கர தாக்குதலில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 62 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக புலிகளுக்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. நார்வே தூதர்பாயரின் மத்தியஸ்த்தைத் தொடர்ந்து மதகுகளை திறந்து விட புலிகள் சம்மதித்தனர். ஆனால் இதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இந்த நிலையில், இன்று திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் சரமாரியாக ராக்கெ…
-
- 1 reply
- 1.3k views
-
-
வல்வெட்டித்துறையில் இராணுவம் குவிப்பு வீதிச் சோதனைகளும் அதிகரிப்பு சனிக்கிழமை, 27 நவம்பர் 2010 05:06 தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 56 ஆவது பிறந்த தினமான நேற்று, அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறையில் ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். தலைவரின் பிறந்த தினத்தை ஒருவரும் கொண்டாடாமல் தடுக்கும்பொருட்டே இவர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். அதோடு அப்பகுதியில் இராணுவத்தினர் தொடர் ரோந்தில் ஈடுபட்டதோடு, வீதிச் சோதனைகளையும் முடக்கி மக்களை வீட்டுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்தனர். இதுதவிர வல்வெட்டித்துறையிலுள்ள கோயில்களிலும் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. அண்மைக்காலங்களில், தலைவரின் புகைப்படங்கள் வைத்திருந்ததற்காக சிங்கள மக்களைக் கூட இராணுவம் கை…
-
- 0 replies
- 479 views
-