ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
-மேனகா மூக்காண்டி 'வடமாகாணத்தில், சந்திக்குச் சந்தி, புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அச்சிலைகளை வணங்குவதற்கு, அங்கு ஆட்களில்லை. மற்றுமொரு மதத்தையோ அல்லது இனத்தையோ சவாலுக்கு உட்படுத்தும் வகையில் நடந்துகொள்ளுமாறு, பௌத்த தர்மம் போதிக்கவில்லை. அதனால், அந்தத் தர்மத்துக்கு கௌரவம் ஏற்படும் வகையில், பௌத்தர்கள் நடந்துகொள்ள வேண்டும்' என்று அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை (17) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரிடம், முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதேசத்தில் விகாரையொன்று அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெர…
-
- 3 replies
- 463 views
-
-
ஹக்கீமின் கொட்டத்தை அடக்குவோம் - ஞானசார தேரர் உலகில் பௌத்தர்களுக்கென உள்ள ஒரே ஒரு நாடு இலங்கை மாத்திரமாகும். இதனை பௌத்த நாடாக நிரூபிக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. அதனை நாம் நீண்ட காலமாக கூறி வருகிறோம். இதனை நாம் கூறும் போது எம்மவர்களே எங்களை அடிப்படைவாதிகளாக கூறினர். தற்போது ஹக்கீம் தலைமையிலான குழு அம்பாறையை முஸ்லிம்களது மாவட்டமாக பிரகடனம் செய்துள்ளார்கள். இப்போது யார் அடிப்படை வாதிகள் என நேற்று பொதுபல சேனாவின் தலைமை காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஞானசார தேரர் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்.. அம்பாறை முஸ்லிம்களது பூர்வீக மாவட்டமல்ல. இப்போது சனத்தொகையில் வேண்டும் என்றால் அவர்கள் கூடுதலாக இருக்கலாம். தீக்…
-
- 0 replies
- 481 views
-
-
'பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்": யாழில் சுவரொட்டிகள் By Priyarasa 2013-01-15 11:25:36 தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது சம்பந்தமாக தகவல் தருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என சுவரொட்டிகள் யாழ். மாவட்டத்தின் பல பாகங்களிலும் பொலிசாரினால் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பலாலி வீதி காப்பற் போடும் பணியில் ஈடுபட்ட தென்னிலங்கை இளைஞர் ஒருவர் நந்தாவில் தோட்டவெளியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலையைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினர் புன்னாலைக்கட்டுவனில் ஒரு இளம் குடும்பத்தினரை கடத்திச் சென்று விசாரணைகளை மேற் கொண்டதுடன் அவர்களுடைய தந்தையையும…
-
- 1 reply
- 479 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மற்றும் தருமபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 4 சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
'ஈழ தமிழர்களுக்கு எதிரான போரை மத்திய அரசு மறைமுகமாக இயக்கி வருகிறது' என்று கோவையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் ஒரு ஆளும் கட்சி இடைத்தேர்தலுக்காக இவ்வளவு செலவு செய்ததில்லை. அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸ் சூப்பிரண்டு மீது நாங்கள் தகுந்த ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தோம். அந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் அ.தி.மு.க. எம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிவஞானம் சிறிதரனின் அலுவலகம் இன்று இரண்டாவது தடவையாகவும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது 22 ஜனவரி 2013 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகம் இன்று இரண்டாவது தடவையாகவும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. காலை 9.45 மணிமுதல் சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இதனிடையே தேடுதலில் ஈடுபட்ட காவற்துறை அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்ற சிறிதரனின் செயலாளர் பொன்காந்தன் தம்மால் கைது செய்யப்பட்டதாக தெரிவித்ததாக சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்த சமயம் தமது அலுவலகத்தில் தேடுதலுக்காக ஒரு அணியினர் மீண்டும் வந்திருப்பதாக அங்கிருந்த ஆதரவாளர்களால்…
-
- 0 replies
- 437 views
-
-
தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம் - மஹிந்த.! "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கைப்பற்றிவிட்டோம். கூட்டமைப்பைவிட அதிக ஆசனங்களைப் பெற்றுத் தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பிரதமராக நான்காவது தடவையாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ நேற்று முற்பகல் சுபநேரத்தில் அலரி மாளிகையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "வடக்கு, கிழக்கிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 9 ஆசனங்களை மட்…
-
- 10 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் கடும்போக்குவாதமும் தீவிரமடைந்துவருவதாகவும் அதனால் மற்ற சமூகங்கள் பாதிக்கப்படுவதாகவும் பொது பல சேனா என்ற கடும்போக்கு பெளத்த அமைப்பு சுமத்துகின்ற குற்றச்சாட்டை முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மறுக்கிறார்கள். முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைக் காலங்களாக நாட்டில் நடந்துவரும் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் முஸ்லிம் தலைவர்கள் பொது பல சேனா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக பிபிசி தமிழோசையிடம் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். முஸ்லிம்கள் மத்தியில் மத அ…
-
- 12 replies
- 902 views
-
-
“கல்லூரி அதிபரை பலவந்தமாக இளைப்பாறச்செய்ய முன்னெடுத்த செயற்பாட்டை கண்டிக்கின்றோம்“ உடுவில் மகளிர் கல்லூரியின் நிருவாக சபையினாலும், பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜாவினாலும் கல்லூரியின் அதிபர் திருமதி ஷிராணி மில்ஸினை பலவந்தமாக இளைப்பாறச் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று சர்வதேச நாடுகளில் இயங்கும் உடுவில் மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை. ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் அவுஸ்ரேலியா இருக்கும் உடுவில் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கங்களினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அற…
-
- 1 reply
- 303 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காக தமிழகமே செயலிழக்கும் அளவில் 10 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 836 views
-
-
முறிகண்டி சிங்கள மயமாகிறது - 10 ஆயிரம் வீடுகளில் படையினரின் குடும்பங்கள் ... 30 ஜனவரி 2013 வன்னியில் படையினரினால் அபகரிக்கப்பட்டுள்ள புதுமுறிகண்டி பிரதேசத்தில் போர் வீட்டத் திட்டம் என்ற பெயரில் இராணுவ குடியிருப்பு அமைக்கப்பட்டு சிங்களக் குடும்பங்கள் எதிர்வரும் 11ம் திகதி முதல் குடியேற்றப்படவுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவசர அவசரமாக அப்பகுதிகிளில் புதிய பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் கட்டப்பட்டு வருகின்றது என்றும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவந்துள்ளது. இது குறித்து உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பலனளிக்கவில்லை. முறிகண்டிப் பகுதியில் தமது காணிகளை அபகரித்த பொழுது அதற்கொதிராக கடுமையாக மக்கள்…
-
- 1 reply
- 512 views
-
-
யாழ்ப்பாணத்தில் பாரிய சிறைச்சாலையொன்று அமைக்கப்பட உள்ளது யாழ்ப்பாணத்தில் பாரிய சிறைச்சாலையொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆயிரம் கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய வசதிகளைக் கொண்ட சிறைச்சாலையொன்று நிர்மானிக்கப்பட உள்ளது. சுமார் 623 மில்லியன் ரூபா செலவில் இந்த சிறைச்சாலையின் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 130 கைதிகளை தடுத்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136060/language/ta-IN/article.aspx
-
- 4 replies
- 451 views
-
-
20 ஆவது திருத்தச்சட்டம்: உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு அதிக நீதியரசர்கள் அரசியலமைப்பு திருத்தத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிக நீதியரசர்களை நியமிப்பதற்கான திட்டங்களும் இருக்கும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஹலி-எல பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த நடவடிக்கையின் நோக்கம் தாமதப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதே என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சரவை உபகுழு,19 ஆவது திருத்தம் குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் அமைச்சரவைக்கு அறிக்கை அளிக்கும், எந்த பிரிவுகளை வைத்துக் கொள்ள வேண்ட…
-
- 1 reply
- 849 views
-
-
இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசுக்கு கலைஞர் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்: பா.ம.க. இலங்கையில் போரை நிறுத்த இந்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என: ராமதாஸ் முன்னிலையில் நடந்த பா.ம.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ம.க. செயற்குழு கூட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். பிப்ரவரி 21 ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் பாட்டாளி இளைஞரணியின…
-
- 0 replies
- 849 views
-
-
முல்லைத்தீவு - உண்ணாப்பிலவுப் பகுதியில், வீதியின் அருகே இருந்த மரம், மழை காரணமாக சரிந்து வீழ்ந்ததால், வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மரணித்துள்ளனர். முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதான வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருதயபாலன் ஜேம்ஸ் விஜயேந்திரன் வயது (33) என்ற, கொக்குத் தொடுவாய்ப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றுமொருவரான, அரியராசா எமில்டன் வயது (21) என்ற நீராவிப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் விபத்தில் படுகாயமடைந்ததையடுத்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளமை க…
-
- 0 replies
- 454 views
-
-
ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி.! மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று காலை ஓட்டமாவடியில் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். டாக்டர் பதியுதீன் மாவத்தை ஓட்டமாவடி இல.1 சேர்ந்த முகம்மது அலியார் செய்யது இப்றாகிம் (45) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இன்று காலை மேற்படி நபர் ரயில் பாதை அருகாமையினால் நடந்து செல்லும்போது ரயிலில் ஏறும் படிக்கட்டு பகுதி உடலில் அடிபட்டதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பத்தினை நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக…
-
- 0 replies
- 348 views
-
-
'விடுதலைப்புலிகளுடன் நடக்கும் போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதியளித்துள்ளதாக இந்திய வெளியுறுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.' அவசர பயணமாக செவ்வாய்கிழமை மாலை இலங்கை புறப்பட்ட பிரணாப் முகர்ஜி, அன்றிரவு இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்கும் நடைபெற்று வரும் போரில், அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதைக் குறித்த தனது கவலையை அவரிடம் தெரிவித்ததாக பிரணாப் கூறினார். அதற்கு ராஜபக்சே 'போரில் அப்பாவி தமிழர்களின் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாக பிரணாப் தெரிவித்துள்ளார்'. இலங்கையில் நடக்கும் போரில் 3 இ…
-
- 0 replies
- 753 views
-
-
இலங்கையில் மாநாட்டினை நடத்துவது பொதுநலவாய அமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானது!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் [ ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013, 11:03.37 AM GMT ] பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டினை இலங்கையில் நடாத்தக் கூடாது என பல சர்வதேச நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இலங்கையில் மாநாட்டினை நடத்துவது என்பது பொதுநலவாய அமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகின்றது. இதுதொடர்பில் உடனடியாக வழக்கொன்றினை தொடுப்பது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. குடிசார் உரிமைகள் அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக ஒப்பந்தம் மூலமும் (ICCPR), சித்திரவதை …
-
- 1 reply
- 574 views
-
-
புதிய அரசியலமைப்பை வரவிடாது தடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எம்மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.எமது நிலைப்பாடே எழுக தமிழ் பிரகடனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அதைவிட எமது இலக்கு சரியானதாகத்தான் இருக்கின்றது என தெரிவித்த த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச விசாரணை முடிவுறறதை யாரும் மறுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் \\\\\\\'இலங்கை அரசியல் யாப்பு” நூல் வெளியீடும் ஆய்வரங்கமும் நேற்றைய தினம் யாழ் சரஸ்வதி மண்டபத்தில் இடம் பெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை அற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டில் தமிழ் மக்…
-
- 3 replies
- 509 views
-
-
ஞானசார தேரரின் வாக்குமூலத்தை தொலைபேசியில் பதிவு செய்த மௌலவி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சி வழங்கி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் பதில் செயலாளர் அதனை தனது தொலைபேசியில் பதிவு செய்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சி வழங்குவதற்காக வருகை தந்திருந்தார். அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை உட்பட 10 குழுவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த சாட்சி விசாரணை இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகள் ஆ…
-
- 0 replies
- 445 views
-
-
நாளை (சனிக்கிழமை 31,01,2009)12.00மணிக்கு நோர்வேயில் Ålesund எனும் இடத்தில் அமைந்துள்ள RØDE KURS அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. எனவே அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.
-
- 0 replies
- 670 views
-
-
தமிழீழம் என்பது இன்னமும் அடக்கப்பட்டவர்களாக, அவலங்கள் சுமப்பவர்களாக ஈழத்தில் வாழும் எஞ்சிய தமிழர்களது விடுதலைக்கானது மட்டுமல்ல, அதுவே புலம்பெயர் தமிழர்களதும் உயிர் வேட்கை! அதுவே உலகத் தமிழாகளது தமிழ்த் தேசிய சிந்தனை. அதுவே மனிதத்துவம் மிக்க மானுடர்களின் மனச்சாட்சி... முள்ளிவாய்க்கால் பெருந் துயரில் ஈழ மண் எரியூட்டப்பட்டபோது, புலம்பெயர் தமிழர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். அது மட்டுமாக இல்லாமலே எங்கள் ஈகப் பேரொளி முருகதாசன் உடல் பற்றி எரிந்தே உலக மன்றத்தில் நீதி கேட்டான். இப்போதும் புலம்பெயர் தமிழர்கள் இன்னமும் தமிழீழ விடுதலைக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழீழத்தின் அவலங்கள் கரைகடந்து சென்றபோது... முத்துக்குமாரன் தன்னையே நெருப்பாக்கித் தமிழக…
-
- 0 replies
- 439 views
-
-
மானிப்பாய் வாள்வெட்டு குற்றவாளிகளின் தண்டனை தீர்ப்பை இரத்துச் செய்ய யாழ் மேல் நீதிமன்றம் மறுப்பு – மேன் முறையீடு தள்ளுபடி மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார். வீட்டுக்குள் அத்துமறிச் சென்றமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி, சிறிய காயம் மற்றும் கடும் காயம் விளைவித்தமை 6 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 6 எதிரிகளுக்கு எதிராக சுன்னாகம் பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஓராண்டு கடூழியச…
-
- 0 replies
- 257 views
-
-
அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர்; நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சாடல் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயத்தில் அரசாங்கம் இதுவரை எந்தவிதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “மாகாண சபை முறைமையானது எமக்குக் கிடைத்திருந்த காலந்தொட்…
-
- 2 replies
- 511 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி தமிழகத்தின் ஆளும் தி.மு.க. நேற்று முன்தினம் கூட்டிய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானமும் அங்கு தி.மு.தலைவரும் முதல்வருமான் கருணாநிதி ஆற்றிய உரையும், அதற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் வழங்கிய பேட்டியும் இலங்தை; தமிழர் விடயத்தில் கருணாநிதியினதும், தி.மு.க.தலைமையினதும் அதன் மாநில அரசினதும் முகத்திரையைக் கிழித்து உண்மைச் சொரூபத்தை அம்பலப்படுத்தி விட்டன என்றே கூறவேண்டும். ஈழத்தமிழர்களின் இன்றைய பேரவல நிலைமையும் அவர்கள் சிங்களவர்களினால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நிஜத்தையும் கருணாநிதி இந்தப் பேட்டியில் திரும்பவும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள்; ஒவ்வொருவரினதும் மன எண்ணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி…
-
- 4 replies
- 1.4k views
-